Wednesday, 26 June 2013

கிருஷ்ண கமல்..

பச்சைப்பசேல் பின்னணியில் நீலக்கற்களைப் பதித்தது போல் பூத்திருப்பவைகளைக் கண்டாலே மனது நிறைந்து போகிறது. 'க்ருஷ்ண கமல்' இப்படித்தான் மஹாராஷ்டிர மக்கள் இந்தப்பூவை அழைக்கிறார்கள். 'பிரம்மகமலுக்கு' அடுத்தபடியாக இந்தப்பூவை வீட்டில் வளர்ப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறார்கள். வீட்டில் இந்தப்பூச்செடியை வளர்த்தால் ஐஸ்வரியம் என்பது இங்கே உள்ளவர்களின் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் இந்தப்பூவை 'Passion flower' என்று அழைக்கிறார்கள். கொடி வகையைச்சேர்ந்ததால் மல்லிகையைப்போலவே வாசலில் இதைப் பந்தலிட்டும் வளர்க்கலாம். பற்றிப்படர ஏதுவாக தொட்டியிலேயே நான்கு அல்லது ஐந்தடி உயரத்திற்கு சில மூங்கில் குச்சிகளை ஊன்றி வைத்து அதிலும் படர விடலாம். நர்சரிகளில் அப்படித்தான் வைத்திருக்கிறார்கள்.மேலும் சில வழிமுறைகள் இங்கே இருக்கின்றன. கொஞ்சம் விலையுயர்ந்த வகை என்பதால் நர்சரிகளில் எண்ணிக்கையில் குறைவாகத்தான் வைத்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கும் அளவு மற்றும் நர்சரிகளைப்பொறுத்து, ஒரு செடி 200 ரூபாயிலிருந்து 400 வரை விலை போகிறது.

வெள்ளை, பிங்க், மற்றும் நீல வண்ணங்களில் பூக்கும் க்ருஷ்ணகமலில் நீலம் நாட்டு வகையைச் சேர்ந்ததாம். மற்றவையெல்லாம் ஹைப்ரிட் வகையைச் சேர்ந்தவை என்று நர்சரி நடத்துபவர் கூறினார். க்ருஷ்ணகமலில் சுமார் 500க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறதாம். எங்கள் வீட்டில் வளர்வது எந்த வகை என்று அறியும் ஆவலில் விக்கியண்ணனிடம் கேட்டபோது அது 'passiflora incarnata' வகையைச் சேர்ந்தது என்று கூறினார். மேலும் பல விவரங்களை அள்ளித்தந்திருக்கிறார்.

இதற்கு எக்கச்சக்க மருத்துவ குணங்கள் இருக்கின்றனவாம், கூடவே பக்க விளைவுகளும். மூலிகையாயிற்றே.. பக்க விளைவுகள் இருக்குமா என்ன? என்று ஆச்சரியத்தோடு மேலும் கேட்டால் அதிர்ச்சியூட்டும் தகவல்களை நம் முன் அள்ளிக்கொட்டுகிறார் கூகிளாண்டவர். ஆகவே இந்தச்செடியை வெறுமே அலங்காரத்திற்கும் பூஜைக்குமாக மட்டுமே வளர்ப்பது சாலச்சிறந்தது. எங்கள் வீட்டில் வெறும் அலங்காரத்திற்கு மட்டுமே..

மொட்டு ஒன்று மலர்ந்திடக்காத்திருக்கிறது..
மெல்ல மெல்ல இதழ் விரித்து..
ரகசியமாய் ஒரு புன்னகையுடன்..
மலர்ந்து சிரிக்கிறது..

பூவைத்தேடி வந்த தேனீ..
பளீரென்ற சிரிப்பு..
இந்தப்பூவுக்கு 'பாண்டவ கௌரவர் பூ' என்றும் பெயருண்டு என்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. அதாவது..

நீலக்கலரில் சுற்றியிருக்கும் இதழ்கள் கௌரவர்களாம்..

அதன் உட்புறம் மஞ்சள் கலரில் இருக்கும் ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்களாம்..

அதற்கு மேற்புறம் மஞ்சள் கலந்த பச்சைக்கலரில் உருண்டையாக இருப்பது திரௌபதியைக்குறிக்குமாம்..

அதற்கும் மேற்புறம் இருக்கும் மூன்று இழைகள் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளைக் குறிக்கின்றனவாம்.

நீலத்தின் உட்புறம் தெரியும் பர்ப்பிள் வளையம் கிருஷ்ணர் கையிலிருக்கும் சுதர்சனச்சக்கரத்தைக் குறிக்கிறதாம்.

இப்படியெல்லாம் நினைத்துப்பார்க்க சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது இல்லையா :-)

வேடிக்கை காட்டிய களைப்பில் நொந்து நூடுல்ஸாகி..
இந்தப்பூவை வீட்டில் வளர்த்தே ஆகவேண்டும் என்று தவமாய்த்தவமிருந்து வாங்கிக் கொண்டு வந்து, "இது என் செடி, நானே தண்ணி ஊத்தி வளர்க்கப்போறேன்" என்று சொல்லி வீட்டில் நட்டு வைத்து விட்டு, அப்புறம் அதை அம்பேல் என்று விட்டு விட்ட என் பெண்ணிற்கு இந்த இடுகை சமர்ப்பணம் :-)))))))

என் செடிகளுக்குப் பொசியும் நீர் ஆங்கே கிருஷ்ண கமலுக்கும் பொசிகிறது :-))

40 comments:

ராமலக்ஷ்மி said...

கொள்ளை அழகு. படங்கள் பிரமாதம். சுவாரஸ்யமான தகவல்கள்!

பால கணேஷ் said...

படிப்படியா பூ மொட்டு விரிஞ்சு மலராகி வண்டு வரதை படங்களா பாக்க ரம்யமா இருக்கு. எடுக்க என்ன சிரமப்பட்டீங்களோ. தகவல்களும் அருமை.

ராஜி said...

மொட்டு பூவாய் மாறும் படம் கொள்ளை அழகு..., செடி வளார்க்கனும்ன்னு ஆசைப்பட்டாளே அதுக்கே அவளுக்கு வாழ்த்துக்கள்.., என் மகனுக்கும் செடி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம்.

ஸாதிகா said...

எவ்வளவு நுணுக்கமாக எடுத்து இருக்கீங்க.பிரமாதம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது... ஹிஹி...

நீங்கள் சொன்னது நல்ல சுவாரஸ்யம்...

நன்றி... வாழ்த்துக்கள்...

இமா க்றிஸ் said...

ஹை! என் ஃபேவரிட் தாவரம். ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் விபரங்கள் பலது எனக்குப் புதிது. க்ருஷ்ணகமல்... சுவாரசியமாக இருக்கிறது. படங்கள் அனைத்தும் அழகு. திரும்ப வந்து நீங்கள் கொடுத்திருக்கும் ஒவ்வொரு தொடர்பும் படித்துப் பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

எனக்குத் இதுவரை தெரிந்ததெல்லாம், இது கொடித்தோடை. கிறீஸ்துநாதரின் ஐந்து திருக்காயங்களை நினைவு படுத்துவது போல அமைந்துள்ளதால் ஆங்கிலத்தில் பாஷன் ஃப்ளவர். கொடியை அழகிற்காகவும் வளர்க்கலாம். ஆரஞ்சு, சிவப்பு நிறப் பூக்கள் பார்த்திருக்கிறேன்.

பாஷன் ஃப்ரூட் வைட்டமின் சீ அதிகம் கொண்டது. இலங்கையில் மென்பச்சை நிறப் பழங்கள்தான் பார்த்திருக்கிறேன் நியூஸிலாந்தில் நாவல் நிறப் பழங்கள்தான் கிடைக்கின்றன.

இலை இரும்புச் சத்து அதிகம் கொண்டது. எங்கள் வீட்டு ஆல் டைம் ஃபேவரிட் ரெசிபி இது. பிடிச்சா ட்ரை பண்ணிப் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/24759

ஸ்ரீராம். said...

படம் அழகு.
சுட்டியில் நிறையத் தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

இராஜராஜேஸ்வரி said...

http://jaghamani.blogspot.com/2011/04/blog-post_04.html

இதற்கு கடிகாரப்பூ என்று பெயர் உண்டு என்று ஒரு கோவிலில் இந்தப்பூவை பிரசாதமாக எனக்குக்கொடுத்த அர்ச்சகர் தெரிவித்தார்...

கோமதி அரசு said...

இந்தப்பூவுக்கு 'பாண்டவ கௌரவர் பூ' என்றும் பெயருண்டு என்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது. அதாவது..

நீலக்கலரில் சுற்றியிருக்கும் இதழ்கள் கௌரவர்களாம்..

அதன் உட்புறம் மஞ்சள் கலரில் இருக்கும் ஐந்து மகரந்த இழைகள் பாண்டவர்களாம்..//
என்ன அழகாய் இந்த பூவை மாகாபாரத கதையோடு இணைத்து பார்த்து இருக்கிறார்கள்.
அழகு பூ.
படங்கள் எல்லாம் அருமையாக எடுத்து இருக்கிறீர்கள் சாரல்.
வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

ஆஹா........ இவ்வளவு பேஷனேட்டா எவ்ளோ தகவல் இந்த பேஷன் ஃப்ளவருக்கு!!!!

அனைத்தையும் ரசித்தேன்.

நம்மூரில் ஏராளம். ஆனா இந்த மஹாலக்ஷ்மி சமாச்சாரம் தெரியாமப்போச்சே:-)
கன்ஸர்வேட்டரியில் இனிமேலொன்னு வச்சே ஆகணும் போல:-)

Jerry Eshananda said...

Blooming.

ஹுஸைனம்மா said...

ரொம்ப ரொம்ப அழகா இருக்குங்க. ஸ்ப்ரிங் தலைமுடி மாதிரியும் இருக்கு, வயர்கூடையால் செஞ்ச பூ மாதிரியும் இருக்கு, இன்னும் என்னென்னவோ மாதிரியெல்லாம் இருக்கு, ஆனா நிஜ பூவுன்னே சொல்ல முடியாது!!

அதும் கரெக்டா தேனீ நிக்கும்போது எடுத்த ஃபோட்டோவுல, பழையகாலத்து டெலிஃபோன் மாதிரியும் இருக்கு.

Menaga Sathia said...

ஆஹா படங்கள் கொள்ளை அழகு..பெயர்க்காரணமும் மிக சுவராஸ்யம்!!

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் கொள்ளை அழகு......

Dhiyana said...

மிக அழகான படங்கள்.. மூலிகையில் பக்க விளைவுகளை? ஆச்சரியம் தான்..

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அழகோ அழகு

Mahi said...

அழகான படங்கள்! இந்தப் பூவின் பெயர் கிருஷ்ணகமல் என இப்போதுதான் தெரிகிறது. ஊரில் இதை "ஜூஸ் காய் செடி" என சொல்லுவோம். :)

நீலநிறத்துக்குப் பதிலாக வெள்ளை நிறமுள்ள பூப்பூக்கும் கொடியை வீட்டில் வளர்த்த நினைவு இருக்கிறது. ஹேப்பி கார்டனிங்!

கீதமஞ்சரி said...

இந்தப்பூவை இதுவரை எங்குமே பார்த்ததில்லை நான், படங்களில் கூட. மிகவும் வித்தியாசமான வடிவமைப்பு. மொட்டு மெல்ல மெல்ல மலர்வதைப் படம் பிடித்த அழகுக்குப் பாராட்டுகள். கிருஷ்ண கமல் பெயரே ஈர்க்கிறது. பகிர்வுக்கு நன்றி அமைதிச்சாரல்.

RajalakshmiParamasivam said...

நானும் இந்தப் பூவை இப்ப தான் பார்கிறேன். ஒரு மஹாபாரதத்தையே
உள்ளடக்கிய இந்த மலரின் பலவிதமான போஸ்களின் போட்டோக்கள் மனதை கொள்ளையடிக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

வெகு அழகான மலர்.நிறமும் ம் வடிவும் சூப்பர்

அருமை!! ஷாந்தி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரசித்தமைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

கரும்பு தின்னக் கசக்கவில்லை :-))

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

மேடத்திற்கு செடிகள் மேல் ஆர்வம் சமீபகாலமாத்தான் வர ஆரம்பிச்சிருக்கு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டிருக்கேன் இப்பல்லாம் :-))

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

ரசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இமா,

நீங்க கொடுத்த சுட்டியில் போய்ப்பார்த்தேன். டேஸ்ட்டியான ரெசிபியாத்தான் தெரியுது.

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

யாம் பெற்ற விவரங்கள் பெறுக இவ்வையகம் :-))

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

'கடிகாரப்பூ' வித்தியாசமான பெயர்தான்..

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

விதவிதமா எத்தனை பெயர்கள் இந்தப்பூவுக்கு :-)

ரசித்தமைக்கு நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

தோட்ட நகரில் எக்கச்சக்கமா இருக்கும்போது உங்க தோட்டத்தில் மட்டும் இல்லாம இருக்கலாமா? அதுவும் உங்கூர் கால நிலைக்கு பூக்கள் இன்னும் பெரூசா வரும்ன்னு தோணுது.

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெரி ஈசானந்தன்,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஸ்ப்ரிங் முடி தவிர ஸ்ட்ரெயிட் முடி இருக்கற பூக்களும் இருக்கு.

ஆஹா!!.. இந்தப்பூ இவ்ளோ அவதாரமெடுத்திருக்குதா :-))))

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ரசித்தமைக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தியானா,

எனக்கும் அதே ஆச்சரியம்தான். வாசிச்சப்புறம் 'கிர்ர்ர்ர்ர்ர்'ன்னு ஆகிருச்சு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயக்குமார்,

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மஹி,

ஹை!!.. இன்னொரு நாமகரணம். கூகிளாண்டவர் கொடுத்த படங்கள்ல கொழகொழன்னு இருக்கறதைப் பார்த்தா பொருத்தமான பெயராத்தான் தோணுது.

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதமஞ்சரி,

நர்சரிகளில் எக்கச்சக்கமா பூத்திருக்கறதைப் பார்க்கையில் ரொம்பவே ரம்யமா இருக்குதுங்க.

ரசித்தமைக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜலக்ஷ்மிம்மா,

ரசித்தமைக்கு நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ரசித்தமைக்கு நன்றிம்மா.

LinkWithin

Related Posts with Thumbnails