Saturday, 21 August 2010

நாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)

என் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' என்னை இங்கே கொண்டாந்து நிறுத்திட்டுது. ரொம்ப ஆசைப்பட்டு தேடி வாங்கிய புத்தகமாக்கும். படிச்சிட்டு இருக்கையில,.. எச்சில் ஊறவைக்கும் ஒரு செய்யுள்;

'அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி

சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி
சேனை ஏத்தன் சேர்த்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவை யோடு படைப்புப் போட '

இத்தனை கறிவகைகளும், ஓணம்,விஷூ, பொங்கல், புத்தரிசி பொங்குதல், பின்னே ஒரு நல்ல நாள், பெரிய நாள்கள்ல செய்றது உண்டு. இதுல,..நாடு முழுக்க தேடுனாலும் சரி.. நாஞ்சில் நாட்டு அவியலுக்கும், எரிசேரிக்கும் உள்ள ருசி வேற எங்கியும் கிடைக்காது. பின்னே, இப்ப ஓணம் வேற வருதா, கடைகள்ல அதுக்குண்டான கறிகாய்களும் கிடைக்குது. செஞ்சு பார்த்து ருசியுங்க.

1.கால் கிலோ சேனையை செதுக்கி வெச்சுக்கணும். கவனிக்க: நறுக்கச்சொல்லல. ஒரு ஓரமா ஆரம்பிச்சு,சேனையை உருட்டி, உருட்டி... அப்படியே சின்னச்சின்ன துண்டுகளா செதுக்கிக்கிட்டு வரணும். துண்டுகள் சின்ன பிரமிட் மாதிரி (முக்கோண சைஸ்ல) தானாவே வரும். இதை ஒரு பாத்திரத்துல தண்ணியில போட்டு வைக்கணும். இதே போல ஒரு ஏத்தங்காயையும் செதுக்கி தனியா, தண்ணியில போட்டு வைக்கணும்.

2. அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் நல்லமுளகு ரெண்டையும் உடைச்சு வைக்கணும்.

3. ரெண்டு கப் தேங்காப்பூவை எடுத்துக்கணும். அதுல ஒரு கப் தேங்காப்பூவை முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப்பொடியோட சேர்த்து, பட்டுப்போல அரைச்சு வைக்கணும். மிச்சமிருப்பதை, மிக்ஸியில லேசா, சதைச்சாப்ல சுத்தி எடுக்கணும். இது எதுக்குண்ணாக்க ,.. தேங்காப்பூ, எரிசேரியில கொத்துக்கொத்தா இருந்தா, பல்லுல மாட்டும் மக்ளே :-))).

இப்பம், சேனையை அடுப்புல வெச்சு, தண்ணி ரெண்டு கொதி வரும்வரை சூடாக்கணும். பின்னே, அந்த தண்ணிய இறுத்து எடுத்துட்டு, சேனையை பின்னேயும் ரெண்டு கப் நல்ல தண்ணியில வேகவிடணும். (இது எதுக்குண்ணாக்க,.. சேனையை அப்படியே சமைச்சா, சாப்பிடும்போது, தொண்டையில் கிச் கிச் வரும்).இப்போ இதுகூட, வாழைக்காயை கழுவிப்போடணும்.

இப்பம், மஞ்சப்பொடி, உடைச்ச முளகுப்பொடி.. இது ரெண்டையும் காய்க்கலவையில போட்டு கொதிக்கவிடணும். மறக்காம காய்க்குண்டான உப்பையும் போடணும். அரை வேக்காடு ஆனபின்னே, அரைச்ச தேங்காய்க்கலவையை போடணும். தானமா, தண்ணியையும் சேர்த்துக்கணும். ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை அதுல விட்டு நல்லா வேகவிடணும்.

இப்பம், ஒரு சின்ன சீனிச்சட்டியில(வாணலி)ரெண்டு ஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பின்னே, சதைச்சு எடுத்துவெச்ச தேங்காய் எல்லாத்தையும் போட்டு, தேங்காய் நல்லா சிவந்து வர்றவரை கிண்டணும். கருகிறக்கூடாது. இதை கொதிச்சுக்கிட்டு இருக்கிற எரிசேரிக்கலவையில ஊத்தி, கிளறிவிடணும். பின்னேயும் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். எரிசேரி லேசா குழைஞ்சாப்ல இருக்கணும். உப்பு உறைப்பு சரியா இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க. இப்பம் கடைசியா அரைடீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு , ஒரு இணுக்கு கறியப்பிலையையும் உருவிப்போட்டு மூடிவிடணும். அவ்வளவுதான்.. எரிசேரியை இறக்கிடலாம்.

எரிசேரி ரெடி..

***************

இப்பம்.. அவியல் செய்யலாம்:

தேவையானவை:

சீனியவரைக்காய் - 100 கிராம்.
சேனை - கால்கிலோ.
முருங்கைக்காய் - 1
பேயன் அல்லது சிங்கன் வாழைக்காய் - 1 ( நாட்டு வாழைக்காய்ன்னும் சொல்லுவாங்க )
கத்தரிக்காய் - 2.
புடலங்காய் - சுமார் நாலு இஞ்சு நீளத்துக்கு.
வழுதலங்காய் ( நீளமாக இருக்கும் பச்சைக்கத்தரிக்காய் - 1
வெள்ளரிக்காய் - சின்னத்துண்டு.
தடியங்காய் - சின்னத்துண்டு ( வெள்ளைப்பூசணியைத்தான் சொன்னேன் :-))))
கோவைக்காய் - 5 எண்ணம்.
மாங்காய் - பாதி.

மசாலாவுக்கு:
தேங்காய் - 1 மூடி.
பச்சைமிளகாய் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை.

எப்படி செய்யணும்????

சீனியவரைக்காய், சேனை ரெண்டையும் ஒண்ணரை அங்குல நீளத்துண்டுகளா அரிஞ்சு, தனித்தனி கிண்ணங்கள்ல போட்டு வைக்கணும்.

முருங்கைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், வழுதலங்காய், சிங்கங்காய், (நெல்லை மண்ணில் இதை படத்திக்காய்ன்னு சொல்லுவாங்க) முதலான எல்லாக்காய்களையும் ஒன்னரை இஞ்சு நீளத்துக்கு மெல்லிசா நறுக்கிவைக்கணும்.

மசாலாவை, ஒன்னுரெண்டா சதைச்சு வைக்கணும்.

மொதல்ல, ஒரு வாணலியில ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு அதுல, சீனியவரைக்காயைப்போட்டு லேசா நிறம் மாறும்வரை வதக்கணும். அப்புறம் ஒரு கப் தண்ணீர் விட்டு, அதனுடன் சுத்தம் செஞ்ச சேனையை போடவும். லேசா கொதிவந்ததும் இறக்கி, தண்ணீரை வடிச்சுட்டு, நல்ல தண்ணியில ரெண்டு தடவை அலசி, தண்ணீரை இறுத்துக்கணும்.

இன்னொரு பாத்திரத்தில் எல்லாக்காய்களையும், சுத்தம் செஞ்சு போட்டு, அரை டீஸ்பூன் உப்பிட்டு வேகவைக்கணும்.இதோட சேனை, சீனியவரையையும் சேருங்க. காய்களிலிருக்கும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டா ரெண்டு ஸ்பூன் தண்ணீரை மருந்து மாதிரி விடணும். அதுக்கு மேல விட்டா குழம்பாயிடும். அவியல் செஞ்சு முடிக்கிறவரை, அடுப்பு மிதமாவே எரியட்டும்.

மாங்காய் கல்லுப்போல இருந்தா, எல்லாக்காய்கறிகளோடவே போட்டுடலாம். கொஞ்சம் பிஞ்சா இருந்தா, மசாலா போடும்போது சேர்க்கலாம். மாங்காய் போடுறதா இல்லைன்னா, ரெண்டு ஸ்பூன் தயிரைச்சேருங்க. ஏன்னா காயில் லேசா புளிப்பு வரணும்.

முக்கால் வேக்காடு வந்ததும், அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவை காய்களோட சேர்த்து, இன்னொரு அரைஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெய், உருவிய கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து லேசா கிளறி, மூடி போட்டு வைச்சிடுங்க. அவியல்ல இருக்கிற காய் நல்லா வெந்தப்புறம், இறக்கி ஆறினபிற்பாடு ரெண்டு ஸ்பூன் தயிரைவிட்டு லேசா கலந்துடுங்க. சூடா இருக்கும்போது தயிரை சேர்த்தா, நீர்த்துப்போயிடும்.. அவியல் நல்லாருக்காது . கவனமா இருங்க.அவ்வளவுதான்... அவியல் மணம், சாப்பிடணும்ன்னு கொதியை உண்டாக்கும் :-))))))

தமிழ் நாட்டின் மத்த பகுதிகள்லயும், கேரளாவுலயும் எப்படியோ??.... நாஞ்சில் நாட்ல இப்படித்தான் செய்வாங்க.
அவியல் ரெடி...
படம் நாளக்கழிச்சு, ஓணத்துக்கு அவியல், எரிசேரி செய்யும்போ... எடுத்துப்போடுகேன் :-)))))).

படம் போட்டாச்சு..

76 comments:

Prathap Kumar S. said...

//நாடு முழுக்க தேடுனாலும் சரி.. நாஞ்சில் நாட்டு அவியலுக்கும், எரிசேரிக்கும் உள்ள ருசி வேற எங்கியும் கிடைக்காது. //

அது....பக்கத்துல திருநெல்வேலிக்கும் கேட்கறமாதிரி சத்தமா சொல்லுங்கோ...

வீட்டு ஞாபகம் வந்துடுச்சே...ஓணம்வேற வருது....:((

சாந்தி மாரியப்பன் said...

திருநெல்வேலிக்கு அவியல் மணமே சொல்லிடும்.

கல்யாண வீட்டு அவியலுக்கு, தனி ருசி உண்டு தெரியுமா :-)))))))

இன்னிக்கு தூங்குவீங்க!!!!!!

நன்றி.

ஆயில்யன் said...

நல்லா ஊர்ல கத்துக்கிட்ட கை பக்குவத்தோட சமைச்சு சாப்பிட்டுட்டு - சாப்பிடறதுக்கு முந்தி செஞ்சு வைச்சிருக்கிற சமையல் ஐட்டங்கள் அல்லாத்தையும் ரெண்டு ரெண்டு போட்டோவ எடுத்து வைச்சுக்கிட்டு, திருப்தியா சாப்பிட்டு முடிச்சுட்டு போட்டோவை தூக்கி ப்ளாக்ல போடுங்க அதை பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிடறோம் :)

பனித்துளி சங்கர் said...

நாஞ்சில் நாட்டு சமையல் புதுமைதான் போங்க . அப்படியே சில புகைப்படங்களையும் இணைத்திருந்தால் இன்னும் நல்ல இருந்திருக்கும் .

ஜெய்லானி said...

புதுப்புது காய்கறி பேரா சொல்றீங்க .. இருங்க , எதுக்கும் சேச்சிகிட்ட போய் சந்தேகம் கேட்டுட்டு வரேன் ....

ப்ரியமுடன் வசந்த் said...

//பட்டுப்போல// ரொம்ப நாளாவே எனக்கு ஒரு டவுட்டு பட்டுப்போலன்னா எப்படி மினுமினுக்கர மாதிரியா?

நாஞ்சில் நாட்டு சமையல் படிச்சாச்சு செய்ரதுக்கு வழியில்ல இருக்குற சமையல்லே ஒழுக்கமா சமைக்கத்தெரியலை இதுல நாஞ்சில் நாட்டு சமையல் செய்றோம்ன்னு நானே எனக்கு சொந்த செலவுல சூனியம் வச்சுக்க விரும்பல...

அவியல் மதுரை ஏரியால முட்டைல பண்ணி விப்பாங்க சாப்பிட்டிருக்கேன்..
இது வேற அவியலோ?

Anonymous said...

யாராவது செஞ்சு குடுத்தா சாப்புடுற கட்சி நான் :)

kavisiva said...

ஆஹா அவியல் எரிசேரின்னு நாக்குல எச்சில் ஊற வைக்கறீங்களே! இங்கே அதற்கான எந்த காயும் கிடைக்காது. சிங்கை போய் வந்தால் மட்டுமே அவியல் எரிசேரி எல்லாம்.

நாஞ்சிலாரே அதான் அக்கா ரெசிப்பி கொடுத்துட்டாங்கல்ல. சமைச்சி சாப்பிடுங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ஓண சத்யா விற்கும் ஹோட்டல்கள். புக் பண்ணி வாங்கி சாப்பிடுங்க :)

ரிஷபன் said...

எரிசேரியின் சுவைக்கு இந்த நாடே ச்சே.. இந்த நாக்கே அடிமை! ‘எறி’யாம சாப்பிடலாம்.. ‘சரி’யா என்று கலாட்டா செய்து சாப்பிடுவோம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட..நம்ம ஏரியா சமையல்... செம கலக்கல் .. இந்த வாரம் ஓணம் பண்டிகை வேற... வீட்டில விருந்து தடபுடலா இருக்கும் ...கூட்டு போரியல் என மொத்தம் 24 வகை இருக்கும்... போனிலையே வாசனை பிடிக்க வேண்டியது தான்...

நாடோடி said...

ஆஹா ந‌ம்ம‌ ஊரு அவிய‌லா!!!... ஹி..ஹி.. ந‌ல்லா தான் இருக்கும்.

kavisiva said...

அய்யோ இப்படி எல்லாரும் நம்ப ஊரு அவியல் ஓண விருந்துன்னு சொல்லி ஊரை நினைச்சு ஏங்க வைக்கறீங்களே :-(.

நாளைக்கு எங்க வீட்டுலயும் அவியல் இஞ்சிகறி எரிசேரி பாயாசம் எல்லாம் உண்டாம். இப்பதான் அம்மா ஃபோன்ல சொன்னாங்க :-(

Sri said...

OMG :)

Srini

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எரிசேரி சூப்பருங்கோ..! நாங்கூட ஏதோ வடசேரி மாதிரி ஊர்னு ஆரம்பத்தில நினைச்சேங்கோ!!

ஆர்.ஆர்.ஆர்.

ஹுஸைனம்மா said...

//பக்கத்துல திருநெல்வேலிக்கும் கேட்கறமாதிரி//

ஆமா, எங்களுக்கு அவியல் செய்யத் தெரியாது; அவியல் மட்டுமில்ல இன்னும் நிறைய விதவிதமா சமைக்கத் தெரியாது; ஏன்னா, தின்னவேலிக்காரங்க சாப்பாட்டு ராமன்கள் இல்லை, அதான்!! நீசத்தண்ணியும், சின்ன வெங்காயமுமே போதும் எங்க ஆரோக்கியத்துக்கும், திடத்துக்கும்!!

ஹுஸைனம்மா said...

அப்புறம் அமைதிக்கா,

/சேனையை செதுக்கி வெச்சுக்கணும்//

இந்தச் சிற்பக்கலையை கொஞ்சம் படம்புடிச்சு போடுங்கக்கா, எப்படி செதுக்குறதுன்னு. (கிண்டல் இல்லைக்கா, நிசமாத்தான்)

ஏன்க்கா, நறுக்கிப் போட்டா வேகாதாக்கா? (ச்சும்மா..)

அப்புறம் //மசாலாவை, ஒன்னுரெண்டா சதைச்சு வைக்கணும்// அவியலுக்கு நைஸாத்தானே அரைக்கணும்? (அப்படித்தான் எங்க (நாகர்கோவில்) மாமியார் சொல்லிக் கொடுத்தாங்க!!)

:-))))))))

pudugaithendral said...

ok ok

சாந்தி மாரியப்பன் said...

அனைவரும் அமைதி காக்கவும். படங்கள் நாளைக்கு வெளியிடப்படும்.:-))))))))))))

ஹுஸைனம்மா said...

படம் நாலை வெளியீடுன்னா, இன்னிக்கு ப்ரிவ்யூ ஷோ உண்டாக்கா?
;-))))

kavisiva said...

யாருப்பா அது சந்தடி சாக்குல எங்க ஊர்க்காரங்கள சாப்பாட்டு ராமன்ன்னு சொல்றது? மாமியார் ஊருன்னு ஒரு பயம் இருக்கா பாருங்க...

அவியலுக்கு நைசா அரைக்க மாட்டாங்க. சதைச்சு போட்டாத்தான் நல்லா இருக்கும்

ஹேமா said...

புதிதான சமையல் முறைகள்.செய்து பார்க்க இங்கு இந்தக் காய்கறிகள் கிடைக்காதே.கத்தரிக்காய் முருங்கக்காய் அவரைக்காய் கிடைக்கும்.கண்டிப்பாய் சமைத்துப் பார்க்கிறேன்.நன்றி சாரல்.

தெய்வசுகந்தி said...

///சேனையை செதுக்கி வெச்சுக்கணும்//

இந்தச் சிற்பக்கலையை கொஞ்சம் படம்புடிச்சு போடுங்கக்கா, எப்படி செதுக்குறதுன்னு. (கிண்டல் இல்லைக்கா, நிசமாத்தான்)

ஏன்க்கா, நறுக்கிப் போட்டா வேகாதாக்கா? (ச்சும்மா..)//

அதேதான்!!!
நானும் இப்படித்தான் அவியல் செய்வேன்.

Asiya Omar said...

அனைவரும் அமைதி காக்கவும். படங்கள் நாளைக்கு வெளியிடப்படும்--
அட ஓணம் ஸ்பெசலா?அருமை.

Ahamed irshad said...

Superenga...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆயில்யன்,

எதுக்கு ஜொள்ளணும்??... ரெசிப்பி இருக்கு.படிச்சுட்டு செஞ்சு சாப்பிடுங்க. அதுக்காகத்தானே போட்டிருக்கேன்.

நானும் ஜொள்ளிக்கிட்டேதான் எழுதுனேன் ஹி..ஹி..ஹி..

ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கர்,

இது பாரம்பரிய சமையலப்பா :-))..

படங்கள் நாளை வெளியிடப்படும்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

எல்லாம் உங்களுக்கும் தெரிஞ்ச காய்கறிகள்தான். வட்டாரவழக்கில் போட்டிருக்கேன்.

சீனியவரைக்காய் = கொத்தவரங்காய்

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

பட்டுப்போலன்னா.. ரொம்ப நைஸா அரைக்கிறது. விழுதுன்னும் சொல்லுவாங்க..

அவியல் வேண்ணா காலை வாரிவிட்டுடும்.எரிசேரி தைரியமா செய்யுங்க.

இதை கூட்டவியல்ன்னு சொல்லுவாங்க. இதைத்தவிர இன்னும் வழக்கத்தில் இருக்கும் சில அவியல்கள்:

1.முட்டையும்,முருங்கைக்காயும் போட்ட முட்டை அவியல்.சிலசமயம் இதில் பருப்புவடையையும் பிச்சுப்போடுவதுண்டு.
2.மீன்+முருங்கைக்காய் போட்ட மீன் அவியல்.முள்ளில்லாத துண்டங்களாகப்பார்த்து மீனை சேர்ப்பாங்க.
3. நெத்திலிமீன் மட்டும் போட்ட மீன்அவியல்.

இன்னும் உண்டு. ஞாபகமில்லை :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

அம்மா கையால செஞ்சு கொடுக்க சொல்லுங்க :-))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

பாவம்ப்பா நீங்க... எல்லா காய்கறியும் கிடைக்கலைன்னாக்கூட வெறும் புடலங்காய் அல்லது கோவைக்காயில் கூட அவியல் செஞ்சுடலாம். நல்லாவே இருக்கும். இப்படித்தான் அவியல் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கு... என்ன செய்றது :-))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

சரியாச்சொன்னீங்க :-))))

நன்றி.

Prathap Kumar S. said...

// ஏன்னா, தின்னவேலிக்காரங்க சாப்பாட்டு ராமன்கள் இல்லை, அதான்!! நீசத்தண்ணியும்,//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...நீங்க எங்கப்போனாலும் சாப்பாட்டு ராமன்கள் ஊருக்குள்ள வந்துதானே வந்தாகனும்...:))

Prathap Kumar S. said...

//யாருப்பா அது சந்தடி சாக்குல எங்க ஊர்க்காரங்கள சாப்பாட்டு ராமன்ன்னு சொல்றது? மாமியார் ஊருன்னு ஒரு பயம் இருக்கா பாருங்க...//

நல்லாக்கேளுங்க கவி...நாம யாருன்னு காட்டாம விடக்கூடாது...எந்த ஏரியான்னு விசாரிச்சு வைங்க அடுத்த வெக்கேஷனுக்கு உசைனம்மா வரும்போது ஆட்டோ அனுப்பிடுவோம்:))

kavisiva said...

//நல்லாக்கேளுங்க கவி...நாம யாருன்னு காட்டாம விடக்கூடாது...எந்த ஏரியான்னு விசாரிச்சு வைங்க அடுத்த வெக்கேஷனுக்கு உசைனம்மா வரும்போது ஆட்டோ அனுப்பிடுவோம்:))//

ஆட்டோல்லாம் வேண்டாம். ஹுசைனம்மா கமெண்டுகளை மட்டும் அவங்க மாமியாருக்கு அனுப்பிட்டா போதும். அப்புறம் என்ன வெறும் நீச்சத்தணியும் வெங்காயமுமா கொடுத்து நல்லா கவனிச்சுக்குவாங்க :)

kavisiva said...

சாரல் மேடம் புடலங்காய் கோவைக்காய்னு இன்னும் என்னை வெறுப்பேத்தாதீங்க :(. நான் அழுதுடுவேன்.

நம்ம நாட்டுக்காய்கள் எதுவுமே இங்கு கிடைக்காது :(. அதுலயும் கொடுமை என்னன்னா வாழைப்பழம் கிடைக்கும் வாழைக்காய் கிடைக்காது. மாம்பழம் கிடைக்கும் மாங்காய் கிடைக்காது.(ஆனாலும் விடமாட்டோம்லா எங்கயாவது மாமரம் பார்த்துட்டா பறிச்சுக்கிட்டு வந்துடுவோம்லா :D) வாழையிலை கிடைக்கும் ஆனா முழுசா இருக்காது :(

வெங்கட் நாகராஜ் said...

எரிசேரி இரண்டு மூன்று முறை சாப்பிட்டு இருக்கிறேன். அந்த நல்ல நினைவுகளைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு. புகைப்படங்களை சீக்கிரம் போடுங்க! பார்த்தாவது[!] பசியைத் தீர்த்துக்கறோம் - மனசைத் தேத்திக்கிறோம்!

வெங்கட்.

Anonymous said...

சூப்பர் எரிசேரி &அவியல் ..எப்பிடி பண்ண வேண்டுமென்னு சொன்ன விதம் ரொம்ப சூப்பர் ..பகிர்வுக்கு நன்றி

Chitra said...

I like the way, you have given the recipe. :-)

Raja said...

ஓணம் ஸ்பெஷல் அவியல் எரிசேரி
நல்ல இருந்துச்சி சகோதரி. நோன்பு
திறந்தபின் சாப்பிடுகிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

செய்முறை படங்கள் பப்ளிஷ் செஞ்சாச்சு. உபயோகமா இருக்கும்ன்னு நம்பறேன் :-)))

ADHI VENKAT said...

அவியல் , எரிசேரி எனக்கு மிகவும் பிடித்தது. படிக்கும்போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

thillai said...

Enga akkavuku samaikavey theriyathu

ஜெய்லானி said...

சாரல் , நா கேக்க வேண்டிய கேள்வியெல்லாம் ஹுஸைனம்மா கேட்டு விட்டதால் அப்படியே ரிப்பீட்ட்ட்ட்ட்ட் ஹா...ஹா....

அப்பாவி தங்கமணி said...

பசி நேரத்துல இப்படி எங்கள வெறுப்பேத்தறதுல என்ன தான் சுகமோ? ஹும்... அனுபவிங்க... அனுபவிங்க... எனக்கு பார்சல் அனுப்பலேனா கண்டிப்பா வயறு வலிக்கும் சொல்லிட்டேன்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய,

ஓணசத்யா வாசனை, புடிச்சீங்களா இல்லியா:-). சமைக்க கத்துக்கோங்க அப்புறம் போனில் வாசனை புடிக்க தேவையிருக்காது...

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

இல்லையா பின்னே :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

என்னன்னு சொல்றது.. ஊருக்குப்போய் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுங்க :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீ,

நன்றிங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.ஆர்.ஆர்.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,,

நீச்சத்தண்ணியும் சின்ன உள்ளியுமா!!! அடிச்சு ஆடுறதுக்கு இதான் காரணமா :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஹுஸைனம்மா,

படம் போட்டுட்டேன்.. அப்புறம் நாஞ்சில் ஏரியாவுல ஒவ்வொரு கறிக்கும் ஒவ்வொரு விதமா காய்கறி நறுக்கணும்.

எரிசேரிக்கு செதுக்கிப்போடணும்.
தீயலுக்கு சின்னச்சின்ன சதுரங்களா நறுக்கிப்போடணும்.
அவியலுக்கு நீளமா நறுக்கணும்.

இதை மாத்திச்செஞ்சா, அவங்களுக்கு சமைக்கத்தெரியலைன்னு சொல்லிடுவாங்க. அப்றம் ஏன் சதைச்சுப்போடணும்ன்னு கவிசிவா சொல்லிட்டாங்க :-))). (நைசா அரைச்சா கூட்டுமாதிரி இருக்கும்)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்கப்பா தென்றல்,

என்னப்பா அடிக்கடி காணாம போயிடறீங்க :-)))

எட்டிப்பாத்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

சாப்டுட்டு சொல்லுங்க :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெய்வசுகந்தி,

எப்படீன்னு புரியலைங்க... ஏன் செதுக்கணும்ன்னு ஹுஸைனம்மாவுக்கு சொல்லிருக்கேன் பாருங்க.. எரிசேரிக்கு சேனையை தகடு மாதிரி மெல்லிசாத்தான் போடுவாங்க :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ஓணம் ஸ்பெஷலேதான்..

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

பிரதாப்பு, கவிசிவா,

ஹுஸைனம்மாவை டார்கெட் பண்ணியாச்சா.. நடத்துங்க. ஆட்டோவெல்லாம் போதாது. ஒரு கண்டெய்னர் ட்ரக்கை அனுப்புங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

படத்தோட ரெசிப்பியும் போட்டிருக்கேன். செஞ்சு சாப்பிட்டு தேத்திக்கோங்க. தில்லியிலும் இந்தக்காய்கள் கிடைக்குமே :-))

நன்றி.

சுந்தரா said...

ஒருநாள் லேட்டா பாத்துட்டேன். இல்லேன்னா நேத்து பண்ணி அசத்தியிருக்கலாம்.

படத்தைப் பாத்தா இப்பவே சாப்பிடணும்போல இருக்கே...

ஜெயந்தி said...

அவியல் பண்ணுவோம். எரிசேரி தெரியாது. ஏத்தங்காய்ன்னா என்ன காய்?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

இன்னிக்கும் செஞ்சு அசத்தலாமே :-))))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

நேந்திரங்காயை, ஏத்தங்காய்ன்னு சொல்லுவாங்க :-)))

நன்றி.

Mahi_Granny said...

சின்ன அம்மிணி கட்சி தான் . யாராவது சமைச்சு தந்தா சாப்பிடுற ஆளு தான் எப்பவுமே . ஆனாலும் வாசித்தே ருசிக்க முடிகிறது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மஹி.

வரவுக்கு நன்றிங்க.

நானும் சின்ன அம்மிணி கட்சியாத்தான் இருந்தேன், வேற வழியில்லாம சமைக்க ஆரம்பிச்சிட்டேன் :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

படிக்கும்போதே சாப்பிடமுடியாதுப்பா.. செஞ்சுதான் சாப்பிடமுடியும் :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

தில்லை,

இவ்வளவு அழகா செஞ்சு அடுக்கியிருக்கிறதை பார்த்தப்புறமுமா இப்படி :-))))

சமையல் தெரியாதது அந்தக்காலம்.. சமைத்து அசத்துவது இந்தக்காலம் :-))))))))))))))). நீ இன்னும் கொஞ்சம் வளரணும்ப்பா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

அப்பாடி.. தப்பிச்சேன். :-))))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தங்க்ஸ்,

பார்சல் எப்பவோ அனுப்பியாச்சு. தீவாளி ராக்கெட்ல கட்டி உட்டேனே.. இன்னும் வந்து சேரலியா?????

நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அது யாரது திருநெல்வேலிக் காரங்களை வம்புக்கு இழுக்கறது:)
நாங்க ஒரு பாகமா சமைப்போம். நீங்க ஒரு பாகமாகச் சமைப்பீக. இதிலென்ன குறை:)

உண்மையிலியே சூப்பர் டிப்ஸ் சாரல்.எங்க வீட்ட்லயும் சேனையைச் செதுக்கித்தான் செய்வோம்.
எங்க அவியலில் தயிர் நிறைய இருக்கும்.:) பாதிக்குப் பாதி! அருமையான குறிப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

முபையிலேயும் செய்யறாப்லயா - பலே பலே ! நல்வாழ்த்துகள் அமைதிச் சாரல் - நட்புடன் சீனா

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சீனா ஐயா,

நம்மவீட்டு விசேஷதினங்கள்ல இது இல்லாம இருக்காது.

அவியல் பையருக்கு பிடிக்கும். எரிசேரின்னா பொண்ணுக்கு உயிர்.. வாரத்துக்கொருதடவையாவது செய்றதுதான் :-)))

நன்றிங்க.

rishi said...

எரிசேரின்னா என்ன அ.சாரல் ? ஏத்தங்காய்ன்னா என்ன அ.சாரல் ?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷி,

எரிசேரி என்பது ஒரு வகை பதார்த்தம். கேரளாவிலும் நாஞ்சில் பகுதியிலும் அதிகம் செய்யப்படுவது.

கேரளாவின் புகழ்பெற்ற சிப்ஸ் செய்யப் பயன்படும் நேந்திரங்காயை ஏத்தங்காய்ன்னு சொல்லுவோம். இதைச் சேர்த்தால்தான் எரிசேரி ருசிக்கும்.

வரவுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails