Sunday 2 March 2014

நீட்சி..

வென்றவன் முதலில் இலக்கைத் தீர்மானிக்கிறான், அதற்கான திட்டத்தை உருவாக்குகிறான், அதன்பின் அயராது உழைத்து இலக்கை அடைகிறான். பார்வையாளர்களோ 'அதிர்ஷ்டம் 'என்ற ஒற்றைச்சொல்லில் அத்தனையையும் கடந்து செல்கின்றனர்..

கொண்ட நம்பிக்கையை இழத்தலென்பது, கட்டடத்தின் அஸ்திவாரத்திலிருந்து ஒரு கல்லை உருவுவதற்குச் சமம்.

ஒரே செயலைத் திரும்பத்திரும்பச் செய்ய வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொள்ளத்தேவையில்லை. இலக்கை அடைவதற்கான வெவ்வேறு பாதைகளே அவை.

எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதும், எல்லாவற்றையும் ஆச்சரியமாகவோ கடினமாகவோ பார்ப்பதுமான இரு வழிகளில் கடக்கிறது வாழ்வு.

'எல்லாம் முடிந்தது'.. என்று இடிந்து உட்கார்பவர்கள் கண்ணுக்குத்தெரியாத நீட்சியினை உணரத்தவறி விடுகிறார்கள்.

மாற்றம் மனதின் ஆழத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், வெறும் வாய்வார்த்தைகளில் அல்ல.

திறமை, குறிக்கோள் எனும் இரு கரைகளையும் இணைக்கும் பாலமாக நேர்ச்சிந்தனைகளுடன் கூடிய முயற்சி விளங்குகிறது.

எல்லா வகையிலும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகப் பிறரைச் சிறுமைப்படுத்துதல் பெருந்தவறு.

பாராட்டுகளையும் புகழையும் எதிர்பார்த்து வானவில் பூப்பதில்லை, கடமையை விரும்பிச் செய்வோம் மற்றதெல்லாம் தானே தேடி வரும்.

புரிந்து கொள்ளலுடன் கூடிய அன்பு, உறவுகளுக்கிடையே நிம்மதியையும் நெருக்கத்தையும் கொண்டு வருகிறது.

வால்: சிஸ்டத்தை மகரும் லேப்டாப்பை மகளும் பிடுங்கிக்கொண்டதால் (பரீட்சை வருதுப்பா..) அடிக்கடி பதிவிடவோ நட்புகளின் இடுகைகளுக்குப் பின்னூட்டமிடவோ இயலவில்லை. மொபைல் உதவியால் பேஸ்புக்கில் மட்டுமே நடமாட்டம். ஆளைக்காணோம் என்று தேடுபவர்கள் மன்னித்து 'அங்கே' கண்டடைவீர்களாக :-))

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// மனதின் ஆழத்திலிருந்து + சிறுமைப்படுத்துதல்... /// பலதும் உணர வேண்டிய வரிகள்...

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் மிக நன்று. நீட்சியும், புத்தரும் வெகு அருமை.

பால கணேஷ் said...

பொன் மொழிகள் அத்தனையும் ரசிப்பதுடன் மனதில் பதித்துக கொள்ள வேண்டியவை!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான மொழிகள்......

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails