Tuesday, 1 March 2011

இனியெல்லாம்....


"இத்தன வருஷம் கழிச்சு எதுக்கு வந்திருக்கான்.. எங்கக்கா இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தானா.." புருபுருவென முனங்கியவாறே வேகவேகமாகப் பித்தளைக்குடத்தைப் புளி போட்டுத் தேய்த்துக் கொண்டிருந்தாள் கமலம்.. கோபத்தில் சிவந்து மினுங்கிக் கொண்டிருந்த அவளது முகத்தைப்போலவே குடமும் பளபளத்துக்கொண்டிருந்தது.

"ஏய்.. ஏய்.. போதும்டி.. தேய்ச்சது. உங்க அத்தான் மேல உள்ள கோவத்த கொடத்து மேல ஏங்காட்டுத?. பாரு!!.. தேச்சுத்தேச்சு சொம்பு சைஸ்ல ஆயிட்டுது.."

"எக்கா.. என் வாயக் கெளறாத.. சொல்லிப்புட்டேன் ஆமா.. நானே வெந்துக்கிட்டிருக்கேன். நீ வேற ஏன் நொந்த மாட்ட நொகத்தடியால இடிக்கிறே.."

"கோவத்தப்பாரு!!. எப்பவும் சிரிச்சுட்டே இருக்கிற மொகத்துல, இன்னிக்கு சீதேவிக்கி அக்கா வந்து ஒக்காந்துருக்காளேன்னு சும்மா எடக்கு பண்ணேன்... கூடாதா??" என்று கேட்டபடி,.. தண்ணீர் நிறைந்த குடத்தை லாவகமாக ஒரு கையால் இழுத்துக்கொண்டே, பைப் தண்ணீர் கீழே விழாவண்ணம், அடுத்த குடத்தை டக்கென்று பைப்பின் வாயருகே பிடித்து மெதுவாகக் கீழே வைத்தவள், அழுவதற்குத் தயாராய் இருப்பதுபோல் கமலத்தின் முகம் கலங்கி கண்ணீர் திரையிடுவதைப் பார்த்து விட்டு, வேகமாகக் கிட்டே வந்தாள்.

"வேண்டாம்ன்னுட்டு போனவன், எந்த தேசத்து மஹாராஜாவா இருந்தா நமக்கென்னடி.. ஏதோ இந்த மட்டும் உங்கக்கா உசிரோட வந்தாளேன்னு நெனச்சுக்க. ஒதறித்தள்ளிட்டு சோலியப்பாப்பியா.." என்று உரிமையுடன் கடிந்து கொண்டவள் சேலை முந்தானையால், கமலத்தின் முகத்தை ஆதுரத்துடன் துடைத்து விட்டாள்.

கமலத்தின் அக்கா, பார்வதி.. பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்து விளையாட்டுப்போல் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. திருமணமாகி முதல் ஆறு மாதங்கள் நன்றாகத்தான் போனது. அப்புறம்தான், எப்படியும் இந்தத் திருமணத்தை முடித்து விட வேண்டுமென்பதற்காக, முருகேசன் வீட்டார் சொல்லியிருந்த புளுகுமூட்டைகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின. லைப்ரேரியனாக வேலை பார்ப்பதாக சொல்லியிருந்த பொய்யும் ஒரு நாள் வெளிப்பட்டுவிட, அது அவர்கள் மணவாழ்வின் கடைசி நாளாக ஆகிப்போனது. தீர விசாரிக்காமல், பெண்ணைக்கொடுத்த தங்கள் முட்டாள்தனத்தை நொந்து கொள்வதைத்தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை, கிராமத்துக்காரர்களான படிக்காத பெற்றவர்களுக்கு.

ஒவ்வொரு முறையும் பார்வதியைத் தாஜா செய்து மன்னிப்புக்கேட்டுத் தப்பித்துக் கொண்டிருந்தவனால், இம்முறை தப்பிக்க முடியவில்லை. அவள் தொடுத்த எல்லா அஸ்திரங்களுக்கும் பதிலாக அவள் நடத்தையைக் குறி வைத்து ஒரே ஒரு அஸ்திரத்தை எய்தான் பாவி.. , "என்னைச்சொல்ல வந்துட்டியே.. நீ ரொம்ப ஒழுங்கா??.. என் தலைவிதி.. நல்ல எடத்தையெல்லாம் வேண்டாம்ன்னுட்டு, ஒங்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்..."

அவளுக்கு மனசெல்லாம் அமிலம் பட்டது போல எரிந்தது.., கோபத்தில் தலை கொதிக்க, முகமெல்லாம் ஜிவுஜிவு என்று சிவந்தது. " இது அநியாயம்.. நீங்கல்லாம் மனுசங்களா??.. செய்யற தப்பையெல்லாம் நீங்க செஞ்சுட்டு என்னிய இப்படி அபாண்டமா பேசாதீங்க, நாக்கு அழுகிரும்.. " வீண்பழியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் உள்ளம் கொதித்தது.

திடுதிடுவென்று வந்தவன், தரதரவென்று அவளைக் கையைப்பிடித்து இழுத்து, வாசலுக்கு வெளியே தள்ளினான். "இனிமெ ஒரு நிமிஷம் கூட நீ இங்கே இருக்கப்பிடாது.." என்று சொல்லி விட்டுக் கதவை அறைந்து சாத்த, அவள் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல் நேராகப் பிறந்தவீடு வந்து அம்மாவின் மடியில் விழுந்தாள். ரெண்டே மாதத்தில் பொங்கிக்கொண்டிருந்த மனமும், கண்களும் அமைதியாகி விட, அடுத்ததை யோசித்து.. தன்னுடைய ப்ளஸ்டூ தகுதிக்கேற்பப் பக்கத்திலிருந்த குழந்தைகள் காப்பகத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு விட்டாள். சமாதானம் பேசப்புறப்பட்ட ஒரு சில நாட்டாமைகளையும் தடுத்து விட்டாள். அமைதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்தான், இப்போது மறுபடியும் தூது விட்டுக் கல்லெறிந்திருக்கிறான்.

வீட்டினுள் உலையும், வெளியே முருகேசனின் மனமும் கொதித்துக் கொண்டிருந்தன. வந்தவனை 'வா'ன்னு ஒப்புக்குக் கேட்டுட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தெசைக்குப் போயிட்டாங்க. மாமியார் மட்டும் ஒரு டம்ளரில் காப்பியைக் கொண்டாந்து பக்கத்துல வெச்சுட்டு அடுக்களைக்கு போயிட்டா. கழுத்தைப்புடிச்சுத்தள்ளி ஒவ்வொரு நிமிஷத்தையும் நகர்த்திக்கிட்டுருந்தான். 'கிணிங்.. கிணிங்..' சைக்கிள் மணியோசை வந்த பக்கம் பார்வையை எறிந்தவனுக்கு வயிற்றுக்குள் பனிக்கட்டி உடைந்தது போல் ஜிலீரென்றது. வாசலில் நிறுத்திய சைக்கிளை, ஹேண்டில்பார் ஒரு கையிலும், சீட்டுக்கு கீழே இருந்த பாரை இன்னொரு கையிலுமாக பிடித்துத் தூக்கிக் கொண்டு,  உயரமாக இருந்த வாசல்நடை தாண்டி வந்து முற்றத்தில் நிறுத்தினாள் பார்வதி. அவளைத்தொடர்ந்து தண்ணீர்க்குடத்துடன் கமலமும் உள்ளே வந்தாள். பின் அவன் அங்கிருப்பதையே கவனிக்காதது போல் உள்ளே சென்று விட்டார்கள். கசமுசவென்ற பேச்சுக்குரல்கள் எழும்பி அடங்கியதை இங்கிருந்தே கேட்டான் அவன்.

நிதானமாக உள்ளேயிருந்து வந்த கமலம், "எதுக்கு வந்தீங்க?.." என்று நேராகக் கேட்டாள்.

"இதென்ன சின்னப்புள்ளைத்தனமா கேக்குற. ஒரு புருஷன் எதுக்கு வருவான்.. பொண்டாட்டியக் கூட்டிட்டுப் போகத்தான்..."

"இங்க அப்படி யாருமில்ல.. ஏமாத்திக் கெட்டுனதுமில்லாம, கழுத்தப்புடிச்சு வெளிய தள்ளுனப்பவே ஒங்க பொண்டாட்டி செத்தாச்சு. இங்க இருக்கிறது எங்களப் பெத்தவங்களுக்கு மக மட்டுந்தான் .. அவள நாங்க அனுப்ப மாட்டோம் " நிதானமாகச் சொன்னாள்.

"நா செஞ்சதெல்லாம் தப்புத்தான்.. ஏதோ புத்திமாறி அப்படிச் செஞ்சுட்டேன். கடைசி தடவையா என்ன மன்னிச்சுடச்சொல்லு.. நா திருந்தி வாழணும்ன்னு நெனைக்கிறேன் "

லேசான சலிப்புடன் அவனை ஏறிட்டாள்.. "இன்னும் எத்தன தடவதான் இப்படி நடிப்பீங்க.. ஒங்களுக்கே அசிங்கமா இல்லியா.. அவ வர்றதா இல்ல. நீங்க போலாம்.."

"இத அவ சொல்லட்டும்.. நீ எங்க ஊடால வராத.."

"யாரு சொன்னாலும் முடிவு அதுதான்.." என்று உள்ளிருந்து குரலை மட்டும் அனுப்பினாள் பார்வதி.

"நெசமாவே மனசு திருந்தி வந்திருக்கேன்.. என்னை நம்பு.. "

"என் வேலைல வர்ற சம்பளத்துக்காகத்தானே இந்த நாடகத்த நடத்துறீங்க??. மொறைக்காதீங்க.. கெடச்ச ஒரு வேலையையும் காப்பாத்திக்கிடத் தெரியாம கல்லாவுல கைய வெச்சு, அசிங்கப்பட்டு.. நிக்கிறீங்க. ஊரு முகத்துல முழிக்க முடியாமத்தானே ஊர விட்டும் போனீங்க. இப்ப, நைசா என்னியக் கூட்டிட்டுப் போயிட்டா, என் சம்பளத்துல மஞ்சக்குளிக்கலாம்ன்னு நெனப்பு. அதுக்காகத்தானே திருந்திட்ட மாதிரி நடிக்கிறீங்க. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்ன்னு பாக்குறீங்களா.. உங்கூரு என்ன சந்திர மண்டலத்துலயா இருக்கு??.. பக்கத்துலதானே!!?. இன்னும் ஒங்களை நம்பறதுக்கு நா ஒண்ணும் இளிச்சவாச்சி இல்ல" என்றபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவன் அப்படியே தளர்ந்து அமர்ந்தான். "உன்னை எப்படி நம்ப வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல.. தட்டிக்கேக்கவும், புத்தி சொல்லவும் ஆளில்லாம வளந்துட்டேன். கல்யாணம் செஞ்சு வெச்சாலாவது திருந்த மாட்டானான்னுதான் என்னைப்பெத்தவங்க உன்னை ஏமாத்துற அளவுக்குப் போயிட்டாங்க. அப்பவும் நான் திருந்தலை.. ஆனா, நீயில்லாத இந்த ரெண்டு வருஷத்துல உன்னோட அருமையை ரொம்பவே உணர்ந்துட்டேன். உனக்கேத்தவனா என்னை மாத்திக்கிட்டுதான் உன் முன்னாடி வரணும்ன்னுதான், இத்தனை நாளு உன்னப் பாக்கக்கூட வரல. இப்ப, சென்னைல ஒரு கடையில வேலை பாக்கேன். என்னைய நம்பி கடய உட்டுட்டு போற அளவுக்கு மொதலாளி கிட்ட நல்லபேரு எடுத்துருக்கேன். ஆனா, உங்கிட்ட நல்லபேரு வாங்கினாத்தான் நா செஞ்ச பாவங்களக் கழுவினதா அர்த்தம். எனக்கு பகட்டா பேசத்தெரியல.. ஆனா, நா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். என்னிய நம்பு.." என்றபடி அவள் கைகளைப் பற்றினான்.

கைகளை மெல்ல விடுவித்துக் கொண்டு அவனை ஏறிட்டாள்... பழைய முருகேசன் தொலைந்து போயிருந்ததை அவன் கண்களில் தெரிந்த உண்மையின் வெளிச்சத்தில் புரிந்து கொண்டாள். இருந்தாலும் சூடுபட்ட பூனையாயிற்றே.. "நா சொல்ற ஒரு நிபந்தனைக்கு கட்டுப்பட்டா நீங்க சொன்னதைப்பத்தி யோசிக்கிறேன்.."

"நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்.. ஜெயிலு கைதிங்களுக்கு கூட திருந்தி வாழச் சந்தர்ப்பம் கொடுக்கறாங்க. அப்படி நெனச்சு எனக்கும் ஒரு கடைசி வாய்ப்பு கொடுக்கக் கூடாதா??.." பேச முடியாமல் அவன் குரல் தழதழத்தது.

"நிச்சயமா கொடுக்கறேன்... இன்னிலேர்ந்து ஒரு வருஷத்துக்கு நீங்க என்னிய பாக்கவோ, பேசவோ முயற்சிக்கக் கூடாது. இந்த ஒரு வருஷத்துல நீங்க சொன்ன மாதிரியே திருந்தி நல்ல வழிக்கு ஆகியிருந்தீங்கன்னா, என்னிய வந்து கூட்டிட்டுப்போலாம். அப்படியில்லாம, வெவகாரமா ஒங்களப்பத்தி ஏதாச்சும் நான் கேள்விப்பட்டேன்னா, என்னிய மறந்துடுங்க. இதான், நா உங்களுக்கு தர்ற தண்டனை, வாய்ப்பு, பரீச்சை எல்லாமே..." குரலில் கம்பீரத்தைக் காட்டிக் கொண்டாலும், எந்த நிமிஷம் உடைந்து விடுவோமோ என்றிருந்ததை மறைக்க அவள் ரொம்பவே பாடுபட்டாள்.

"நிச்சயமா ஜெயிச்சு வருவேன்.. எனக்காகக் காத்திரு..." என்றபடி செருப்பை மாட்டிக்கொண்டு எழுந்தவன், "மொதமொதல்ல, என் சம்பாத்தியத்துல உனக்குன்னு வாங்கியது.. மறுத்துடாதே.." என்றபடி அவள் கைகளில் திணித்து விட்டுப் போன மல்லிகைப்பூப் பொட்டலத்தை ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது....

69 comments:

'பரிவை' சே.குமார் said...

Nalla irukku... padamum arumai...

எல் கே said...

நம்பிக்கை வீண் போகாது. நல்ல நடை சாரல்

ஹேமா said...

நல்லதொரு கதை சாரல்.தன் தப்பை உணர்பவன் நிச்சயம் திருந்துவான்.நம்பலாம் !

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல ஒரு சிறு கதை...
கண்ணில் கண்ணீர் துளிர்த்து விட்டது....

வெங்கட் நாகராஜ் said...

துளிர் விட்ட நம்பிக்கை, மலர்ந்து பூ ஆகட்டும்.. நல்ல சிறுகதை. பகிர்வுக்கு நன்றி சகோ.

குறையொன்றுமில்லை. said...

நல்ல கதை. நம்பிக்கைதானே வாழ்க்கை. நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Chitra said...

lovely story.

Anisha Yunus said...

ஹே யப்பா... என்னமா எழுதறீங்க?? கடைசி வரிகளை படிக்கறப்போ நம்மையறியாமல் ஒரு புன்னகை, அப்பாடா அவள் வாழ்க்கை பிழைச்சிடும்னு... செம!! :))

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஆரம்பத்திலிருந்து.. தளராத நடையில், நல்லா இருக்குங்க கதை... பட்ட அவஸ்தைக்கு நியாயமான கண்டிஷன் தான்.. :-))

எல் கே said...

படம் சுட்டதா ?

ADHI VENKAT said...

நல்ல நடை. அவள் நம்பிக்கை வீண் போகாது.

Anonymous said...

=))

ஸாதிகா said...

நெகிழ வைத்த சிறுகதை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

மிக்க நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வீண்போகக்கூடாதுன்னுதான் என்னுடைய பிரார்த்தனையும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

செஞ்ச தப்பை மனசார உணர்ந்தாலே பாதி திருந்தினமாதிரிதானே.. நாமளும் நம்பிக்கையோட காத்திருப்போம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

மிக்க நன்றி சகோ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

மலர்ந்து நிச்சயமா மணம் வீசும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

//நம்பிக்கைதானே வாழ்க்கை//

ஒரு வாசகம்ன்னாலும்.. திருவாசகம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்னு,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

தன்னில் சரிபாதிக்கு, தண்டனையிலும் சரிபாதி :-))))

சாந்தி மாரியப்பன் said...

எல்.கே,

யாருன்னு கண்டுபிடியுங்க பாப்போம் :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுனாமிகா, ச்சே.. அனாமிகா,

சும்மா சிரிச்சா என்ன அர்த்தங்கறேன் :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

நன்றிங்க..

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை. சிறப்பான நடை. எத்தனையோ பெண்கள் சந்திக்கும் சூழல். பார்வதி தெளிவான முடிவு எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சாரல்.

இராஜராஜேஸ்வரி said...

good story.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான நம்பிக்கையூட்டும் கதை.

தவறு செய்தவன் நிச்சயமாகத் திருந்தக்கூடும்.

திருந்திய பின் அவனை மன்னிப்பது தான் மனைவிக்கு அழகு.

பாராட்டுக்கள்.

நான் மிகவும் ரஸித்த வரிகள்:
// குரலில் கம்பீரத்தை காட்டிக் கொண்டாலும், எந்த நிமிஷம் உடைந்து விடுவோமோ என்றிருந்ததை மறைக்க அவள் ரொம்பவே பாடுபட்டாள்.//

Thenammai Lakshmanan said...

மிக அருமையான மனம் தொட்ட கதை சாந்தி..:)

Sriakila said...

இயல்பான கதை..அவன் திருந்துவான் என்று நாமும் நம்புவோம்!

Menaga Sathia said...

சூப்பர்ர் கதை...

vanathy said...

தொடங்கிய விதம், முடிச்ச விதம் எல்லாமே அருமை. நல்ல கதை, அக்கா.

Yaathoramani.blogspot.com said...

அருமை.படிக்கிற நமக்கே நம்பிக்கை
ஏற்படும்படியாக அவனுடைய செயல்பாடுகளில்
உள்ள மாற்றங்களை மிகத் தெளிவாக
விளக்கியிருக்கிறீர்கள்.இருந்தாலும்
நீங்கள் கொடுத்துள்ள முடிவுதான் மிகச் சரி
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...super plot...nice story...lovely flow akka...:)

Mukil said...

அக்கா, கதை ரொம்ப நல்லா இருந்தது! நீங்க எழுதுற கதை எல்லாம் ரொம்ப எதார்த்தமாகவும், இயல்பாகவும் இருக்கு. :-))

தொடர்ந்து எழுதுங்கள்... நிறைய கதைகள் எதிர்பார்க்கிறோம்.

-முகில்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

அழகா சொல்லிட்டீங்க.. அதேசமயம் மன்னிச்சுட்டா அப்புறம் அந்த தப்பையும் மறந்துடணும்.. சரிதானா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனம்மை,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீஅகிலா,

அதுதான் எல்லோருடைய பிரார்த்தனையும்கூட :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வானதி,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

டாங்கீஸ்பா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலு,

ஒரு பாட்டில் பூஸ்டை அப்படியே சாப்பிட்டமாதிரி உற்சாகத்தை கொடுக்குது உங்க பின்னூட்டம்:-))

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், எப்படிப்பா இந்த வட்டார வழக்கைக் கொண்டு வந்தீங்க:)
நான் இந்தப் பேச்சை மறந்து நாளாச்சு. அமைதியான நடையில் சுணக்கமில்லாமல் கதையை நகர்த்திட்டீங்களே. அருமை அருமை. நம்பி இருப்போம்.

RVS said...

சுகமே.... அப்படின்னு டைட்டில் கூட சேர்த்து படிச்சுக்கிட்டேன்... நல்லா இருந்தது... ;-)

"உழவன்" "Uzhavan" said...

இயல்பான நடை கதைக்குப் பலம் சேர்க்கிறது.

கோமதி அரசு said...

கதை நல்லா இருக்கு அமைதிச்சாரல்.

சுந்தரா said...

அழகான நடையில் ஒரு அருமையான கதை சாரல்.

நம்பிக்கை ஜெயிக்கட்டும் :)

மாதேவி said...

நல்லாக இருக்கு கதை.

R. Gopi said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

எங்கூட்ல இன்னும் கன்யாகுமரித்தமிழும் நெல்லைத்தமிழும் கொஞ்சூண்டு நடமாடிக்கிட்டுத்தான் இருக்கு :-)))

ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க RVS,

அதேதான் நான் சொல்லவந்ததும் :-)))

ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க உழவன்,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதியம்மா,

ரொம்ப நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

நம்பிக்கை நிச்சயமா ஜெயிக்கணும்னு நானும் வேண்டிக்கறேன்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

ரொம்ப நன்றி..

Asiya Omar said...

மிக அருமையான கதை சாரல்.இது எப்படி இத்தனை நாள் என் கண்ணில் படாமல் போனது.முடிவு கண்ணீரை வரவழைத்து விட்டது.

Unknown said...

ரொம்ப நல்லா இருக்குங்க கதை.முடிவும் அருமை.

நானானி said...

நல்ல கதை..நல்ல நடை...நல்ல தெளிவான முடிவு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

வாசிப்புக்கு நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜிஜி,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

ரொம்ப நன்றிம்மா..

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்...கதைக்கும்..வட்டார வழக்குக்கும்...

rkm said...

இனியெல்லாம்...அருமையான கதை. கமலம் உடைந்தாலோ இல்லையோ ஆனால் நான் உடைந்தேன் கண்கள் ஈரமானது. நல்ல கதைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

ரொம்ப நன்றிப்பா வாசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க RKM,

ரொம்ப நன்றி சகோ..

LinkWithin

Related Posts with Thumbnails