Saturday 12 June 2010

பாம்புன்னா....

நவி மும்பையில் பாம் பீச் ரோடு,(palm beach road) பாம் பீச் ரோடுன்னு ரெண்டில்லை,... ஒரே ஒரு ரோடு இருக்கு. இது, CBD Belapurல் ஆரம்பிச்சு வாஷி வரைக்கும் இணைக்கிறது. இந்தப்பக்கம் மூணு, அந்தப்பக்கம் மூணுன்னு ட்ராக்குகள். நடுவில் தடுப்பாக நடப்பட்ட palm மரங்கள். பெயர்க்காரணம் வந்த கதை புரிஞ்சுதா?.. வாக்கிங், ஜாகிங் போறதுக்கு அருமையான இடம்.

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசைப்படறவங்க, புதுசா வண்டி ஓட்ட கத்துக்கிறவங்க இந்த ரோட்டை ரொம்பவே விரும்புவாங்க. சல்லுன்னு வண்டி போகும்போது சும்மா பறக்கிறமாதிரியே இருக்கும். ஊருக்கு வெளியே இருக்கிறதால போக்குவரத்து நெரிசலும் இருக்காது. ஆனா.. அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும்ன்னு சொல்லுவாங்களே!! அதை இந்த பகுதி அடிக்கடி நிஜமாக்கி காட்டும்.

Palm beach road..

ஒரு நாள் சொந்த வேலையா வாஷி போகவேண்டிய சந்தர்ப்பம். வாஷியை நெருங்கிக்கிட்டிருக்கும்போது, அந்தப்பக்கத்து ரோட்டில் ஒரே கூட்டமா தெரியுது. ஏழெட்டு கார்கள் வரிசையா நிக்குது. கூட்டத்துல கோன் ஐஸ் மாதிரியான மைக்கை பிடிச்சுக்கிட்டு ஒருத்தர், வீடியோ கேமரா மேன் மாதிரி இன்னொருத்தர். எங்க வண்டியை ஓரங்கட்டிட்டு ரோட்டை க்ராஸ் பண்ணி அந்தப்பக்கம் போனோம். அம்மாடி!!!... ஏழெட்டு வண்டிகள் நின்னுக்கிட்டிருந்ததுன்னு சொன்னேனில்லையா.. அப்பளம் மாதிரி நொறுங்கியிருந்ததுன்னு சேர்த்துக்கோங்க :-(



அப்பளம்.?..

இதுல அந்த செய்தியாளர்கள் ஓரொருத்தர் கிட்டயும் போய் பேட்டி எடுத்துக்கிட்டிருந்தாங்க . அனேகமா உள்ளூர் டிவி சேனல்களா இருக்கும். அங்கே நின்னுக்கிட்டிருந்த ஒருத்தர் கிட்டே என்னாச்சுன்னு விசாரிச்சேன். ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிப்போச்சுன்னார். அதான் கார்களை பாத்தாலே தெரியுதே... அதுவும் ஏழெட்டு கார்கள் டேமேஜ் ஆகி நிக்குதுன்னா சம்பவம் பெரிசாத்தானே இருக்கணும்!! . மேற்கொண்டு கேட்டதில் அவர் சொன்னது....

வழக்கம்போல இந்த ரோட்டில் கார்கள் ஸ்பீடா வந்திட்டிருந்தபோது, திடீர்ன்னு... முன்னாடி போயிட்டிருந்த கார், சடன் ப்ரேக் போட்டு,.. நடுரோட்டில் நின்னிருக்கு. இதை எதிர்பார்க்காததினால், அதை தொடர்ந்து, பின்னாடி வந்திட்டிருந்த கார்கள், டமடமன்னு ஒண்ணோடு ஒண்ணு மோதியிருக்கு. திடீர்ன்னு சம்பவிச்சதால் ஸ்பீடை கட்டுப்படுத்த முடியலை போலிருக்கு. முதல் கார் ஏன் சடன் ப்ரேக் போட்டுச்சாம்?..

அந்த ரோட்டில் ஒருபக்கம் கட்டிடங்களும், எதிர்பக்கம் மாங்குரோவ் காடுகளுமா இருக்கும். காட்டிலிருந்து , பில்டிங்கில் இருக்கும் சொந்தக்காரங்களை பார்த்துட்டு, வீட்டுக்கு திரும்பிக்கிட்டிருந்த பாம்பு ஒண்ணு, ரோட்டில் ஊர்ந்து போறதை டிரைவர் கவனிச்சிருக்கார்.. அதுவும் கிட்டே வந்ததுக்கப்புறம். பாம்பு அடிபட்டுடக்கூடாதேங்கிற நல்லெண்ணத்துல ப்ரேக் போடப்போய்...

நல்லவேளை யார் உசிருக்கும் ஆபத்தில்லை. ஆனா, ஏதோ ஒரு காரில், சீட் பெல்ட் போடாம உக்காந்திருந்த ஒரு அம்மணி, காருக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டு... கையில் எலும்பு முறிவு. ஆம்புலன்ஸ் வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டி போயிருக்கு.

திடீர்ன்னு ஒருத்தர் தண்ணி பாட்டிலை எடுத்துக்கிட்டு ரோட்டுக்கு எதிர்பக்கம் நின்னுக்கிட்டிருந்த கூட்டத்தை நோக்கி ஓடினார். யாருக்கு என்னாச்சோன்னு நாங்களும் பின்னாடியே போனோம். அங்க போயி பாத்தா.. இவ்வளவு ப்ரச்சினைக்கும் காரணமான பாம்பார் மயங்கி கிடக்கிறார். இவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்டுக்கு காரணமா இருந்தாலும்,.. வாலில் லேசான அடியோட தப்பிச்சிக்கிட்டார். ஒருத்தர் அதுமேல பாட்டில்லேர்ந்து தண்ணியை தெளிச்சி மயக்கத்தை தெளிவிக்க முயற்சி பண்றார். இன்னொருத்தர் ஒரு குச்சியை வெச்சிக்கிட்டு தள்ளிவிட முயற்சி செய்யறார். ஒண்ணும் பலிக்கலை... இருந்தாலும், நான் ஓடுறதுக்கு தயாரா நின்னுக்கிட்டு.. ரெண்டு க்ளிக்... பாம்பு படம் எடுக்காட்டி என்ன?.. நான் எடுத்துட்டேனே :-)))





அன்னிக்கு டேமேஜான கார்களின் மொத்த மதிப்பு லட்சக்கணக்கில் வரும். இதுல ரெண்டுமூணு கார்கள், ஒவ்வொண்ணும் பத்துப்பதினஞ்சு லட்சம் மதிப்புள்ளவை . என்னதான் இன்ஷூரன்ஸ் கிடைக்குமுன்னாலும், உயிர் சேதாரம் ஏதாவது ஆகியிருந்தா??.. கேட்க நினைக்கும் எல்லாக்கேள்விகளுக்கும் பதில் ஒண்ணுதான்.. 'மனிதாபிமானம்'. பாம்பாயிருந்தாலும் அதுவும் ஒரு ஜீவன்தானே!!. மனுஷங்களுக்கு அடிபட்டாலே காரை நிறுத்தாம போற இந்த உலகத்துல இப்படியும் ஒருத்தர் !!!.

54 comments:

எல் கே said...

hats off to the driver

Anonymous said...

பாம்பைக்கண்டு நடுங்காமல் படமெடுத்த தைரியசாலி வீராங்கனை வாழ்க :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓடுரதுக்கு தயாராக நின்னுக்கிட்டு படம் எடுப்பவரையே படம் எடுத்தது பெரிய விசயம் தான் .. ;)

ராமலக்ஷ்மி said...

நன்றாக விவரித்துள்ளீர்கள்.

எல் கே said...

////பாம்பைக்கண்டு நடுங்காமல் படமெடுத்த தைரியசாலி வீராங்கனை ///
"பாம்பை படமெடுத்த மும்பை வீரப் பெண் " விருது உங்களுக்கு கொடுக்கறேன் சாரல்

அம்பிகா said...

////பாம்பைக்கண்டு நடுங்காமல் படமெடுத்த தைரியசாலி வீராங்கனை ///
:-)))

துளசி கோபால் said...

இன்னும் மனுஷர் மனசுலே ஈரம் இருக்குன்னு காமிக்கும் ஒரு நிகழ்வு.

பாரதி இருந்தால் மகிழ்ந்திருப்பார்.

அன்புடன் நான் said...

பாராட்டுரதா... திட்டுரதா.... நியாயமா பாராட்டனும்..... மனிதநேயத்துக்கு!
பகிர்வுக்கு நன்றிங்க.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சப்பாஹ் .. நல்ல வேளை.. யாருக்கும் எதுவும் ஆகல...!!

இயல்பான நடை..வாழ்த்துக்கள் :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சப்பாஹ் .. நல்ல வேளை.. யாருக்கும் எதுவும் ஆகல...!!

இயல்பான நடை..வாழ்த்துக்கள் :)

Swengnr said...

வணக்கம், என்னுடைய முதல் பதிவு போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல வேளை.. யாருக்கும் எதுவும் ஆகல..!! :O :O

எழுதியிருக்கும் விதம் அருமை..

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு அதிசயம் சாரல்.
ஒரு குட்டிப் பாம்புக்குக் கருணை காட்ட மும்பையில் ஒருத்தர்.!
லட்சங்கள் காலி.
தலைப்புக்கான விஷயமாச்சே:)
அதைப் படமோடு!! படமெடுத்துச் செய்தியும் கொடுத்த உங்களுக்கு ,உங்கள் நடுங்காத கரங்களுக்கு ப் பிடியுங்கள் பூங்கொத்து.

அன்புடன் அருணா said...

பாம் பீச் ரோடுலே பாம்பா!!!

ஹுஸைனம்மா said...

//பாம்பு படம் எடுக்காட்டி என்ன?.. நான் எடுத்துட்டேனே//

அப்ப, பாம்பைப் பதவியிலருந்து நீக்கிட்டு, உங்களைப் பாம்பு(பே)ராணி ஆக்கிடலாமா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

நீங்க பட்டம் கொடுத்ததுமட்டும் அந்த குட்டிப்பாம்புக்கு தெரிஞ்சதோ.. அதிர்ச்சியில மறுபடி மயக்கம் போட்டுடும் :-)))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வீர விருதா.. நான் வைரவிருதோன்னு நினைச்சிட்டேன் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

உண்மைதான்.அந்த ரோட்டில் ஆக்ஸிடெண்ட்ல்லாம் சர்வ சாதாரணம்.ஆளையே அடிச்சுப்போட்டுட்டு, திரும்பி பாக்காம போயிடுவாங்க.ஒரு வாயில்லா ஜீவனை காப்பாத்த நினைச்சது உண்மையிலேயே பெரிய விஷயம்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கருணாகரசு,

நிச்சயமாக..

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எஞ்சினியர்,

உங்க வீட்டுக்கு வந்து பின்னூட்டமும் போட்டாச்சு. இங்கேயும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

நன்றி.

Asiya Omar said...

அட பாம்பிற்காக ப்ரேக் போட்ட அதிசய மனிதர் நிச்சயமாக பாரட்டப்படவேண்டியவர்,உயிர் சேதம் இல்லாதது நல்ல செய்தி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நெஜமாவே பெரிய மனசு தான் அந்த டிரைவர்க்கு. எப்படிங்.... தைரியமா படம் எல்லாம் எடுத்தீங்க... நானா இருந்தா பாம்புக்கு பதிலா எனகில்ல தண்ணி தெளிக்கணும்.... பா பா பா....ம்பு.... எஸ்கேப்....

Chitra said...

அருமையாக, ஒரு நல்ல செய்தியுடன் எழுதி இருக்கீங்க.... பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி இருக்கிறார் அந்த கார் ஓட்டுனர். பாம்பு படம் எடுக்க [?] பாம்பாட்டி சித்தரிடம் கத்துக்கிட்டீங்களா :)

நசரேயன் said...

நீங்க ஒரு புயல் சாரல்

அ.முத்து பிரகாஷ் said...

" பாம்பார் மயங்கி கிடக்கிறார் ''
என்னா மரியாதை ?
தோழர் ... நான் வெஜிட்டாரியன் தான் ...
ஆனா ....
எந்த சூழலிலும் பாம்புக்கெல்லாம் கருணை காட்ட மாட்டேன் ...
அடிச்சுடுவியா ன்னு கேட்கிறீங்களா ...
நோ ...ஓடிடுவேன் !

ஸாதிகா said...

தைரியமான அம்மிணிதான்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

மாதேவி said...

அமைதிச்(சாரலில்)பாம்பார் மயங்கிவிட்டார் :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணா,

பெயர்ப்பொருத்தம் நல்லாருக்கு இல்லியா :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

நான் எடுத்தது சின்ன பட்ஜெட் படம்தான். இதுக்கெல்லாம் நாகராணி ஆகமுடியாது. நீங்களே கலெக்ட் செஞ்ச நாகரத்தினம் பதிச்ச கிரீடமா இருந்தா பதவியேற்கிறதைப்பத்தி யோசிக்கலாம் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

உயிர் சேதம் இல்லாதது உண்மையிலேயே பெரிய ஆறுதல்தான்.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தங்கமணி,

உண்மையிலேயே அந்த ஓட்டுனர் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

நன்றி.

Vidhya Chandrasekaran said...

புகைப்படங்கள் நன்று.

உயிர்ச்சேதம் இல்லாதது ஆறுதல்:)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

தெரிஞ்சே வதைப்பவர்கள் இருக்கும் உலகத்தில் இது நல்ல செய்திதானே?..

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

அதேதான்..

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

ஆஹா.. நான் சாரலாகவே இருந்துக்கிறேனே :-))

நன்றி.

pudugaithendral said...

ரொம்ப தெகிரியமா பாம்பை படம் எடுத்திருக்கீங்க. ம்ம்ம்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நியோ,

எல்லாம் ஒரு பயம் கலந்த மரியாதைதான் :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

அச்சச்சோ.. அவரே பாவம் அடிபட்டதுலயும், வெய்யில்லயும் மயங்கிட்டாருங்க.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

ஆமாங்க.. உண்மையிலேயே அது ஒரு பெரிய ஆறுதல்தான்.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

எல்லாம் அவரு மயங்கி கிடக்கிறாருங்கிற தைரியம்தான் :-)))

நன்றிப்பா.

Thenammai Lakshmanan said...

அனிமல் ப்ளானட்ல பாம்பைப் பார்த்தாலே பயப்படுற ஆளு நான் .. தைரியசாலி அம்மணிநீங்க... பிடிங்க விருதை..:))

மாதவராஜ் said...

சுவாரசியம்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனம்மை,

நன்றிங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதவராஜ் அண்ணா,

நன்றிங்க.

Prathap Kumar S. said...

இந்த பதிவை அன்னிக்கு திறக்கும்போது இல்லைன்னு காண்பிச்சுது...இன்னிக்கு இருக்கு.... ----???

பாம்புக்காக வண்டியை நிறுத்துவாங்க ஆனா வீட்டுக்குள்ள வந்தா அடிச்சுக்கொல்லுவாங்க...இது எப்படின்னு புரியல.

பின்னாடி வண்டி வரும்னு கொஞ்சம்கூட யோசிக்காம பாம்புக்காக வண்டியை நிறுத்துன அந்த ஓட்டுனரை வன்மையாக கண்டிக்கிறேன். எந்த இழப்பினால் பாதிப்பு அதிகமோ அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

//பாம்புக்காக வண்டியை நிறுத்துவாங்க ஆனா வீட்டுக்குள்ள வந்தா அடிச்சுக்கொல்லுவாங்க.//

கோயிலுக்குள்ள சிலையே வெச்சு கும்பிடறோமே..ஊருக்கே நாகர்கோவில்ன்னு பெயரும் வைக்கிறோமே :-)))

இங்கியும் அடிச்சுப்போட்டுட்டு போறதுண்டு. காப்பாத்த நினைச்சதால்தான் நியூஸ்.

நன்றி வருகைக்கு.

LinkWithin

Related Posts with Thumbnails