Friday, 28 November 2025

படமும் பாடலும் (10 )

சொன்னால் விலகுவாரும் சொக்கிச் சுவைப்பரே
இன்சுவையும் சூடும் இளநுரையும் நன்றாமே
பொன்நிகர் அப்பமுடன் பச்சி பகராதோ
மன்னுபுகழ் காபியின் மன்

உன்னதம் காணவென உள்ளத்தால் உள்ளியது
நன்முத்தும் பொன்னும் நிறைக்காது ஏங்கியது
நின்றாடும் ஆசையால் நெஞ்சமிங்கு தேடியது
இன்னொரு காபி இனிது.
****************************************************************

கள்ளத்தால் வாழும் கடும்பாவி யோர்வாழ்வு
உள்ளத்தில் நோயாய் உருப்பெறும் - உள்ளபடி
இன்னயம் பேசாதோர் இல்தவிர்த்துச் செல்தலுடன்
நன்னயம் நாடாமை நன்று.
*********************************************************************
பொன்னலரி சென்னியோன் பொற்கழல் சூடுதல் மன்னுயிர் ஓதிய மாண்பிங்கு இன்னபிற உன்னதம் ஈதென ஊரார் உவப்பதெலாம் என்னென காண்கிலேன் யான் 
*********************************************************************


இலைபழுத்து வீழும் நிலையெள்ளு வோர்முன் 
அலைபொலியும் தண்பூ தலையால் - மலைவேந்த
சீரற்றோர் தாழார் சிலநாளில் மேலெழுவார்
ஆரக்கால் அஃதே உலகு.

3 comments:

ஸ்ரீராம். said...

அம்மாடி,,   இவ்வளவு தமிழ் என் உடம்புக்கு ஆறதில்லே....  ஆனாலும் கவிதை சூப்பருங்கோ...

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் அதற்கான பாக்களும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்....

Bhanumathy Venkateswaran said...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!

LinkWithin

Related Posts with Thumbnails