Wednesday 3 August 2011

அறிதுயில்..(திண்ணையில் வெளியானது)



                                             

குழந்தைகளுக்கு அழகே குறும்புதானே.. முழிச்சுட்டு இருக்கற நேரங்கள்ல அதுங்க பண்ற அட்டகாசம் இருக்கே.. அப்பப்பா:-)) ஒவ்வொண்ணும் அந்த விஷயத்துல கோகுலத்து கிருஷ்ணர்கள்தான். அதுவே, தூங்கறச்ச, அடடா!!.. கொள்ளையழகு!!. 


இந்தக்குழந்தைதான் அவ்ளோ விஷமம் செய்யுதுன்னு சத்தியம் செஞ்சாலும் யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியொரு தேவதைமாதிரியான சாந்தமானதொரு முகதரிசனத்தோட இருக்கும். பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கும். தூங்கும்போது அதிகம் பார்க்கக்கூடாது.. கண்ணு பட்டுடும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் உண்மையோன்னு தோணும்.


அதுங்க சேட்டைய தாங்கமுடியாம 'ஒரு நிமிஷம் சும்மாயிருக்க மாட்டியா'ன்னு அதுங்க கிட்ட பரிதாபமா மன்றாடுறதும் நாமதான். எப்பவாவது நம்ம மேல இரக்கப்பட்டு அதுங்க அமைதியா இருந்தா,  'இன்னிக்கு என்னாச்சு?.. புள்ள சுரத்தே இல்லாம இருக்குதே!!.. ஒடம்புக்கு ஏதாச்சும் இருக்குமோ' ன்னு பதறுவதும் நாமதான். 


நமக்கெல்லாம் பல்பு கொடுக்கறதுலயும், சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாய் நம்மை ஆடவைக்கிறதுலயும் கில்லாடிங்க இந்த வாண்டுகள். சாப்பிட ஆரம்பிக்கும் அந்த ஆரம்ப வயசுகள்ல, ' இது வேணாம்,.. அது இருந்தாத்தான் சாப்பிடுவேன்.."ன்னு அடம் பிடிக்கும். அது கேக்குறதை செஞ்சு கொடுத்தா மூணாவதா இன்னொண்ணை கேட்டு பிடிவாதம் பிடிக்கும். நாமளும் புள்ளை சாப்பிட்டா சரின்னு அதுங்க எதைக்கேட்டாலும் மறுக்காம கொடுக்கறோம். 


ஒரு விதத்துல இது தப்புதான். கேட்டதையெல்லாம் கொடுத்து பழக்கிட்டு, அப்புறம் நாம கொடுக்கமுடியாத ஏதாவதொண்ணை அதுங்க கேக்கும்போது நம்மால தரமுடியலைன்னா அந்த ஏமாத்தத்தையும் அதுங்களால தாங்கிக்க முடியறதில்லை.. நாமளும் அதுக்கு பழக்கறதில்லை. அப்படி கேட்டு கிடைக்கலைன்னா அவ்ளோதான். பெரிய மனுஷர்கள் மாதிரி 'உம்'ன்னு உக்காந்திருப்பாங்க. எது கேட்டாலும் அவங்ககிட்டயிருந்து பதில்வராது.. கோவமா இருக்காங்களாம் :-)))))))) ரொம்ப அரும்பாடுபட்டுதான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். 


இதுல கோவிச்சுட்டு தூங்கறமாதிரி ஆக்டிங் கொடுக்கற அறுந்தவாலுகளும் உண்டு.. இங்கேயும் அப்படி ஒரு வாலோட ஆட்டத்தை வாசிச்சு ரசியுங்க :-)


ஆயிரம் முறை சொல்லியனுப்பியும்
இனிப்புடன் வரமறந்த
தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை
ஒரு கண்ணிலும்; ..
உடன் விளையாட வரமறுத்த
அன்னையின் மீதான இன்றைய கோபத்தை
இன்னொரு கண்ணிலும்
சுமந்துகொண்டு;
கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்..

என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…

அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி
தூதனுப்பிய மணியோசையும்கூட
உனது பொய்த்தூக்கத்தை
கலைக்கமுடியாமல் வெட்கி;
முகம் மறைத்தோடுகிறது இருளில்..

தாயின் குரலும்
தந்தையின் சீண்டலும் பலனளியாமல்..
ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட
விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன..

இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய
இமைகளுக்குள்ளின் மெல்லிய நடமாட்டத்தை,
அவசரமாய் தலையணையில் முகம்புதைத்து
கைதுசெய்கிறாய்..

கொஞ்சலும் கெஞ்சலும் பயனற்றபொழுதில்;
மிட்டாய்ப்பெட்டி திரும்பக்கொடுக்கப்பட்டுவிடுமென்ற
செல்லமிரட்டலுக்கு உடனே பலனிருக்கிறது!!..
‘தூங்கும் பிள்ளைக்கு காலசையுமே’யென்ற
பல்லாண்டு பழைய அங்கலாய்ப்புக்கு
உடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..

பொய்த்தூக்கமேயெனினும்
அவ்வழகும் ரசிக்கக்கூடியதேயன்றோ!!!!!..
இதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே………


டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.




38 comments:

இந்திரா said...

//என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…//


ரசிக்க வைத்த, இரண்டாம் முறை படிக்கச் செய்த வரிகள்.

அமுதா கிருஷ்ணா said...

தூங்கும் குழந்தைகள் அழகோ அழகு..

'பரிவை' சே.குமார் said...

Katturai arumaiyaga irukku...
kadaisiyil kavithai Super.

Chitra said...

அருமை. திண்ணையில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

நாடோடி said...

ஒரு முன்னுரை எழுதி கவிதை எழுதியிருப்பது நன்றாக இருகிறது.. வாழ்த்துக்கள்..

pudugaithendral said...

ரசித்தேன்

ராமலக்ஷ்மி said...

கொஞ்சும் கவிதையில் பெருக்கடுக்கிறது மழலை இன்பம். மிக அருமை.

vetha (kovaikkavi) said...

''...என்னுடைய எல்லாசமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….உன்னுடைய செல்லக்கோபகன்னஉப்பல்…''..
malalai enpak...great...
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

ஹேமா said...

குழந்தைகளை குழந்தைகளாக இருந்தால்தான் எமக்கும் சந்தோஷம்.கவிதையும் கட்டுரையும் போட்டி போடுகிறது சாரல்.சிறப்பு !

பாச மலர் / Paasa Malar said...

அழகோ அழகு

இராஜராஜேஸ்வரி said...

தூங்கும்போது அதிகம் பார்க்கக்கூடாது.. கண்ணு பட்டுடும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் உண்மையோன்னு தோணும்.//

அறிதுயில் கொள்ளும் பத்மநாபன் அழகு.

Menaga Sathia said...

ரசித்தேன்,வாழ்த்துக்கள் அக்கா!!...அப்படியே என் பொண்ணை நினைத்து இந்த கட்டுரையை படித்தேன்,அருமை...

மாய உலகம் said...

ஆஹா அற்புதம்.. தின்னையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

தூங்கும்போது காலசையுமே....இது எல்லா இடத்திலும் உண்டா? சுவாரஸ்யம்.
//"zஇதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே……"//

அட....!

Kousalya Raj said...

கவிதை ரொம்ப அருமையாக இருக்கிறது...இந்த வாண்டுகள் பண்ணும் சேட்டை இருக்கிறதே அழகோ அழகு !!

அவ்வளவையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத அப்பாவிகள் மாதிரி தூங்கும் அந்த முகத்தை பார்க்கும் போது அடையும் தாயின் சந்தோசத்திற்கு அளவு இருக்கா என்ன ?

இந்த பதிவை படிக்கும் போது என் பசங்களின் லூட்டிகளை நினைவு படுத்திடீங்க !! :)

ஜோதிஜி said...

என்னுடைய தாமதமான நட்சத்திர வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இந்திரா,

ரசிச்சு வாசிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

அதேதாங்க.. தூங்கறப்ப தேவதைகள்.. முழிச்சதும் செல்லக்குட்டிப்பிசாசுகள் :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

வாசிச்சு ரசிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

கவிதையா எழுதுனப்புறமும் மிச்சமிருந்ததை கட்டுரையா கொட்டிட்டேன் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

ரசிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

மழலையும் ஒரு பேசும் கவிதைதானே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவைக்கவி,

ரொம்ப நன்றிங்க... வரவுக்கும் கருத்துக்கும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

ஆஹா!!.. குழந்தை நிலாவுக்கு, குழந்தையை பிடிச்சுப்போனதுல ஆச்சரியமென்ன? :-))

பாராட்டுகளுக்கு தாங்கீஸ் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரத்னவேல் ஐயா,

ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

இவ்ளோ சமத்தும், முழிச்சிருக்கச்சே எங்கே போனதுன்னு ஆச்சரியப்படவைக்கும் பொழுதுகளல்லவா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

ஆஹா!!.. மேடமும் இப்படித்தானா!!.. குறும்பில் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

ரொம்ப நன்றி.. வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அது, யூனிவர்ஸல் குறும்பு
:-)))

தாங்கீஸ் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கௌசல்யா,


//இந்த பதிவை படிக்கும் போது என் பசங்களின் லூட்டிகளை நினைவு படுத்திடீங்க !! :)//

பசங்களுக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க :-)

இனிமையான இந்தப்பருவம்தான் வாழ்க்கையின் பொக்கிஷம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கௌசல்யா,


//இந்த பதிவை படிக்கும் போது என் பசங்களின் லூட்டிகளை நினைவு படுத்திடீங்க !! :)//

பசங்களுக்கு வாழ்த்துகளை சொல்லிடுங்க :-)

இனிமையான இந்தப்பருவம்தான் வாழ்க்கையின் பொக்கிஷம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜோதிஜி,

லேட்டஸ்ட்டான வாழ்த்துகளுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜோதிஜி,

லேட்டஸ்ட்டான வாழ்த்துகளுக்கு நன்றி :-)

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை... குழந்தைகள் தூங்கும் அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம்...

திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

||கவிதை மாதிரி||
மிக எச்சரிக்கையான லேபிள் ! :)

வாழ்த்துக்கள்,விண்மீன் வாரத்திற்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அறிவன்,

இல்லையா பின்னே..

கல்லு பறந்து வந்து விழுந்துட்டா??.. அதான் :-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails