Thursday, 21 June 2012

ஆகாயத்திலொரு அழகுத்திருவிழா..

ரயில், கடல், யானை இதெல்லாம் மட்டுமல்ல இயற்கையின் ஒவ்வொரு துளியிலும் தெறிக்கும் அழகையும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. அவற்றில் சூரிய உதயாஸ்தமனங்களை ரசிப்பது போல் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. நிமிடத்துக்கு நிமிடம் சட்சட்ன்னு தன்னோட அலங்காரத்தை மாற்றிக்கொள்ளும் வானத்தின் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதென்னவோ சூரியக்காதலனைப் பார்த்து விட்டால் மட்டும் எங்கிருந்துதான் இத்தனை வெட்கம் வந்து விடுமோ???.. நாணிக்கோணி சிவந்தே போய் விடுவாள் அந்த ஆகாயப்பெண்.. 

தனித்தனியாகவே அழகில் அசத்தும் இவர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டால் கேட்கவா வேண்டும். என்றுமே பிரியாத இந்தக்கூட்டணியின் ஆட்சியில் வரையப்பட்ட அழகோவியங்களில் ரசித்தவற்றைப் பிடித்து வந்திருக்கிறேன். அவற்றில் சில ..

ஃப்ளிக்கரில் ரொம்பவே வரவேற்பு கிடைச்சது இந்தப் படத்துக்கு.
http://www.flickr.com/photos/66281151@N07/6286827116/in/photostream

பின்னி எடுத்துருக்குது அழகு..

இத்தனைப் படகுகளையும் பத்திரமாப் பார்த்துக்கணுமாம் நான் :-)

 நிறையப்பேருக்குப் பிடிச்சுப்போன இன்னொரு வானம்.. http://www.flickr.com/photos/66281151@N07/6754357891/in/photostream

இரவா.. பகலா..

ஜொலிக்கும் வைரம்..
http://www.flickr.com/photos/66281151@N07/7256788006

சூரியனுக்கே பன்னீர் தெளிக்கிறார்..
http://www.flickr.com/photos/66281151@N07/6231002675

மஞ்சள் பூசிக்கொண்ட மஞ்சுகள்..
http://www.flickr.com/photos/66281151@N07/6754357891/in/photostream

36 comments:

ராமலக்ஷ்மி said...

திருவிழாவில் கலந்து கொண்டிருக்கும் எல்லோருமே அழகில் பின்னியெடுத்திருக்கிறார்கள்:)! குறிப்பாக சூரியருக்குப் பன்னீர் தெளிக்கும் சமுத்திரர் கொள்ளை அழகு.

ஹுஸைனம்மா said...

எல்லாமே பாத்துகிட்டேயிருக்கலாம்போல.. அவ்ளோ அழகு..

குறையொன்றுமில்லை. said...

படங்களும் அதற்கு பொருத்தமான கமெண்ட்களும் நல்லா இருக்கு

Admin said...

ஆகாயத்திலொரு அழகுத்திருவிழா.. நாணும் கலந்துகொண்டு ரசித்தேன்..

பால கணேஷ் said...

ஒவ்வொரு படமும் மனதை அள்ளுகிறது. அருமை. படம் பிடித்த உஙகளுக்கு...

[im]http://www.mylot.com/w/image/1714047.aspx[/im]

pudugaithendral said...

எல்லா போட்டோவும் சூப்பர். அதிலயும் அந்த பன்னீர்த் தெளிப்பதாக நீங்க கமெண்ட் கொடுத்திருப்பது ரொம்ப அருமை.

வாழ்த்துக்கள்

ELANGO T said...

பின்னணியாக விண்ணோடும் நிலவோடும் கடலோடும் விளையாடிய காமிரா கவிதைகள்! எது காலை எது மாலை என்று தெரியாத பொழுதுகள்!

கே. பி. ஜனா... said...

அழகு அழகு அத்தனையும் அழகு!

வெங்கட் நாகராஜ் said...

அத்தனையும் அழகு.. ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன....

பாராட்டுகள்.

Asiya Omar said...

அத்தனை படங்களும் அழகு.எது என் ஃபேவரைட் என்றால்? ஆ...இது,அது, எது? எதுன்னு சொல்ல முடியலையே!

மதுமிதா said...

அழகுப் படங்கள் சாந்தி. நான் மிகவும் ரசித்தேன்.வானும், கடலும், மேகமும், நிலவும் அள்ளி அளிக்கின்றன கொள்ளை விருந்தை :)

'பரிவை' சே.குமார் said...

சாந்தி அக்கா...
போட்டோக்கள் எல்லாம் கலக்கல் ரகம்.

இராஜராஜேஸ்வரி said...

தனித்தனியாகவே அழகில் அசத்தும் இவர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டால் கேட்கவா வேண்டும். என்றுமே பிரியாத இந்தக்கூட்டணியின் ஆட்சியில் வரையப்பட்ட அழகோவியங்களில் ரசிக்கவைக்கின்றன.. பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மாதேவி said...

வானம் வசப்பட்டது. கொள்ளை அழகு.

ஸ்ரீராம். said...

இந்த வார கல்கியில் ஃபோட்டோகேலரி பகுதியில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

எல்லாப் படங்களுமே சிந்தையைக் கொள்ளை கொள்கின்றன. மிக அருமை.

VijiParthiban said...

மிகவும் அருமை அக்கா . அத்தனையும் இயற்கை ரசிக்கவைக்கும் உங்களது படபிடிப்புகள் மிகவும் அருமை... சூப்பர்.....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

நாள் முழுசும் சூரியர் அனல்லயே இருக்காரே.. வேர்க்காதா என்ன?.. அதான் பன்னீர் தெளிக்கிறார் :-)

ரசிச்சதுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

ரசிச்சுப் பார்த்ததுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

ரொம்ப நன்றிம்மா வாசிச்சதுக்கும் ரசிச்சதுக்கும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதுமதி,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க:-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க T.T.E.

மிக்க நன்றிங்க ரசிச்சதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜனா,

அழகை ரசிச்சதுக்கு மிக்க நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

இயற்கை ஒரு வற்றாத அழகுச்சுரங்கம். எடுக்க எடுக்க வந்துட்டே இருக்குங்க :-)

ரசிச்சுப் பாராட்டினதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ஒண்ணும் அவசரமில்லை.. நிதானமா இன்னொருக்காப் பார்த்துட்டு எது உங்க ஃபேவரிட்ன்னு சொல்லுங்க :-))

நன்றிங்க ரசிச்சதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதுமிதா,

தேனாய் இனிக்கும் உங்கள் கருத்துரைக்கு நன்றி :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ரசிச்சுப் பாராட்டினதுக்கு மிக்க நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

ரொம்ப நன்றி ரசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

ரசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

வாழ்த்துகளுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

ரசிச்சுப்பாராட்டினதுக்கு மிக்க நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜி,

ரொம்ப நன்றிங்க, ரசிச்சுப் பாராட்டினதுக்கு :-)

LinkWithin

Related Posts with Thumbnails