Tuesday, 28 January 2014

"சிறகு விரிந்தது" புத்தக வெளியீட்டு விழா..

வெகு காலமாகக் காத்திருக்க வைக்காமல் இறுதியில் அந்த நொடி வந்தே விட்டது. ஆமாம்.. நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவில் எனது புத்தக வெளியீடும் அமைதியாக இனிதே நடந்தது.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை பிரியத்துக்குரிய தோழி மதுமிதா வெளியிட தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார். கூடவே ராமலக்ஷ்மியின் “இலைகள் பழுக்காத உலகம்” புத்தகத்திற்கான வெளியீடும் நடந்தது.

வெளியீட்டு விழாவில்.. எழுத்தாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா, மற்றும் பரமேசுவரி திருநாவுக்கரசு  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'உயிர் எழுத்து' ஆசிரியர் சுதீர் செந்தில், பொன் வாசுதேவன், அய்யப்ப மாதவன், மதுமிதா, உஷா..
முகநூலில் தினமும் வெளியாகும் புத்தக வெளியீட்டு விழா பகிர்வுகளையும் படங்களையும் பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம், சென்னையில் வசிக்காமல் போய் விட்டோமே என்று ஏக்கமாகவும் இருந்தது. போகட்டும்.. பிழைத்துக்கிடந்தால் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் :-)

தன்னுடைய படைப்புகளைப் புத்தகமாகப் பார்ப்பதென்பது, அதுவும் முதல் தொகுப்பாக இருக்கும் பட்சத்தில்.. அதை விடப் பேரின்பம் ஒரு எழுத்தாளருக்கு இருக்க முடியுமா என்ன?. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களினிடையே என்னுடைய புத்தகமும் தென்பட்டதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத உணர்வு என்னை ஆட்டிப்படைத்தது. பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் புத்தகங்களைப் பதிப்பித்துப் புத்தகத்திருவிழாவிற்குக் கொண்டு வந்ததோடு, என்னைப்போல் தூரதேசத்தில் இருப்பவர்களுக்காக புத்தக வெளியீட்டையும் நடத்திக்கொடுத்த பொன் வாசுதேவனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்.

பல நல்ல புத்தகங்களைப் புத்தகத்திருவிழாவில் வாங்காமல் விட்டு விட்டவர்களும், தொலைவில் இருப்பதால் வாங்க வாய்ப்பில்லாதவர்களும் ஆன்லைனில் "அகநாழிகை புத்தக உலகத்தில்"  அள்ளிக்கொள்ளலாம். க்ளிக்கும் தூரத்தில்தான் இருக்கிறது அகநாழிகை புத்தக உலகம். நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

என்னுடைய கவிதைத்தொகுப்பும் இங்கே கிடைக்க ஆரம்பித்து விட்டது. 

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


புனைபெயரை உதறித்தள்ளி விட்டு இனிமேல் உண்மையான பெயரிலேயே வலம் வரலாமென்றிருக்கிறேன் :-))

15 comments:

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துகள் சாந்தி:)! ஆம், நாம் செல்ல இயலாவிட்டாலும் சிறப்பாக அனைத்தையும் நடத்தித் தந்த பொன். வாசுதேவனுக்கு நம் நன்றி.





கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தங்களின் நெடு நாள்ஆசை.. உலகையும் உங்களையும் மகிழவைத்தது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தங்களின் நெடு நாள்ஆசை.. உலகையும் உங்களையும் மகிழவைத்தது வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

வாங்க இருக்கிற புத்தகப் பட்டியலில்
தங்கள் புத்தகத்தின் பெயரையும்
எழுதிவிட்டேன்
பதிவாக தகவலைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

கார்த்திக் சரவணன் said...

புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்...

//புனைபெயரை உதறித்தள்ளி விட்டு இனிமேல் உண்மையான பெயரிலேயே வலம் வரலாமென்றிருக்கிறேன் :-))
//
:-)

ADHI VENKAT said...

மனமார்ந்த வாழ்த்துகள்...

மனோ சாமிநாதன் said...

இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் சாந்தி! இது போல மேலும் மேலும் பல நூறு புத்தகங்கள் உங்கள் கரங்களிலிருந்து உருவாகவும் அன்பு வாழ்த்துக்கள்!!

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் சகோதரி.

ஹுஸைனம்மா said...

மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா. இன்னும் பலப்பல புத்தகங்கள் வெளியிட்டு, எழுத்துலகில் “பெயர் விளங்க” புகழ் பெற என் பிரார்த்தனைகள் அக்கா. :-)

வெங்கட் நாகராஜ் said...

மனமார்ந்த பாராட்டுகள் சாரல்......

மேலும் பல சிறப்புகளைப் பெற்றிட எனது வாழ்த்துகள்.

வரும் சென்னைப் பயணத்தில் வாங்கிவிடுவேன்.....

Asiya Omar said...

நல்வாழ்த்துக்கள் சாந்தி.தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்.

Thenammai Lakshmanan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் டா சாந்தி. :)

ஸ்ரீராம். said...


மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள். நான் கண்காட்சி சென்ற அன்று தேனம்மையின் புத்தகம் கண்ணில் படவில்லை.

Nila said...

இனிய நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

மேலும் மேலும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள் சாந்தி

LinkWithin

Related Posts with Thumbnails