Tuesday, 6 July 2010

முள்ளில்லாத மீன்..

பேசும் திறன் என்பது கடவுள் ஒருத்தருக்கு கொடுக்கும் வரம். அது இல்லைன்னா அதைப்போல் ஒரு கஷ்டம் பெண்களுக்கு உண்டா என்ன?... விதிவசமா அப்படி ஒரு நிலைமை ஒரு பெண்ணுக்கு வந்துட்டா என்னாகும்.... இப்போ மட்டும் என்னவாம்?.. நிறையப்பெண்கள் வாயிருந்தும் ஊமைகளாகத்தானே இருக்கிறாங்க... மனசில் நினைக்கிறதெல்லாம் சொல்ல முடியுதா என்ன?.. இளமைக்காலத்துல பெற்றோர் சொல்படி கேக்கணும், கல்யாணத்துக்கப்புறம் கணவர் சொல்படி கேக்கணும், வயசான காலத்துல பசங்க சொல்படி கேக்கணும்.. கேளுங்க... கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்கன்னு நம்ம முன்னோர் பொன்மொழி சொல்லிவெச்சுட்டு போயிருக்காங்க. அதை மீறிட்டா நல்லபொண்ணு இல்லியாம் :-))).

கணவர்களெல்லாம், 'விடுதலை.. விடுதலை.. விடுதலை.. தங்கமணியின் அறுவைப்பேச்சிலிருந்து விடுதலை'ன்னு ஆனந்தப்பள்ளு பாடுவாங்க. அப்படி சந்தோஷப்பட விடலாமா!!.. வீட்டுல ஒரு கரும்பலகையை மாட்டிவெச்சு அதுல எழுதி,எழுதியே பேசுவோமில்ல. எங்ககிட்டேயிருந்து தப்பிக்க முடியாத்...சாக்பீஸ் செலவு எச்ட்ரா:-))). அப்புறம், காலங்காத்தால காப்பியோட,' எந்திரிங்க, பொழுது விடிஞ்சுடுச்சு'ன்னு சொல்லி எழுப்பமுடியாது. கைவளையலோட சத்தத்துலதான் எழுப்பணும். நல்லா ரெண்டு கை நிறைய டஜன் கணக்குல வளையல் போட்டுக்கிட்டாத்தான், லேசாவாவது சத்தம் வரும்... அது தங்கவளையலாத்தான் இருக்கணும்ன்னு சொல்லணுமா என்ன?....

பொதுவாகவே,..நம்ம மன உணர்வுகளை லேசுல யாரும் புரிஞ்சிக்கிறதில்லைன்னு எல்லோருக்குமே ஒரு நினைப்பிருக்கும். அதுவே, பேசமுடியாத ஒரு பெண்ணுக்கு இன்னும் அதிகமாகவே இருக்கும். கோபமோ, ஆதங்கமோ, மகிழ்ச்சியோ எதையுமே வாய்விட்டு பகிர்ந்துகொள்ளமுடியாத சூழ்நிலை என்பது பெரும்கொடுமை. பக்கத்து வீட்டுல நடக்குற மாமியார் மருமகள் சண்டையை பார்த்து,' நாமளும் இப்படி சண்டைபோட முடியலியே'ன்னு ஏங்குறது எவ்வளவு பெரிய சோகம்.. பட்டுப்புடவை வேணும்ன்னு ரெண்டு வார்த்தையில சொல்லவேண்டியதை, ' அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா'ன்னு நீட்டி முழக்கி பாடமுடியுதா.. கடவுள் என்னைய ஏந்தான் இப்படி படைச்சு சோகக்கடலில் நீந்தவிட்டாரோ.....

நேத்துக்கூட... மழைபெய்யுதே, இந்த நேரத்துல சூடா வெங்காயபஜ்ஜி சாப்பிட்டா நல்லாஇருக்குமேன்னு நினைச்சு, அவரை கிச்சனுக்கு கூட்டிட்டுப்போயி வெங்காயத்தயும், வாணலியையும் காட்டி, பஜ்ஜி போடச்சொல்லி சைகை காட்டினா... 'அடடே... வெங்காய பக்கோடா செய்யப்போறியா.. சரி.. சரி.. அப்படியே மசால்டீயும் கொண்டுவாயேன்'னு சொன்னதும் இனிமே வீட்டுல வெங்காயபஜ்ஜியே சாப்பிடறதில்லை... ஹோட்டல்ல மட்டும்தான் சாப்பிடுவேன்னு முக்கியமான முடிவெடுத்துட்டேன் தெரியுமா.. அதைக்கூட அவருக்கு எப்படித்தான் புரியவைக்கப்போறேன்னு தெரியலை.

எனக்கு பேசமுடியாதுன்னு நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதேயில்லை. கடவுள் ஒரு கையை பறிச்சிக்கிட்டாலும் நம்பிக்'கை'ன்னு இன்னொரு கையை கொடுத்திருக்கார். மத்தவங்களைப்போல என்னாலும் சாதிக்கமுடியும். என்னுடைய குறையை ஊனமா நினைச்சு என்னை மண்புழுப்போல நடத்த முடியாது. முள் இல்லைன்னா மீன் புழுவாயிடுமா என்ன!!.. அப்படி புழுவாயிட்டா அது இன்னொரு மீனுக்கு உணவாயிடும். அதுக்கு இடம்கொடுக்காமல் எனக்கான கடலில் நான் நீந்திக்கொண்டுதான் இருப்பேன். என் குழந்தையை ஆசைதீர, 'கண்ணே.. மணியே'ன்னு கொஞ்ச முடியாத என் சோகம்கூட முத்தங்களாகவும், ஒருதுளி கண்ணீராகவும் உதிர்கிறது. கடவுள் என்முன்னால வந்து, 'உன்னை பேச வைக்கமுடியாது,.. அதுக்கு பதிலா வேற ஏதாவது கேளு'ன்னு சொன்னா,.. 'நான் யாருகிட்டயாவது பேச நினைச்சா அதுமட்டும்.. நல்லாக்கவனிங்க.. பேச நினைக்கிறதுமட்டும் என் கையில் டிவில வர்ற ஃப்ளாஷ் ந்யூஸ் மாதிரி வரணும்'ன்னு கேப்பேன். கைரேகை மாதிரி, எதிராளி அதைப்படிச்சுக்கட்டுமே.. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்,.. கை நீட்டப்படாதுன்னு எல்லாம் யாரும் சொல்லப்படாது.. :-))

ஒரு சினிமா பார்த்தாலோ.. நல்ல இசை கேட்டாலோ.. இல்லை ஒரு புத்தகம் படித்தாலோ பகிர்ந்துகொள்ள நல்லவழி தெரியாம இருந்தது. இப்பத்தான் இலவசமா வலைப்பூ வளர்க்கலாமாமே... எனக்கு பேசவராதுன்னா என்ன.. எழுதப்படிக்க தெரியுமே....

தொடர்பதிவுக்கு வித்திட்ட வித்தியாசவசந்துக்கு, நன்றி. இப்போ நானும் ரெண்டுபேரை அழைக்கணும்.

1. உங்களுக்கு ஒரு மாத்திரை கிடைக்குது. அதைச்சாப்பிட்டா நீங்க விரும்பிய வயதுக்கு செல்லலாம். அப்படீன்னா எந்த வயதுக்கு செல்ல ஆசைப்படுவீர்கள்?.. சென்று என்ன செய்வீர்கள்.. உங்கள் கற்பனையை எழுதுங்கள் கோமா.

2. ஒரு நாளைக்கு மட்டும் நீங்கள் விரும்பிய உருவத்தை பெறலாம்ன்னு ஒரு வரம் கிடைக்குது. என்ன உருவம் எடுக்க ஆசைப்படுவீர்கள்?.. உங்கள் அனுபவம் எப்படியிருக்கும்ன்னு எழுதுங்க ஹுஸைனம்மா.

ஹுஸைனம்மா லீவுலெட்டர் கொடுத்துட்டு ஊருக்கு போயிட்டாங்க. அதனால அவங்களுக்கு பதிலா, அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள சகோதரர் நாடோடியை அழைக்கிறேன்.





44 comments:

எல் கே said...

saarak, vithyasamaana sinthanai, naanga thanga valayaluku pathila, irumbu valayal vaangi taruvom nalla satham varum

Prathap Kumar S. said...

//கல்யாணத்துக்கப்புறம் கணவர் சொல்படி கேக்கணும், வயசான காலத்துல பசங்க சொல்படி கேக்கணும்.. கேளுங்க... கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்கன்னு நம்ம முன்னோர் பொன்மொழி சொல்லிவெச்சுட்டு போயிருக்காங்க//

அப்படின்னு நீங்க சொல்றிங்க... என்னைக்கேட்டா நிறைய பெண்கள் குழந்தையா இருக்கும்போது பெற்றோர் பின்னாடி ஒளிஞ்சுக்க நினைக்கிறாங்க... கல்யாணத்துக்கபிறகு கணவனுக்கு பின்னாடியும், வயசானப்புறம் குழந்தைங்க பின்னாடியும் ஒளிஞ்சுக்க நினைக்கிறாங்க...

நிறைய பெண்கள் உண்மையான பேருல வலைப்பூ எழுதவே பயப்படறாங்க... இப்படி எத்தனை நாளுதான் பின்னாடி ஒளிஞ்சும் பயந்துகிட்டேயும் இருப்பீங்க...கேட்டா ஆணாதிக்கம்னு சொல்றீங்க...
என்ன கொடுமைங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

ரசிச்சு சிரிச்ச இடம்

// எந்திரிங்க, பொழுது விடிஞ்சுடுச்சு'ன்னு சொல்லி எழுப்பமுடியாது. கைவளையலோட சத்தத்துலதான் எழுப்பணும். நல்லா ரெண்டு கை நிறைய டஜன் கணக்குல வளையல் போட்டுக்கிட்டாத்தான், லேசாவாவது சத்தம் வரும்... அது தங்கவளையலாத்தான் இருக்கணும்ன்னு சொல்லணுமா என்ன?....//

ரொம்ப சிரிச்ச இடம்

//அவரை கிச்சனுக்கு கூட்டிட்டுப்போயி வெங்காயத்தயும், வாணலியையும் காட்டி, பஜ்ஜி போடச்சொல்லி சைகை காட்டினா... 'அடடே... வெங்காய பக்கோடா செய்யப்போறியா.. சரி.. சரி.. அப்படியே மசால்டீயும் கொண்டுவாயேன்'னு சொன்னதும் இனிமே வீட்டுல வெங்காயபஜ்ஜியே சாப்பிடறதில்லை... //

உணர்ச்சி பெருக்கு வந்த இடம்

//என் குழந்தையை ஆசைதீர, 'கண்ணே.. மணியே'ன்னு கொஞ்ச முடியாத என் சோகம்கூட முத்தங்களாகவும், ஒருதுளி கண்ணீராகவும் உதிர்கிறது. //

சாரல் மேடம் டிஸ்டிங்சன்ல பாஸாயிட்டீங்கோ...

தொடர்பதிவின் தலைப்பும் ரொம்பவே கிரியேட்டிவ் சூப்பர்ப் ரைட்டிங்.. கங்ராட்ஸ்...

pudugaithendral said...

ரசிச்சேன்

ஹுசைனம்மா டாடா போயிட்டாங்க.

தொடர் பதிவுக்கு எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா... அவ்வ்வ்வ்வ்வ்

நசரேயன் said...

//கணவர்களெல்லாம், 'விடுதலை.. விடுதலை.. விடுதலை.. தங்கமணியின் அறுவைப்பேச்சிலிருந்து விடுதலை'ன்னு ஆனந்தப்பள்ளு பாடுவாங்க. அப்படி
சந்தோஷப்பட விடலாமா!!.//

அடிமையா இருந்திருப்பாங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// அது தங்கவளையலாத்தான் இருக்கணும்ன்னு சொல்லணுமா என்ன?....//
இது சூப்பர்ங்க்கா.... ஹா ஹா ஹா ... டீல் எனக்கு ஒகே...

//நாமளும் இப்படி சண்டைபோட முடியலியே'ன்னு ஏங்குறது எவ்வளவு பெரிய சோகம்//
ஐயோ...பாவம்...

சூப்பர் கற்பனை... சூப்பர் பதிவு

Chitra said...

கலக்கிட்டீங்க..... மசாலா டீயை இல்ல.... உங்க பதிவை சொன்னேன்... :-)

மாதேவி said...

தங்கவளையலையும் சொல்லி :)

நெகிழ்ச்சியையும் கலந்து நன்றாகச் சொல்லிவிட்டீர்கள் அருமை.

http://rkguru.blogspot.com/ said...

Good post...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

இரும்புவளையல் மாட்டி மனோகரியாக்கிட்டீங்களேப்பா..:-)))) இது செல்லாது செல்லாது செல்லாது. ப்ளாட்டினம்தான் ரொம்ப சத்தம் வருமாம். ஏதோ, சிக்கனமா இருக்கணும்ன்னு தங்கத்தோட நிறுத்திக்கிறோமாக்கும் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

நீங்க சொன்னதுக்கு ரெண்டு வார்த்தையில் பதில் சொல்லவா...'ஜீனில் ஊறிப்போனது'.

புனைபெயரை பொறுத்தவரை மத்தவங்களைப்பத்தி எனக்கு தெரியாது. ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு அதனால வெச்சிக்கிட்டேன்.

http://amaithicchaaral.blogspot.com/2010/01/blog-post_08.html

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

ஹை.. டிஸ்டிங்ஷன்ல பாஸா.. இந்த தங்கமெடல் ஏதாவது கிடைக்குமா:-))))

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

ஹுஸைனம்மா நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வரட்டும். நம்ம தொடர்வண்டியில் இன்னொரு பெட்டியை கோத்துவிட்டுட வேண்டியதுதான் :-)))

வருகைக்கு நன்றி.

நாடோடி said...

ந‌ல்ல‌ க‌ற்ப‌னை, ர‌சிக்கும் ப‌டியா இருந்த‌து.. அடுத்த‌வ‌ங்க‌ளுக்கு கொடுத்திருக்கும் க‌ற்ப‌னையும் அருமை..

Anonymous said...

//அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா'ன்னு நீட்டி முழக்கி பாடமுடியுதா.. கடவுள் என்னைய ஏந்தான் இப்படி படைச்சு சோகக்கடலில் நீந்தவிட்டாரோ.....//

பாடினாலும் நமக்கெல்லாம் ஒண்ணும் கிடைக்காது :)

ஸாதிகா said...

கலக்கல்.

ராமலக்ஷ்மி said...

அருமை அமைதிச்சாரல். அழைக்கப்பட்டவர்கள் அசத்தப் போவதைப் பார்க்கக் காத்திருப்போம்:)!

Thenammai Lakshmanan said...

தொடர் பதிவா/... அருமை அமைதிச்சாரல் கலக்கிட்டீங்க..:))

ஜெயந்தி said...

லேடீசுக்குபோயி பேச முடியாத தண்டனை என்னா கொடுமை. பேசுறதுக்காகவே பொறந்தவங்கள்ள நாமெல்லாம். நல்லா எழுதியிருக்கீங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

தங்கமணிகள் அவ்வளவு சுவாரஸ்யமா பேசக்கூடியவர்கள்ன்னு நீங்களே ஒத்துக்கறீங்களா :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

ரெண்டும் கலந்ததுதானே வாழ்க்கை :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குரு,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

ரொம்ப நன்றிங்க. நீங்களும் எழுதுங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

அது நாம பாடற சுருதியைப்பொறுத்தது :-))), பாட்டுல மயங்கியோ இல்லை அபஸ்வரத்தை பொறுக்க முடியாமயோ... எப்படியாவது கிடைச்சுடும்....

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க. அப்படியே உங்க பட்டாம்பூச்சியையும் படிக்க காத்திருக்கோம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனம்மை,

ஆமாங்க.. நம்ம வசந்த் ஆரம்பிச்சுவெச்சது...

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

எஃப். எம் ரேடியோவை ஆஃப் பண்ணினா அப்றம் என்ன சுவாரஸ்யம் இருக்கு :-)))))

நன்றி.

தூயவனின் அடிமை said...

ஆஹா சகோதரி, தாய்குலத்தை எல்லாம் ஒன்னா கூட்டி விட்டிர்கள்.
எனக்கு ஒரு உண்மை தெரியனும்? நம்ம எந்த நூற்றாண்டில் இருக்கின்றோம். நீங்கள் தெரிவித்த விஷயங்கள் ஒரு காலகட்டம் இருந்தது. நான் மறுக்கவில்லை. அனால் இப்போ தலை கீழாக உள்ளது சகோதரி. அவையெல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட மனமில்லை, வேண்டாம். சில இடங்களில் சில தவறுகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. ஆதலால் ஒட்டு மொத்த ஆண்களை குற்றம் சுமத்த வேண்டாம்.

ஹேமா said...

சாரல்...எப்பிடியெல்லாம் சிந்திக்கிறீங்க.மழைக்கு பஜ்ஜி....சுடச்சுட !பாக்கலாம் தொடர் கலகலப்புப் பேர்வழிகள் எப்பிடிக் கலக்குறாங்கன்னு !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இளம் தூயவன்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வரப்போகும் எதிர்பதிவுகளை நானும் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன் :-))

நன்றி.

மனோ சாமிநாதன் said...

சரளமான எழுத்தும் உனர்வுகளின் வெளிப்பாடும் அருமை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் வளையல்கள் சொன்னீர்களே,
தங்கசலங்கை பொருத்திய ஒட்டியாணம்,காலுக்குத் தங்கக் கொலுசுகள்,
தங்க மேகலைகள் எத்தனை இருக்கின்றன.
விட்டுவிட்டீர்கள்.:))
மறக்கமுடியாத பஜ்ஜி வேண்டுமே இப்போ!! அருமையான பதிவு. க்ரியேஎடிவ். வாழ்த்துகள் சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ சாமிநாதன்,

தங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

வளையல் சத்தம் மட்டும் போதல்லைன்னா சலங்கைகொலுசுக்கு ஆர்டர் கொடுத்துட வேண்டியதுதான் :-))).

நன்றிம்மா.

kavisiva said...

அமைதிச்சாரல் நல்லா சொல்லியிருக்கீங்க. தங்கவளையலில் வைரம் பதிச்சிருந்தாத்தான் நல்லா சத்தம் வருமாம்.
நமக்கு வைரவளையல் வாங்கி தந்ததுக்கு அப்புறம் ரங்கமணிக்கு தூக்கம் வரும்ங்கறீங்க?!

தங்கவளையல் வாங்கித்தரவேண்டுமோ என நடுங்கிக் கொண்டிருக்கும் ரங்கமணிகளுக்கு ஒரு யோசனை:

புதுசா ஒரு ஆப்பில் ஐஃபோன் அல்லது மார்க்கெட்டில் புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கும் செல்ஃபோன் வாங்கிக் கொடுத்து அந்த அலாரத்தை உங்கள் காதுகளில் அலற விடச்சொல்லுங்க (நாங்களே அலாரம் வச்சு எழுந்துக்கமாட்டோமான்னு லூசுத்தனமா கேட்கக் கூடாது. அதுக்கெல்லாம் எழுந்துக்கற ஆட்களா நீங்க?) முக்கியமான பின்குறிப்பு: மார்க்கெட்டில் புதிய மாடல் செல்ஃபோன் வந்துவிட்டால் உடனே வாங்கிக் கொடுத்துடணும். இல்லேன்னா அலாரம் வேலை செய்யாது :)

Admin said...

நல்லா எழுதி இருக்கிங்க. இரசித்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

சப்போர்ட்டுக்கு நீங்க இருக்கிறப்ப என்ன தயக்கம்.. அடிச்சு தூள்பறத்திடலாம் :-)))

அப்படியே ஆப்பிள் ஐபோன் கேட்டா, ஆப்பிளையும், போனையும் சேர்த்து கொடுத்துட்டு தப்பிக்க நினைக்கிற ரங்கமணிகளை எப்படி மாட்டிவிடுவதுன்னும் சொல்லிடுங்களேன்..

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

'இளமைக்காலத்துல பெற்றோர் சொல்படி கேக்கணும், கல்யாணத்துக்கப்புறம் கணவர் சொல்படி கேக்கணும், வயசான காலத்துல பசங்க சொல்படி கேக்கணும்.. கேளுங்க... கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்கன்னு நம்ம முன்னோர் பொன்மொழி சொல்லிவெச்சுட்டு போயிருக்காங்க. அதை மீறிட்டா நல்லபொண்ணு இல்லியாம் :-))).'

சூப்பர் அமைதி மேடம் நல்லா எழுதினிங்க ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்ரு,

வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails