Wednesday 28 July 2010

கண்ணாடி....


நம்ம தென்றல் தொடர்பதிவுக்கு கூப்பிட்டு கொஞ்ச நாள் ஆயிடுச்சு. இனியும் தள்ளிப்போட்டேன்னா.. புயலாயிடுவாங்க. ஆகவே..
ஆட்டம் ஆரம்பம்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அமைதிச்சாரல்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

கிட்டத்தட்ட மாதிரிதான். தமிழ்ப்படுத்தியிருக்கேன்.. பேரு யோசிக்கும்போது காசை சுண்டிவிட்டேன். பூ விழுந்தா பூப்பாதை(சொந்தப்பேரு),தலை விழுந்தா சிங்கப்பாதை(புனைப்பேரு). அது என்னடான்னா ஓடிப்போயி சிஸ்டம் இருக்கிற டேபிளுக்கு கீழே போயி தூங்கிடுச்சு. என்னடா செய்யறதுன்னு யோசிச்சேன்.எனக்கு மழை பிடிக்கும்.. அதுவும் அடிச்சிப்பெய்யுற மழையை விட மெல்லிய சாரல் ரொம்பப்பிடிக்கும். அதனால அந்தப்பேரு.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
பொழுதுபோகாத ஒரு நாள்லதான் கூகிள்ல தமிழ்வார்த்தைகள் வர்றதை கண்டுபிடிச்சேன்.. அது என்னடான்னா துளசிதளத்துக்கு கொண்டுபோய் விட்டது. 'வாங்களேன்.. கேக் சாப்புடலாம்'ன்னு கூப்பிட்டு துளசியக்கா விருந்து வெச்சாங்க. அப்புறம் அங்கியே செட்டிலாயிட்டேன்.. மறுபடி கண்டுபிடிக்கத்தெரியாம ரெண்டுமூணு நாள் முழிச்சது தனிக்கதை. கடைசியில் கூகிள் அண்ணாச்சி கண்டுபிடிச்சுக்கொடுத்தார். மொதல்ல தமிழ்மணம் இருக்கிறது தெரியாது.. இடுகைகளுக்கு பின்னூட்டம் வரும்ன்னும் தெரியாது.. ஏன்னா.. நான் எப்பவும் ஹோம்பேஜ்ல போயில்ல நிப்பேன்.. கடைசியா பொடி எழுத்துக்கள்ல .. comments ன்னு எழுதப்பட்டிருப்பதை கண்டுபிடிச்சேன். அவங்களோட தமிழக சுற்றுலாப்பதிவுகளை படிக்கும்போதுதான், பின்னூட்டம் போட ஆரம்பிச்சேன்.அப்ப 'ஐம்கூல்' என்ற பேர்ல பின்னூட்டம் போடுவேன். கொஞ்சம் கொஞ்சமா தமிழ்மணம் பக்கமும் வர ஆரம்பிச்சேன். ரொம்ப நாளுக்கப்புறம் சொந்தவூடு கட்டலாம்ன்னு முடிவெடுக்கும்போதுதான் கெட்டப்பை கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு இந்தப்பேரு. இன்னும் கொஞ்சம் இங்கே சொல்லியிருக்கேன்.அக்காவுக்கு லாரி அனுப்ப யோசிக்கிறவங்க அது நெறைய ரோஜாப்பூவை அனுப்பிவையுங்க, முட்களை எம்பக்கம் அனுப்பிவிடுங்க :-)))

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
மொதல்ல நான் பிரபலம் இல்லைன்னு உங்ககிட்ட சொல்லிக்கிறேன்.. இதுலேர்ந்தே தெரியும்.. நான் ஒண்ணும் செய்யலைன்னு.. பதிவை ஆரம்பிச்சு குடிபோகும்போது நாலஞ்சு பெரியவங்களுக்கு அழைப்பு வெச்சதை இதுல சேர்த்துக்கக்கூடாது :-))).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நம்ம வலைப்பக்கத்துக்கு வந்தவங்களுக்கு தெரியும். அங்க ஓரளவு, சொந்தக்கத, சோகக்கதையெல்லாம் இருக்கும்ன்னு.. என்னுடைய அனுபவங்களில் எனக்கு படிப்பினை கிடைச்சிருந்தா அதப்பத்தி எழுதலாம்தானே.. மத்தவங்களாவது உஷாரா இருந்துப்பாங்கல்ல. ஏதாவது சுவாரஸ்யமா இருந்தா அதை நண்பர்களோட பகிர்ந்துக்கப்பிடிக்கும். அதனால எழுதுறதுண்டு..பதிவின் தலைப்பிலேயே சொல்லிட்டேனே "நினைத்ததெல்லாம் கிறுக்குவேன்" அப்படீன்னு. விளைவுகள்??? அப்படீன்னா என்னங்க :-))))

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிறைய சம்பாதிச்சிருக்கேன்..அதவெச்சு,மும்பையின் கொலாபாபகுதியில் வில்லா வாங்கிப்போடணும்ன்னு திட்டம்.எவ்வளவுன்னு சொன்னா ஐ.டி.லேர்ந்து ஆட்கள் வந்துடுவாங்க.:-))))). இப்படீல்லாம் சொல்லுவேன்னு நினைச்சீங்களா... நான் சம்பாரிச்சது ஓரளவு தன்னம்பிக்கையை.. நிறைய நட்புகளை, கொஞ்சூண்டு எழுத்தை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணு உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச 'அமைதிச்சாரல்'.

தனியா தொகுக்க வசதியா 'கவிதை நேரமிது'

பேரண்ட்ஸ் கிளப்பிலும் இருக்கேன்.

எனக்கு கொஞ்சம் பாட்டுக்கிறுக்கு உண்டு. அதுக்காக ஆரம்பிச்சது குயில்களின் கீதங்கள். கொஞ்சம் டெக்னிக்கல்கோளாறுகளால் அப்டேட் செய்யாம இருக்கு.. (தமிழ்மணத்தில் இணைக்க முடியலை)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபமும் பொறாமையும் ஒரு நாளும் இருந்ததில்லை.. பிரமிப்பு மட்டுமே உண்டு.. அந்த லிஸ்டில் நிறைய பேர் இருக்காங்க.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல்பின்னூட்டம் போட்ட சகோ எல்.கே,ராமலஷ்மி மேடம், துளசியக்கா, வல்லிம்மா,முத்தக்கா, அப்புறம் இப்ப பின்னூட்டத்துல பாராட்டுற நீங்க வரைக்கும் பெரிய லிஸ்டே இருக்குதே.. எதைன்னு சொல்ல!!! என் உடன்பிறப்பு ஒருத்தர், 'அமைதிச்சாரல்ன்னு பேரு வெச்சிக்கிட்டு அட்டூழியம் செஞ்சுக்கிட்டிருக்கே.. நல்லா எழுதறேக்கா' ன்னு தொலைபேசினார். இன்னிவரைக்கும் அது பாராட்டா.. உள்குத்தான்னு தெரியலை? :-)))))))))

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நானே என்னைப்பத்தி என்ன சொல்றது..என் எழுத்துக்கள் சொல்லட்டுமே..(அப்படி ஒண்ணு நான் போடுற மொக்கையில் இருக்கா என்ன???)
:-))))))

இதை தொடர நான் அழைப்பது,







என்றும் அன்புடன்..

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்.






63 comments:

எல் கே said...

//அப்ப 'ஐம்கூல்' என்ற பேர்ல பின்னூட்டம் போடுவேன்//

இதை கண்டுபிடிக்க எனக்கு கொஞ்ச நாள் ஆச்சு

எல் கே said...

//முதல்பின்னூட்டம் போட்ட சகோ எல்.கே///

:)))

//இன்னிவரைக்கும் அது பாராட்டா.. உள்குத்தான்னு தெரியலை? //

உள்குத்துதான்

எல் கே said...

இவ்வளவு நாள் யாரும் கூப்பிடலைன்னு ஜாலியா இருந்தேன்,., மாட்டி விட்டுட்டீங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கலக்கல்... ஆஹா இதான் பெயர் காரணமா...சாரல் பிடிக்கும் சரி... சம்மந்தம் இல்லாம அந்த அமைதி எங்க இருந்துங்கக்கா வந்தது... ஹா ஹா ஹா... 70 followers வெச்சுகிட்டு நீங்க பிரபலம் இல்லையா.. அது சரி...ஓ.. தன்னடக்கம் போல... சூப்பர்... ஹா ஹா ஹா

Vidhya Chandrasekaran said...

அழகான பதில்கள்..

எல் கே said...

நாங்க ரொம்ப ஸ்பீடு

http://lksthoughts.blogspot.com/2010/07/blog-post_28.html

நசரேயன் said...

உள்ளேன் டீச்சர்

Prathap Kumar S. said...

//மொதல்ல நான் பிரபலம் இல்லைன்னு உங்ககிட்ட சொல்லிக்கிறேன்.. இதுலேர்ந்தே தெரியும்..//

உஙக தன்னடக்கம் புல்லரிக்க வைக்குது...

கூகுள் அண்ணாச்சிகிட்ட சும்மா பிரபல பதிவர்னு கேட்டா டைரக்டா உங்க பிளாக் லின்கைத்தான் தருது...இந்த மேட்டரு தெரியுமா உங்களுக்கு ;))

Prathap Kumar S. said...

///நல்லா எழுதறேக்கா' ன்னு தொலைபேசினார். இன்னிவரைக்கும் அது பாராட்டா.. உள்குத்தான்னு தெரியலை? :-///

இதுலென்ன சந்தேகம்...உங்களை பயங்கரமா கலாய்ச்சிருக்காரு உடன்பிறப்பு :))

என்பேரையும் போட்டு வஞ்சகம் தீத்துட்டீஙக போல.....:))

Chitra said...

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிறைய சம்பாதிச்சிருக்கேன்..அதவெச்சு,மும்பையின் கொலாபாபகுதியில் வில்லா வாங்கிப்போடணும்ன்னு திட்டம்.எவ்வளவுன்னு சொன்னா ஐ.டி.லேர்ந்து ஆட்கள் வந்துடுவாங்க.:-))))). இப்படீல்லாம் சொல்லுவேன்னு நினைச்சீங்களா... நான் சம்பாரிச்சது ஓரளவு தன்னம்பிக்கையை.. நிறைய நட்புகளை, கொஞ்சூண்டு எழுத்தை.


.... The BEST! சான்சே இல்லை....
தொடர, நானுமா? அழைத்ததற்கு நன்றி.

நசரேயன் said...

// "நினைத்ததெல்லாம் கிறுக்குவேன்" //

படிக்கிற எங்களுக்கு பைத்தியம் பிடிக்காம இருந்த சரிதான்

ப்ரியமுடன் வசந்த் said...

அந்த காசு இன்னுமா ஒழிஞ்சுட்டு இருக்கு?

அப்பா ஐம் கூல் லிங்கெல்லாம் படிச்சுட்டு வர்றதுக்குள்ள மூச்சுமுட்டுது...

தொடர்பதிவுன்னா என்னாங்க?

டாங்க்ஸ்...

பனித்துளி சங்கர் said...

உங்களின் பெயரைபோலவே சாரல் வீசும் வார்த்தைகளில் பதில்கள் அனைத்தும் சில இடங்களில் நகைசுவை ததும்ப மிகவும் நேர்த்தியாக இருந்தது . பகிர்வுக்கு நன்றி . பதிவை தொடர இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

//கிட்டத்தட்ட மாதிரிதான். தமிழ்ப்படுத்தியிருக்கேன்.. பேரு யோசிக்கும்போது காசை சுண்டிவிட்டேன். பூ விழுந்தா பூப்பாதை(சொந்தப்பேரு),தலை விழுந்தா சிங்கப்பாதை(புனைப்பேரு). அது என்னடான்னா ஓடிப்போயி சிஸ்டம் இருக்கிற டேபிளுக்கு கீழே போயி தூங்கிடுச்சு. என்னடா செய்யறதுன்னு யோசிச்சேன்.எனக்கு மழை பிடிக்கும்.. அதுவும் அடிச்சிப்பெய்யுற மழையை விட மெல்லிய சாரல் ரொம்பப்பிடிக்கும். அதனால அந்தப்பேரு.//

ஓவர் சாரல். ஒரு ஜென்மமானாலும் கண்டுபிடிக்கமுடியும்? :-)

ரொம்ப பிடிச்ச பதில்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், என்னையுமா இழுத்திட்டீங்க:)
உங்க சாரல்தான் என்னை உங்கள் பதிவுகளுக்கு இழுக்குது.இனிமை. தென்றலும் அப்படியே.மனதுக்கினிய வார்த்தைகளைக் கொடுப்பதற்கும் ஒரு தெளிவு வேணும். அது உங்களிடம் நிறையவே இருக்கு. பதில்கள் அனைத்தும் கற்பனையைப் பறக்க வைக்கிறது. உங்கள் அளவுக்கு எழுத முடியுமா தெரியலை. முயற்சிக்கிறேன். ரெண்டு நாள் வேணும்பா:)

சசிகுமார் said...

அருமை நண்பா வாழ்த்துக்கள்

Anonymous said...

பேட்டி அருமையா இருந்தது ஆனாலும் சொந்த பெயர் சொல்லவே இல்லை ...ஹூம்

Anonymous said...

கடைசி வரைக்கும் சொந்தப்பேர் என்னான்னு சொல்லவே இல்லை :)

அமைதி அப்பா said...

உங்கள் பதில்கள் நன்று. உங்கள் இயற்பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?
உங்கள் உறவினர்கள், இந்தப் பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்துவிட்டார்களா?

அம்பிகா said...

அருமையான பகிர்வு.
அமைதிசாரல் பேரே அருமையா இருக்கு சகோ.
நானும் தொடர்கிறேன்... விரைவில்.

அ.முத்து பிரகாஷ் said...

//என்றும் அன்புடன்..

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்.//


என்றும் அன்புடன்..

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா அருமையான பதில்கள் அமைதி அக்கா..

//என்றும் அன்புடன்..

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்.//

அடேங்கப்பா.. எங்களுக்கு அன்பான அமைதிச்சாரல் அக்காதான் தெரியும். ஆனா இத்தன பேர் இருக்காங்களா.. :)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

தொடர்ந்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அடப்பாவி,

பேருலயாவது இருக்கட்டுமேன்னுதான்..
:-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

வாங்க வாங்க...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

//கூகுள் அண்ணாச்சிகிட்ட சும்மா பிரபல பதிவர்னு கேட்டா டைரக்டா உங்க பிளாக் லின்கைத்தான் தருது...இந்த மேட்டரு தெரியுமா உங்களுக்கு ;))//

இது எப்போ... நான் லீவுல போயிருந்தேனே.. அப்போவா. இதெல்லாம் ஏன் BBC ந்யூஸ்ல சொல்லமாட்டேங்கிறாங்க :-)))

வஞ்சகமெல்லாம் இல்லை. நாஞ்சில் எக்ஸ்பிரஸ் எப்படி ஓட ஆரம்பிச்சுதுன்னு நாலுபேருக்கு தெரியவைக்கலைன்னா அப்புறம் வரலாறு என்னை மன்னிக்காது :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நீங்க தொடர்ந்தது ரொம்ப சந்தோஷம்.. கலக்கீட்டீங்க போங்க :-))))

வரவுக்கு நன்றி.

சுசி said...

நல்ல பதிலகள்..

பெயருக்கான விளக்கம் :))

ஜெயந்தி said...

கண்ணாடி மாதிரி பிரதிபலிக்குதா? நல்லாயிருக்கு கேள்வி பதில்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எக்கோவ்.... உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... வாங்கோ... (எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.... மொதல்லே சொல்லிட்டேன் ஆமா... வன்முறை நோ நோ... ஒகே....)
http://appavithangamani.blogspot.com/2010/07/blog-post_30.html

Thenammai Lakshmanan said...

அமைதியா,,.. செம்ம ரகளையில இருக்கு.:))

Athiban said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

சாமக்கோடங்கி said...

ஐயையோ இது பிரபலங்கள் எல்லாம் "நான் பிரபலம் இல்லை.. நான் பிரபலம் இல்லை..." என்று உரக்கக் கூவுகிற நாட்கள் போல....?

மாதேவி said...

அருமை சாரல்.

ரிஷபன் said...

நானே என்னைப்பத்தி என்ன சொல்றது..என் எழுத்துக்கள் சொல்லட்டுமே

இது நல்லா இருக்கு!

சாந்தி மாரியப்பன் said...

நசரேயன்,

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

அந்தக்காசு காசியாத்திரை போயிட்டுதோ என்னவோ.. கணடே பிடிக்க முடியலை :-)))

தொடர்ந்ததுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி,

நன்றிப்பா, கருத்துக்கு..

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. பாரா அண்ணா,

தமிழ்ல விளையாடுற உங்களாலேயே கண்டுபிடிக்க முடியலியா.. க்க்கும் :-)))
(எல்லோரும் சொல்லி வெச்சுட்டு கண்ணாமூச்சி ஆடுறாங்க போலிருக்கு)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

தொடர்ந்ததுக்கு நன்றி. உண்மையிலேயே அருமையா எழுதியிருக்கீங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

தொடர்ந்ததுக்கு நன்றி. உண்மையிலேயே அருமையா எழுதியிருக்கீங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

உங்க எல்லோராலயும் ஊகிக்கமுடிஞ்ச பேருதான். அதிலும் உங்களுக்கு ரொம்ப ஈஸி.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

அது வந்துங்க.. ஏற்கனவே ரெண்டுமூணு பேர் இருக்காங்க. பெயர்க்குழப்பம் வேணாமேன்னுதான்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா..

நீங்களுமா (என்னா குசும்பு:-)))

சின்ன வயசிலிருந்தே என் காதுல விழுந்துக்கிட்டுதான் இருக்கு :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

சப்போர்ட்டுக்கு நன்றிங்க. பேரைச்சொல்லும்போதே எவ்வளவு குளுமையா இருக்கு :-))))

தொடரக்காத்திருக்கேன்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நியோ..

என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலை :-))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

அது நாலாபக்கத்திலிருந்தும் வர்ற கோஷம் :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுசி,

கண்டுபிடிச்சிட்டீங்க போலிருக்கு. அதொண்ணும் கம்பசூத்திரமில்லை.. சரிதானா :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

அப்படித்தான் நினைக்கிறேன்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தங்கமணியக்கா,

மீ த க்ரேட் எஸ்கேப்ப்பு :-)))))

(கடத்திட்டுப்போக எப்போ வர்றாங்கன்னு சொல்லியனுப்புங்க.. பேக்கிங் பண்ண வேணாமா?) :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

ஆமாக்கா.. எப்பவாவது ரகளைதான் :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ்மகன்,

வலைப்பக்கத்துல இணைச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சாமக்கோடாங்கி,

இது "நான் பிரபலம் இல்லை" வாரம் :-)))

அப்படியே நான் பிரபலம் ஆவேனான்னு குறி சொல்லிட்டுப்போங்க...

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

நன்றிங்க.

Karthick Chidambaram said...

எங்கள் பள்ளியில் ஒரு ஆசிரியர் பேசினால் எச்சில் தெறிக்கும் அவருக்கு சாரல் என்று பெயர் வைத்தோம்.
நீங்க அப்படி இல்லை ... சரிதானே ?

நேர்மையான பதில்கள் :))) ( நேர்மைன்னா என்னனு கேட்க கூடாது )

அமைதி அப்பா said...

//அமைதிச்சாரல் said...

வாங்க அமைதி அப்பா..

நீங்களுமா (என்னா குசும்பு:-)))

சின்ன வயசிலிருந்தே என் காதுல விழுந்துக்கிட்டுதான் இருக்கு :-)))

நன்றி.//

மேடம், நான் யதார்த்தமாகக் கேட்டதுதான்.

// அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

கிட்டத்தட்ட மாதிரிதான். தமிழ்ப்படுத்தியிருக்கேன்
.//

மேலே உள்ள விளக்கத்தில் பிளாக்-ல் எழுதுவதற்காக, தங்கள் உண்மையான பெயரை தமிழ்ப்படுத்தியிருப்பதாக நான் புரிந்து கொண்டேன். தமிழ்ப்படுத்தும் முன் என்ன பெயராக இருந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கார்த்திக் சிதம்பரம்,

நிச்சயமா நான் அப்படி இல்லைங்க :-))))

(பேரு வைக்கிறதுல கில்லாடியா இருக்கீங்களேப்பா)

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமைதி அப்பா,

உங்க பேருலயும் அமைதி இருக்கே.. அதான் கேட்டேன் :-))))))))

கேள்விகளில் உண்மையான பெயரை கேக்கலியே.. எப்பூடி!!!மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்.

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

cheena (சீனா) said...

அட அறிமுகம் அருமையா இங்கே இருக்கே - பலே பலே

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சீனா ஐயா,

கொஞ்சூண்டு புட்டுவெச்சிருக்கேன் :-))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails