"வெற்றிடம்" அல்லது "வெறுமை".. இதுதான் இந்த மாச 'பிட்' போட்டிக்கான தலைப்பு. படத்தைப் பார்த்ததுமே வெற்றிடம் அல்லது வெறுமை தெரியணும். இதான் போட்டிக்கான விதி. சுருக்கமாச் சொன்னா ஆளேயில்லாத டீக்கடை :-)). அங்கே போயி கடமையை ஆத்தோ ஆத்துன்னு ஆத்திக் கொஞ்சூண்டு கொண்டாந்துருக்கேன்.
'அலிபாக்' போகும் பாதையிலிருக்கும் அணைக்கட்டு.
ரயிலுக்காகக் காத்திருக்கும் வரை கதை பேசும் தண்டவாளங்கள்..
காலியான இருக்கைகள்..வசந்த மண்டபம்..
பொன்னூஞ்சல்..
வெறிச்சோடிய மைதானம்..
இதில் பொன்னூஞ்சல் போட்டிக்குப் போயிருக்கு.. இருந்தாலும் மத்த படங்களையும் இங்கே பகிர்ந்துருக்கேன். எஞ்சாய்....
32 comments:
எல்லா படங்களும் வெறுமையை அழகாய் கூறுகிறது.
Arumai. Liked the Railway track photo.
எல்லாம் அருமை. குறிப்பாக ஊஞ்சல் கவிதை. பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடக்கும் தண்டவாளத்தின் வெறுமை பிரமாதம்.
அனைத்து புகைப்படங்களும் அருமை! அலிபாக் போகும் வழி எப்போதுமே அழகாக இருக்கும். அந்த முதல் புகைப்படம் மிக அழகு. போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்!!
அட்டகாசமான படங்கள்... நன்றி...
ரயிலுக்காகக் காத்திருக்கும் வரை கதை பேசும் தண்டவாளங்கள்... & வசந்த மண்டபம்... - Super...
வாங்க கோமதிம்மா,
படங்களை ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி.
படங்கள் அருமை...
வாங்க மோகன் குமார்,
ரொம்ப நன்றிங்க.. தண்டவாளங்களைப் படமெடுக்கற சாக்கில் அதுக்கு மேல புதுச்சாக் கட்டியிருக்கும் மேம்பாலத்தை நல்லா உறுதியாக் கட்டியிருக்காங்களான்னு செக் செஞ்சுட்டு வந்தேன் :-)
வாங்க ராமலக்ஷ்மி,
புள்ளைங்களுக்கெல்லாம் இஸ்கூலு தொறந்தாச்சு. அதான் அந்த ஊஞ்சல் கவிதை பாடிட்டிருக்கு. இல்லேன்னா அதுங்க படுத்தற பாட்டுக்கு முகாரிதான் பாடும் :-))
ரசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க மனோம்மா,
இப்ப மழை வேற பெஞ்சுருக்குதா.. அழகுக்குக் கேக்கவே வேணாம். பச்சைப் பட்டுடுத்தி நிக்கறா இயற்கைத்தாய்.
அந்த அணை ரொம்பிருச்சுன்னா நீர்வீழ்ச்சியா அந்தப்பக்கம் வழியும். அதுல குளிக்கறதுக்கும் ஒரு கூட்டம் வரும்.
ரசிச்சதுக்கு நன்றிம்மா.
வாங்க தனபாலன்,
ரசிச்சதைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க.
எல்லாமே அருமை என்றாலும் காலி இருக்கைகளும், தண்டவாளமும் ரொம்ப அருமையாகத் தெரிகிறது எனக்கு.
இந்த மாதிரி படங்கள் சேர்த்தாலும் அந்தத் தலைப்புக்கு இன்னும் ஏதோ...ஏதோ ஒரு நல்ல படம் தேவையோ...யோசித்து வித்யாசமாய் எடுத்திருக்க வேண்டுமோ என்று தலைப்பில் இடம் பெற்றுள்ள அனைவரது படங்களையும் பார்க்கும்போது தோன்றுகிறது! உதாரணமாக சுனாமியில் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் இழந்த பெண் வெற்றுத் தூளியைப் பார்ப்பதாகவோ, பூகம்பத்தில் வீட்டை இழந்தவர் வீடு இருந்த இடத்தைப் பார்ப்பதாகவோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது! நாம் அங்கு சென்று அந்த சமயம் எடுத்திருக்க முடியாதுதான்! 'வெறுமை' என்ற அந்தத் தலைப்பு இன்னும் நன்றாக justify ஆகவேண்டுமோ என்று தோன்றியது. தோன்றியதைச் சொன்னேன்!! :))))
படங்கள் அத்தனையும் அருமை ஷாந்திமா. தண்டவாளம்தான் என்னை ரொம்பக் கவர்ந்தது. ஸ்ரீராம் சொல்வதுபோல வெற்றிடம் தேடத்தான் வேண்டும்;0(
பொன்னூஞ்சல் சூப்பர். அட இன்னொரு புகைப்படப் பிரியை..:)
அனைத்து புகை படங்களும் மிக அருமையாக உள்ளது...பகிர்வுக்கு நன்றி...
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
தண்டவாளம்.சூப்பர்.ஒட்டி எடுத்திட்டன் உங்களிட்ட கேக்காமல்.நன்றி சாரல் !
ரயில் தண்டவாளம் படம் அருமையோ அருமை.
ஊஞ்சல் படத்தில், ஊஞ்சலை முழுசா எடுத்திருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும்னு மீ ஃபீலிங்..
வெறுமைனு சொல்லிட்டு இம்புட்டு தண்ணிய கண்ணுல காட்டினா எங்களுக்கில்ல கண்ணுல தண்ணி வருது... ஐ மிஸ் வாட்டர்...:(
ஜஸ்ட் கிட்டிங் அக்கா. லவ்லி சாட்ஸ்... வெறுமைனு தலைப்பு இருந்தாலும் கண்ணுக்கு நிறைவான காட்சிகள். வெற்றி பெற வாழ்த்துக்கள்
படங்கள் மிக அழகு. வாழ்த்துக்கள்.
[நேரம் வாய்த்தால் வருக!;பத்மாவின் தாமரை மதுரை
வெறுமை அருமை.
வெற்றி பெற வாழ்த்துகள்.
சாந்தி ஒரு நிமிடம் குழம்பி போய்விட்டேன்,இது ராமலஷ்மி பக்கம் வந்திட்டோமோன்னு, சூப்பர்.அத்தனை துல்லியம்.பாராட்டுக்கள்.
வெற்று தண்டவாளத்தையும், காலியான இருக்கையும் மனதில் ஒரு நீங்கா சோகத்தை கிளப்புகிறது.உணர்வை உணர்த்திய புகைப்படங்கள்..கைகுலுக்கல்களுடன்...
வாங்க ஸ்ரீராம்,
படத்தைப் பார்த்ததும் காலியாய் இருக்கிறதே என்ற உணர்வு தோன்ற வேண்டுமாம். அதுவே இம்மாதப் போட்டியின் தலைப்பு.
உங்க கருத்தும் ஏற்புடையதே. நன்றி.
ஊஞ்சல் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் :-)
வாங்க வல்லிம்மா,
அத்தனை பேருக்கும் ரயில் மட்டுமல்ல தண்டவாளமும் ரொம்பப் பிடிச்சுருக்குது :-))
நன்றிம்மா.
வாங்க தேனக்கா,
பொன்னூஞ்சல் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.
வாங்க தமிழ் காமெடி உலகம்,
மிக்க நன்றிகள்.
வாங்க ஹேம்ஸ்..
தண்டவாளம் மட்டும் போதுமா?.. அப்ப அதுல இந்தியாவுக்கும் சுவிஸ்ஸுக்குமிடையே நீங்கதான் ரயிலை ஓட விடணும். சரியா :-))))
நன்றிங்க.
வாங்க ஹுஸைனம்மா,
முழு ஊஞ்சலையும் இன்னொருக்கா படம் எடுத்தேன். ஆனா, அத விட இது நல்லாருந்ததா எனக்கு ஒரு தோனல். அதனால இது முந்திக்கிச்சு. முதல் சுற்றிலும் ஜெயிச்சுருச்சு. :-))
நன்றிங்க.
வாங்க புவன்ஸ்,
ஆஹா.. நீங்க இந்தியா வர வரைக்கும் கோவைல தண்ணிக்கஷ்டமே இல்லையே. இப்ப ஒய்???? ;-)
உங்கள் அனைவருடைய வாழ்த்துகளால் ஊஞ்சல் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது. நன்றி
வாங்க சந்திர வம்சம்,
மிக்க நன்றிங்க.
வாங்க மாதேவி,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
வாங்க ஆசியா,
ரொம்ப ரொம்ப நன்றிங்க.. கை குலுக்கல்களுக்கும், பாராட்டுகளுக்கும் :-)
Post a Comment