Monday 15 November 2010

பவர்பாயிண்டில் ஃபிலிம் காட்டுவது எப்படி??

இன்றைய யுகத்தில் 'யூ ட்யூப்' ஒரு தகவல் சுரங்கமாக விளங்குது.. பிடித்தமான பாடல்கள், திரைப்படங்கள், அறிவியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகள்ன்னு எதையும் அதில் அப்லோட் செஞ்சு எல்லோரோடவும் பகிர்ந்துக்கமுடியுது. சமையல் கத்துக்கவும், இசைக்கருவிகளை இயக்க கத்துக்கவும்கூட இங்கே முடியும்.

யூ ட்யூபில் உள்ள வீடியோ க்ளிப்பிங்க்ஸை இனிமே இணையத்தில்தான் பார்க்கமுடியும்ன்னு இல்லை. நம்மிடமிருக்கும் Ms Office- Powerpoint-லும் இணைத்துக்கொள்ளலாம். வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், இதை பயனுள்ளதாக உபயோகப்படுத்திக்கொள்பவரும் உண்டு. இடுகைகளில் எப்படி தேவைப்படும் இடங்களில் யூ- ட்யூபை இணைக்கிறோமோ.. அதே மாதிரி பவர்பாயிண்டிலும் இணைக்கலாம். இனிமே, படங்களை மட்டும் வெச்சுதான் ஸ்லைட் ஷோ பண்ணனும்ன்னு இல்லை. வீடியோ க்ளிப்பிங்க்ஸையும் உபயோகப்படுத்தி ஸ்லைட் ஷோ செய்யலாம். அப்லோட் செய்யப்பட்ட க்ளிப்பிங்க்ஸை, பவர் பாயிண்டில் எப்படி இணைப்பது??!!!!

1. முதலில் விரும்பிய வீடியோ க்ளிப்பிங்கை யூடியூபில் திறந்துகொள்ளுங்கள்.

2. இப்போ, பவர்பாயிண்டை திறந்து, Layout-ல் புதிய ஸ்லைடை திறந்துகொள்ளுங்கள். அது blank slide ஆக இருப்பது முக்கியம்.

3. Menu bar-ல் டெவலப்பர் செக்ஷன் இருக்குதான்னு பாருங்க.. அது இல்லைன்னா, office butten-ஐ க்ளிக் செஞ்சு,.. Powerpoint Options-ஐ க்ளிக் செய்யுங்க.

4. இப்போ, ஒரு ஜன்னல் திறக்கும். அதுல.. show Developer tab in the ribbon அப்டீன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் செஞ்சு ஓ.கே சொல்லுங்க.

5.இப்போ மெனுபாரில் Developer button  வந்துருக்கும். அதை க்ளிக் செஞ்சு, controls button-ஐ க்ளிக்குங்க, ஆணியும் சுத்தியலுமா ஒரு பட்டன் இருக்கே.. அதேதான்.

6. இதுல எக்கச்சக்க controls இருக்கும். நமக்கு வேண்டியது Shockwave Flash Object தான். அதனால அதை செலக்ட் செஞ்சு ஓ.கே சொல்லுங்க.. மறுபடியும் blank slide பக்கத்துக்கு தானாகவே வந்துடுவோம்.

7. கர்சர் இப்போ, ஒரு கூட்டல்குறி மாதிரி இருக்கும். அதை வெற்றிடத்தில் வைத்து,  நமக்கு வீடியோ எந்த அளவில் வேண்டுமோ.. அந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளவும்.

8. இப்போ, நாலு சமோசாவை ஒண்ணா சேர்த்து வெச்சமாதிரி துண்டாடப்பட்ட ஒரு வடிவம் கிடைக்கும். அதில் அம்புக்குறியை வைத்து, மவுசின் வலது பொத்தானை அழுத்தி, Properties ஜன்னலை திறக்கவும்.

9. இப்போ, வீடியோ க்ளிப்பிங்க்சின் உரலை காப்பியடிச்சுக்கிட்டு, மறுபடியும் பவர்பாயிண்டுக்கு வாங்க. அந்த உரலை Movies என்று கேட்கப்பட்டிருக்கும் இடத்துக்கு நேரா ஒட்டுங்க.

10. உரலியில் v-க்கு முன்னாடியும், பின்னாடியும் 'watch?' மற்றும் ' = ' இவற்றை அழித்துவிடவும். அழிப்பதற்கு முன் = இந்த அடையாளத்துக்கு முன்னாடி back slash அடையாளத்தை டைப்பவும். அதாவது,..

இப்படி இருக்கவேண்டிய உரலி......http://www.youtube.com/watch?v=HnbMYzdjuBs

இப்படியாயிடுச்சு.. http://www.youtube.com/v/HnbMYzdjuBs

அவ்வளவேதான்.. இப்போ 'Slide show ' என்ற பட்டனை அழுத்தி, நீங்க உருவாக்கின ஸ்லைடில்,.. நீங்க இணைச்ச வீடியோவை கண்டுகளியுங்கள்.

டிஸ்கி: ரொம்ப வேகமா தரவிறக்கம் ஆகுது. ஆனா, இணையத்தொடர்பு இல்லைன்னா இது வேலை செய்யாது.. பொட்டிதட்டுற ஆட்களுக்கெல்லாம் இது அனேகமா,.. தெரிஞ்ச ஜூஜூபி சமாச்சாரமா இருக்கலாம். பட்.. ஆனா,, ஆர்வக்கோளாறு ஒரு காட்டாறாச்சே :-)))). அதான் பகிர்ந்துட்டேன். ஒவ்வொரு Presentation-லும் நிறைய ஸ்லைடுகள் இணைக்கமுடியும், வீடியோவும், படங்களுமா.. கலந்துகட்டலாம். இனிமே, வீடியோவுடன் பவர்பாயிண்ட் Presentation தயார் செஞ்சு தூள் கிளப்புங்க.....






48 comments:

எல் கே said...

நல்ல டெக்னிக்கல் போஸ்ட் . ஏற்கனவே தெரியும் என்றாலும் மற்றவர்களுக்கு உதவும்.

THOPPITHOPPI said...

பயனுள்ள பதிவு
நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல உபயோகமான தகவல். நன்றி.

மின்மினி RS said...

கலக்கிட்டீங்க அக்கா.. அருமையான தகவல்கள்.. எல்லோருக்கும் பயன்படக்கூடியது. ரொம்ப நன்றி.

சுந்தரா said...

பயனுள்ள தகவல் சாரல்.

பகிர்வுக்கு நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி..நான் செய்ததில்லை.. செய்து பார்க்கிறேன்..சாரல். இதுக்குத்தாங்க வியல் அவார்ட்..

ADHI VENKAT said...

பயனுள்ள தகவல். கண்டிப்பாக செய்து பார்க்கிறோம்.

சசிகுமார் said...

படம் நல்லா காட்டுறீங்க

ராமலக்ஷ்மி said...

மிக்க நன்றி சாரல். குறிப்பிட்ட ஃபோட்டோஷாப் பாடங்களை சேமித்து வைக்க வசதியாய் இருக்கும் எனக்கு.

ஆர்வா said...

மிக உபயோகமான பதிவு..

//இப்போ, நாலு சமோசாவை ஒண்ணா சேர்த்து வெச்சமாதிரி துண்டாடப்பட்ட ஒரு வடிவம் கிடைக்கும்//

எவ்ளோ எளிமையா சொல்லி தர்றீங்க....

மாதேவி said...

பயனுள்ள தகவல்.நன்றி.செய்து பார்க்கிறேன்.

பொன் மாலை பொழுது said...

தூள் பதிவுதான் !

ப்ரியமுடன் வசந்த் said...

எனக்கு தெரியாத விஷயம்

தகவலுக்கு நன்றி சகோ!

நசரேயன் said...

உள்ளேன் டீச்சர்

Unknown said...

present teacher.

டிலீப் said...

பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

நீச்சல்காரன் said...

[im]http://tamilmanam.net/toolbar/TMvoteup.gif[/im]

Sriakila said...

very informative!

சந்தனமுல்லை said...

பயங்கர டெக்கியா இருப்பீங்க போலிருக்கே...அவ்வ்வ்..

போட்டோஸ்-க்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கறேன். நன்றி.

Thenammai Lakshmanan said...

நன்றி அமைதிச்சாரல்.. நல்ல உபயோகமான பகிர்வு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

முக்கியமாக புதியவர்களுக்கும் உதவட்டும்ன்னுதான் பகிர்ந்துகொண்டேன் :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தொப்பி,

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மின்மினி,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

நிச்சயமா முயற்சித்து பாருங்க... அட.. இதுக்கும் அவார்டா!! நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

முயற்சி செஞ்சுட்டு சொல்லுங்க :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

படங்கள், வீடியோபாடங்கள் எல்லாவற்றையுமே சேமித்துவெச்சிக்கலாம். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மறந்துடாதீங்க. ஸ்லைட்ஷோ செஞ்சு பார்க்கும்போது நெட் கனெக்ஷன் இருக்கணும் அவ்வளவே :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதைகாதலன்,

சீக்கிரத்துல மறக்காம இருக்கும் பாருங்க.. அதான் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

பாத்துட்டு சொல்லுங்க :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கக்கு-மாணிக்கம்,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

மைக்ரோசாப்ட் பவர்பாயிண்டில் நம்ம சிஸ்டத்திலிருக்கும் வீடியோக்களை பார்க்கமுடியும். அப்படி ஒரு நாளில்தான் யூ டியூபையும் முயற்சித்தேன். இது சம்பந்தமா அங்கியே நிறைய டூட்டோரியல்கள் இருக்குது..

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

வாங்க,.. வாங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

நசரேயனுக்கு அடுத்தாப்ல உக்காருங்க :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க டிலீப்,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நீச்சல்காரன்,

[im]http://www.cardsandgifts-direct.co.uk/ekmps/shops/cardsandgifts/images/pack-of-5-cream-smiley-thank-you-cards-3906-p.jpg[/im]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அகிலா,

வரவுக்கு நன்றி..

kavisiva said...

எளிமையாக விளக்கியிருக்கீங்க சாரல் மேடம். பலருக்கும் பயன்படும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

பயணமெல்லாம் முடிஞ்சு வந்தாச்சா :-))

நன்றி.

எஸ்.கே said...

VERY NICE!

ரிஷபன் said...

கற்றுக் கொண்டேன். நன்றி..

நானானி said...

எனக்கு இதுக்கெல்லாம் நேரமில்லை அல்லது பொறுமையில்லை.
உங்க தகவல்கள் படித்ததும்....நேரமும் பொறுமையும் வந்துவிடும் போல.

என்னிடமிருக்கும் வீடியோக்களை பதிவிட இது உதவும் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எஸ்.கே,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

நம்ம சிஸ்டத்துல இருக்கிற வீடியோக்களை இதுல சேமிச்சு வெச்சுக்கலாம். அதுக்கு பவர்பாயிண்டில் வேலை செய்யத்தெரிஞ்சாலே போதும். யூ டியூபில் அப்லோட் செய்யப்பட்ட நம்ம வீடியோக்களையோ, அல்லது அங்கிருக்கும் பிடித்தமான வீடியோக்களையோ சேமிக்கவும், ஸ்லைட்ஷோவுக்கும் இது உதவும்..

நன்றிம்மா..

ஹுஸைனம்மா said...

ஆஹா, கலக்குறீங்க.

Suni said...

தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் நன்றாக உள்ளது.
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

LinkWithin

Related Posts with Thumbnails