Thursday 1 July 2010

பொழுது போகலைன்னா இப்படியா?......

ஆய்வாளர்: ஏன் அந்தப்பையன், க்ளாஸ்ரூமுக்கு வெளியே நிக்கிறான்??..

தலைமையாசிரியர்: ஹி..ஹி.. அவந்தான் எங்க ஸ்கூலோட outstanding student.

**************************************************************************************

ஒரு இண்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகள்;

  1. ப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி.
  2. பிடித்தமான நாடுகள் ------------------------------- சிலி, இத்தாலி.
  3. பிடித்தமான விளையாட்டு வீரர் ------------------- ப்ரெட்லி
  4. பிடிக்காத வியாதி ------------------------------------ தலைவலி.
இப்படிக்கு : அடுத்த இண்டர்வியூவை எதிர் நோக்கியிருப்போர் சங்கம்..

***************************************************************************************

தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி?...

அம்மியில் ------சர்ர்ரக்,..சர்ர்ரக்,.. சர்ர்ரக்.. சர்ர்ரக்..

மிக்ஸியில்----- சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

(சட்னி சாப்பிட்டே நொந்து போனோர் சங்கம். தலைவராக இருக்க, சட்னி அரைப்பதில் முன் அனுபவம் பெற்றோர் வரவேற்கப்படுகிறார்கள்)

**************************************************************************************

ஒருத்தர் ஒரு பல்கலைக்கழக வாசலில் நின்னுக்கிட்டு வேகவேகமா எதையோ எழுதிக்கிட்டிருந்தார். ஆர்வம் தாங்காத ஒருத்தர் அவர்கிட்டே போய் ,'என்னப்பா எழுதறீங்க?'ன்னு கேட்டார்.

எழுதிக்கிட்டிருந்தவர் சொன்ன பதில்: "பாத்தா தெரியலை??... நுழைவுத்தேர்வு எழுதிக்கிட்டிருக்கேன்".

******************************************************************************************

மூக்குல அணிஞ்சிக்கிறதாலதான் மூக்குக்கண்ணாடின்னு சொல்றோமாம். அப்படீன்னா பூதக்கண்ணாடிய பூதமா அணிஞ்சிக்கிடுது. யாராச்சும் பதில் சொல்லுங்களேன்.

யக்கா... நீ சொல்லேன்!!,. யண்ணே நீ சொல்லேன்,.!!!


**************************************************************************************************

"செடி கொடிகள்லாம் பச்சையா ஏன் இருக்கு தெரியுமா?.."

"ஏன்னா,.. அதுக்கு பச்சைத்தண்ணி ஊத்துறோம்ல அதான்"

அலோ .. யாருப்பா அது?!!.. இத ஏற்கனவே கேட்டாச்சுன்னு சொல்றது??.. நம்ம டவுட்டே வேற...

"பச்சைத்தண்ணி ஊத்தி செடியெல்லாம் பச்சையா இருக்குன்னா,... பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது?... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது!!!!!!!!"

*************************************************************************************

எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் எல்லாத்துக்கும் மருந்து, தடுப்பூசின்னு எல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க,.. இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை?.....

( கேள்விமட்டுமே கேட்கத்தெரியும்ன்னு சொல்லுவோர் சங்கம். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது).

******************************************************************************************************

முதலாமவர்: அந்த தாத்தாவுக்கு ஏதோ பரிசு கிடைச்சிருக்காமே!!!! என்ன பரிசு?.

இரண்டாமவர்: நோ 'பல்' பரிசு..


***************************************************************************************************

ஒருத்தர் ஒரு காட்டுவழியா நடந்து போயிட்டிருந்தார். அப்போ அவர்முன்னால் இருந்த மரக்கிளையில் பாம்பு ஒண்ணு தொங்கிக்கிட்டிருந்ததை பார்த்தார். அதைப்பார்த்து பயப்படுவார்ன்னு நினைச்சா,..நேரா அதுகிட்ட போயி ஏதோ சொன்னார். அதைக்கேட்டதும் பாம்பு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சிட்டது. அப்படி அதுகிட்ட என்னதான் சொன்னார்?..
"
"
"
"
"
"

"இதப்பார்... இப்படி தொங்குறதால ஒண்ணும் பிரயோஜனமில்லை.. அம்மாவை காம்ப்ளான் கொடுக்கச்சொல்லு".

****************************************************************************************************

ஒரு பையன் ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குப்போனான். அவங்கப்பாவுக்கு செம கோவம்.. கூப்பிட்டு செம காய்ச்சு காய்ச்சினார். 'இல்லேப்பா,.. என் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் போனேன்'ன்னு சொல்லியும் அவர் நம்பலை. ஒடனே 'எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்னு நானே கண்டுபிடிக்கிறேன்'னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா ஃபோன் பண்ணார்.

அஞ்சு பேரு, 'ஆமா அங்கிள், இங்கேதான் இருந்தான்'ன்னு சொன்னாங்க.

மூணு பேரு, ' அங்கிள், இப்பத்தான் அவன் எங்க வீட்டுலேர்ந்து கிளம்பினான்'ன்னு சொன்னாங்க.

ரெண்டு பேரு,' அங்கிள், அவன் எங்க கூடத்தான் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். நாளைக்கு எக்ஸாம் வருதில்லையா!! டிஸ்டர்ப் பண்ணவேணாம்..ஏதாச்சும் சொல்லணுமா'ன்னு கேட்டாங்க.

ஃப்ரெண்ட்ஷிப்போட பவர் என்னன்னு இப்பவாவது புரிஞ்சிக்கோங்க...

***************************************************************************************


46 comments:

எல் கே said...

unga thalaiapye tirupi kekaren en en en ippadi

முனைவர் இரா.குணசீலன் said...

தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி?...

ரசித்தேன்..

Paleo God said...

//இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை?.....
//

ப்ளட் பிரஷர் மாத்திரை அந்த காய்ச்சலுக்குத்தாங்க! :))

Paleo God said...

//இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை?.....
//

ப்ளட் பிரஷர் மாத்திரை அந்த காய்ச்சலுக்குத்தாங்க! :))

Ahamed irshad said...

நல்லாயிருக்குங்க...

Chitra said...

THE BEST கலக்கல் மொக்கை AWARD:
And the WINNER is:


ஒரு பையன் ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குப்போனான். அவங்கப்பாவுக்கு செம கோவம்.. கூப்பிட்டு செம காய்ச்சு காய்ச்சினார். 'இல்லேப்பா,.. என் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் போனேன்'ன்னு சொல்லியும் அவர் நம்பலை. ஒடனே 'எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்னு நானே கண்டுபிடிக்கிறேன்'னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா ஃபோன் பண்ணார்.

அஞ்சு பேரு, 'ஆமா அங்கிள், இங்கேதான் இருந்தான்'ன்னு சொன்னாங்க.

மூணு பேரு, ' அங்கிள், இப்பத்தான் அவன் எங்க வீட்டுலேர்ந்து கிளம்பினான்'ன்னு சொன்னாங்க.

ரெண்டு பேரு,' அங்கிள், அவன் எங்க கூடத்தான் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். நாளைக்கு எக்ஸாம் வருதில்லையா!! டிஸ்டர்ப் பண்ணவேணாம்..ஏதாச்சும் சொல்லணுமா'ன்னு கேட்டாங்க.

ஃப்ரெண்ட்ஷிப்போட பவர் என்னன்னு இப்பவாவது புரிஞ்சிக்கோங்க...

எல் கே said...

oru award koduthu iruken ,. pettruk kollavum

http://lksthoughts.blogspot.com/2010/07/blog-post.html

வெங்கட் நாகராஜ் said...

ஏன்ன்ன். நல்லாத்தானே போயிட்டு இருந்தது...

இருந்தாலும், நகைச்சுவை விருந்து - First Class. நன்றி.

Prathap Kumar S. said...

நீங்களுமா.... இந்த சமூகசேவைல இறங்கிட்டீங்க....

தேங்காய் சட்னி கலக்கல்...

த்ரீ இடியட்ஸ் படத்துல ஏன்ஜீன் எப்படி ஓடுதுன்னு வாத்தியார் கேட்ட மாதிரி இருக்கு...? :))

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

Katz said...

satni jokkum complan kokkum super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super mokkaiis

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super mokkaiis

ராமலக்ஷ்மி said...

சர்ரக் சர்ரக் எல்லாம் இப்போ எங்கேங்க. எல்லாம் ஒரே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்தான்.

நல்லாயிருக்கு:)!

ஹேமா said...

பொழுது போகலன்னா....
அதுக்கு இப்பிடியா !

சசிகுமார் said...

சார் பாம்பு காமெடி சூப்பர், அனைத்தும் சிரிக்கும் விதத்தில் இருந்தது. வாழ்த்துக்கள் சார்

Kousalya Raj said...

இரு விருதுக்கும் வாழ்த்துகள்! நன்கு ரசித்தேன் .

க.பாலாசி said...

//பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது?... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது!!!!!!!!"//

ஹா..ஹா.. நல்லா கேக்குறாய்ங்கப்பா டீட்டெய்லு...

அந்த கடைசியொன்னு ம்ம்ம்... செம....

அன்புடன் அருணா said...

பொழுது போகலைன்னா இப்பிடியா???

அம்பிகா said...

ப்ரண்ட்ஷிப்போட பவர் நிஜமாவே சூப்பர் தான்.

ஜெயந்தி said...

மழைக்குப்பின்னே சிரிப்பா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அப்ப இன்னக்கி நல்லா பொழுது போயிருக்குன்னு சொல்லுங்க அமைதிச்சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

எல்லோரும் கேக்கிறதுக்கு வசதியாத்தான் தலைப்பு வெச்சேனாக்கும்.. எப்பூடீ..:-))

சிரிச்சீங்களா இல்லியா?.. அதைச்சொல்லுங்க முதல்ல.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குணசீலன்,

டேஸ்ட்டி டேஸ்ட்டி சட்னிதானே!!.

முதல்வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

ரத்தக்காய்ச்சலைத்தானே ப்ளட்ப்ரஷர்ன்னு சொல்றீங்க(கோவம் வந்தா தளபுளன்னு கொதிச்சு காயும்). நாங்கேக்குறது புளிக்காய்ச்சலுக்கு மருந்து :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

காமெடியோ ட்ராஜடியோ எங்கியுமே நட்புதான் வெல்லும். ஹையா!!.. நல்ல கேப்ஷன் கிடைச்சிட்டுதே.. நீங்க கொடுக்கிற அவார்டை ஏத்துக்கும்போது சொற்பொழிவு ஆத்தணுமில்லையா, அப்ப இதையும் சேத்து ஆத்திக்கிறேன்:-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

எல்.கே,

தங்கமகனை தத்துக்கொடுத்ததுக்கு இங்கியும் நன்றி சொல்லிக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சில்,

உங்கள் சேவை நாட்டுக்குத்தேவைன்னு அடிக்கடி மனசாட்சி நேரங்காலமில்லாம முழிச்சுக்கும். அதை தூங்கவைக்கத்தான் இப்படி தாலாட்டு பாடிக்கிறேன்.

ஏற்கனவே பாடினது இங்கே இருக்கு:
//http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post_06.html//

இஞ்சின் ஓடுறதை காலேஜில் படிச்சிக்கலாம். சட்னி அரைக்க அவங்க சொல்லிக்கொடுக்க மாட்டாங்களே. நாமதானே சொல்லிக்கொடுக்கணும்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

விருந்தை ருசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

ஏற்கனவே எல்.கே ஒரு விருதை கொடுத்திருக்கார். இப்ப நீங்க இன்னொண்ணு கொடுத்திருக்கீங்க. நன்றிங்க.

முதல்வருகைக்கு நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்குங்க...

அந்த கடைசியொன்னு ம்ம்ம்...சூப்பர்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வழிப்போக்கன்,

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமேஷ்,

ரொம்ப நன்றிங்க(சத்தியமா) :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

சர்ரக் இப்பல்லாம் கிராமங்கள்லயும் மியூசியத்துலயும் காணக்கிடைக்குதே, இன்னும் முழுசா சர்ர்ர்ர்ர் வர நாளாகும். அதுவரை சர்ர்ரக்தான் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா..

தலைப்பையே லேசா மாத்தி சொல்லிட்டீங்களா.. ரைட்டு :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

ரொம்ப நன்றிங்க. ஆனா, நான் சார் இல்லை, மேடம்:-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கௌசல்யா,

வாழ்த்துக்களுக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாசி,

டீட்டெயிலு கேட்டா பதில் சொல்றதில்லையா :-)))))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா,

தலைப்பு எப்படி சவுகரியமா இருக்கு பாத்தீங்களா :-))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

அதேதாங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

நல்லா சிரிக்கணும் சொல்லிட்டேன் :-)))).

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

நல்லாவே பொழுது போச்சுங்க.. உங்களுக்கு எப்படீன்னு சொல்லலியே!!!

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய சார்,

நல்லா பேருவெச்சீங்கப்பா :-)

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி?...
அம்மியில் ------சர்ர்ரக்,..சர்ர்ரக்,.. சர்ர்ரக்.. சர்ர்ரக்..
மிக்ஸியில்----- சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//
ஐ... இந்த recipe நல்லா இருக்கே.... இனிமே நானும் follow பண்றேன்... சூப்பர்

//ப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி.//
நேத்து கூட வீட்டுக்கு வந்து இருந்தாக... சொல்லவே இல்ல... அடுத்த வாட்டி வர்றப்போ கண்டிப்பா இட்லி தான்ங்க... (ஹி ஹி ஹி)

//பச்சைத்தண்ணி ஊத்தி செடியெல்லாம் பச்சையா இருக்குன்னா,... பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது?... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது!!!!!!!!"//
ஐயோ ஐயோ ஐயோ...ஜோக் படிப்பியா? இனிமே ஜோக்ஸ் படிப்பியா?

//இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை?.....//
புலி கிட்ட போய் பாருங்க... அப்புறம் காய்ச்சலுக்கு மருந்து தேடி வரும் சொர்கத்துக்கு... சாரி சாரி எதுத்த ரூம்க்கு... (ஹி ஹி ஹி)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

////ப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி.//
நேத்து கூட வீட்டுக்கு வந்து இருந்தாக... சொல்லவே இல்ல..//

அவருக்கு சொந்த செலவில் சூனியம் வெச்சுக்க ஆசையா என்ன :-))

நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails