இன்சுவையும் சூடும் இளநுரையும் நன்றாமே
பொன்நிகர் அப்பமுடன் பச்சி பகராதோ
மன்னுபுகழ் காபியின் மன்
உன்னதம் காணவென உள்ளத்தால் உள்ளியது
நன்முத்தும் பொன்னும் நிறைக்காது ஏங்கியது
நின்றாடும் ஆசையால் நெஞ்சமிங்கு தேடியது
இன்னொரு காபி இனிது.
****************************************************************
கள்ளத்தால் வாழும் கடும்பாவி யோர்வாழ்வு
உள்ளத்தில் நோயாய் உருப்பெறும் - உள்ளபடி
நன்னயம் நாடாமை நன்று.
*********************************************************************
பொன்னலரி சென்னியோன் பொற்கழல் சூடுதல்
மன்னுயிர் ஓதிய மாண்பிங்கு இன்னபிற
உன்னதம் ஈதென ஊரார் உவப்பதெலாம்
என்னென காண்கிலேன் யான் *********************************************************************
இலைபழுத்து வீழும் நிலையெள்ளு வோர்முன்
அலைபொலியும் தண்பூ தலையால் - மலைவேந்த
சீரற்றோர் தாழார் சிலநாளில் மேலெழுவார்
ஆரக்கால் அஃதே உலகு.



