Thursday, 17 February 2011

பச்சைப்பயிறு சப்பாத்தி..


சிறுபயறு, பச்சைப்பயிறு, greengram, பாசிப்பயிறு, மூங்... எந்தப்பேருல வேண்ணாலும் கூப்பிட்டுக்கலாம். சமர்த்தா வந்து வெந்துடும். இதை உபயோகிச்சு செய்யமுடியற அயிட்டங்கள் எக்கச்சக்கம். ஆந்திராவின் புகழ்பெற்ற பெசரட்டு, நம்மூர் சுண்டல், பொங்கல், மஹாராஷ்ட்ராவின் கிச்சடி, மூங்தால் பக்கோடா, கேரளா ஸ்பெஷல் சிறுபயறு பாயசம், பயறு துவரன், துவையல், ... இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். கேரளாவில் இதை கூடுதலும் உபயோகிக்கிறாங்க. குறிப்பா, திருவாங்கூர் பகுதியில் தால் செய்யறதுக்கு துவரம்பருப்புக்கு பதிலா இதைத்தான் உபயோகிக்கிறாங்க. நாஞ்சில்நாட்டுப் பக்கங்களில், சிறுபயிறு பாயசம் இல்லாத கல்யாணவிருந்தோ, விசேஷ சமையலோ கிடையாது. சீனர்களின் சமையலிலும் இதுக்கு சிறப்பிடம் இருக்காம்.

இந்தியாவைத்தவிர.. தென்கிழக்கு ஆசிய நாடுகளான, சீனா, ஜப்பான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இது பயிரிடப்படுது. அங்கெல்லாம் முளைக்கட்டிய பயிறை உபயோகிச்சு அனேகமான உணவுவகைகள் செய்யப்படுது. இதன் மாவை உபயோகப்படுத்தி நூடுல்ஸும் செய்யறாங்களாம். மைதாவால் செய்யப்படற நூடுல்ஸைவிட நிச்சயமா சத்துள்ளதாத்தான் இருக்கும் இல்லே.
cellophane noodles..
நம்மூரைப்பொறுத்தமட்டில், பத்தியச்சமையலில் இது முக்கிய இடம் வகிக்குது. அதுவும், ஆயுர்வேதத்தில் வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று தோஷங்களை இது கட்டுப்படுத்துவதா சொல்லப்படுது. காய்ச்சல் நேரங்கள்ல சீரணசக்தி குறைவா இருக்கும்ன்னு முழுச்சாப்பாடு கொடுக்கமாட்டாங்க. சோறுவடிச்ச கஞ்சி, நொய்க்கஞ்சி, ரசம் கரைச்சசாதம்ன்னு படிப்படியாதான் பழைய நிலைமைக்கு நம்ம உடம்பை தேத்தி கொண்டுவருவாங்க. அந்தமாதிரி நேரங்கள்ல கொடுக்கப்படற சம்பா பச்சரிசிக்கஞ்சியும், சிறுபயறு துவரனும் சூப்பர் காம்பினேஷன் தெரியுமோ..

மத்த பயிறுவகைகளை மாதிரி இது வாயுத்தொந்தரவை கொண்டுவர்றதில்லை. அதனாலயே, இது துவரம்பருப்புக்கு மாற்றாவும் உபயோகிக்கப்படுது. என்ன!!.. கொஞ்சம் கொழகொழன்னு இருக்கும். (எனக்கு பிடிக்கவே பிடிக்காது :-))) கடலைப்பருப்பு உபயோகிச்சு செய்யற கூட்டு, கறிகளை சிறுபயிறை வேகவெச்சும் செய்யலாம். நல்லாவே இருக்கும். ஒரு நாள் அடையும் செஞ்சு பாத்தேன்.. நல்ல வாசனையா, ருசியாவே இருந்தது. சிறுபயிறு துவையல் ரசம்,வத்தக்குழம்பு சாதங்களுக்கு அருமையான ஜோடி. பருப்புப்பொடி மாதிரியே இந்த துவையலையும் சாதத்துல போட்டு, தேங்காயெண்ணெய் ஊத்தி பிசைஞ்சு சாப்பிடலாம். என்ன!!.. அதுக்கப்புறம் இந்த ருசியில் மயங்கி குழம்பு சாதம் சாப்பிடமாட்டீங்க :-))

ஆளுதான் இத்துனூண்டு இருக்கே தவிர, இதனோட பராக்கிரமம் எக்கச்சக்கம். வாமனன் மாதிரின்னும் சொல்லலாம். நார்ச்சத்து நிரம்பியதாவும், கொழுப்புச்சத்து குறைவாவும் இருக்கறதால இதை தொடர்ந்து உபயோகப்படுத்தினா, நாட்பட உடல்எடை குறையும். அதேமாதிரி இரத்தத்தில் இருக்கற சர்க்கரையோட அளவும் கட்டுப்படுது. முக்கியமா.. இருதயம் ரொம்ப நல்லா இயங்கணும்ன்னா இதை அடிக்கடி எடுத்துக்கிட்டாலே போதும். இதுல இருக்கிற விட்டமின்களும், தாதுக்களும் இரத்தத்திலிருக்கிற சிவப்பணுக்களை பெருக்கி, கெட்ட கொழுப்பை கரைக்குது. இரத்தம் சுத்தமாவதன் பலன்.. இருதயம் ஆரோக்கியமாகுது. மாரடைப்பு வர்ற அபாயத்தை குறைக்க இது ஒண்ணே போதுமே.

இதுல இருக்கிற சத்துக்கள்:
Nutrients Amount
Calories 212
Protein 14.18 gm
Water 146.77 gm
Ash 1.60 gm
Fats & Fatty Acids
Total Fat 0.77 gm
Saturated Fat 0.234 gm
Monounsaturated Fat 0. 109 gm
Polyunsaturated Fat 0.259 g
Carbohydrates
Total Carbohydrate 38.68 gm
Dietary Fiber 15.4 gm
Sugars 4.04 gm
Vitamins
Vitamin C 2.0 mg
Vitamin E (alpha-tocopherol) 0.30 mg
Thiamin 0.331 mg
Niacin 1.166 mg
Vitamin B6 0.135 mg
Folate 321 mcg
Pantothenic Acid 0.828 mg
Riboflavin 0.123 mg
Vitamin K (phylloquinone) 5.5 mcg
Minerals
Calcium 55 mg
Iron 2.83 mg
Magnesium 97 mg
Phosphorus 200 mg
Potassium 537 mg
Sodium 4 mg
Zinc 1.70 mg
Copper 0.315 mg
Manganese 0.602 mg
Selenium 5.0 mcg
பொதுவாவே பயிறுவகைகளை அப்படியே சாப்பிடுவதைவிட முளைக்கட்டி சாப்பிடுவது நல்லதுன்னு சொல்லுவாங்க. முளைக்கட்டுவதால் அதுல இருக்கிற மாவுச்சத்து குறைஞ்சு புரோட்டீனோட அளவு கூடுதலாகுமாம். இது உடம்புக்கு ரொம்ப நல்லதாச்சே.. பயிறை குறைஞ்சது ஆறுமணி நேரமாவது ஊறவெச்சுட்டு, தண்ணீரை நல்லாவடிச்சுடணும். அப்புறம் ஒரு மெல்லிய துணியில் பொட்டலம் மாதிரி கட்டி, ஹாட்பேகில் இருபத்துநாலு மணி நேரம் மூடிவெச்சா போதும். குறைஞ்சது ரெண்டு அங்குலமாவது முளைகள் வளர்ந்துருக்கணும். அப்பதான் நல்ல சத்தா இருக்குமாம். இங்கே மஹாராஷ்ட்ராவிலும், மிசல், உசல் போன்ற அயிட்டங்களை செய்யறதுக்கு பயிறுகளை கூடுதலும் முளைகட்டிதான் உபயோகிப்பாங்க. சிலபேர் பானிபூரியிலும் உபயோகப்படுத்துவதுண்டு. மார்க்கெட்டுகளிலும் முளைகட்டிய பயிறுகள் கிடைக்கும்.

சிறுபயிறை உபயோகிச்சு சப்பாத்தி செஞ்சாலென்னன்னு ரொம்ப நாளா யோசனை. யோசிச்சிட்டே இருந்தா நடக்காதுன்னு காரியத்துல இறங்கிட்டேன்.செஞ்சு டப்பாவில் கொடுத்துவிட,  ரங்க்ஸின் ஆபீசில் எனக்கு உனக்குன்னு போட்டியாம். ஜூப்பரா இருந்ததுன்னு அங்க கொடுத்த பின்னூட்டத்த இங்கே காப்பி-பேஸ்ட் செஞ்சார். எப்படி செஞ்சேன்னு சொல்லட்டா.

தேவையானவை:

நல்லா ஊறிய சிறுபயிறு - அரைகப் (முளை கட்டியதோ.. இல்லாமலோ)

கொத்தமல்லி இலைகள் - ஒரு பெரிய கிண்ணம்.

பச்சைமிளகாய் - நாலஞ்சு,

கரம் மசாலா - ஒரு மேசைக்கரண்டி,

இஞ்சி - ஒரு சின்ன துண்டு.

மஞ்சப்பொடி - ஒரு சிட்டிகை.

உப்பு - ஒரு டீஸ்பூன்

கோதுமைமாவு - தேவைக்கேற்ப.

செய்ய ஆரம்பிக்கலாமா... சிறுபயிறை அதிகமா தண்ணீர் இல்லாம, நல்லா குழைய வேகவெச்சுக்கோங்க. தப்பித்தவறி கூடுதல் தண்ணீர் இருந்திச்சின்னா, அதை வடிச்சு எடுத்து வெச்சுக்கோங்க. ஒருவேளை தேவைப்படலாம். அப்புறம், வெந்தபயிறு+கொத்தமல்லி இலை+மிளகாய்+கரம்மசாலா+இஞ்சி+மஞ்சப்பொடி எல்லாத்தையும் மிக்சியில் போட்டு நல்லா மசிய அரைச்சுக்கோங்க. இந்த விழுதோட உப்பு சேர்த்துட்டு, கொஞ்சம் கொஞ்சமா கோதுமைமாவை சேர்த்து பிசைஞ்சுட்டே வரணும். ஒருவேளை மாவு கூடுதலாகி ரொம்ப கட்டியா இருந்தா வடிச்சு வெச்சிருந்த தண்ணீரை சேர்த்துக்கோங்க. எல்லாம் பதமா ஒண்ணு சேர்ந்து வந்ததும், நல்லா அழுத்திப்பிசைஞ்சு சமமான உருண்டைகளா உருட்டி வெச்சுக்கோங்க.
அப்புறம் வழக்கமான முறைப்படி சப்பாத்திகளா திரட்டி, ரெண்டுபக்கமும் எண்ணெய்யோ நெய்யோ தடவி சுட்டெடுக்கவேண்டியதுதான். இதுக்கு சைட்டிஷே தேவையில்லை. ப்ளூட் மாதிரி சுருட்டி வெச்சுக்கிட்டு அப்படியே சாப்பிடலாம் :-))). அதெல்லாம் முடியாது, சைடிஷ் இல்லைன்னா, நான் சாப்பிடமாட்டேன்ன்னு சொல்றவங்களுக்கு ஒரு பரிந்துரை..... இதுக்கு பொருத்தமான சைடிஷ் என்ன தெரியுமோ??!!.. ஒரு ஸ்பூன்பொட்டுக்கடலை,பச்சைமிளகாய்,ஒரு பல் பூண்டு, கொஞ்சம் கறிவேப்பிலை,ஒரு கிள்ளு இஞ்சி, ஒரு ஸ்பூன் தயிர்+உப்பு சேர்த்தரைத்த தேங்காய்த்துவையல், இல்லைன்னா வாழைத்தண்டு துவையல். செம காம்பினேஷன்பா :-)))....




49 comments:

சசிகுமார் said...

சமையல் குறிப்பு போட்டாலும் உங்களுக்கு என ஒரு தனி ஸ்டைல் சூப்பர் நண்பா.

பொன் மாலை பொழுது said...

மிக பிரமாதமான் ரெசிப்பிதான்.
பயறு எனக்கு மிக்கப்பிடிக்கும்.அதில் எது செய்தாலும் மனமும் சுவையும் அலாதிதான்.
பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

சத்தான சப்பாத்தி. சொன்ன விதத்திலேயே அந்த தேங்காய் துவையலுடன்தான் செய்யணும்னு முடிவே கட்டியாச்சு:))! நன்றி சாரல்.

சக்தி கல்வி மையம் said...

படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது..

பொன் மாலை பொழுது said...

////சமையல் குறிப்பு போட்டாலும் உங்களுக்கு என ஒரு தனி ஸ்டைல் சூப்பர் நண்பா///
----------------------சசி குமார் சொன்னது.

ஐயோ சசி,
இந்த பதிவர் நண்பர் அல்ல நண்பி!
ப்ரோபைல் பாக்க மாட்டீங்களா?
சாரல், நீங்க படத்தில் போட்டிருப்பது நூடல்ஸ் இல்லையே, அது பாலிதீன் இழை நூல் தானே ?!
நூடல்ஸ் இப்படி கண்ணாடி இழை மாதிரியா இருக்கும்?? :))))))

பொன் மாலை பொழுது said...

ஆனா மத்த படங்கள் எல்லாம் மிக தத்ரூபம். அந்த பெரிய கிண்ணத்தில் இருக்கும் பயறு, மற்றும் பொருட்கள் பார்க்க அழகு.
கிச்சனில் இப்படிதான் இருக்கும்.

அமுதா கிருஷ்ணா said...

இன்று நைட் இது தான். பாசிப்பயறு ஊறவைத்துட்டு இந்த பின்னூட்டம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

பாராட்டுக்கு நன்றி. தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுறப்ப இன்னும் ருசிக்குமில்லையா :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாணிக்கம்,

அது நூடுல்ஸேதான்.. ஒளி ஊடுருவும் தன்மையுடன்,லேசா தட்டையா இருக்கறதாலதான் அதுக்கு cellophane நூடுல்ஸ்ன்னே பேருவெச்சிருக்காங்க :-))

மத்தபடங்களெல்லாம் சமையல் நடந்துட்டுருக்கும்போதே எடுத்தது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

have a nice and nutritious dinner :-)))

துளசி கோபால் said...

செஞ்சுருவோம்.

ADHI VENKAT said...

நல்லாருக்கு. பாசிப்பயறு சப்பாத்தி செய்துட வேண்டியது தான். கோவையில் பாசிப்பயறு கடஞ்சதுன்னு செய்வாங்க. வெங்காயம் ,தக்காளி போட்டு சாதத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும். நானும் செய்வதுண்டு.

ஆயிஷா said...

ரெசிபி நல்லாருக்கு.பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

பாசிப் பயிறு பத்தி இவ்வளவு விரிவா அருமையா எழுதி இருக்கீங்க சாரல். ரொம்ப நல்லா இருக்கு. எனக்கும் முதல்ல பிடிக்காமதான் இருந்தது. என்னடா இது கொழ கொழன்னு , யாரு சப்பிடறதுன்னு பார்த்தால், அலஸ்ரீஉக்கும் டயபெடிஸுக்கும் இது அவ்வளவு நல்லதாம்.
புழுங்கலரிசியும், பயறு, வெந்தயம் போட்டு அரைச்ச தோசையைத் தினமும் உண்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்னு சொல்லி இருக்காங்க. எண்ணேய் வேண்டாம்னு நினைக்கிறவங்க இதையே கஞ்சியாக் குடிக்கலாம்.
ஆகக் கூடி நல்ல உணவை அறிமுகப் படுத்திஉ இருக்கீங்க. சிறுபயறு பாயாசம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

அன்னிக்கு வாழைத்தண்டு துவையல் செஞ்சு கொடுத்துவிட்டிருந்தேன். செமயா இருந்துச்சாம் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சக்தி,

செய்யும்போதும் நல்ல வாசனைங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

ரைட்டுங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

பாசிப்பருப்பு கடைஞ்சது, அம்மாவும் செய்யறதுண்டு. எனக்குத்தான் இறங்காது :-)) அதுக்குப்பதிலா பாயசம் ரொம்ப பிடிக்கும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆயிஷா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Asiya Omar said...

துவரம் பருப்பை விட நான் பாசிப்பருப்பு தான் அதிகம் உபயோகிப்பேன்,லேசாக வறுத்து செய்தால் அந்த கொழகொழப்பு கூட இருக்காது.
நிறைய டிப்ஸ்,தகவல் எல்லாம் கொடுத்து சூப்பர் குறிப்பு,கரும்பு தின்ன கூலி வேண்டுமா? என்ன?பகிர்வுக்கு நன்றி.

தெய்வசுகந்தி said...

பாசிப்பயறு முளை கட்டி வெச்சது நிறைய ஃப்ரிட்ஜ்ல இருக்குது. இன்னிக்கு நைட் செஞ்சு பாத்தரலாம்.

எல் கே said...

intha vaaram ithuthaan

ஆச்சி ஸ்ரீதர் said...

எங்க பக்கத்திலிருக்கும் ஆந்திர பெண் ஒருவர் பெசரட்டு தோசனு தோல் உரிக்காத பாசிப்பயிரை ஊறவைத்து ரவா கலந்து தோசை செய்வாங்க,உங்க பதிவை அவங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். தெரியாத விசியங்கள பகிர்ந்தமைக்கு நன்றி.

Chitra said...

Thank you for a healthy recipe.

ஹேமா said...

கண்டிப்பா சப்பாத்தி பண்ணிச் சாப்பிடுவேன்.நல்ல பதிவு சாரல் !

vanathy said...

super! healthy recipe.

Unknown said...

சத்துக்கள் பற்றிய தகவல்கள் கூடுதல் சுவை..

Unknown said...

அம்மா பசிக்குது..

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு உங்கள் குறிப்பு.நல்லாவே யோசிக்கறிங்கப்பா!

raji said...

என் சமையலறையில் இப்பல்லாம்
அடிக்கடி உங்க சாரல் அடிக்குது
தோழி!பொண்ணு அதெல்லாம் சாப்ட்டு சூப்பர்னு
தட்டையும் சேர்த்து சாப்பிடாத குறைதான் போங்க

shanuk2305 said...

i remember in my childhood we use to purchase this boiled stuff from sowrastra person sales in cycle at my grandfather house in dindigul

மாதேவி said...

சத்துச்செறிவான சப்பாத்தி சாரல்.

Anisha Yunus said...

அமைதிச்சாரலக்கா..

இந்த குறிப்பு ரொம்ப டிஃபரண்ட். கண்டிப்பா செஞ்சு பாத்துட்டு சொல்றேன். ஃபோட்டோக்களை பார்க்கும்போதே நாவூறுது. பாசிப்பயறு பாயாசமும், கேரட் இதுல போட்டு செய்யற சாம்பாரும் எனக்கு ரெம்ப பிடிக்கும். பாசிப்பயறு கடஞ்சதும் சாதம் இல்லாம தனியாவே குடிக்கலாம். சத்தும், டேஸ்ட்டும் கூடவே போட்டி போடும். நன்றி... ரெசிபிக்கும், அரிய தகவல்களுக்கும். :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

வறுத்தா கொழகொழப்பு இருக்காதுன்னு அம்மாவும் சொல்வாங்க. ஆனா, வறுக்கும்போதே பொங்கல் இல்லைன்னா பாயச ஆசை வந்துடுதே :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெய்வசுகந்தி,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

செஞ்சீங்களா இல்லையான்னு சொல்லுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க திருமதி,

ஆந்திரா பெசரட்டுக்கு பேர்போனதாச்சே..

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வானதி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாரத் பாரதி,

தட்டுல இருக்கற சப்பாத்தி உங்களுக்குத்தான்.. மிச்சம் வைக்காம சாப்பிடுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

அடுக்களையும் ஒரு பரிசோதனைக்கூடம்தானே.. (வீட்டுல உள்ளவங்கதான் எலியான்னு ஆரும் கேக்கப்டாது :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

உங்க பின்னூட்டம் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா :-))

Unknown said...

பச்சைப்பயறு பொதுவா வயிற்றுப் புண்ணை ஆற்றும்னு சொல்லுவாங்க. அதனாலதான் விரதம் இருக்கறவங்க விரதம் முடிக்கும்போது பச்சைப் பயறுல செஞ்ச உணவு ஏதாவது சேத்துக்கனும்னு கேள்விப்பட்டிருக்கேன்.பச்சைப்பயறு பற்றி நிறைய விஷயங்களை அருமையா தொகுத்திருக்கீங்க.சூப்பரான ரெசிப்பியும் சொல்லியிருக்கீங்க.கண்டிப்பா செஞ்சு பாக்கணும்.பகிர்வுக்கு நன்றி.

Jaleela Kamal said...

மிகவும் சத்தான சப்பாத்தி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜிஜி,

மத்த பயறுகள மாதிரி இல்லாம, உடம்புக்கு குளிர்ச்சியைக்கொடுக்கக்கூடியது இது. பயறு இல்லாம கேரளா ஸ்பெஷல் புட்டு ருசிக்காதுங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலா,

பசங்களுக்கு டப்பாவுல கொடுத்தனுப்பலாம். இஷ்டமா சாப்பிடுவாங்க.

சுந்தரா said...

புதுசா ஒரு சப்பாத்தி...

இவ்வளவு சொல்லியிருக்கீங்க, இன்னிக்கே ட்ரை பண்ணிடவேண்டியதுதான் :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

செஞ்சு பாத்தீங்களா..

LinkWithin

Related Posts with Thumbnails