"அப்றம்??"
"வீட்டுக்கு கொண்டுவந்து, தீயில வாட்டி, தோலை உரிச்சுட்டேன்"
"ஐயய்யோ!!!.. ஏன்ப்பா?"
"அப்பத்தானே கறி பண்ணமுடியும்"
"என்னாது!!! கறியா?"
"ஆமா.. சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்ப்பா. வீட்டுக்கு கொண்டு வந்ததும், மேல லேசா எண்ணையை தடவி, தணல்ல காட்டி.. நல்லா வாட்டி எடுக்கணும்"
" உசிரோடவா?"
"மார்க்கெட்டுக்கு வந்தப்புறம், ஏது உசிர் இருக்கப்போவுது..வாட்டி எடுத்ததை ரெண்டு நிமிஷம் ஆற வெச்சு, தோலை உரிச்செடுத்துடணும். அப்றம் கையாலயே சின்னச்சின்ன துண்டுகளா பிச்சு வெச்சுக்கணும்"
"எனக்கு அழுகையா வருது"
"வெங்காயம் வெட்டும்போது அழுகை வரத்தான் செய்யும் :-)). ரெண்டு வெங்காயத்தை பொடிப்பொடியா நறுக்கி வெச்சுக்கணும். நாலஞ்சு பல் பூண்டையும், நாலு பச்சைமிளகாயையும், ஒரு இஞ்ச் இஞ்சியையும் சேர்த்து அரைச்சு வெச்சுக்கணும். அப்றம், அடுப்புல எண்ணையை ஊத்தி சூடாக்கணும்"
"அடுத்தது கும்பிபாகமா?"
"கும்பிபாகமோ, நளபாகமோ!!..ஏதோ ஒரு சுயம்பாகம்..சூடாக்கின எண்ணையில ஒரு ஸ்பூன் கடுகையும், ஒரு ஸ்பூன் சீரகத்தையும் போட்டு லெட்சுமி வெடியாட்டம் வெடிக்க விடணும். அதுல வெங்காயத்தையும் போட்டு பொன் முறுகலா வதக்கணும். அதுல இஞ்சி,பூண்டு,மிளகாய் பேஸ்டை போட்டு பச்சைவாசனை போகிறவரைக்கும் வதக்கணும். அப்றம் பிச்சு வெச்சிருக்கிற கத்தரிக்காயை.."
"என்னாது!! இவ்ளோ நேரம் கத்தரிக்காயை சமைக்கிறதைப்பத்தியா சொன்னே???"
"ஆமா.. வேறென்ன நெனைச்சே.. ஐப்பசி மாசத்துல கொலைப்பசி நேரத்துல, குறிப்பு சொன்னா,..என்ன சமையல்ன்னுகூடவா கேட்டுக்க மாட்டே??.. சரி சரி,.. அப்றம், எங்கே விட்டேன்..."
"அடுப்பிலே கத்திரிக்காயை விட்டே"
"ஆங்.. கத்தரிக்காயை போட்டு லேசா வதக்கி, சிட்டிகை மஞ்சள்தூளும், ருசிக்கேற்ப உப்பும் போட்டு, மூடிபோட்டு அஞ்சு நிமிஷம் வெச்சுட்டு அப்றம் தட்டு போட்டுடவேண்டியதுதான்"
"தட்டு எதுக்கு?.. அதான் மூடி போட்டிருக்கே!!"
" நாஞ்சொல்ற தட்டு, சாப்பாட்டுத்தட்டு. சூடா கத்தரிக்காய் கறியும், சப்பாத்தியும், கொஞ்சூண்டு பருப்பு சாதமும் என்ன அருமையான காம்பினேஷன் தெரியுமா.. இத சாப்டா.."
"நல்லா ஆரோக்கியமா இருக்கலாம்.. அதானே?"
"ஆமா.. அப்டியே ஒரு இடுகையும் தேத்தலாம்.. ஹி..ஹி..ஹி."
"யம்மாடி!!.. இந்த கலவரத்துல, தேவையான பொருட்கள் என்னன்னு கேக்க மறந்துட்டேன்.. லிஸ்ட் போட்டுக்கொடு, சந்தைக்கு போயி வாங்கியாரேன். நாளைக்கு எங்கூட்லயும் செய்யப்போறேன்ல்ல"
"அப்படியா!!,சரி.. சொல்றேன்"
வேணும்கிற பொருட்கள்:
தேங்காய் சைஸ்ல இருக்கிற கத்தரிக்காய் -1
பெரிய வெங்காயம் - 2
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
எண்ணைய் -கொஞ்சூண்டு
உப்பு - ருசிக்கேற்ப
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை.
பூண்டு - நாலஞ்சு பற்கள்
இஞ்சி - 1இஞ்ச் அளவு
டிஸ்கி: நான் வீட்ல சுட்டு வெச்சிருந்த கத்திரிக்காய் படம் காணாம போனதுனால கூகிளாண்டவர் கிட்டேர்ந்து சுட்டுட்டு வந்துட்டேன். கத்தரிக்காய் இங்கே இருக்கு. எடுத்துட்டுப்போயி சமைப்பீங்களாம்.. சரியா :-))))))
