Monday 30 August 2010

இந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க....

கொசு கடிச்சா என்னாகும்....

சுரீர்னு வலிக்கும், நமநமன்னு ஊறல் எடுக்கும், பட்....டுனு அடிச்சிபோட்டுட்டு அடுத்த வேலையைப்பாக்க போயிடலாம். இப்பல்லாம் அதுங்களை மின் தகனம் செய்யன்னே சைனாக்காரன் bat-ல்லாம் கண்டுபிடிச்சிருக்கான். சுவிட்சை லேசா அழுத்திக்கிட்டு 'பறக்கும்....கொசு பறக்கும்...'ன்னு பாடிக்கிட்டே டென்னிஸ் விளையாடுற நெனப்புல கொசு அடிக்கலாம். ஸ்கோர் செட்டிங்கா.... அது உங்க விருப்பம்.

கடிச்ச கொசு சும்மா போகாதுங்க . டாக்டர் நம்ம கையிலே ஸ்பிரிட்டை தடவி ஊசி போடற மாதிரி, இது எச்சிலைத்தடவி இல்லே குத்திட்டு போயிருக்கு. 'அய்யே.... என்பவர்களுக்கு ஒரு நற்செய்தி,...'இந்த எச்சிலில் கிருமிகள் இருக்கு',.... 'அய்யய்யோ' என்பவர்கள் கவனிக்க... அவை அத்தனையும் மலேரியா கிருமிகள். இதோட மொத்த, சில்லறை வியாபாரங்களுக்கு அணுகுவீர்..' Anopheles' கொசுவை.


வியாபாரம்னா நாலும் இருக்கணும்.... இவர்கிட்டேயும் ,
1.plasmodium vivax... Benign malaria
2.plasmodium malaria -- Quartan malaria
3.plasmodium falciparum-- Malignant tertian
4.plasmodium ovale -- Mild tertian

நாலு வகை இருக்கு. எல்லாமே நாம இருக்கிற இடத்துக்கே வந்து சப்ளை செஞ்சுடுவாங்க.

மலேரியான்னா 'கெட்ட காத்து'ன்னு அர்த்தமாம். இந்த வார்த்தைய 1763-ல் Ford- என்பவர் மொதமொதல்ல உபயோகிச்சிருக்கார். அப்போல்லாம்.. கெட்ட காத்தாலதான் மலேரியா பரவுதுன்னு நம்பிக்கிட்டிருந்திருக்காங்க. Dr.King என்ற புண்ணியவான்தான், காத்துல இருக்கிற கொசுவால பரவுதுன்னு 1883-ல கண்டுபிடிச்சு சொன்னாரு.

'பிறக்க ஓரிடம், பிழைக்க ஓரிடம்' அப்படிங்கறது இதுங்களுக்குத்தான் பொருந்தும். 'மனிதனில் பாதி... கொசுவில் பாதி'ன்னு வளருதுங்களே...

மனுசனைக்கடிச்சதும், அதனோட உமிழ் நீரோடு சேர்ந்து கிருமிகளும் 'சொய்ங்ங்க்'ன்னு மனுச ரத்தத்தில் சேர்ந்து விடும். இப்போ இதோட பேரு 'sporozoites'. ஒத்தைக்கொரு ந்யூக்ளியஸ்... அதைச்சுத்தி எலாஸ்டிக் கியூடிகிள், அவ்ளவுதான் அங்க அடையாளம். (ஆனா இதுங்கதான் மனுசனை 'உன்னைப்பிடி... என்னைப்பிடி'...என்று ஆக்கிடுது.)

இதுங்கள்ளாம் ஜம்முன்னு, ரத்தத்துல மெதந்துகிட்டே... ஈரலுக்கு போய் சேர்ந்துடும். ஏனா?.... ஏன்னா.. அங்கேதான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளரும்..இப்போ அதுங்களோட அடை காக்கும் பருவமாம். இந்த நேரத்துல கூட , அதுங்க ரத்தப்பரிசோதனையில தெரியாது...அதுக்கு இன்னும் காலமிருக்கு. கடைசியில ஈரல்ல இருந்து வெளிய வந்து ரத்தத்துல கலந்துடும்.

சும்மா ஒரு 40-60 நொடிகளில், சிவப்பணுக்களை ஆக்கிரமித்துக்கொள்ளும். இந்த நிலையில் இதன் பேர் Trophozoite. அங்க போய் சும்மா இருக்காது. அதுங்களுக்கு ஊட்டச்சத்து வேணுமில்லே.... கொஞ்சம் கொஞ்சமா சிவப்பணுவின் செல் திரவத்தை உறிஞ்சி வளரும். நம்ம உடம்புல இருக்கிற ஹீமோகுளோபின் கொறைய ஆரம்பிக்கும்.ஹீமோகுளோபின் செரிமானமாவதன் பக்கவிளைவாக, கிருமியோட செல் திரவத்தில் சின்னச்சின்ன புள்ளிகள் தோன்றும். (இந்த புள்ளிகளை haemozoineன்னு சொல்லலாம்). கொஞ்ச நாளுக்கு பிறகு, தன்னோட ஆட்டத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு,, தன்னை ஒரு ரிங் (b)பால் மாதிரி வளையமாக்கிக்கிடும்.

இந்த ரிங்(b)பாலுக்கும்( இனிமே இதை schizont-ன்னே சொல்லலாம்) நம்ம சிவப்பணுதான் உணவு. மனுஷங்களுக்குதான் எல்லா கவலையும். இதுங்களுக்கு என்ன...சாப்பாடு... தூக்கம்... அதுக்குபிறகு என்ன... இனப்பெருக்கம்தான். இப்போ ஒன்னா இருந்த கரு, பலவா பெருகியிருக்கும். கூடவே வெஷத்தன்மையும் உருவாகியிருக்கும். அப்டியே இருந்தா கிருமிங்களோட பேரு கெட்டுப்போகாதா :-) .. அதனால,.. எல்லாம் ரத்தத்துல சேர்ந்துடும். மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கும். இப்டியே.. ஒவ்வொரு செட்டா கொண்டாந்து, ரத்தத்துல சேர்க்கும். எவ்வளவுக்கு செட்டு சேருதோ, அவ்வளவுக்கு காய்ச்சல் வரும். கிருமிங்க ரத்தத்துல நுழையிறதிலிருந்து, காய்ச்சல் வர்ற வரை உள்ள காலத்தை, inoculation' காலம் ..அப்டின்னு சொல்வாங்க.

இதுவே, கொசு உடம்பில் மலேரியா கிருமி நுழைஞ்சா, என்ன ஆகும்...



(அடுத்த பாகத்தில் முடியும்)





47 comments:

Anonymous said...

கொசுத்தொல்லையை சும்மா சாதாரணமா நினைக்கக்கூடாது :)

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா செட்டு சேர்ந்துட்டாய்ங்கன்னு சொல்றது இதத்தானா? ஆவ்


நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க இம்மினியூண்டா இருந்துட்டு இதுக பண்ற தொல்லை தாங்க முடியலடா சாமி..

Prathap Kumar S. said...

ஆகா... உங்களுக்குள்ள ஒரு விஞ்ஞானி இருக்கிறது இன்னிக்குத்தான் தெரியும்...
கொன்னுட்டிங்க...(கொசுவை) :))

நாடோடி said...

கொசுத் தொல்லையில் இவ்வ‌ள‌வு விச‌ய‌ம் இருக்கா?.. விள‌க்க‌ங்க‌ள் ந‌ல்லா இருக்கு

Chitra said...

கொசுக்கடியிலும் இத்தனை மேட்டர்????? ஆஆஆ......நாங்க கொசு கடிச்சா, அடிச்சிட்டு - சொறிஞ்சிக்கிட்டு உட்கார்ந்து இருப்போம். நீங்க, ஆராய்ச்சி பண்ணிட்டீங்களே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாரல் மிரட்டிபிட்டீங்க மிரட்டி..:)
இங்க வேறே தில்லியில் டெங்குவும் மலேரியாவும் பரவுதாம்.. மழை பெஞ்ச பார்க் க்குகு போகலாம் வர்ரீங்களாடான்னா.. குட்டீஸே மலேரியான்னு அலறிக்கிட்டு ஓடறாங்க.. பள்ளிபுல்வெளியெல்லாம் நீச்சல்குளமாகிடுச்சு.. ஓடமாஸ் இட் ஒர்க்ஸ் ந்னு டீச்சரே விளம்பரம் செய்யறாங்கன்னா பாத்துக்குங்க :)

சசிகுமார் said...

//இதுவே, கொசு உடம்பில் மலேரியா கிருமி நுழைஞ்சா, என்ன ஆகும்...//

Waiting Friend

அம்பிகா said...

எனக்கு மலேரியா அனுபவம் இருக்கிறது.அப்பாடி! ஒருவழி ஆய்டுவோம்.

Anonymous said...

நல்ல பயனுள்ள பதிவு ..பகிர்வுக்கு நன்றி .

"இதுவே, கொசு உடம்பில் மலேரியா கிருமி நுழைஞ்சா, என்ன ஆகும்..."தெரிஞ்சுக்க வெய்டிங்

Ahamed irshad said...

writttuuuu...

ராமலக்ஷ்மி said...

//பிறக்க ஓரிடம், பிழைக்க ஓரிடம்' அப்படிங்கறது இதுங்களுக்குத்தான் பொருந்தும். 'மனிதனில் பாதி... கொசுவில் பாதி'ன்னு வளருதுங்களே...//

அதானே:)?

விளக்கமான பதிவு. தெரிய வேண்டிய விவரங்கள். அடுத்த பாகமும் சீக்கிரம் வரட்டும்.

ஹுஸைனம்மா said...

// 'பறக்கும்....கொசு பறக்கும்...'ன்னு பாடிக்கிட்டே டென்னிஸ் விளையாடுற நெனப்புல கொசு அடிக்கலாம்//

இப்ப நானும் சிறந்த டென்னிஸ் பிளேயராகிட்டேன்!!

அப்புறம் மலேரியா அது இதுன்னு ரொம்பப் பயங்காட்டுறீங்க? எல்லாத்துக்கும் ”ஓடோமாஸ்” துணை!! ரெண்டு மணிநேரத்துக்கு ஒருக்கா தடவிகிட்டு இருந்தா நோ சைட் எஃபக்ட், நோ ஸ்மெல், நோ அலர்ஜி...

எல்லாம் அனுபவம்தான்!!

அருண் பிரசாத் said...

இந்த கொசு தொல்லை நிஜமாலுமே தாங்கலப்பா.

நல்ல பதிவுங்க

வல்லிசிம்ஹன் said...

கொசுக்கடிச்சால் வர வியாதி மருந்து மஹாக் கசப்பா இருக்கும். அந்த நாள் வாசனை இந்தப் பதிவைப் படிக்கும்போது மண்டையில் ஏறியது. நல்ல முயற்சி எடுத்துப் பதிவிட்டு இருக்கிறீர்கள் சாரல். மிகவும் நன்றி.

ஜெயந்தி said...

மலேரியா மட்டுமா யானைக்கால்?

Ahamed irshad said...

விருது வெயிட்டிங்...

http://bluehillstree.blogspot.com/2010/08/blog-post_30.html

ஜெய்லானி said...

டாக்டர் சாரல் வாழ்க....வாழ்க வாழ்க...!!!!

ADHI VENKAT said...

இங்கு கூட டெங்கு காய்ச்சல் வேகமா பரவிக்கிட்டிருக்கு. பயனுள்ள தகவல்கள் தந்திருக்கீங்க.

க.பாலாசி said...

ஏங்க பயமுறுத்துரீங்க... தினமும் குறைஞ்சது 25 கொசுவாவது என்னைய கடிக்குது... எத்தன உயிரோயிரோடப்போவுதுன்னு தெரியல... இதல்லாம் படிச்சாவே ஜுரம் வந்திடும்போலருக்கு... சீக்கிரம் அடுத்தத எழுதுங்க..

வெங்கட் நாகராஜ் said...

கொசுத் தொல்லை தாங்க முடியல.... படுத்து இருக்கும்போது காதுகிட்ட வந்து ரீங்காரம் பாடும் கொசுவுக்கு என்ன தண்டனை தரலாம்?

.... அந்த கொசுவ பிடிச்சு, அது காதுல ”நாராசமா, கொசுவே கொசுவே கடிக்காதே....” ந்னு பாட்டு பாடலாமா?

வெங்கட்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

அதேதாங்க. கடுகு மாதிரி இருந்துக்கிட்டு என்ன அட்டகாசம் பண்ணுது இதுகள் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

சொன்னது கொஞ்சம்தான், அதுவும் ஒரேஒரு வகையைப்பத்தி மட்டும்தான் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சிலு,

நல்லவேளை, கொசுவை பிராக்கெட் போட்டீங்கப்பா.. :-))

விஞ்சானியை எப்பவோ கொசுமருந்து அடிச்சு தூங்க வெச்சாச்சு. ஆனாலும் அப்பப்ப முழிச்சுக்கிறார். என்ன செய்ய :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

செஞ்ச ஆராய்ச்சிக்குத்தான் ஜெய்லானி டாக்டர் பட்டம் கொடுத்துட்டாரே :-))))

நன்றி.

Paleo God said...

தொடருங்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//'பறக்கும்....கொசு பறக்கும்...'ன்னு பாடிக்கிட்டே டென்னிஸ் விளையாடுற நெனப்புல கொசு அடிக்கலாம்//

உங்க கற்பனைக்கு கொசுவே எல்லை...ஹா ஹா ஹா

//வியாபாரம்னா நாலும் இருக்கணும்....//
இந்த நாலு எனக்கு வேண்டாம்... மீ எஸ்கேப்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

ஆமாம்ப்பா.. மழைக்காலம்தான் அதுங்க பல்கிப்பெருகுறதுக்கு ஏத்த காலம்.தேங்கி நிற்கிற தண்ணின்னா அதுக்கு கொண்டாட்டம், நமக்கு திண்டாட்டம். வெள்ளைப்புகையா கொசுமருந்து ஒண்ணை அடிக்கத்தான் செய்றாங்க.. என்ன புண்ணியம். நாம இன்னும் பாதுகாப்பா இருந்துக்கத்தான் வேண்டியிருக்கு

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

என் பையருக்கும் வந்து, இரத்தத்தில் ப்ளேட்லட்ஸ் எண்ணிக்கை குறைஞ்சு பயங்கரமா அவதிப்பட்டார்.ஒரு வழி பண்ணிடுச்சு :-((

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

அடுத்த பதிவில் வரும்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது இர்ஷாத்,

விருதுக்கும் வருகைக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஆல் அவுட்டையெல்லாம் இந்தக்கொசுக்கள் அவுட்டாக்கிடுச்சுப்பா :-)).

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருண்பிரசாத்,

அதுவும் இப்போ மழைக்காலம் வேறயா.. இனிமேத்தான் இருக்குது இதுங்க அட்டகாசம் :-)))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

அந்த நாட்டுமருந்துக்குப்பேரு 'கொய்னா'தானே.. பயங்கரமா கசக்கும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்பல்லாம் இனிப்பா இருக்கிற மருந்துதான் :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

யானைக்காலும் இந்த anopheles கொசுவால்தான் பரவுது. அந்தக்கிருமியின் பெயர் Filaria bancrofti.

மலேரியாவுக்கான நாலு கிருமிகளின் பெயர்கள் இடுகையில் சொல்லியிருக்கேன்..

நன்றி.

'பரிவை' சே.குமார் said...

கொசுத் தொல்லையில் இவ்வ‌ள‌வு விச‌ய‌ம் இருக்கா?.. விள‌க்க‌ங்க‌ள் ந‌ல்லா இருக்கு

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

ஆஹா.. நீங்க ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்ன்னு தெரியாமப்போச்சேப்பா.. :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

ஆமாம்ப்பா.. இப்போ கொசுக்களெல்லாம் ஓவர்டைம் பாக்குற நேரம் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழுலகம்,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாசி,

அடடா!! தினம்தினம் ரத்த தானமா...

அடுத்தது போட்டாச்சு.. படிங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

பாடுங்கப்பா.. அப்படியாவது அந்தக்கொசுவுக்கு விமோச்சனம் கிடைக்கட்டும் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

தொடர்ந்தாச்சு :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அடப்பாவி,

இந்த நாலு வேண்டாமா.. யாருப்பா அது?? அடப்பாவியக்காவுக்கு வேற நாலு, நல்ல டிசைன்ல எடுத்துப்போடுங்க.

பார்சலா.. ஹோம்டெலிவரி வேணுமா?? எப்படி வசதி :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

விவரங்கள் எக்கச்சக்கமா இருக்குப்பா.எல்லாத்தையும் படிச்சாலே ஜூரம் வர்றமாதிரி இருக்கு :-(

நன்றி.

erodethangadurai said...

நல்ல பதிவு .... வாழ்த்துக்கள் ...!

LinkWithin

Related Posts with Thumbnails