Wednesday 6 April 2011

க்ரீமெல்லாம் பூசலைப்பா..

அதென்னவோ.. நம்ம மக்களுக்கு சிகப்புன்னா அப்படியொரு மோகம்.. அதைத்தெரிஞ்சு வெச்சிக்கிட்டுத்தானே சிகப்பழகு க்ரீம்களோட வியாபாரம் கொடிகட்டிப்பறக்குது. ஏற்கனவே, சிகப்பா இருக்கறவங்களுக்குத்தான் கல்யாணம் ஆகும், நல்ல வேலை கிடைக்கும், அழகிப்போட்டியில ஜெயிப்பாங்க.. அப்படி இப்படின்னு மூளைச்சலவை நடக்குது. பத்தாததுக்கு இப்போ வெய்யில் காலம் வேற ஆரம்பிச்சாச்சா.. வெய்யில்ல போனா கறுத்துடுவே.. இந்த க்ரீமை உபயோகி... உன் நிறம் அப்படியே இருக்கும்ன்னு வேற ஆரம்பிச்சுட்டாங்க..

இது ஒண்ணைத்தான் ரசிக்கமுடியலையே தவிர சிவப்பு நிறமும், அந்த நிறத்திலிருக்கும் பொருட்களும், பூக்களும் எல்லோரையும் கண்டிப்பா ரசிக்கவைக்குது. சிவப்பு ரோஜாவுக்கு இருக்கும் வரவேற்பு சொல்லித்தான் தெரியணுமா என்ன.. அதுவும் அந்த மருதாணிச்சிவப்பு..  மத்தவங்களைவிட அதிகமா செவந்திருந்தா என்ன ஒரு பெருமிதம் :-)) பளீர்ன்னு இருக்கும் அந்த சிவப்பு அடடான்னு இருக்குமே.

'ரத்தம் ஒரே நிறம்'கறது மனுஷங்களுக்குள்ள ஏற்றத்தாழ்வு இல்லைங்கறதுக்கு சிம்பாலிக்கா சொல்லப்படற ஒரு அழகான சொற்றொடர். ஒரு பெண்ணை வர்ணிக்கணும்ன்னா, 'கோவைப்பழம்போல் சிவந்த இதழ்கள்'னு சொல்லாம முடிக்கமாட்டாங்க இலக்கியத்துல.. இவ்ளோ ஏன்??.. அதிகமா செவந்திருக்கும் தக்காளியும், தர்பூசணியும் யாரும் வாங்காம விட்டதா சரித்திரமே இல்ல.. இது எப்டி இருக்கு??

சீனர்களுக்கு இந்த சிவப்பு நிறம் ரொம்ப பிடித்தமானது.. சின்னப்பசங்களை கெட்ட ஆவியிலிருந்து இது காப்பாத்துறதா அவங்க நம்பறாங்க. இந்த நிறத்துக்கு இன்னும் சில குணங்களும் உண்டு.. இது சக்தி, ஆற்றல், மற்றும் வலிமையை குறிக்குது. சிவப்பு கலர் சிந்திக்கும் தன்மையை தூண்டுவதாகவும், நரம்புகளுக்கு வலுவூட்டுவதாவும் சொல்றாங்க. ரத்தம், மற்றும் ரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளையும் இது சரிப்படுத்துதாம். உடம்புவலியையும் இது குணப்படுத்துவதா சொல்றாங்க. எல்லோர் கவனத்தையும் சட்டுனு கவர்ந்து இழுக்கறதாலதான் போக்குவரத்து சிக்னல்கள்ல இதை உபயோகப்படுத்துறோம். இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.. சிகப்பு நிறக்கார்கள்லதான் அடிக்கடி திருடர்கள் கைவரிசையை காட்டுறாங்களாம். ஏனாம்?.. முந்தையவரியை படிங்க :-))))

இந்த மாசம் நம்ம பிட்டிலும் இதான் தலைப்பு.. என்னோட கைவரிசையையும் காமிச்சிருக்கேன். நாட்டாமை.. தீர்ப்பை மாத்திமாத்தி சொல்லாம கரெக்டா சொல்லு :-))))))

மைக் டெஸ்டிங்.. ஒன்.. டூ.. த்ரீ!!..

ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் ஜகஜமப்பா :-))

வெய்யிலுக்கு இதம்மா.. ஜூஸ் போட தயாரா.. தக்காளி:-)

க்ளோஸப்பில் ஹீரோயின் :-)))


இவங்க வழி தனீ வழி..

தேர்வு செஞ்ச களைப்பைப்போக்க கலர்ஜோடா :-))))))))

உங்க கருத்துகளையும் எடுத்துவுடுங்க :-))




58 comments:

Chitra said...

Beautiful photos. Super!

nice comments. :-)

RVS said...

Nice Photos. All the best. ;-)

ராமலக்ஷ்மி said...

Mike testing 1,2,3 அந்த சிகப்பு ஸ்பீக்கரில் நல்ல சத்தமாகவே கேட்டுச்சு.

நீங்களே சொல்லிட்டீங்களே ஹீரோயின் யாருன்னு:))!! பிறகென்ன?

வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

அழகு.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

கடைசில ஜோடால்லாம் கொடுத்து நைச்சியம் செய்யறீங்க போல!!

:))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

ஜோடா எடுத்துக்கிட்டீங்களா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க RVS,

ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

புதுமுக ஹீரோயின் ஒரு ரவுண்டு வருவாங்கன்னு சொல்றீங்க :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

வெய்யில் ஆரம்பிச்சுட்டுதில்லையா.. அதுக்கு இதமா இருக்கட்டும்ன்னுதான் ஜோடா :-))

அம்பிகா said...

பளிச் சிவப்பு போட்டோக்கள் அழகு.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//இவ்ளோ ஏன்??.. அதிகமா செவந்திருக்கும் தக்காளியும், தர்பூசணியும் யாரும் வாங்காம விட்டதா சரித்திரமே இல்ல.. இது எப்டி இருக்கு??//

பஞ்சு டயலாக்கு?எப்படியெல்லாம் யோசிங்கறாங்கப்பா:))

ராஜ நடராஜன் said...

PIT போட்டிப்படங்களா?வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு டோட்டாங் டோட்டாங்....

இராஜராஜேஸ்வரி said...

கவனத்தை ஈர்க்கும் பதிவு.

சசிகுமார் said...

சிவப்பு மலர்கள் மிக அழகு

கே. பி. ஜனா... said...

வண்ண மயமான பதிவு!

ADHI VENKAT said...

படங்கள் எல்லாமே அழகு.
சிவப்பா இருக்கறவங்ககிட்ட திருடர்கள் கைவரிசைய காட்டுவாங்களா! இது என்னங்க புதுக்கதையா இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

சிகப்பை இவ்வளவு அழகாகூட காட்டமுடியுமா? சூப்பர்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல புகைப்படங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

சிகப்பு வண்ண காரில் வரும் திருடர்களைப்போல சிகப்புவண்ண புகைப்படங்களில் எங்கள் கண்களை நீங்களும் திருடுகிறீர்கள்

ரேடியோப்பூ கொள்ளை அழகு..!

ஹீரோயின குளோஸப்ல காட்டாதீங்க

ஜோடா குடிக்கிறது தக்காளியா? ;-))))))

ஹிஹிஹி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏற்றமும் இறக்கமும் ஹா.. பஞ்ச் போட்டோவோட பஞ்ச் டயலாக் வேறயா.. கலக்குங்க..வாழ்த்துக்கள் சாரல்.:)

Asiya Omar said...

சிவப்பும் விளக்கமும் கூடவே போட்டோக்களும் அருமை,ஹீரோயின் ரொம்ப அழகு..

தெய்வசுகந்தி said...

Nice pictures!!!

ஹேமா said...

சாரல்...எனக்கென்னமோ சிகப்பு எப்பவுமே பிடிக்கறதில்ல.
ஆனாலும் அழகாத்தானிருக்கு.
வாழ்த்துகள் !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜநடராஜன்,

ஹி..ஹி.. எல்லாம் ஒரு ஃப்ளோவுல வர்றதுதான் :-)))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

பாட்டாகவே பாடிட்டீங்களா..:-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

அந்தக்கலருக்கே அப்படியொரு சக்தி இருக்காம்ப்பா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

ரெண்டு மலர்கள் இருக்கே.. எதுன்னு குறிப்பிட்டு சொல்லுங்களேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜனா,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

கதையையே மாத்திட்டீங்கப்பா.. சிவப்பு நிறக்கார்கள் கிட்டதான் கைவரிசைய காட்டுவாங்க. ஏன்னா, சட்ன்னு அந்தக்கலர்தானே கண்ணுல மாட்டும்
:-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

எல்லாக்கலருக்கும் ஒரு தனிப்பட்ட அழகு இருக்கத்தான் செய்யுது..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்து,

ஹீரோயினுக்கு ஓட்டு நிறைய விழுதேப்பா :-))

வெய்யில் காலமுல்ல.. அதான் தக்காளிக்கு தாகமெடுத்துடுச்சு :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ஹீரோயின் பிரபலமாயிட்டாங்கப்பா.. இப்பவே கால்ஷீட் வாங்கி வெச்சுக்கணும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெய்வசுகந்தி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

கொஞ்சம் கண்ணைப்பறிக்கறது மாதிரி இருக்கறதுனால சிலபேர் இதை விரும்பறது இல்லைதான்.. ஆனா பூக்களுக்கு மட்டும் இந்தக்கலர் தனி அழகு கொடுக்குது.

நாடோடி said...

க‌ல‌ர்ஜோடா ரெம்ப‌ ந‌ன்னா இருக்கு.. பேஸ் பேஸ்.... :)

ஸ்ரீராம். said...

சிவப்பு ஸ்பீக்கர் டாப்.

மனோ சாமிநாதன் said...

புகைப்படங்கள் மிக அழகு! வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

நம்மூரு நன்னாரி சர்பத் மாதிரியே இருக்குதில்ல :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோம்மா,

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா :-)

Anisha Yunus said...

solova daisyum, groupa thakkaaliyum not so impressive. but rest all are top....esp the first one is sure to hit t prize akka....congrats!!!!

Jaleela Kamal said...

படஙக்ள் மிக அழகு

Thenammai Lakshmanan said...

செக்கச்செவேல்னு இம்புட்டு அழகா இருக்கே அம்புட்டும் சாந்தம்மா;))

மோகன்ஜி said...

படங்கள் கவிதைகளாய் இனிக்கின்றன.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சிவப்பு என்னோட favourite கலர்... "நெறைய பேரு அதெல்லாம் ஒரு கலர்னு...ச்சேய்" னு திட்டி இருக்காங்க... இப்ப உங்க போஸ்ட் பாத்து குளு குளுனு ஆகி போச்சு மனசு... ஹா ஹா... ;))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்னு..

ஸ்பீக்கர் சின்னத்தில் உங்கள் வாக்கை அளித்துவிட்டீர்களா.. இலவசமா கலர்ஜோடா எடுத்துக்கோங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலா,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

ரசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன்ஜி,

ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

அழப்படாது.. கண்ணைத்தொடைச்சுக்கோங்க. கலர்ஜோடா குடிக்கிறீங்களா :-)

மாதேவி said...

சித்திரை புதுவருடவாழ்த்துகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அழகான புகைப்படங்கள். சுவாரசியமான பதிவு

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

உங்களுக்கும் புதுவருச வாழ்த்துகளை சொல்லிக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா சுப்ரமணியம்,

நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.. அடிக்கடி வாங்க :-)

ஹுஸைனம்மா said...

அய்யோ, இத எப்படி மிஸ் பண்ணேன்னு தெரிலயே. நல்லவேளை, கல்யாணத்து அழைச்சதுக்கு, காதுகுத்து வரை தள்ளீபோடாம, வளைகாப்புக்கே வந்துட்டேன்!! ;-))))

எல்லாமே அழகுதான், ஆனா, சீஸாவை நீங்க படம்புடிச்சது வித்தியாசமா இருக்கு. மத்ததெல்லாமே கண்ணுக்கு விருந்து. இது அறிவுக்கு. ஹி.. ஹி.. நாங்கல்லாம் அறிவாளி!! ஆனா, நீங்க அது என்னன்னு எங்க்கிட்ட கேட்டிருந்தீங்கன்னா, போஸ்ட்பாக்ஸ்னு சொல்லிருக்கக்கூடிய அறிவாளி!! ஹி. ஹி..

LinkWithin

Related Posts with Thumbnails