Friday 5 November 2010

தீபாவளின்னா ரெண்டு...



மொதல்ல கேள்விப்படறப்ப கொஞ்சம் குழம்பிட்டேன்.. அதென்ன, ச்சோட்டி, படீ??? ஏன்னா,.. நமக்கு ஒரே ஒரு தீபாவளியைத்தானே தெரியும். அப்றமா விளக்கம் கிடைச்சது. அதாவது, நாம தீபாவளி கொண்டாடும் நரகசதுர்த்தசியை, இவங்க 'ச்சோட்டி தீபாவளி'ன்னும், அதற்கடுத்து செய்யப்படும் லட்சுமி பூஜை தினத்தை 'படீ தீபாவளி'ன்னும் சொல்றாங்க. லட்சுமி பூஜையை ரொம்ப தாம்தூம்ன்னும், நரகசதுர்த்தசியை கொஞ்சம் குறைவான ஆர்ப்பாட்டத்துடனும் கொண்டாடுவதால் இந்தப்பேர் வந்திருக்கலாம்.


இங்கியும் நம்மூரைப்போலவே எண்ணெய்க்குளியல் உண்டு. அதை இங்குள்ளவங்க 'அப்யங்க ஸ்நான்'ன்னு சொல்லுவாங்க. காலங்கார்த்தால எழுந்து எண்ணெய் தேய்ச்சு, குளிச்சு முடிச்சுட்டு பட்டாசு வெடிப்பாங்க. இங்கே, மஹாராஷ்ட்ராவில் சின்னப்பசங்களெல்லாம் சேர்ந்து,ஒரு வாரத்துக்கு முன்னாடியே, மண்ணால் ஒரு மலைக்கோட்டை கட்டி, அதுல சிவாஜி மஹராஜ் கொலுவிருப்பதைப்போல செட் போடுவாங்க. அப்சல்கானை சிறையில் அடைச்சு வெச்சிருக்கும் காட்சிகளையெல்லாம் தத்ரூபமா செஞ்சு வெச்சிருப்பாங்க. இதுக்காகவே சின்னதா, ரெண்டுமூணு இஞ்ச் உசரத்துல கொலுபொம்மைகள் கிடைக்கும். லட்சுமி பூஜை அன்னிக்கு காலையில, முதல்ல அந்தக்கோட்டையைத்தான் வெடிவெச்சு தகர்ப்பாங்க. (இந்தவருஷம் புது அயிட்டமா, மலைக்கோட்டை ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசில் வந்திருக்கு)



அப்புறம் குடும்பத்தலைவர் 'காரிட்டே' என்னும் ஒரு கசக்கும் பழத்தை, வீட்டு வாசல்ல வெச்சு, நச்சக்..ன்னு நசுக்கி பிச்சுப்போட்டுடுவார். இது நரகாசுரனை அழிப்பதற்கான ஐதீகமாம். அப்றம், அதுல கொஞ்சூண்டு குங்குமத்தை போட்டு, கொழகொழன்னு குழப்பி..வெற்றித்திலகம் இட்டுக்குவாங்க. இப்போ,  யாரும் புதுத்துணியும் போடுறதில்லை. சுமாரான அளவுல ரங்கோலி போட்டு வீட்டின் எல்லா அறைகளிலும், வாசல் பக்கத்திலும் கொஞ்சம் அகல் விளக்குகளை ஏத்தி வைப்பாங்க. தீபாவளிக்கு உண்மையான அர்த்தமே தீபங்களின் வரிசை என்பதுதானே..


சாயந்திரம், லட்சுமி பூஜை சமயத்தில்தான், அதகளமெல்லாம் :-)). இங்கே குஜராத்தியர்கள் மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு அன்னிக்குத்தான் புதுவருசம் பிறக்குது. அன்னிக்குத்தான் கடைகளிலும் புதுக்கணக்கு தொடங்குவாங்க. சுத்தமான இடங்களிலும், மனங்களிலும்தான் லட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படறதால், தீபாவளிக்கு முன்னாடியே, நாம பொங்கலுக்கு வீட்டை வர்ணமடிச்சு அழகுபடுத்தறமாதிரி இங்குள்ளவங்களும் செய்வதுண்டு. வீட்டை சுத்தப்படுத்துவதில் துடைப்பம் முதலிடம் வகிப்பதால், ராஜஸ்தானியர்கள், புதுசா துடைப்பம் வாங்கி, மஞ்சள் குங்குமம் வெச்சு.. அதையும் பூஜையில் வைக்கிறதுண்டு. ரெண்டு தீபாவளிகளும் சிலசமயம் ஒரே நாளில் வரும், சிலசமயம், அடுத்தடுத்த நாட்களில் வரும்.


சாதாரணதினங்களில்கூட சில குடும்பங்களில், தப்பித்தவறிக்கூட துடைப்பம் காலில் படாம பார்த்துக்குவாங்க. இது என் ராஜஸ்தானிய தோழி சொன்னது. ஏன்னு கேக்கும்போதுதான் பூஜைசமாச்சாரத்தை சொன்னாங்க. லட்சுமி பூஜை அன்னிக்கு, வாசல்ல ஸ்பெஷலா பெரிய அளவுல ரங்கோலி போட்டு வைப்பாங்க.வீட்டின் உள்ளே, வெளியே.. பூஜை அறை, சமையல் கட்டுன்னு எல்லா அறைகளிலும் அகல் விளக்குகளை ஏத்தி வைப்பாங்க.க்ருஷ்ணர் ஜெயந்திக்கு செய்றமாதிரி சின்னச்சின்ன பாதங்கள், வீட்டுக்குள்ள போறமாதிரி வரையறதுண்டு.லட்சுமியே வீட்டுக்குள்ள வர்றதா ஐதீகமாம். சாயந்திரமானதும் புதுத்துணிகள், இனிப்புகள், பலகாரங்கள், நகை,பணம்,புதுக்கணக்கு நோட்டுன்னு எல்லாத்தையும் வெச்சு குபேரலஷ்மி பூஜை செய்வாங்க.


அப்றம், பெரியவங்க கையால புத்தாடைகளை எல்லோரும் வாங்கி, அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியாச்சுன்னா.. அடுத்த செகண்ட் எல்லோரும் வாசலுக்கு ஓடிடுவாங்க..எதுக்கா!! பட்டாசு வெடிக்கத்தான். அதிலும், குஜராத்தியர்கள் பட்டாசு வெடிக்கிறதை பார்த்தா, மத்த சமயங்களில் அவங்க கடைப்பிடிக்கிற சிக்கனம் ஒரு செகண்டுக்கு நம்ம நினைப்பில் வந்து, அவங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னுட்டு ஓடிடும் :-). இரவுவிருந்துக்கு அப்புறம் சில குடும்பங்களில் சிலபல சமாச்சாரங்கள் நடக்கும்.. வேறொண்ணுமில்லை..குடும்பத்திலுள்ளவங்க எல்லோரும் ஒண்ணுகூடி சீட்டாடுவாங்க. ராத்திரி முழுக்க சீட்டாடணுமாம். அப்பத்தான் லட்சுமிகடாட்சம் வீட்டுல தங்குமாம். ஜெயிச்சவங்களுக்கு சரி!!.. தோத்தவங்க நிலைமை???. அதுவுமில்லாம, சீட்டாடமாட்டேனு சொல்றவங்க அடுத்த ஜென்மத்துல கழுதையாத்தான் பிறப்பாங்களாம்.. இப்படி ஒரு நம்பிக்கை.


நாலாவது நாள், பாட்வா எனப்படும் பண்டிகை. வடக்கே மதுராவில் இந்தப்பண்டிகையை கோவர்த்தனபூஜையாவும் கொண்டாடுறாங்க. அன்னிக்கு கிருஷ்ணருக்கு மஹாபோக் எனப்படும் நைவேத்தியமா, 108 வகையான சாப்பாட்டு அயிட்டங்களை செஞ்சு, மலைமாதிரி குவிச்சு வெச்சு படையல் நடக்குமாம். பூஜைக்கப்புறம் இதெல்லாம் மக்களுக்கு பிரசாதமா வழங்கப்படுமாம்.


அஞ்சாம் நாளான தீபாவளியின் கடைசி நாள் ' பாயி தூஜ்'ன்னு இந்தியிலும், 'பாவுபீஜ்'ன்னு மராட்டியிலும் அழைக்கப்படும் பண்டிகை. இது முற்றிலும் உடன்பிறப்புக்களுக்கான பண்டிகை.அன்னிக்கு, சகோதரர்கள் தன்னோட சகோதரிகளின் வீட்டுக்கு விருந்துக்கு போவாங்க. சகோதரி வீட்டுக்கு வெறும்கையோட போனா நல்லாருக்குமா?? அதனால, கை நிறைய ஏதாவது பரிசுப்பொருளை வாங்கிட்டுப்போவாங்க. அதான் மார்க்கெட்டுல எக்கச்சக்க பாத்திரம்,பண்டம்,புடவை, நகைன்னு எக்கச்சக்க கிஃப்ட் அயிட்டங்கள் குவிஞ்சு கிடக்குதே :-). (தந்தேரஸ் அன்னிக்கு இதுகளை வாங்கிக்கிட்டா,.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-))அவங்களும் சகோதரனை வரவேற்று, மணைப்பலகையில உக்காரவெச்சு, நெத்தியில் திலகமிடுவாங்க.. அந்த திலகத்தில் நாலஞ்சு அரிசியையும் ஒட்டவைக்கிறதுண்டு. இது ஏன்னு தெரியலை. சரியான ஆள் கிடைச்சா விளக்கம் கேக்கணும். அப்புறம், நல்லா விருந்துச்சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சுட்டு, மலரும் நினைவுகளை பேசி பொழுதை சந்தோஷமா கழிக்கிறதுண்டு. இது ஒரு வகையில் நம்மூர் 'கனுப்பிடி', மற்றும் காணும்பொங்கல் மாதிரியே இருக்குது .


இதுக்கும் ஒரு கதை இருக்குதாம். யமன் தன்னோட சகோதரியான யமியின் அழைப்பை ஏத்துக்கிட்டு, அவங்க வீட்டுக்குப்போயி விருந்தாடிட்டு, "ம்ம்.. யமி,... சாப்பாடு யம்மி.. யம்மி,"ன்னு சந்தோஷமா திரும்பி வந்தாராம். அப்ப,.. 'இதுமாதிரி இதுமாதிரி சகோதர சகோதரிகள் ஒருத்தருக்கொருத்தர் பாசமா இருந்தா, ..ஒத்துமையா இருந்தா,.. இதுமாதிரி இதுமாதிரி அவங்க நல்லாருப்பாங்க'ன்னு அவங்களுக்கு வரம் கொடுத்தாராம். உண்மையில் இந்தப்பண்டிகை பாசத்தையும், ஒத்துமையையும் நிச்சயமா பலப்படுத்துது. பாக்கெட்டோட கனத்தைப்பார்க்காம, பாக்கெட்டுக்கு பின்னால இருக்கிற மனசிலுள்ள, அன்பின் கனத்தை மட்டுமே பார்க்கிறபுத்தி கொஞ்சூண்டாவது வருது.


தீபாவளியன்று நல்லெண்ணையில் லஷ்மியும், தண்ணீரில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். அதேபோல் பட்டாசில் அக்னிபகவான் வாசம் செய்வதால், பாதுகாப்பாக பட்டாசு வெடிச்சு, அளவோடு பலகாரங்கள் சாப்பிட்டு இனிமையாக தீபாவளியை கொண்டாடணும்ன்னு வாழ்த்திக்கிறேன்.




இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்..


டிஸ்கி:  எங்கூர்ல இன்னும் தீவாளி முடியலை :-))))




34 comments:

Prathap Kumar S. said...

தீபாவளியை வச்சே ரெண்டு பதிவு ஒட்டீட்டிங்க.... போதும்...இனி தாங்காது... மீதியை அடுத்த தீபாவளிக்கு வச்சுக்கலாம்....:))
தீபவாளி வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

ஏதோ இந்தமட்டுக்கும், அஞ்சு நாள் பண்டிகையை ரெண்டே நாள்ல முடிச்சிருக்கேனேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க.. நீங்கல்லாம் அலறுனாலும், சிலபல உண்மைகளை பதிவு செய்யவேண்டியது ஒரு பதிவியின் கடமையில்லியா???.. வரலாறு முக்கியம் அமைச்சரே :-))))))))

உங்கூர்ல தீபாவளி கொண்டாடியாச்சா??

தீபாவளிக்கு வந்ததுக்கு நன்றி.

Prathap Kumar S. said...

கண்டிப்பா வரலாறு நமக்கு ரொம்ப முக்கியம்...இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்குறேன்...:)

பதிவருக்கு பெண்பால் பதிவி ன்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன்:)

மதுரை சரவணன் said...

சோட்டி, படி என தீபாவளியை விளக்கி , மகாராஷ்டிர மண்ணின் மணம் உங்கள் இடுகையில் மணக்கிறது. வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//தீபாவளியை வச்சே ரெண்டு பதிவு ஒட்டீட்டிங்க.... போதும்...இனி தாங்காது... மீதியை அடுத்த தீபாவளிக்கு வச்சுக்கலாம்....:))//

மறுபடி சொல்லிக்கிறேன்

நசரேயன் said...

//ராத்திரி முழுக்க சீட்டாடணுமாம். அப்பத்தான் லட்சுமிகடாட்சம் வீட்டுல தங்குமாம்//

ரம்மியா மூணு சீட்டா ?

//சீட்டாடமாட்டேனு சொல்றவங்க அடுத்த ஜென்மத்துல கழுதையாத்தான் பிறப்பாங்களாம்//

சீட்டு ஆட்டத்திலே கழுதைன்னு ஒண்ணு இருக்கு

நசரேயன் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு சமூகத்திலுமுள்ள வழக்கங்களுக்குள் எத்தனை அர்த்தங்கள்! துள்ளும் உங்கள் எழுத்து நடையில் பட்டாசாய் இருக்கிறது பதிவு:))!

சசிகுமார் said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

சோட்டி, படி தீபாவளி விளக்கங்கள் அருமை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

எல் கே said...

வட இந்தியா முழுதும் இந்த இரண்டு தீபாவளிகள் உண்டு. ரெண்டு நாள் விடுமுறை கிடைக்கும். இங்க ??

எஸ்.கே said...

//"ம்ம்.. யமி,... சாப்பாடு யம்மி.. யம்மி,"//உண்மையாகவே சிரித்தேன்!
அருமை!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

பாம்பேயில இருக்கும் போது இதை பார்த்து ஆச்சிரியப்பட்டதுண்டு ..இங்கே விலவாரியா விளக்கிட்டீங்க ..!! சூப்பர்

மனோ சாமிநாதன் said...

ஒவ்வொரு சமூகத்திலும் இடத்துக்கு இடம் எப்படியெல்லாம் பழக்க வழக்கங்களும் பூஜைகளும் நம்பிக்கைகளும் மாறுபடுகின்ற‌ன என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் அமைதிச்சாரல்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இங்க ஒரு தீபாவளியையே தாங்க முடியல்லே..ரெண்டு தீபாவளியா?
அடேங்கப்பா..!!

வல்லிசிம்ஹன் said...

யப்பா!! யமன் யமி,யம்மி.
சாரலம்மா தூள் கிளப்பிட்டீங்க. இங்க விஜய் டிவிலயும் பல தீபாவளி வழக்கங்களைச் சொன்னாங்க. ஆனால் நீங்கள் முறைப்படி அழகா,அருமையா கதை சொல்லிட்டீங்கப்பா. இயற்கையா இத்தனை முறைகள் இருகுன்னு தெரியவே தெரியாது.!!சூப்பர் பதிவு.

erodethangadurai said...

நல்ல கருத்துகள். வாழ்த்துக்கள்...!

நீச்சல்காரன் said...

[co="red"][si="10"]வாழ்த்துக்களும்[/si][/co][co="blue"][ma]நன்றிகளும்[/ma][/co]

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதுரை சரவணன்,

இருக்குமிடத்திலுள்ள வழக்கங்களையும் பகிர்ந்துக்கணும்ன்னு ஒரு சின்ன ஆசை :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

ரம்மி, மூணுசீட்டு, இன்னும் எல்லாவகையான ஆட்டங்களும் உண்டாம். மும்பைக்குள்ள இருக்கிற சூதாட்ட விடுதிகள் அன்னிக்கு ராத்திரி முழுக்க ஓவர்டைம் பாக்குமாம்..

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நாங்க இருக்குற ஃப்ளோர்ல, ஒவ்வொரு வீட்டிலும் ஒரே பண்டிகையை ஒவ்வொரு விதமா கொண்டாடுறோம் :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

நன்றி சகோ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

உங்கூர்ல தீபாவளி கொண்டாட்டங்களெல்லாம் முடிஞ்சதா..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நம்மூர்ல பொங்கலுக்கு கிடைக்குதேப்பா.. எங்களுக்கு பொங்கலுக்கு ஒர்ரே நாள்தான் லீவு :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எஸ்.கே,

உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ சாமிநாதன்,

வேற்றுமையில் ஒற்றுமை---- அதான் இந்தியா :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.ராமமூர்த்தி,

தீவாளி ரெண்டுன்னாலும், செலவென்னவோ ஒரே ஒரு தீவாளிக்குத்தான்:-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஈரோடு தங்கதுரை,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நீச்சல்காரன்,

முதல்வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Unknown said...

happy deepavali..

sorry konjam late

so adavance pongal

vaalthukkal..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

பதில் சொல்றதுக்கு நானும் 'கொஞ்சம்' லேட். என்னோட வாழ்த்துக்களையும் வரும் தீபாவளிக்கு வெச்சுக்கோங்க
:-))))

கோமதி அரசு said...

'அப்யங்க ஸ்நான்' இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
மலைக்கோட்டை படம், செய்தி அருமை.


பாக்கெட்டோட கனத்தைப்பார்க்காம, பாக்கெட்டுக்கு பின்னால இருக்கிற மனசிலுள்ள, அன்பின் கனத்தை மட்டுமே பார்க்கிறபுத்தி கொஞ்சூண்டாவது வருது.//

அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails