க்ருஷ்
'அச்சச்சோ...நேரமாகிவிட்டதே...க்ருஷ்ஷை எழுப்ப வேண்டுமே' ... பதட்டத்துடன் குளிப்பாட்டுவதற்கு வேண்டிய எல்லாத்தையும் எடுத்துக்கிட்டேன். பாதியில எழ முடியாதே.
ஆச்சு..பால், தயிர்...வாசனைத்தைலம்...ம்..வேறென்ன.. என்னது ..சோப்பா..?... அதெல்லாம் ஒத்துக்காது.
.
எழுப்பறதுக்கு மனசே வரல்லை....தூங்கறபோதுதான் என்ன அழகு!!!..அடடா.!!!.
'க்ருஷ்'என்று மெல்ல குரல் கொடுத்துக்கொண்டு தொட்டிலில் பார்த்தால் ..குறும்புக்காரன்.! ஏற்கனவே விழித்துக்கொண்டு... சிரித்துக்கொண்டிருந்தான்.இன்னிக்கு பரவாயில்லை.. சில நாட்கள் ரொம்ப நேரமாகிவிடும்.'மாத்தேன்..போ'.. என்று அழிச்சாட்டியம் செய்வான். அப்புறமென்னா. அன்னிக்கு குளியல் மட்டும் 'கட்'
ஒருவழியா, குளிக்க ரெடி செஞ்சு, நாலு நல்ல வார்த்தை சொல்லி,அப்பாடா..குளிச்சு முடிச்சாச்சு J.ஐயா இப்போ ஜம்முன்னு ..புதுடெச்..செல்லாம் போடுவார்.
ஆங்..நகையெல்லாம் போடணுமே..!!.
அலங்காரமெல்லாம் முடிச்சாச்சு,பாருங்க.
கொஞ்சம் நகர்ந்துடக்கூடாதே...பாருங்க ஈஷி வெச்சிருக்கிறதை.:-))).
இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி.'எப்பவும் போல் பொங்கல்தானா'...ன்னு கேட்டார். சரின்னு ஜவ்வரிசி கிச்சடி செஞ்சு கொடுத்தாச்சு.
'டேஸ்ட்டா' இருக்காம்.
சொர்க்க வாசல் நேரடியா போய் பாத்துக்கலாம்ன்னு விட்டு வெச்சாச்சு
டிஸ்கி:நெறய ஆணி இருந்ததால் ஒரு நாள் பிந்தி விட்டது.
4 comments:
அலங்காரம் அருமை!!
முகத்தில் குறும்பைப்பாத்தீங்களா!!!! :-)
அலங்காரம் அருமை ..
தொடரட்டும்
வாங்க L.K.
வரவுக்கு நன்றி.
Post a Comment