என்னைய வளர்க்குற நைனாவும், நான் வளர்க்கிற மைனாவும் ஒரு விஷயத்துல ஒத்துமையா இருக்காங்க..
எப்படிடா!!!!
எப்ப என்னைய பாத்தாலும், ஒடனே கத்த ஆரம்பிச்சுடுறாங்க.
***********************************************************************************
தோசை, சட்டுவத்தைப்பார்த்து பஞ்ச் டயலாக் அடிச்சா என்ன சொல்லும்?..
' நா.. எப்ப வருவேன்.. எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்..
சட்டுவம் திருப்பிச்சொன்னது," அதிகமா டயலாக் பேசுனே.. பிச்சுப்புடுவேன் பிச்சி".
********************************************************************************
கற்றதனாலாய பயன் என்கொல் இண்டர்னெட்டில்
வலைப்பதிவு எழுதா விடின்.
ப்ளாக் எழுதி வாழ்வாரே பதிவர் மற்றவரெல்லாம்
வலைப்பதிவு எழுதா விடின்.
ப்ளாக் எழுதி வாழ்வாரே பதிவர் மற்றவரெல்லாம்
வாசகரென்று அறியப் படுவர்.
கமெண்டென்ப ஏனை ஓட்டென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வலைப்பதி வாளருக்கு..
கமெண்டென்ப ஏனை ஓட்டென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வலைப்பதி வாளருக்கு..
அகர முதல எழுத்தெல்லாம் தமிழ்
எழுதியில் எழுதிப் பழகு.
நாங்களும் எழுதுவம்ல வலைக்குறள்..(வசந்து தம்பி கோச்சுக்க மாட்டீங்கதானே)
*********************************************************************************
பெட்ரோலே இல்லாம ஓடுற காரு எது தெரியுமா?..
கங்காரு.
*********************************************************************************
அஞ்சு லட்சம் நட்சத்திரங்கள் வானத்துல இருக்குன்னு சொல்லுங்க.. கேள்வியே கேக்காம ஒத்துக்குவாங்க. அதுவே,' இந்த பெஞ்சில் அடிச்சிருக்கிற பெயிண்ட் ஈரமா இருக்குன்னு சொல்லுங்க.. தொட்டுப்பாத்தாத்தான் நம்புவாங்க".. ஏங்க இப்டி?..
***********************************************************
இஞ்சினீயரிங்க் காலேஜில் படிச்சா இஞ்சினியர் ஆகலாம்.. ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சா ப்ரெசிடெண்ட் ஆகலாமா?...
********************************************************************************
ஒரு ஆமையும் முயலும் நுழைவுத்தேர்வு எழுதின. ஆமைக்கு 75%ம், முயலுக்கு 80%ம் கிடைச்சது. ஆனாலும் ஆமைக்குத்தான் வேலை கிடைச்சது. ஏன்ன்ன்ன்?..
ஆமைக்கு வேலை கிடைச்சது 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல'.. ரெண்டுக்கும் பந்தயம் நடந்து ஆமை ஜெயிச்ச கதை நினைவிருக்கா!!
********************************************************************************
எதிரி மன்னன் புதுவிதமா நம்ம மன்னரை தோற்கடிச்சிட்டானா... எப்படி?

புறா காலில் 'சுறா' படத்துக்கான டிக்கட்டை கட்டி அனுப்பியிருக்கான்..
********************************************************************************
என்னோட சிஸ்டம் ப்ரோக்ராமில் bug இருக்கிறதா அடிக்கடி மெஸேஜ் வருது.. ஏதோ ஒரு ஈமெயில் வழியா வந்திருக்கு. எப்படி சரிசெய்றதுன்னு தெரியலை.உதவி ப்ளீஸ்...
(thanks net for the picture).
********************************************************************************
ஒரு நாள் 'டோமினோஸ்' க்கு ஒரு போன் கால் வந்தது.
பணியாளர்: ஹலோ டோமினோஸ்.. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?..
வாடிக்கையாளர்: "--------"
பணியாளர் : "&^%##@(!@%#*/+##"
சக பணியாளர் : என்னப்பா ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவமா திட்டுறே?..
பணீயாளர் : நல்ல பிஸ்ஸா சாப்பிடணும், pizza hut டோட நம்பர் கிடைக்குமான்னு கேக்குறார்..
48 comments:
ஹஹஹா ..அந்த பூச்சி படம் கிளாஸ்
kallayil ippadi oru maranakadiyaa en intha kolai veri
சட்டுவம் ஹா ஹா ஹா..
வலைக்குறள் எல்லாமே சூப்பரு கமெண்டென்ப நல்லா வந்திருக்கு நீங்களே கண்டினியூ பண்ணிக்கங்க ...
பெஞ்ச் பெயிண்ட் கிகிகிகி
அந்த பூச்சி கொஞ்ச நேரம் என்னோட சிஸ்டத்துலதான் ஓடுதோன்னு நினைச்சேன் எங்க எடுத்தீங்க?
அந்த பூச்சி கொஞ்ச நேரம் என்னோட சிஸ்டத்துலதான் ஓடுதோன்னு நினைச்சேன//
ஆமா நானும்.. :)
எல்லாமே சூப்பர்..
சிரிப்பு தாங்கல உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்க கடிய விட அந்த பூச்சி கடி தேவல போலயே..
எல்லாமே சூப்பரு!
பெயிண்ட் fantastic!
ஒரே சிரிப்பு தான் ...நல்லா இருந்தது ....நைனா மைனா ,தோசை சட்டுவம் சூப்பர் ..நன்றி
Blogger dashboard-ல பூச்சியைப் பார்த்த வுடனே என்னமோ ஒரு பூச்சி ஓடுதோன்னு பயந்துட்டேன். :) பகிர்வுக்கு நன்றி.
தோசை, சட்டுவத்தைப்பார்த்து பஞ்ச் டயலாக் அடிச்சா என்ன சொல்லும்?..
' நா.. எப்ப வருவேன்.. எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்..
சட்டுவம் திருப்பிச்சொன்னது," அதிகமா டயலாக் பேசுனே.. பிச்சுப்புடுவேன் பிச்சி".
.... ha,ha,ha,ha,ha,ha,....
Best of the bunch!
கடைசி வரைக்கும் சிரிப்பு வரவே இல்லை... பிஸ்ஸா ஹட் படிச்சு க்ளுக்னு சிரிச்சுட்டேன்...
எப்படி இதெல்லாம்... :))
//கற்றதனாலாய பயன் என்கொல் இண்டர்னெட்டில்
வலைப்பதிவு எழுதா விடின்.
//
எல்லாக்குறளும் சூப்பருங்க. அந்தப்பூச்சியும் சூப்பரு
:-)))
வலைக்குறள்... சபாஷ் சரியான போட்டி வசந்துக்கு :)
அஞ்சு லட்சம் நட்சத்திரங்கள் வானத்துல இருக்குன்னு சொல்லுங்க.. கேள்வியே கேக்காம ஒத்துக்குவாங்க. அதுவே,' இந்த பெஞ்சில் அடிச்சிருக்கிற பெயிண்ட் ஈரமா இருக்குன்னு சொல்லுங்க.. தொட்டுப்பாத்தாத்தான் நம்புவாங்க".. ஏங்க இப்டி?..
///
ரொம்ப கரெக்ட்டு ஏங்க இப்படி.. :))
எறும்பு ஓடிகிட்டே இருக்கு சுறுசுறுப்பா !
நைனாவும் மைனாவும் சூப்பர், அதைவிட சூப்பர் சட்டுவம் சொன்னது. எப்படிங்க..இப்படி?
கோமாவுக்கு அடுத்து இப்படி கடிக்கிறீங்க?
மைனாவும் நைனாவும் சூப்பர், அதுவிட சட்டுவம் சொன்னது சூப்பரோ சூப்பர். நிறைய தோசைகள் இப்படித்தான் வரும்.
எப்படிங்க...இப்படி?
இந்தக்கடி கடிக்கிறீங்க?
எங்க புடிச்சிங்க அந்த பூச்சிய... விட்டுடுங்க.. பாவம்...
கலக்கல்...
எல்லாம் நல்லா கமெடியா இருந்தது..:))))
வாங்க பத்மா,
சிரிச்சதுக்கு நன்றி.
வாங்க எல்.கே,
கடிச்சு ரொம்ப நாளாச்சுல்ல.. அதான் :-))
நன்றி.
வாங்க வசந்த்,
கண்டின்யூ பண்றதா.. நானா?.. ஆளை உடுங்க சாமீய்.உங்க அளவுக்கெல்லாம் எனக்கு எழுத வராதே..
பூச்சியை ஈ கொண்டாந்துச்சு.
நன்றி.
வாங்க முத்துலெட்சுமி,
ஹிட் அடிக்காம உட்டீங்களே.. அதுவரைக்கும் சந்தோஷம் :-))
நன்றி.
வாங்க சசிகுமார்,
நன்றிங்க.
வாங்க பாலாஜி,
பூச்சிக்கடி தேவலையா,ஹை.. இன்னும் நாலஞ்சு அனுப்பவா? :-)))
நன்றி.
வாங்க சந்தியா,
ஹி..ஹி.. நன்றிங்க.
வாங்க வெங்கட்,
இந்த பூச்சியை என்ன செய்யலாம்?? இப்படி எல்லோருக்கும் பூச்சி காட்டி வெச்சிருக்கே?? :-))
நன்றி.
அந்த பூச்சி ஹய்யோ பார்த்து உண்மைன்னு நினச்ச்சுட்டன்!
எங்க மணி மேடமும் உங்கள மாதிரி தான் சிரிக்க சிரிக்க பேசுவாங்க...
எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும் உங்களையும்...
சாரலோட இன்னோரு முகமா இது:))
தோசையும் சட்டுவமும் சூப்பர்.:))
ஆஹா இப்படி எல்லாருக்கும் பதில் சொல்ல முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்.
வாங்க சித்ரா,
ஹி..ஹி..ஹி. நன்றிங்க.
வாங்க நாஞ்சில்,
ஏங்க.. இன்னிக்கு சிரியாவிரதமா?..
பிஸ்ஸா சாப்டு விரதம் முடிச்சிட்டீங்கல்ல, நல்லா சிரிக்கணும் :-))))
இத எழுதுறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி டோமினோஸ்ல ஆர்டர் பண்ணோம்.. அதுவரவரைக்கும் வெயிட் பண்ணிட்டிருந்த நேரத்துல அடிச்சது இது..:-))
வாங்க சின்ன அம்மிணி,
நன்றிங்க.
வாங்க கவிசிவா,
போட்டியா.. ஏங்க இப்டி கோத்துவிடுறீங்க.. நல்லாருங்க :-))))
நன்றி.
வாங்க தேனம்மை,
அதாங்க எனக்கும் தெரியலை.. ஏங்க இப்டி??????
நன்றிங்க.
வாங்க ஹேமா,
அதை எது கடிச்சுதுன்னு தெரியலை.. ஒரு இடத்தில் நிக்காம ஓடிக்கிட்டே இருக்கு :-))))))
நன்றி.
வாங்க நானானிம்மா,
எல்லாம் தோசை சுடும்போது தோணுறதுதான் :-))))
கடின்னதும் ஞாபகம் வருது..
சோப்புக்கும் பாம்புக்கும் என்ன வித்தியாசம்???
சோப்பு போட்டா உடம்புல நுரை வரும்.. பாம்பு போட்டா வாயில நுரை வரும்.. எப்பூடி?.. :-)))))
நன்றிம்மா.
வாங்க பாலாசி,
இத்தனை அருமையான நண்பர்களை விட்டுபோக மனசில்லையாம். இங்கியே சுத்திக்கிட்டிருக்கேன்னு சொல்லிடுச்சு :-)))
வாங்க நாடோடி,
நன்றிங்க சிரிச்சதுக்கு.
வாங்க பிங்கி,
உங்களை இப்படி கூப்பிடலாமா?.. என்னோட ஃப்ரெண்டு பேரும் பிங்கிதான்(செல்லப்பேரு)
ரொம்ப நன்றிங்க. உங்க மணிமேடத்தை பத்தியும் எழுதுங்களேன்...
வாங்க வல்லிம்மா,
சிரிக்கிறதும் சிரிக்க வைக்கிறதும் நிறையபேருக்கு பிடிக்கும் ஹி..ஹி.. எனக்கும் பிடிக்கும்.
ம்ம்ம்.. சொல்லலாம்தான். நம்மளை பிச்சி ஒதறிட்டாங்கன்னா என்ன செய்யுறது :-))))
நன்றிம்மா.
மனம் விட்டு சிரிக்க முடிந்தது..
தாராளமா கூப்புடலாம்!
ம்ம்ம் நிச்சயமா எழுதுறேன் மணி மேடம் பத்தி!
:-))))))))
//ஏங்க இப்டி?..//
அதையே தான் நாங்களும் கேக்குறோம்... ஏங்க இப்டி கொல்றீங்க? ஹி ஹி ஹி
//இஞ்சினீயரிங்க் காலேஜில் படிச்சா இஞ்சினியர் ஆகலாம்.. ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சா ப்ரெசிடெண்ட் ஆகலாமா?...//
ப்ளாக் எழுதினா பிளாக்கர் ஆகலாம்... ஆன மொக்கை எழுதினா மத்தவங்களை கொலைகாரர் ஆக்கலாம்... வேண்டாம் .........முடியல........
//ஆமைக்கு வேலை கிடைச்சது 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல'.. ரெண்டுக்கும் பந்தயம் நடந்து ஆமை ஜெயிச்ச கதை நினைவிருக்கா!!//
இதுக்கு நான் ஆமை race பாக்கவே போய் இருக்கலாம்...ஹா ஹா ஹா
//உதவி ப்ளீஸ்...//
எச்சுஸ்மீ... யாராச்சும் அந்த bug ஐ எடுத்து இந்த அக்கா காதுல போடுங்கப்பா... மீ எஸ்கேப்...
//பெட்ரோலே இல்லாம ஓடுற காரு எது தெரியுமா?..
கங்காரு. //
மேட்டர்ஏ இல்லாம பதிவு போடுறது யாரு தெரியுமா
நம்ம அமைதி அக்கா தான்...
நல்லவேள திருவள்ளுவர் மொதலே போய் சேந்துட்டார் இந்த கொடும எல்லாம் பாக்காம...
//"அதிகமா டயலாக் பேசுனே.. பிச்சுப்புடுவேன் பிச்சி". //
இதே டயலாக் தான் இனிமே நாங்க பேசலாம்னு இருக்கோம்...
வெயிலே அதிகமோ ?
வாங்க ரிஷபன்,
நன்றிங்க.
வாங்க அமுதா,
என்ன சொல்றதுன்னே தெரியாம சிரிச்சுட்டு போயிட்டீங்க போலிருக்கு :-))
நன்றி.
வாங்க அடப்பாவி,
மொக்கைன்னு லேபிள் போட்டப்புறமும் மேட்டர் தேடுறீங்களே உங்களை என்ன செய்யலாம் :-)))))
வள்ளுவர் இல்லாத தைரியத்துலதான் எழுதுறோமாக்கும்.. அவரு இருந்தாருன்னா, எழுத்தாணியால கண்ணைக்குத்திட மாட்டாரு!!!!!
அலோ..அலோ... எங்கேங்க ஓடுறீங்க?. ஆமைரேஸ் பாக்கவா? :-)))))
வாங்க நசர்,
உங்கூர்ல எப்படீன்னு எனக்கெப்படி தெரியும் :-)))
வரவுக்கு நன்றி.
Post a Comment