Monday, 28 June 2010

மழையே மழையே..-3

(உதவி: கூகிள்)

மின்சாரம் நின்னு போயிட்டதால் இன்வர்ட்டர்+பேட்டரியும் எப்போ வேண்ணா மண்டையை போடலாம்ன்னு எதிர்பார்த்து, இட்லி மிளகாய்ப்பொடி, சாம்பார்ப்பொடி, ரெண்டும் தயார்செஞ்சு ஸ்டாக் வெச்சிருந்தேன். அதைவெச்சு ரெண்டு நாள் ஓட்டியாச்சு. இன்னிக்கு மழை கொஞ்சம் குறைஞ்சிருக்கு, ஆனா நிக்கலை. அதனால தண்ணியும் வடியலை. இதுக்கு மழை மட்டுமல்ல.. வேறொரு காரணமுமிருக்கு.

மும்பையிலுள்ள சாக்கடைகளாகட்டும், மழைநீர் வடிகாலாகட்டும்.. எல்லாமே வெள்ளைக்காரன் காலத்துல நிர்மாணிக்கப்பட்டு கட்டப்பட்டது. அதுக்கப்புறம் மாறிவரும் காலத்துக்கேற்ப, பெருசா ஒண்ணும் மாத்தியமைக்கலை. மும்பை என்பது ஏழு தீவுகளை ஒன்றிணைத்து உண்டாக்கப்பட்டது. அந்தக்காலத்தில் மக்கள்தொகை அதிகமில்லை. அதனால வசதிகளும் அதற்கேற்ப இருந்தது. இப்ப அப்படியில்லியே... ஆனா, மறுசீரமைப்புத்தான் ஒண்ணும் நடக்கலை.இங்கேதான் இயற்கையும் தன்னை கூட்டுச்சதியில் இணைச்சுக்கிட்டது.

ஹை டைட், லோ டைட் பத்தி உங்களுக்கு தெரிஞ்சுருக்கலாம்.
தெரியாதவங்களுக்காக... சந்திரன் பூமியை சுத்துதுன்னு சின்னப்புள்ளைல பள்ளிக்கூடத்துல படிச்சிருக்கோமில்லையா. இந்த ரெண்டுக்கும் நடக்கிற டக் ஆஃப் வார்தான் டைட் ஏற்பட காரணம். பூமிக்கு புவி ஈர்ப்பு விசை இருக்கிற மாதிரி சந்திரனுக்கும் ஈர்ப்பு விசை இருக்குது... அது பூமியை தன்னை நோக்கி இழுக்குது. ரெண்டும் காந்தம் மாதிரி ஒண்ணையொண்ணு இழுக்கிறதாலதான் சந்திரன் ஆயிரக்கணக்கான வருஷங்களா பூமியை பிரியாம இருக்கு. இல்லைன்னா, கோலிகுண்டாட்டம் தெறிச்சி வானவீதியில் ஓடிப்போயிருக்கும்.

சந்திரன், பூமியின் எந்தப்பக்கம் தன்னுடைய அருகில் இருக்குதோ,.. அதை தன்னை நோக்கி இழுக்கும்போது , 'நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வரமுடியாது'ன்னு பூமி அசையாம நின்னுக்கிடும். ஆனா தண்ணி கிட்ட பூமியின் பாச்சா பலிக்காது. அதைப்பிடிச்சு வெச்சுக்கிட முடியாததால் ஈர்ப்பு விசைக்குட்பட்டு தண்ணீர் சந்திரனின் பக்கம், அதாவது பூமியின் மேல்புறமாக பொங்குகிறது. இதனால் கடற்கரைப்பக்கம் வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கிறது. இது காயல்கள் வழியாகவும், கழிமுகம் வழியாகவும் ஊருக்குள் புக வாய்ப்பிருக்கு. மும்பையில் மழை நீர் வடிகால்களின் மட்டம், கடல் மட்டத்தைவிட தாழ்வா இருந்ததால், மழை நீர் வடிந்து கடலுக்குள் போறதுக்கு பதிலா கடல் தண்ணீர், வடிகால்கள் மற்றும் சாக்கடை வடிகால்கள் வழியா நகருக்குள் புகுந்துடுச்சு.

மேலும், நம்ம மக்கள் கொட்டின குப்பையும் பழி வாங்கிடுச்சு. கடைத்தெருவில் ரெண்டு ரூபாய்க்கு பச்ச மொளகா வாங்கினாக்கூட பாலிதீன் கவர்ல போட்டுத்தான் கொடுப்பாங்க. இப்பிடி நெறைய சேர்ந்து போற ப்ளாஸ்டிக் குப்பைகளை மக்கள் அப்படியே போறபோக்குல வீசிட்டு போறதுதான்.. சாக்கடைகளில் போய் அடைச்சிக்கிட்டு மழைத்தண்ணி வடியவிடாம செஞ்சுடுச்சு. இது கூட டைடும் சேர்ந்துக்கிட்டதுதான் இந்த மோசமான நிலைமைக்கு முக்கியமான காரணம். வெள்ளத்திலிருந்து மீண்டதும் அரசு செஞ்ச முதல்வேலை பாலிதீன் கவர்களுக்கு தடா போட்டதுதான். ஏதாவது கடைகளில் பாலிதீன் கவர்களில் பொருட்கள் கொடுக்கிறமாதிரி தெரிஞ்சா, அவங்களுக்கு அபராதம், அடிக்கடி கடைகளில் சர்ப்ரைஸ் விசிட்ன்னு எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. ஆனாலும், எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் ஆயுசு குறைவுன்னு சொல்லணுமா என்ன!!.

ரோட்டுல தண்ணி தேங்கினதால வாகனங்களின் எஞ்சினுக்குள் தண்ணி புகுந்து நடுரோட்டில் நின்னுடுச்சு. பெரிய வி.வி. ஐ. பிக்கள் கூட வாகனங்களை விட்டுட்டு நடந்து போக வேண்டியதாப்போச்சு. அவ்வளவு கிட்டக்க பாலிவுட் நட்சத்திரங்களை பாத்தவங்களுக்கு, இது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமான்னு நிர்ணயிக்க முடிஞ்சிருக்காதில்லே . ஒரு சில இடங்களில் கார்க்கதவை திறக்க முடியாம உள்ளேயே மாட்டிக்கிட்டவங்க, மூச்சுமுட்டி இறந்த செய்திகளும் கிடைச்சது. இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்ன்னு நம்பிக்கையில கண்ணாடிய ஏத்திவுட்டுட்டு, ஏசியையும் ஆன்பண்ணிட்டு உக்காந்திருந்தவங்களுக்கு,கடைசியில அதுவே எமனா வந்துடுச்சு:-((

(உதவி: கூகிள்)
அன்னிக்கு மழைக்கு தோதா, வத்தக்குழம்புக்கு அரைச்சு முடிக்கப்போகும் நேரம்.. விர்ர்ர்ர்ரூம்ன்னு ஓடிக்கிட்டிருந்த மிக்ஸி சொய்ங்க்ன்னு நோஞ்சான் மாதிரி குரல் கொடுத்துச்சு. ஆஹா.. பேட்டரியும் அவுட்டா!!!.. போச்சுடா.. ஹையா!!... இனிமே சமைக்க வேணாம்ன்னு இருக்கமுடியாதே :-((. கொஞ்ச நாள் கற்கால வாழ்க்கை வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு பாஸிட்டிவா திங்க் பண்ணனும் ஆம்மா :-))). வெளியே நிலவரம் எப்படியிருக்குன்னு பாத்துட்டு அப்படியே மெழுகுவர்த்தி வாங்கலாம்ன்னு கிளம்பினேன். எந்தளவுக்கு வசதிகளுக்கு பழகிப்போயிருக்கோம்ன்னு, இதுமாதிரி சிக்கல்கள் வரும்போதுதான் உணரமுடியுது.

கடையில் பால் இல்லை. ஆனா,.. பால் பவுடர் கிடைச்சது. அவசர ஆத்திரத்துக்கு இதுவாவது கிடைச்சதேன்னு கிடைச்சதை வாங்கிக்கிட்டு, மேற்கொண்டு தேவைப்பட்டதையும் வாங்கும்போதுதான் ஞாபகம் வந்தது. சர்க்கரை வேணுமே.. ஆனா, ஒருத்தருக்கு ஒரு கிலோவுக்கு மேல கிடைக்காதாம்.விலையும் டபுள். நாங்க பத்துவருஷ வாடிக்கையாளர்ன்னதால சலுகையா ஒண்ணரைகிலோ கிடைச்சது. அதே வரிசையில் இருக்கிற அவங்களோட இன்னொரு கடையில், இன்னோரு ஒண்ணரைகிலோ சர்க்கரையும், கொஞ்சம் பால்பவுடரும் வாங்கி, கைக்குழந்தைக்காரியான என் சினேகிதிக்கு கொண்டு போய் கொடுத்தேன்.அவ வீட்டுக்காரர் நகராட்சியில் சிவில் எஞ்சினீயரா இருக்கார். வெள்ள நாட்களில் கூடுதல் வேலைல மாட்டிக்கிட்டார். அவருக்கு வீட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை, உதவிக்கும் யாரும் கிடையாது. மேலும் அவளோட குட்டிப்பையன் கிட்டத்தட்ட என்னோட வளர்ப்புமகன். பாத்துக்கிட்டிருக்க முடியுமா என்ன?..

கடையில் பால்பவுடர் வாங்கிட்டு திரும்பும்போது பாக்கிறேன். ஒருத்தர் கண்டென்ஸ்ட் மில்க்(மில்க் மெய்ட்) வாங்கிட்டு போறார். எலி மாட்டுச்சுன்னு , அவங்க சம்சாரம் பரிசோதனை ஏதாவது செய்றாங்களோ என்னவோ?.. இல்லையாம்.. அதை dilute செஞ்சு டீ, காப்பிக்கு உபயோகப்படுத்தவாம்... கடைக்காரர் சொல்றார். தேவைன்னு வரும்போதுதான் மக்களோட புத்தி என்னமா வேலை செய்யுது :-)).

ஒண்ணு சொல்லணும்... இந்த மழையால நிறைய சேதம், உயிரிழப்பு எல்லாம் ஏற்பட்டிருந்தாலும், மக்களுக்கிடையே உதவும் மனப்பான்மை, மனிதாபிமானம் எல்லாம் இன்னும் கூடுதலாக இது ஒரு சந்தர்ப்பமா இருந்திச்சின்னே சொல்லலாம். சில குடும்பங்களில் அப்பாவோ, அம்மாவோ, மழைகாரணமா வெளியே மாட்டிக்கிட பக்கத்துவீட்டுக்காரங்கதான் உதவியா இருந்தாங்க. எங்க வீட்டுலயும், அன்னிக்கு ரங்க்ஸ் வழக்கம்போல ஆப்பீசுக்கு போயிருந்தார்ன்னா என்ன கதியாகியிருப்போமோ :-(( .. பணியிடத்திலோ இல்லை வீட்டிலோ, ஏதாவது ஒரு இடத்துல இருந்தா நிம்மதியாயிருக்கும். பாதிவழி வந்துட்டு வெள்ளத்துல மாட்டிக்கிட்டா வீட்டுல இருக்கிறவங்களுக்கு கவலை வராதா என்ன.!!!

ஆசிரியையா இருக்கும் என்னுடைய தோழி, வீட்டுக்கு வரமுடியாம பள்ளிக்கூடத்துல மாட்டிக்கிட்டாங்க. வீட்டிலோ வயதான மாமியாரும் கணவரும் மட்டுமே. அம்மாவை காணாம அழுது ஏங்கிப்போன, அஞ்சுமாதமேயான பையனை சமாளிக்கமுடியாம, ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. தோழி பள்ளிக்கூடத்துல பத்திரமா இருப்பாங்கன்னு நெனைச்சா வெள்ளத்தோட போராடி , மூணாம் நாளே வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாங்க. ஸ்கூல்ல இருந்து ரெண்டு நாள், நடந்தே வந்திருக்காங்க. தரைத்தளத்தில் வெள்ளம் புகுந்த இடங்களிலெல்லாம், மேல்மாடிகளில் இருந்தவர்கள்தான் அடைக்கலம் கொடுத்து ஆதரவா இருந்திருக்காங்க.

ரோடுகளில் அங்கங்க சாக்கடை மூடிகள் திறந்திருக்கிறது தெரியாம அதுல மாட்டி நிறையபேர் உயிரிழந்துட்டாங்க. தண்ணி தேங்கியிருக்கிற இடத்துல, ரோடு எங்கிருக்கு, சாக்கடை எங்கிருக்குன்னு தெரியாதில்லையா... அதனால பெரிய மரக்கிளைகளை வெட்டி அந்த திறந்த சாக்கடைகளில் போட்டு வெச்சு அடையாளப்படுத்தினாங்க. தண்ணீர்ப்பரப்புக்கு மேலாக இலைதழைகளை பார்த்ததும் மக்கள் சுதாரிச்சுக்கிடுவாங்கன்னு இந்த ஐடியா. பொதுவா மும்பை மக்கள் கொஞ்சம் பிந்தாஸா இருப்பாங்க. கூடுமானவரை எதையுமே ஈஸியா எடுத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க.. ஆனா, ஒரு பொதுப்பிரச்சினைன்னு வந்தா ஒருத்தருக்கொருத்தர் ரொம்பவே அனுசரணையா இருப்பாங்க. தன்னாலான எல்லா உதவிகளையும் செய்வாங்க.. அது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி.. ஒவ்வொரு இயற்கை மற்றும் செயற்கை ஆபத்துகளிலிருந்து மும்பை மறுபடி மறுபடி மீண்டு, புத்துணர்வோடு எழுந்து நிற்கிறதே இதுக்கு சாட்சி.

(மழை பெய்யும்)




28 comments:

pudugaithendral said...

மழை பத்தின பதிவு இன்னுமா முடியலை?? தொடரட்டும் தொடரட்டும்

Chitra said...

மும்பையிலுள்ள சாக்கடைகளாகட்டும், மழைநீர் வடிகாலாகட்டும்.. எல்லாமே வெள்ளைக்காரன் காலத்துல நிர்மாணிக்கப்பட்டு கட்டப்பட்டது. அதுக்கப்புறம் மாறிவரும் காலத்துக்கேற்ப, பெருசா ஒண்ணும் மாத்தியமைக்கலை. மும்பை என்பது ஏழு தீவுகளை ஒன்றிணைத்து உண்டாக்கப்பட்டது. அந்தக்காலத்தில் மக்கள்தொகை அதிகமில்லை. அதனால வசதிகளும் அதற்கேற்ப இருந்தது. இப்ப அப்படியில்லியே... ஆனா, மறுசீரமைப்புத்தான் ஒண்ணும் நடக்கலை.இங்கேதான் இயற்கையும் தன்னை கூட்டுச்சதியில் இணைச்சுக்கிட்டது.


..... படங்களை பார்க்கும் போதும் - உங்களின் இடுகை வாசித்த போதும் தான் எந்த அளவுக்கு பாதிப்பு இருந்திருக்குது - எதனால் இருந்திருக்குது என்று தெரியுது. எவ்வளவு கஷ்டப் பட்டு இருந்து இருக்காங்க..... இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படலியா? அடுத்த மழை வந்து தாக்கும் வரை, இதை பற்றி யாரும் கவலைப் பட மாட்டாங்களா?

அம்பிகா said...

\\இந்த மழையால நிறைய சேதம், உயிரிழப்பு எல்லாம் ஏற்பட்டிருந்தாலும், மக்களுக்கிடையே உதவும் மனப்பான்மை, மனிதாபிமானம் எல்லாம் இன்னும் கூடுதலாக இது ஒரு சந்தர்ப்பமா இருந்திச்சின்னே சொல்லலாம்\\
உண்மைதான். இக்கட்டான நேரங்களில் உதவுவதும், உதவி கிடைப்பதும் சந்தோஷமான விஷயம்.

எல் கே said...

//மும்பையிலுள்ள சாக்கடைகளாகட்டும், மழைநீர் வடிகாலாகட்டும்.. எல்லாமே வெள்ளைக்காரன் காலத்துல நிர்மாணிக்கப்பட்டு கட்டப்பட்டது. அதுக்கப்புறம் மாறிவரும் காலத்துக்கேற்ப, பெருசா ஒண்ணும் மாத்தியமைக்கலை./

same blood in chennai also

ராமலக்ஷ்மி said...

ம்ம். எத்தனை சிரமங்கள்.

//ரோடுகளில் அங்கங்க சாக்கடை மூடிகள் திறந்திருக்கிறது தெரியாம அதுல மாட்டி நிறையபேர் உயிரிழந்துட்டாங்க.//

:(!

//ஒரு பொதுப்பிரச்சினைன்னு வந்தா ஒருத்தருக்கொருத்தர் ரொம்பவே அனுசரணையா இருப்பாங்க. தன்னாலான எல்லா உதவிகளையும் செய்வாங்க.. அது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி.. ஒவ்வொரு இயற்கை மற்றும் செயற்கை ஆபத்துகளிலிருந்து மும்பை மறுபடி மறுபடி மீண்டு, புத்துணர்வோடு எழுந்து நிற்கிறதே இதுக்கு சாட்சி.
//

உண்மைதான்.

ஹுஸைனம்மா said...

அப்படின்னா, இப்ப ப்ளாஸ்டிக் தடை இல்லையா மும்பையில? :-(

வெங்கட் நாகராஜ் said...

High Tide, Low Tide பற்றிய விளக்கம் அருமை. மழை தொடர்ந்து பெய்யட்டும்.

apnaafurniture said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
www.apnaafurniture.com

பத்மா said...

சரி அமைதிசாரல் ..இது எந்த வருஷத்திய மழை?

என் நண்பி மும்பையல இருக்கா ஒண்ணுமே சொல்லலியே இதெல்லாம்

ஜெயந்தி said...

இதை படிக்கும்போதே பயமா இருக்கு. எப்படித்தான் எல்லோரும் தாங்குனீங்களோ?

ஹேமா said...

மழையும் தேவை வாழ்க்கைக்கு ன்னு சொல்லலாமா சாரல் !

Prathap Kumar S. said...

பயங்கரமா இருக்கு.... 5 மாச குழந்தையை வீட்டுல விட்ட அந்த டீச்சரம்மா நிலைமையை நினைச்சுப்பார்த்தா.... நினைச்சப்பார்க்கவே முடில...பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டுப்பாருங்க..:((

நாம மனிதர்கள் என்ன ஆட்டம் போடறோம்...ஜாதிசண்டை, மதச்சண்டை, சொத்துச்சண்டை...ஒரு மழை ரெண்டு நாள் தொடர்ந்து அடிச்சா சமாளிக்கமுடில... அப்புறம் எதுக்கு இந்த ஆட்டம்...

சந்தனமுல்லை said...

பக்கத்துலே இருந்து பேசிக்கிட்டி இருந்த மாதிரி இருந்தது அமைதிச்சாரல். ஒரு சின்ன விஷயத்தைக்கூட மிஸ் பண்ணாம எழுதியிருக்கீங்க..மிகவும் நல்ல தொடர். ஃபார்வர்டு மெயில்லேயும் போன்லே கேட்டதையும் இங்கே இன்னும் டீடெய்ல்லா வாசிக்கும்போது மழை நாட்கள் - வாழ்க்கையை ஸ்தம்பிக்க செய்வதையும் புரிந்துக்கொள்ள முடிகிறது! தொடர்ந்து அனுபவப் பதிவுகளை வாசிக்கக் காத்திருக்கிறோம்! :-)

நசரேயன் said...

இன்னும் மழை விடலையா ?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நான் சொன்னது ரொம்பக்குறைவுதான். இன்னும் வெளிச்சம்போட்டுக்காட்ட நிறைய இருக்கு.இப்பல்லாம் மழைக்கு முன்னரே சாக்கடையில் அடைப்பெடுத்து, நீர்நிலைகளை தூர்வாரி,ன்னு பணிகள் நடக்குது.ஆனாலும் அரசாங்க இயந்திரம் இல்லியா... மெதுவாத்தான் வேலைசெய்யும்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புதுகைத்தென்றல்,

ஊட்டுக்குள்ளேயே இருந்து ரொம்ப போரடிச்சுடுச்சா :-)))).

அடுத்த பாகத்தோட முடியுது.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

ஆமாங்க... பெரும்பாலான சமயங்கள்ல கண்டுக்காம போற அதே ஜனங்கதான், ஆபத்துன்னு வந்ததும் தன் உயிரை பணயம் வெச்சு, மக்களுக்கு உதவி செஞ்சாங்க.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

பொதுவா, நாட்டின் முக்கிய நகரங்களெல்லாம் அப்படித்தான் வெள்ளைக்காரன் காலத்துலேயே இருக்கு. சென்னையை பொறுத்தவரை, ஆறுகளின் போக்கில் வீடுகட்டிக்கிட்டதும் ஒருவகையில் வெள்ளத்துக்கு காரணம்.. இல்லியா...

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஆமாங்க.. அதனாலயே மும்பைக்கர்ன்னு சொல்லிக்கிறதுல இங்கே உள்ளவங்களுக்கு அலாதி பெருமை. கொஞ்சூண்டு கவலைப்பட்டுட்டு,'சல்.. சல்.. ஹவா ஆனே தே'ன்னு போயிட்டேயிருப்பாங்க :-)))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இல்ல... ஆனா இருக்குது!!!

குழப்பமா இருக்கா.. அடுத்த இடுகையை படிங்க.. தெளிஞ்சுடும்:-))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

'தேவையான அளவு'ன்னு சேர்த்துக்கோங்க :-))).

டெல்லிக்கு மழை வந்தாச்சாமே,.. எஞ்சாய்....

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்னா ஃபர்னிச்சர்,

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பத்மா,

இது 2005-ல் பெய்ஞ்சதுங்க. முதல்பாகத்துல சொல்லியிருக்கேன். நண்பி மும்பையின் எந்தப்பகுதியில் இருக்காங்க?..ஓரளவு தண்ணீர் தேங்குறதெல்லாம் எங்களுக்கு ஜூஜூபி.அதனால சொல்லியிருக்க மாட்டாங்க. இப்பவும் சில பகுதிகளில் தேங்கத்தான் செய்யுது. அதிகமா போனதாலதான் 2005ல் கஷ்டமாப்போச்சு.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்புடுறமாதிரி :-))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

பேருல சாரலை வெச்சுக்கிட்டு மழையே வேணாம்ன்னு சொல்லுவேனா.. அளவோடன்னு சேர்த்துச்சொல்லலாம்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

ட்ரெயின்ல வந்தா வெறும் ஒரு மணி நேரப்பயணம். அந்த வெள்ளத்துல நடந்தே வீடுவந்து சேர மூணு நாளாகியிருக்கு.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

வருகைக்கு நன்றிப்பா. இதையெல்லாம் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

நாலு நாள் பெஞ்ச மழையாக்கும். கடைசி இடுகையும் வந்துடுச்சு. ஆனா நிஜத்தில் இப்பத்தான் மழை ஆரம்பிச்சிருக்கு.

வருகைக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails