செடிகளின் மேலும், பூக்களின் மேலுமான ஆசை எப்போதிலிருந்து ஆரம்பிச்சிருக்கும். யோசிச்சுப்பார்த்தா, பிறவியிலேயே ஆரம்பிச்சிருக்கும்ன்னு தோணுது. (நெறைய பெண்களுக்கு அப்படித்தான் :-)). ஐந்தாம் வகுப்பு வரைக்கும் பாப்கட் ஹேர்ஸ்டைல்தான். அதையும், உச்சந்தலையில் ரப்பர்பேண்ட் போட்டு கொத்தமல்லிக்கட்டு மாதிரி கட்டிவிட்டிருப்பாங்க. இந்த அழகுல, வீட்ல அம்மாவுக்கும் எனக்குமா பூ வாங்கினாக்கூட, அத்தனையும் எனக்குத்தான் வேணும்ன்னு பிடுங்கிப்பேனாம். தலைமுடியைவிட பூதான் அதிகமா இருக்கும்ன்னு ஆச்சிகூட கிண்டல் பண்ணுவாங்க :-))
கொஞ்சம் வளந்தப்புறம், வீட்டுல செடிவளர்க்கணும்ன்னு ஒரு ஆசை. என் அப்பாவழிப்பாட்டிக்கும், தாய்மாமாவுக்கும் தோட்டக்கலையில் இருந்த ஆர்வத்தைப்பார்த்துக்கூட வந்திருக்கலாம். அவங்களுக்கு நல்ல கைராசியும் உண்டு. என்னத்தை விதைச்சாலும், அவ்வளவு செழிப்பா வளந்து நிற்கும். (எனக்கும் துளியூண்டு உண்டு ஹி..ஹி..ஹி..). சிரட்டைன்னு சொல்லப்படற கொட்டாங்கச்சியில் மண் நிரப்பி கடுகு, மெரிகோல்ட் விதைகளை போட்டுட்டு, முளைச்சிடுச்சா இல்லியான்னு தெனமும் கவனமா பாத்துக்கிட்டிருப்பேன். முளைச்சு ஒரு ஜாண் உசரத்துக்கு வந்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம், இதுலெல்லாம் வளர்த்தா பூக்காதுன்னு தெரிஞ்சதும் ஒர்ரே ஃபீலிங்க்ஸ்தான்..
பாட்டி வீட்டுல இருந்த அடுக்குமுல்லைப்பூக்கு அப்படி ஒரு அபாரமான மணம். ஒண்ணுமேல ஒண்ணா நாலடுக்கா, இருக்கும். அவங்க வெச்சிருந்த செடிகொடிகளை வேறயாரையும் அண்டவிடாம தானே பராமரிப்பாங்க. கொடுக்காப்புளி, மருதாணி, முருங்கை, கனகாம்பரம், கோழி அவரைக்காய் (லேசான பர்ப்பிள் கலர்ல இருக்கும்)ன்னு அவங்க தோட்டத்தில் எக்கச்சக்கமா உண்டு. மாமாவோட தோட்டத்துல காய்கறிகளுக்கு தனியிடம் உண்டு. ஒருதடவை சூரியகாந்திப்பூவை கேட்டு அடம்பிடிச்சு, மாமாவை வீடு முழுக்க துரத்தி, ஓடவெச்சு தண்ணிகுடிக்க வெச்ச வீரக்கதையெல்லாம் உண்டு :-))). எனக்கு பயந்துட்டு தட்டட்டியில போய் உக்காந்துக்கிட்டார்.
இப்படியெல்லாம் பார்த்தே வளர்ந்ததுனாலயோ என்னவோ, வீட்டுத்தோட்டம் என்ற ஆசை மனசுல ஒரு மூலையில உக்காந்துக்கிட்டு பிறாண்டிக்கிட்டேயிருந்தது. வாய்ப்பும் வசதியும் கிடைச்சதும், நானும், சின்னதா அழகா ஒரு தோட்டம்போட்டுவெச்சேன். கல்யாணமாகி வந்தப்ப, தோட்டத்தை பிரியற ஏக்கம்தான் அதிகமா இருந்தது. இங்கே வந்தப்புறம், ஆரம்பத்துல ஒற்றை ரோஜாச்செடியை வளர்த்து திருப்திப்பட்டுக்கிட்டாலும், எப்பவாவது தொட்டிகளில், காய்கறிச்செடிகளை வளர்த்து உபயோகப்படுத்தும்போது நம்ம வீட்டுல வளர்த்ததுன்னு ஒரு தனி சந்தோஷம். அப்பப்ப சீசனுக்கேத்தமாதிரி, ஏதாவது விளையும். இப்போக்கூட புதினா, பொன்னாங்கண்ணி, தக்காளி, கரும்பு, மிளகாய், இத்யாதிகள்ன்னு பயிரிட்டுருக்கேன். வருஷாவருஷம் பொங்கலுக்கு மஞ்சள்குலை என்னோட தோட்டத்து சப்ளைதான்.
பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஏன்.. ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளைவைத்து, செடிகளை வளர்க்கலாம். அதுக்குன்னு ஓவல் வடிவமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்குது. சிலவீடுகளில் அடுக்களையில் ரெண்டு சுவர்கள் சேரும் மூலைகளில் மார்பிள், கடப்பா போன்ற கற்களை ஷெல்புமாதிரி பதிச்சு, அதுல கனமில்லாத தொட்டிகளை வெச்சிருப்பாங்க. கொத்தமல்லி, வெந்தயம், அரைக்கீரை வகைகளை அதுல வளர்க்கும்போது அழகான உள்அலங்காரமாவும் இருக்கும்.
இந்த இயற்கை உரத்தை நாமளும் வீட்டிலேயே செஞ்சுக்கலாம். பழைய பக்கெட்டுகள், குப்பைத்தொட்டிகள் இதுல ஏதாவது ஒண்ணில் அடுக்களைக்கழிவுகள், செடிகளிலிருந்து உதிரும் இலைதழைகள் இதெல்லாம் போட்டுட்டு வரணும். ஜூஸ் எடுத்தப்புறம் கிடைக்கிற சக்கைகளைக்கூட போடலாம். மொத்தத்தில் மட்கக்கூடிய குப்பைகளா இருக்கணும். எப்பவும் லேசான ஈரப்பதம் இருந்துட்டிருந்தா ரொம்ப நல்லது. மழைக்காலத்தில் மண்புழுக்கள் தாராளமா கிடைக்கும். அதுல கொஞ்சத்தை எடுத்து, நம்ம உரத்தொட்டியில் போட்டுவெச்சா, குப்பைகளை நல்ல சத்துள்ள உரமா மாத்திடும்.
குறிப்பிட்ட அளவுக்கு ஒருமுறை கொஞ்சம் மண்ணையும் ஒரு லேயரா அடுக்குங்க. மறக்காம உரத்தொட்டியை மூடிவையுங்க. இல்லைன்னா, ஈத்தொல்லை தாங்காது. தொட்டி நிறைஞ்சதும், அப்படியே விட்டு வெச்சுட்டா, சுமார் மூணு மாசத்துல நல்ல அருமையான உரம் தயார். லேசா சலிச்சு எடுத்து, செடிகளுக்கு போடலாம். அமோக விளைச்சல் கொடுக்கும். எப்பவும்,ரெண்டு உரத்தொட்டிகளை கைவசம் வெச்சிருக்கணும். ஒண்ணு ரெடியாயிட்டிருக்கும்போது இன்னொண்ணில் உரம் தயாரா இருக்கும்.
செடிகளை வளர்க்க தொட்டிகளுக்கும் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. இப்பல்லாம் கண்டெய்னர் விவசாயம்ன்னு ஒண்ணு பிரபலமாகிக்கிட்டு வருது. இது ஒண்ணும் புதுசில்லை.. நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான். வீட்டுல கிடக்கிற வேண்டாத பழைய டப்பாக்கள், பாட்டில்கள்ல செடி வளர்ப்போமே.. அதேதான். சில குடும்பங்கள்ல மாசாந்திர மளிகை வாங்கும்போது, அஞ்சுலிட்டர், ரெண்டு லிட்டர் கேன்கள்ல எண்ணெய் வாங்குவாங்க. அப்புறம், அதை பழைய பேப்பர்,பிளாஸ்டிக் வாங்குறவங்ககிட்ட தூக்கிப்போட்டுடுவாங்க. இதுதான் இப்போ நமக்கு கைகொடுக்கப்போவுது. பெப்சி, மிரிண்டா போன்ற பானங்கள் வர்ற பாட்டில்களையும் இப்படி உபயோகப்படுத்திக்கலாம். சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொஞ்சமாவது குறையும்.
கேன்கள், பாட்டில்கள், மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழிறக்கி வெட்டிக்கிட்டா, பூந்தொட்டி ரெடி. இதுல மண்ணை நிரப்பி தொட்டியின் அளவுக்கேற்ப சின்ன மற்றும் பெரிய செடிகளை நடலாம். பெரிய சைஸ் டப்பாக்களில், காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை நடலாம். சின்ன அளவுல வளர்ற ரோஜாக்கள், புதினா கொத்தமல்லி, அலங்காரப்பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்களே போதுமானது. வீட்ல இருக்கற பசங்ககிட்ட செடிகளை பராமரிக்கிற பொறுப்பை கொடுத்துப்பாருங்க. 'நானே வளர்த்ததாக்கும்'ங்கற பெருமையில பிடிக்காத காய்கறிகளும்கூட பிடிச்சுப்போக ஆரம்பிச்சுடும். எங்கவீட்ல வெண்டைக்காய் காய்ச்சுக்கிடந்தப்ப, பசங்க அதை பச்சையாவே சாப்பிடுவாங்க :-))
உங்க கற்பனைத்திறனுக்கேற்ப பாட்டில்கள்ல பெயிண்ட் வேலைப்பாடு செஞ்சுவெச்சா, அதுவே ஒரு அழகான உள்ளலங்காரமாவும் இருக்கும்.வீட்டுக்குள்ள வைக்கிறதுக்குன்னு தனியா க்ரோட்டன்ஸ்செடி வளர்க்கவேண்டியதில்லை. மும்பையில் குடிசைப்பகுதிகள்ல மட்டும் இருந்த இந்த கண்டெய்னர் முறை இப்ப நகரம் முழுக்க பரவ ஆரம்பிச்சிருக்கு. விளை நிலங்களெல்லாம் காங்கிரீட் காடுகளா மாறிட்டு வர்ற இன்றைய சூழல்ல, முடிஞ்சவரை அதை தடுக்கறதோட, நாம,இருக்குமிடத்தையும் உபயோகமுள்ள வகையில் பசுமையாக்கிக்கலாமே :-)))
கொஞ்சம் வளந்தப்புறம், வீட்டுல செடிவளர்க்கணும்ன்னு ஒரு ஆசை. என் அப்பாவழிப்பாட்டிக்கும், தாய்மாமாவுக்கும் தோட்டக்கலையில் இருந்த ஆர்வத்தைப்பார்த்துக்கூட வந்திருக்கலாம். அவங்களுக்கு நல்ல கைராசியும் உண்டு. என்னத்தை விதைச்சாலும், அவ்வளவு செழிப்பா வளந்து நிற்கும். (எனக்கும் துளியூண்டு உண்டு ஹி..ஹி..ஹி..). சிரட்டைன்னு சொல்லப்படற கொட்டாங்கச்சியில் மண் நிரப்பி கடுகு, மெரிகோல்ட் விதைகளை போட்டுட்டு, முளைச்சிடுச்சா இல்லியான்னு தெனமும் கவனமா பாத்துக்கிட்டிருப்பேன். முளைச்சு ஒரு ஜாண் உசரத்துக்கு வந்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம், இதுலெல்லாம் வளர்த்தா பூக்காதுன்னு தெரிஞ்சதும் ஒர்ரே ஃபீலிங்க்ஸ்தான்..
பாட்டி வீட்டுல இருந்த அடுக்குமுல்லைப்பூக்கு அப்படி ஒரு அபாரமான மணம். ஒண்ணுமேல ஒண்ணா நாலடுக்கா, இருக்கும். அவங்க வெச்சிருந்த செடிகொடிகளை வேறயாரையும் அண்டவிடாம தானே பராமரிப்பாங்க. கொடுக்காப்புளி, மருதாணி, முருங்கை, கனகாம்பரம், கோழி அவரைக்காய் (லேசான பர்ப்பிள் கலர்ல இருக்கும்)ன்னு அவங்க தோட்டத்தில் எக்கச்சக்கமா உண்டு. மாமாவோட தோட்டத்துல காய்கறிகளுக்கு தனியிடம் உண்டு. ஒருதடவை சூரியகாந்திப்பூவை கேட்டு அடம்பிடிச்சு, மாமாவை வீடு முழுக்க துரத்தி, ஓடவெச்சு தண்ணிகுடிக்க வெச்ச வீரக்கதையெல்லாம் உண்டு :-))). எனக்கு பயந்துட்டு தட்டட்டியில போய் உக்காந்துக்கிட்டார்.
இப்படியெல்லாம் பார்த்தே வளர்ந்ததுனாலயோ என்னவோ, வீட்டுத்தோட்டம் என்ற ஆசை மனசுல ஒரு மூலையில உக்காந்துக்கிட்டு பிறாண்டிக்கிட்டேயிருந்தது. வாய்ப்பும் வசதியும் கிடைச்சதும், நானும், சின்னதா அழகா ஒரு தோட்டம்போட்டுவெச்சேன். கல்யாணமாகி வந்தப்ப, தோட்டத்தை பிரியற ஏக்கம்தான் அதிகமா இருந்தது. இங்கே வந்தப்புறம், ஆரம்பத்துல ஒற்றை ரோஜாச்செடியை வளர்த்து திருப்திப்பட்டுக்கிட்டாலும், எப்பவாவது தொட்டிகளில், காய்கறிச்செடிகளை வளர்த்து உபயோகப்படுத்தும்போது நம்ம வீட்டுல வளர்த்ததுன்னு ஒரு தனி சந்தோஷம். அப்பப்ப சீசனுக்கேத்தமாதிரி, ஏதாவது விளையும். இப்போக்கூட புதினா, பொன்னாங்கண்ணி, தக்காளி, கரும்பு, மிளகாய், இத்யாதிகள்ன்னு பயிரிட்டுருக்கேன். வருஷாவருஷம் பொங்கலுக்கு மஞ்சள்குலை என்னோட தோட்டத்து சப்ளைதான்.
எங்கவீட்டு மிளகாயும்.. புதினாவும்.
ஒவ்வொருத்தரும் தன்னால் முடிஞ்சவரை, வீட்டுத்தோட்டங்களில் காய்கறி, கீரைகள், பூச்செடிகளை வளர்த்தாலே தன்னுடைய குடும்பத்தின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்துக்க முடியும். அதெல்லாம் கிராமங்களுக்குத்தான் சரிப்படும்.. நகரத்தில் ஏது வசதின்னு நிறையப்பேர் அலுத்துப்பாங்க. மனசிருந்தால் இடமுண்டு. இங்கே மும்பையில், குடிசைப்பகுதிகள்லயும் தொட்டிகளை வைக்க இடமில்லாட்டாக்கூட அதுகளை கயித்துல கட்டி கூரையின் பக்கக்கம்புகளில் தொங்கவிட்டுருப்பாங்க. சில இடங்களில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுக்கு மேலயும் ரோஜாத்தொட்டிகளை வெச்சிருக்கறதுண்டு.பால்கனிகளில், மொட்டைமாடிகளில், ஏன்.. ஜன்னல் விளிம்புகளில் கூட தொட்டிகளைவைத்து, செடிகளை வளர்க்கலாம். அதுக்குன்னு ஓவல் வடிவமைப்புள்ள தொட்டிகளும் கிடைக்குது. சிலவீடுகளில் அடுக்களையில் ரெண்டு சுவர்கள் சேரும் மூலைகளில் மார்பிள், கடப்பா போன்ற கற்களை ஷெல்புமாதிரி பதிச்சு, அதுல கனமில்லாத தொட்டிகளை வெச்சிருப்பாங்க. கொத்தமல்லி, வெந்தயம், அரைக்கீரை வகைகளை அதுல வளர்க்கும்போது அழகான உள்அலங்காரமாவும் இருக்கும்.
(சுட்டது..)
அபார்ட்மெண்டில் குடியிருப்பவர்கள், மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து, உழைப்பையும் செலவையும் பகிர்ந்துக்கிட்டா, பூச்சிக்கொல்லியின் நச்சு கலக்காத புத்தம்புது காய்கறிகள், பூக்கள் தங்குதடையில்லாம கிடைக்குமே. நல்ல உடற்பயிற்சியாவும், பயனுள்ள பொழுதுபோக்காவும் இருக்கும். மொட்டைத்தலையில்.. ச்சே.. மொட்டைமாடியில் பச்சைபசேல்ன்னு.. அழகா பூத்துக்குலுங்கும் தோட்டத்தையும் அதில் விளையாடவரும் அணில்கள்,குருவிகளையும் யாருக்குத்தான் பிடிக்காது!! Mumbai Port Trust-ன் காண்டீனின் மொட்டைமாடியில் இப்படியொரு அசத்தலான தோட்டத்தை, அதன் கேட்டரிங் ஆபிசரான ப்ரீதிபாட்டில் அமைச்சிருக்கார். காண்டீனின் பெரும்பான்மையான தேவையை அந்த தோட்டமே பூர்த்திசெய்யுதாம்.(சுட்டது..)
அமோகமான நல்ல விளைச்சல் கிடைக்கணும்ன்னா, முதல்ல மண் ஆரோக்கியமா இருக்கணும். செடிகள் தங்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்தும், மிச்சத்தை காற்றிலிருந்தும் கிரகிச்சுக்குது. அதனால மண்ணும் சத்து நிரம்பியதா இருக்கணும். இதை, இப்பல்லாம் செடிகளுக்கான நர்சரிகளிலேயே ரெடிமேடா விக்கிறாங்க. செயற்கையுரம் போடாம, மட்கும் குப்பைகள், மாட்டுச்சாணம் இதெல்லாம் கலந்து மட்கச்செய்து தயாரிக்கப்படுது. வாங்கிட்டு வந்து தொட்டியில் நிரப்பி, செடியை நடவேண்டியதுதான்.இந்த இயற்கை உரத்தை நாமளும் வீட்டிலேயே செஞ்சுக்கலாம். பழைய பக்கெட்டுகள், குப்பைத்தொட்டிகள் இதுல ஏதாவது ஒண்ணில் அடுக்களைக்கழிவுகள், செடிகளிலிருந்து உதிரும் இலைதழைகள் இதெல்லாம் போட்டுட்டு வரணும். ஜூஸ் எடுத்தப்புறம் கிடைக்கிற சக்கைகளைக்கூட போடலாம். மொத்தத்தில் மட்கக்கூடிய குப்பைகளா இருக்கணும். எப்பவும் லேசான ஈரப்பதம் இருந்துட்டிருந்தா ரொம்ப நல்லது. மழைக்காலத்தில் மண்புழுக்கள் தாராளமா கிடைக்கும். அதுல கொஞ்சத்தை எடுத்து, நம்ம உரத்தொட்டியில் போட்டுவெச்சா, குப்பைகளை நல்ல சத்துள்ள உரமா மாத்திடும்.
குறிப்பிட்ட அளவுக்கு ஒருமுறை கொஞ்சம் மண்ணையும் ஒரு லேயரா அடுக்குங்க. மறக்காம உரத்தொட்டியை மூடிவையுங்க. இல்லைன்னா, ஈத்தொல்லை தாங்காது. தொட்டி நிறைஞ்சதும், அப்படியே விட்டு வெச்சுட்டா, சுமார் மூணு மாசத்துல நல்ல அருமையான உரம் தயார். லேசா சலிச்சு எடுத்து, செடிகளுக்கு போடலாம். அமோக விளைச்சல் கொடுக்கும். எப்பவும்,ரெண்டு உரத்தொட்டிகளை கைவசம் வெச்சிருக்கணும். ஒண்ணு ரெடியாயிட்டிருக்கும்போது இன்னொண்ணில் உரம் தயாரா இருக்கும்.
செடிகளை வளர்க்க தொட்டிகளுக்கும் ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. இப்பல்லாம் கண்டெய்னர் விவசாயம்ன்னு ஒண்ணு பிரபலமாகிக்கிட்டு வருது. இது ஒண்ணும் புதுசில்லை.. நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான். வீட்டுல கிடக்கிற வேண்டாத பழைய டப்பாக்கள், பாட்டில்கள்ல செடி வளர்ப்போமே.. அதேதான். சில குடும்பங்கள்ல மாசாந்திர மளிகை வாங்கும்போது, அஞ்சுலிட்டர், ரெண்டு லிட்டர் கேன்கள்ல எண்ணெய் வாங்குவாங்க. அப்புறம், அதை பழைய பேப்பர்,பிளாஸ்டிக் வாங்குறவங்ககிட்ட தூக்கிப்போட்டுடுவாங்க. இதுதான் இப்போ நமக்கு கைகொடுக்கப்போவுது. பெப்சி, மிரிண்டா போன்ற பானங்கள் வர்ற பாட்டில்களையும் இப்படி உபயோகப்படுத்திக்கலாம். சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் கொஞ்சமாவது குறையும்.
கேன்கள், பாட்டில்கள், மற்றும் டப்பாக்களை அதன் குறுகிய வாய்ப்புறத்திலிருந்து கொஞ்சம் கீழிறக்கி வெட்டிக்கிட்டா, பூந்தொட்டி ரெடி. இதுல மண்ணை நிரப்பி தொட்டியின் அளவுக்கேற்ப சின்ன மற்றும் பெரிய செடிகளை நடலாம். பெரிய சைஸ் டப்பாக்களில், காய்கறிகள், கறிவேப்பிலை போன்றவற்றை நடலாம். சின்ன அளவுல வளர்ற ரோஜாக்கள், புதினா கொத்தமல்லி, அலங்காரப்பூச்செடிகளுக்கு குளிர்பான பாட்டில்களே போதுமானது. வீட்ல இருக்கற பசங்ககிட்ட செடிகளை பராமரிக்கிற பொறுப்பை கொடுத்துப்பாருங்க. 'நானே வளர்த்ததாக்கும்'ங்கற பெருமையில பிடிக்காத காய்கறிகளும்கூட பிடிச்சுப்போக ஆரம்பிச்சுடும். எங்கவீட்ல வெண்டைக்காய் காய்ச்சுக்கிடந்தப்ப, பசங்க அதை பச்சையாவே சாப்பிடுவாங்க :-))
உங்க கற்பனைத்திறனுக்கேற்ப பாட்டில்கள்ல பெயிண்ட் வேலைப்பாடு செஞ்சுவெச்சா, அதுவே ஒரு அழகான உள்ளலங்காரமாவும் இருக்கும்.வீட்டுக்குள்ள வைக்கிறதுக்குன்னு தனியா க்ரோட்டன்ஸ்செடி வளர்க்கவேண்டியதில்லை. மும்பையில் குடிசைப்பகுதிகள்ல மட்டும் இருந்த இந்த கண்டெய்னர் முறை இப்ப நகரம் முழுக்க பரவ ஆரம்பிச்சிருக்கு. விளை நிலங்களெல்லாம் காங்கிரீட் காடுகளா மாறிட்டு வர்ற இன்றைய சூழல்ல, முடிஞ்சவரை அதை தடுக்கறதோட, நாம,இருக்குமிடத்தையும் உபயோகமுள்ள வகையில் பசுமையாக்கிக்கலாமே :-)))
66 comments:
plastic recycling !!
வாவ் புதினா அழகா இருக்கு. எப்படி வளர்க்கிறீங்க அதை சொல்லுங்களேன்..
நல்ல பதிவு ..
முந்தாநாள் ஒரு கடையில் மூங்கில் குழாயால் ஆன தொட்டி பார்த்தேன் ரெண்டு மூங்கிலும் படுக்கை வாக்கிலே ஒரு சணல்ல தொங்குது அடுக்கடுக்கா .. அதுல இருந்து அழகு செடி ..சூப்பரா இருந்தது அத எப்படியாச்சும் எங்க வீடுல செய்யனும்ன்னு இப்ப இருக்கேன்.. :)
பார்க்கவே பசுமையாக - என்ன அழகாக இருக்கிறது!
அழகான தோட்டம் எங்க வீட்டுக்கும் தோட்டம் அமைக்கணும் அப்டியே கொஞ்சம் வந்து செஞ்சு கொடுத்துதுட்டு போனா நல்லா இருக்கும் ஹி ஹி ஹி
வாங்க விஜயன்,
அதே சைக்கிள்தாங்க :-)))
வீணா தூக்கிப்போடற பிளாஸ்டிக் டப்பாக்களை இப்படியும் உபயோகப்படுத்தினா, தொட்டி வாங்கற காசும் மிச்சம் :-))
வாங்க முத்துலெட்சுமி,
நீங்க சொன்ன ஹேங்கிங் தொட்டிகள், நிறைய ஸ்டைல்கள்ல வருதுங்க. இதேமாதிரி, தொங்கற தொட்டில அங்கங்க நாலஞ்சு ஓட்டை போட்டு வெச்சு, ஒவ்வொண்ணிலிருந்தும் தக்காளிச்செடிகள் வளர்ந்து நிற்கும் ஒரு ஸ்டைலை பத்திரிகையில் பார்த்தேன்.
மூங்கிலை ரெண்டா பிளந்து, மண் நிரப்பி, அதுல நெல் பயிரிடமுடியும்ன்னும் செஞ்சு காமிச்சிருந்தாங்க. எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா :-))))
வாங்க சித்ரா,
அந்த பசுமைக்காகத்தான் வீட்டுத்தோட்டம் போடறதே. எங்க வீட்ல பால்கனியை ஒட்டித்தான் டைனிங்டேபிளை வெச்சிருக்கேன். சும்மா,.. கார்டன் ரெஸ்டாரண்டுல சாப்ட ஒரு ஃபீலிங்கு கெடைக்குது:-)))
வாங்க சசி,
செஞ்சு கொடுத்தாப்போச்சு.. கன்சல்டிங் ஃபீஸ் அதிகமாகுமே பரவால்லியா :-))))))))
நல்ல பகிர்வு.
எங்க வீட்லே, பின்னால் நிறைய இடமிருப்பதால், நிறைய செடிகள் வைத்திருக்கிறேன். இடமில்லாதவர்கள் கூட தோட்டம் போடலாம் என்பதை உங்கள் பகிர்வு வெளிப்படுத்துகிறது.
ரொம்ப அருமைங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும் தோட்டம். என் வீட்டு பால்கனியில் நார்த்தங்காய், முருங்கை, மல்லிகை, கருவேப்பிலை , பாகற்காய் , தாள்பூ, ஆரங்சு செம்பருத்தி , செவ்வரளி , நீல பூ, மஞ்சள் பூ கொடி , வெள்ளை மரம். னு ஏகத்துக்கும் வளர்க்கிறேன்..
நல்ல பதிவுங்க.. ஊக்கமானதும்,.
நானும் சின்ன பிள்ளைல செடி வளர்துருக்கேன்...
நல்ல குறிப்புகள், அமைதிச்சாரல். நன்றி. கிழக்கு வெயில் கிடைக்கும் வீட்டு வராந்தாவில் வைத்திருக்கிறேன் தொட்டிகளை. பால்கனிகள் மேற்கு நோக்கியவை ஆதலால், அங்கே வைத்தவை செழிப்பாக வரவில்லை.
எளிமையாக சொல்லியிருக்கீங்க.
வீட்டுத்தோட்டம் போட்டால் , பொழுது போக்குமாச்சு,. பொருளுமாச்சு..
மனசுக்கு கொஞ்சம் நிம்மதியும் கிடைக்கும்.. பகிர்வுக்கு நன்றிகள்.
ஹை, அப்படியே எனக்குப் பிடிச்ச டாபிக், எனக்குப் பிடிச்ச மாதிரியே எழுதிருக்கீங்க. இப்ப குளிர் காலம்க்றதால, காய்கறிக் கழிவுகள் வச்சு உரம் தயாரிக்கிறதைத்தான் செஞ்சுகிட்டிருக்கேன். நீங்க சொல்லிருக்க மாதிரியேதான். பெரிய தண்ணி பாட்டில்கள்தான் என்னோட தொட்டி. இப்பத்திக்கு புதினா, மல்லி, வேம்பு, முருங்கைதான் வர ஆரம்பிச்சிருக்கு. வெயில் ஆரம்பிச்சதும் மற்ற காய்கறிகள் தொடங்குறதா பிளான்.
உங்க அனுபவம் எனக்கு நிறைய பயன்படும்னு நினைக்கீறேன். கொஞ்சம் உங்க மெயில் ஐடியை என்னோட hussainamma@gmail.comக்கு அனுப்ப முடியுமா? நோ கன்ஸல்டிங் ஃபீஸ்!! :-))))
இது வெறும் பொழுபோக்கு அல்லது அழகுக்கு மட்டுமல்ல. இந்த வேளைகளில் நாம் ஈடுபடும்போது நமது மன நிலையை சற்று கவனியுங்கள். நிறைய அமைதியும் அல்லது ஆழ்ந்த யோசிப்பும் மட்டுமே இருக்கும். மொத்தத்தில் மன அமைதிக்கு இது ஒரு சிறந்த வழியும் கூட.
பசுமையான புதினா செடி அழகு.
நாம்,இருக்கும் இடத்தை நீங்கள் சொல்வது போல் பசுமையாக்கலாம்.
அருமையான பதிவு அமைதிச்சாரல்.
எங்கள் வீட்டிலும் துளசி,ஓமவல்லி,நந்தியவட்டை,
நித்தியகல்யாணி, ரோஜா, சோற்றுகத்தாழை, மருதாணி,மணிபிளாண்ட் மஞ்சள் இவற்றை தொட்டிகளில் வளர்க்கிறேன். அவற்றிற்கு வெங்காயத்தோல்,காய்கறிகழிவுகள் தான் உரம்.
பொங்கலுக்கு வருஷா வருஷம் மஞ்சள்குலை கிடைத்துவிடும்.
மருதாணி ஒவ்வொரு பண்டிகைக்கும் வைக்க தோட்டத்தலிருந்து கிடைத்து விடும்.
நானும் என் வீட்டு இடத்திற்கு ஏற்ற மாதிரி செடி வளர்க்கணும்னு நெனைச்சுக்கிட்டே இருக்கேன். எப்படி ஆரம்பிக்கிறதுன்னு புரியாம இருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்தவுடன் ஆர்வம் வந்துவிட்டது.
உபயோகமானத் தகவல்கள், பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
தோட்டத்தில் அத்தனை இண்ட்ரஸ்ட்டா??
அமைதி சாரல்! முதல் பத்தியில் முதல் மூன்று வரிகளை வழி மொழிஞ்சிடரேன் :-) சென்னை அண்ணா நகர்
தோட்டகலை அலுவலகத்தில் வீட்டு தோட்டம், மாடி தோட்டம் இவைகளுக்கு பயிற்சி
வகுப்பு எடுக்கிறார்கள். போன மாதம் நான் கலந்துக் கொண்டு மிக மிக உபயோகமாய் இருந்தது.
முத்துலட்சுமி, அந்த மூங்கில் தொட்டி எங்க பார்த்தீங்க? முடிஞ்சா படம் எடுத்து போடுங்களேன்.
சேலத்தில் மாடியில் தொட்டியில் ஒரு சில செடிகள் உண்டு . இங்க எதுவும் இல்லை
நான்கூட பால்கனி ஜன்னலில் 4, 5
மண்தொட்டிகள்வைத்து துல்சி, நைட்
க்வீன்,ரோஸ், செம்பருத்தி வச்சிருக்கேன். நால்ல வாசனை செடிகளுக்கு தினமும்தண்ணீர் ஊற்றுவதே ஏதோ மெடிட்டேஷன் பண்ணூவத்போல தோனும். எப்பவாவ்து
ஊருக்குபோகவேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டமாயிடும்
நல்ல பசுமையான பதிவு சாரல்; இப்பத்தான் தெரியுது உங்க வலைச்சரத்துல வலப்பக்கம் ஏன் ஒரு பூனையும், பறவையும் குடை பிடிச்சி உக்காந்துருக்கு னு... அவிங்கத்தான் உங்க பூந்தோட்டக் காவல்காரங்களா?? :-)))
சிறப்பான பொழுதுபோக்கு, தொடர்ந்து செய்ய எங்களின் வாழ்த்துகள்!! :-))
-முகில்
நல்ல பசுமையான பதிவு. நாங்களும் இப்போதான் தோட்டம் அமைக்கும் வேலையில் இருக்கோம்.
வாங்க அம்பிகா,
பெரு நகரங்கள்லதான் வழியில்லை. ஊர்லயும்கூட,தோட்டம்போட இடமில்லாத சிலவீடுகள்ல மொட்டைமாடியை வேஸ்டா போட்டுவெச்சிருக்காங்க.. உபயோகப்படுத்தினா நல்லாருக்கும்.
வாங்க சாந்தி,
ஒரு நந்தவனத்தையே பராமரிக்கிறீங்கன்னு சொல்லுங்க :-))))
வாங்க மனோ,
ரொம்ப சந்தோஷம் :-))
வாங்க ராமலஷ்மி,
பொதுவா, தெற்குப்பக்கத்துலேர்ந்து வர்ற காத்தும் வெயிலும் செடிகளுக்கு நல்லதுன்னு சொல்றாங்க. உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்க்கறமாதிரி ஃப்ளாட் சிஸ்டத்துலயும் இதெல்லாம் பார்க்கமுடியாதுதான் :-))))
மத்தியான வெய்யில் உண்மையில் பால்கனியின் க்ரில் கம்பிகளை சூடாக்குது. அந்த வெக்கையில்தான் செடிகளும் வெம்பிப்போவுது. என் ஃப்ரெண்ட் வீட்டுல கம்பிகள்ல தண்ணீரை ஸ்ப்ரே பண்ணுவாங்க. அது ஓரளவு சூட்டைத்தணிக்கும். சிலபேர் மணிப்ளாண்ட் நட்டு படர்த்திவிட்டிருப்பாங்க. செடிக்கு செடியும் ஆச்சு.. வெய்யிலும் வீட்டுக்குள்ள உறைக்காது :-))))))
வாங்க பாரத்பாரதி,
செடிகளும் குழந்தைங்க மாதிரிதான்.. பார்த்துப்பார்த்து கவனிச்சுக்கணும்.. அது தர்ற சந்தோஷம் அளவிடமுடியாதுங்க :-)))
வாங்க ஹூஸைனம்மா,
ஜமாய்ங்க...
கன்சல்டிங் ஃபீஸா போட்டோக்களை போடணும்.. சொல்லிட்டேன் :-))))))
வாங்க மாணிக்கம்,
ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க.. கருத்துக்களை பின்னூட்டங்களிலும் பகிர்ந்துக்கணும்ன்னுதான் சிலவிஷயங்களை இடுகையில் சொல்லாம விட்டுடுவேன்.. கரெக்டா காட்ச் பிடிச்சுட்டீங்க :-))))))
வாங்க ஆசியா,
ரொம்ப நன்றிங்க..
வாங்க கோமதிம்மா,
எங்கவீட்லயும் மருதாணி ஏற்கனவே நட்டுவளர்த்தது உயிரை விட்டுடுச்சு. இந்தமழைக்காலத்துல மறுபடியும் ஆரம்பிக்கணும்ன்னு இருக்கேன்.
உங்க தோட்டத்தை பார்க்க ஆசையா இருக்கு, போட்டோ போடுங்க :-))
வாங்க அகிலா,
சூட்டோட சூடா உடனே ஆரம்பிங்க :-)))
வாங்க அமுதா,
எக்கச்சக்க இன்ட்ரஸ்ட்டுங்க.. முத்திப்போச்சு :-)))))))
வாங்க உஷா,
இங்கியும் தாராவியிலிருக்கும் மஹாராஷ்ட்ரா நேஷனல் பார்க்கில், The volunteer group urban leaves- தோட்டப்பயிற்சி கொடுக்கிறாங்களாம். எனக்குத்தான் போக வாய்க்கிறதேயில்லை :-)))
நான் நெனைச்சேன், நீங்க சொல்லிட்டீங்க.. முத்துலெட்சுமி.... போட்டோ ப்ளீஸ் :-))
மரம், செடி வளர்க்கும் வசதியிருந்தும் நிறையபேர் வீட்டில் இதை செய்வதில்லை.
மரம்,செடிகள் இல்லாத வீடுகள் என்றைக்குமே முழுமையடையாது.
மிளகாயும், புதினாவும் பசேல்னு அழகா இருக்கு சாரல்.
நானும்,இவ்வளவு நாள் பூச்செடிகள் மட்டுமே வளர்த்துட்டு, இப்பதான் தக்காளியும் மிளகாயும் போட்டுவச்சிருக்கேன்.
நாமே விதைபோட்டு வளர்க்கிற சந்தோஷமே தனிதான்.
நல்ல விஷயம் தான்
இதை படிக்கும் போது எனக்கு சின்ன வயசு நினைவும் வந்துடுச்சி... நான் ஒரு பிடி நெல்லை எடுத்து துணியில கட்டி வச்சி ஈரமாக்கி முளைக்க வச்சி வீட்டுக்குள்ளேயே வளர வச்சவன் நான் . ஏகப்பட்ட இண்டிரஸ்ட் இதுல எனக்கு
இதுல ஒரு தடவை ஆர்வம் வந்துட்டா அப்புறம் விடாது :-))
உபயோகமான பெஸ்ட் பதிவு இது
நல்ல பகிர்வு. நிறைய செடிகள் வைத்து வளர்த்திருக்கிறேன் சிறு வயதில்… அது நினைவுக்கு வந்தது…
எங்க வீட்டில் பூச் செடிகள் நிறைய இருக்கு. ஆனா இந்த காய்கறிச் செடிகள் வளர்க்க முடிவதில்லை. முயல் தொல்லை அதிகம். வந்து சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போய்டுவார்கள். காய்கறியை சாப்பிட்டா பரவாயில்லைன்னு விடலாம், ஆனால் செடியை முழுசாவே முழுங்கிடுதுங்க.
நல்ல பகிர்வு. புதினா பச்சை பசேல்னு இருக்கு. சுத்தி போடுங்க!
எனக்கும் தோட்டம் வைத்து வளர்க்க வேண்டும் என்ற ஆவல்! இப்போதைக்கு துளசி, கற்பூரவல்லி, கறிவேப்பிலை தொட்டிகளில் பால்கனியில் உண்டு.
வாங்க எல்.கே,
குறைஞ்சபட்சம் ஒரு துளசிச்செடியாவது வளர்க்க முயற்சி செய்யுங்க. சின்னக்குழந்தைகளை அடிக்கடி வாட்டியெடுக்கும் சளித்தொல்லைக்கு நல்ல மருந்தாவும் இருக்கும்..
வாங்க லஷ்மிம்மா,
செடிகளை பராமரிக்கிறதே ஒரு நல்ல தியானம் போலத்தானே.. எங்கவீட்ல ஊருக்கு போகணும்ன்னா செடிகளை வராண்டாவுல எடுத்துவெச்சிடுவேன். தோழி பார்த்துப்பாங்க :-))
வாங்க முகிலு,
ஆளையே காணோம்.. நல்லாருக்கீங்களா ??
நல்ல அருமையான கடமைதவறாத காவல்காரங்கப்பா.. மழைபெஞ்சாலும் குடைபிடிச்சுக்கிட்டாவது செடிகளுக்கு தண்ணி ஊத்தறாங்க பார்த்தீங்களா!! :-))))))))
வாங்க தெய்வசுகந்தி,
உங்க தோட்டமும் செழிப்புற வாழ்த்துகள்..
வாங்க பிரதாப்,
//மரம், செடி வளர்க்கும் வசதியிருந்தும் நிறையபேர் வீட்டில் இதை செய்வதில்லை//
எனக்கும் இந்த ஆதங்கம் நிறையவே உண்டு.
வாங்க சுந்தரா,
//நாமே விதைபோட்டு வளர்க்கிற சந்தோஷமே தனிதான்//
நிச்சயமா.. நம்மூட்டு பாகற்காயும் இனிப்பா இருக்கறமாதிரி தோணும் :-))))
வாங்க வேலுஜி,
நல்லதுங்க :-))
வாங்க ஜெய்லானி,
ஆஹா.. சின்னவயசுலயே பெரிய ஆராய்ச்சியாளராத்தான் இருந்திருக்கீங்க. விளையும் பயிர்... :-))))))
வாங்க வெங்கட்,
இப்போவும் வளர்க்கலாம்ப்பா.. கத்தரிக்காய் வளர்த்தா தங்க்ஸு 'பர்த்தா' செஞ்சு தருவாங்கல்ல :-)))
வாங்க வானதி,
என் அம்மாவீட்லயும் இதேமாதிரிதான் தொல்லை இருந்தது. தக்காளி நல்லா காய்ச்சு லேசா பழுத்துவரும். சரி நாளைக்கு பறிச்சுக்கலாம்ன்னு செடியில் விட்டுவெச்சா, பெருச்சாளி வந்து அபேஸ்பண்ணிட்டு போயிடும். அத ஏமாத்தறதா நினைச்சு,தக்காளிக்காய்களைச்சுற்றி துணியை பை மாதிரி கட்டிவைப்போம். அப்பவும் எங்களுக்கு பல்பு கொடுத்துடும் :-))))
செடிமுழுங்கி மகாதேவன்களா இருக்காங்க உங்கூரு முயல்கள் :-)))
வாங்க கோவை2தில்லி,
பறிச்சு சட்னியில் போட்டுட்டேன்ப்பா.. கடைகளில் கிடைக்கிறதைவிட நிச்சயமா டபுள்மடங்கு வாசனை :-))
மூங்கிலில் பூத்து தொங்குது பூ..:) வாங்க வாங்க..
அவசியமான பதிவு. படங்கள் நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள்.http://www.authorstream.com/Presentation/vincent2511-607128-home-garden/
முத்துலெட்சுமி,
படத்துக்கு நன்னிங்க :-))
வாங்க வின்சென்ட்,
அருமையான சுட்டிக்கு ரொம்ப நன்றி.. முகப்புத்தகத்தில் பகிர்ந்துவிட்டேன். இன்னும் நிறையப்பேரை சென்று சேருமே..
நல்லதொரு உபயோகமானதொரு பதிவு சார். வீட்டுத் தோட்டத்தை பராமரித்தாலே நல்லதொரு உடற்பயிற்சியும், பார்த்தாலே மனதுக்கு ஒரு நிம்மதியும் ஏற்படும். வாழ்த்துக்கள்.
நலமாகத்தான் அக்கா இருக்கிறோம்! லயமும், சுதியும் எப்படி இருக்காங்க?
அவிங்களுக்குப் பஞ்சாயத்து செஞ்சு புதுசா எத்தன சொம்பு வாங்கிருக்கீங்க? :-))
கொஞ்சம் பளுவான வேலை, அதான் க்கா பின்னூட்டமிட இயலவில்லை. மற்றபடி பதிவுகள் அனைத்தையும் படித்துவிடுவேன். :-)
காலைல எழுந்ததும் கண் முழிக்கறது என்னவோ உங்க வலைப்பூவாத்தான் இருக்கும். :-))
In my earlier Comments, I have mentioned you as "Sir" by mistake. I feel very sorry for this Madam. Please adjust.
வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,
என் தளத்துக்கு வருகை தந்தது ரொம்ப மகிழ்ச்சி..
இதில் தவறாக நினைக்க ஒண்ணும் இல்லை. புனைப்பெயரை வெச்சு ஏதும் கணிக்கமுடியாதுதானே :-)))
முகிலு,
சொம்புக்கு குறைச்சலே இல்லைப்பா.. ஒரு பாத்திரக்கடை போடலாமான்னு பாக்கறேன் :-)))
உங்க அன்புக்கு மிக்க நன்றி :-))
ஒரு நல்ல டைவர்ஷனுக்காக நானும் தோட்டக்கலை பயிலலாமே என்றிருக்கும் நேரம் உங்கள் பதிவு என் மனத் தோட்டத்தில் நல்ல பதியம் போட்டிருக்கிறது......நன்றி அமைதிச்சாரல்.....உங்கள் பெயரில் இருக்கும் சாரலே செடிகளுக்குப் போதுமான தண்ணீர் கொட்டிவிடும்...
வாங்க கோமாக்கா,
உங்க மனத்தோட்டத்து பதியன் செழிச்சு வளரட்டும்.. செடிகள், வளர்க்கிறது உங்களுக்கு நிச்சயமா நல்ல பொழுதுபோக்கா இருக்கும். நாம கொடுக்கற அன்பை அதுங்க பூக்களாவும் காய்,கனிகளாவும் திருப்பித்தருதில்லையா :-))
வீட்டுத்தோட்டம்.... நல்ல யோசனைகள். வீட்டு தோட்டத்தில் விதைவைத்து அது முளைக்கும் முன்பே பலதடவை எட்டிபார்பதும், மலர் பூத்தால் மனம் அதைவிட அதிகம் பூப்பதும், முடியாதபோது கீரையாவது பறித்து ஒரு அவசர சமையல் செய்வதும்,..எத்தனை வசதி இந்த வீட்டு தோட்டத்தில்... நல்ல கட்டுரைக்கு நன்றி.
வாங்க RKM,
ரோஜாக்கள் மெதுவா இதழ்பிரிப்பதை காத்திருந்து பார்க்கும் தருணங்களை விட்டுட்டீங்களே :-))
Post a Comment