Tuesday, 1 February 2011

சனி ஊருக்குள் இப்படித்தான் வந்தாராம்..


ரொம்ப காலத்துக்கு முந்தி, அதாவது.. சனிபகவான் இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி, இது ஒரு குக்கிராமமாத்தான் இருந்திருக்கு.  சுமாரா, ஒரு இருபத்தஞ்சு வீடுகள் இருந்திருக்கலாம். இங்கே இருந்தவங்களுக்கு, விவசாயத்தையும், ஆடுமாடுகளை மேய்க்கிறதையும்தவிர, வேறவேலை ஒண்ணும் தெரியாது. இதுல வர்ற வருமானத்தை வெச்சுத்தான் காலத்தை ஓட்டியிருக்காங்க. 

ஊருக்குப்பக்கத்துல 'பானசா நதி' ஓடிக்கிட்டிருந்தது.. இங்கேதான் தங்களோட கால் நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டுபோவாங்களாம். அதான், அதுங்களுக்கு சாப்பாடு, தண்ணி எல்லாம் ஒரே இடத்துல கெடைச்சுருதே.. அந்த மக்களுக்கு ஒரேகாவல், அவங்க கும்பிட்டுக்கிட்டிருந்த தெய்வமான 'கிராமதேவதை'தான். இங்கேயுள்ள மொழியிலும் 'காவ்தேவி'ன்னே சொல்றாங்க. காவ்(gav)ன்னா ஊர், கிராமம்ன்னு அர்த்தம்...

ஒரு நாள் பயங்கரமா, இடி மின்னலோட மழை பெய்யுது. கிராமவாசிகளின் குடிசைவீடுகளெல்லாம் மழையிலயும் காத்துலயும் பிய்ஞ்சு, வீட்டுக்குள்ள மழைத்தண்ணி ஒழுகுது. ஒக்கார, படுக்க, ஏன் சமையல் செய்யக்கூடமுடியாம தவிக்கிறாங்க.. பானசா நதியில் வெள்ளம் பெருகி, வயல்வெளியெல்லாம் முங்கிப்போச்சு. மக்களெல்லாம் ராத்திரி முழுக்க காவ்தேவி கோயில்லயே உக்காந்துட்டிருக்கிறாங்க. ஏன்னா, அங்க மட்டும்தான் நல்ல கூரையாயிருக்கு.

விடாம பெஞ்ச மழை கொஞ்சம் கொஞ்சமா நின்னு, வெள்ளமும் வடிய ஆரம்பிச்சுடுச்சு. ரெண்டு நாள் பட்டினியா கிடந்த கால்நடைகளெல்லாம் பாவமா குரல்கொடுக்கவும்,  அதுகளை பானசா நதிக்கரைக்கு ஓட்டிட்டுப்போறாங்க.. மாடுகளெல்லாம் புல்மேய ஆரம்பிக்கவும்,  பசங்க விளையாட ஆரம்பிச்சாங்க.. அப்பத்தான் அவங்க பார்வையில, இலந்தை மரக்கிளைகள்ல மாட்டிக்கிட்டிருந்த, சுமாரா ஆறடியளவு ஒசரமுள்ள அந்தக்கல்லு தட்டுப்பட்டுச்சு. சும்மா விளையாட்டுக்காக கையில் வெச்சிருந்த கம்பால், கல்லை ஒரு தட்டுத்தட்டவும், அந்த இடம் பொசுக்குன்னு வீங்கி, ரத்தம் வடிய ஆரம்பிச்சுடுச்சு.
அடிச்ச தழும்பு அப்படியே அடையாளமா இருக்காம்..

அப்புறமென்ன, வழக்கமா எல்லா சாமிக்கதைகள்லயும் வர்றமாதிரி, பசங்க ஊருக்குள்ளபோயி சொல்ல.. அவங்க வந்துபார்த்து அதிசயப்படன்னு, எல்லாம் வரிசைக்கிரமமா நடந்தேறியிருக்கு. அப்புறம்,  ராத்திரி கிராமவாசி ஒருத்தரோட கனவுல 'சனிபகவான்' வந்து தன்னோட வரவைச்சொல்லி, ஒரு கோயில் கட்டச்சொல்லியிருக்கார். ஏற்கனவே சிலையை ஊருக்குள்ள கொண்டுவர முயற்சி செஞ்சு, பத்துப்பேர் சேர்ந்து தூக்கியும் நகராத சிலையை எப்படி கொண்டுவர்றதுன்னு கனாக்கண்டவருக்கு கவலை. இதையும் சனீஸ்வரனே கனவுல வந்து தீர்த்துவெச்சார். 

அதாவது, நேரடியான உறவுமுறையுள்ள தாய்மாமனும், மருமகனும் சேர்ந்துதான் கொண்டுவரமுடியுமாம். சிலை மாட்டியிருந்த இலந்தைமரக்கிளையை ஒடிச்சுப்பரப்பி அதுமேல சிலையை வெச்சு கறுப்பு நிறக்காளைகள் பூட்டிய வண்டியில் கொண்டுவரணுமாம். இதை மொதல்லேயே சொல்லியிருந்தா,.. நேத்தே கொண்டுவந்திருப்பாங்கல்ல. சாமிக்கும் நல்ல நேரம் வந்தாத்தான் எதுவும் நடக்கும்போலிருக்கு.

சாமி சொன்னமாதிரியே, கறுப்புக்காளைகள் ரெண்டப்பிடிச்சு வண்டிகட்டி, மாமனும் மருமகனும் சேர்ந்து, சாமியைக்கொண்டாந்தாங்க. வண்டி காவ்தேவி கோயில் கிட்ட வந்ததும் நின்னுடுச்சு. மேற்கொண்டு நகரமாட்டேங்குது. சரி.. இதுதான் சாமிக்கு பிடிச்ச இடம்போலிருக்குன்னு அங்கியே பிரதிஷ்டை செஞ்சுட்டாங்க. அப்புறம், 'ஜவஹர்மல் லோதா' என்ற பக்தரின் முயற்சியால், கோயில் கட்ட ஆரம்பிச்சுருக்காங்க. 

அதுக்கு வசதியா, சிலைய கொஞ்ச காலத்துக்கு வேறிடம் மாத்தறதுக்கு முயற்சி செஞ்சப்ப, அந்தச்சிலையை நகர்த்தக்கூடமுடியலை. கடைசியில், சனீஸ்வரனின் உத்தரவின் பேரில், அதைச்சுத்தி மூணடி உசரத்துல பீடம் எழுப்பியிருக்காங்க. இத மக்கள் ரொம்ப அதிசயமா பார்க்கிறாங்க. ஏன்னா,.. அஞ்சரையடி சுயம்புவைச்சுத்தி மூணடியில் பீடம் எழுப்பியபிறகும், அதுக்குமேல உள்ள அளவு இப்பவும் அஞ்சரையடி இருக்குது. சரியாச்சொன்னா 5.9ஆம். அதாவது,... பூமிக்குள்ள வளந்துக்கிட்டே போகுதாம்.. இதான் சனி ஊருக்குள்ள வந்த கதை.
இதான் அந்த மேடை..


ஷிங்கனாப்பூர் போகும் பாதையில் கொஞ்சதூரம்தான் போயிருப்போம். இந்தியக்கோயில்களுக்குண்டான சமீபத்திய பாரம்பரியப்படி, நாலஞ்சு பைக்குகள்ல எங்களை சூழ்ந்துக்கிட்டாங்க. ஜஸ்ட் அஞ்சு ரூபாய் கட்டாயமா வசூலிக்கிறாங்க. இந்தப்பணம் பஞ்சாயத்துநிதிக்கு போகுதாம்.  எல்லாத்தையும் சொல்லிட்டு, ரசீதை கொடுத்துடுவாங்க. அதுல கடை நம்பரும் இருக்கும். அதாவது குறிப்பிட்ட கடைக்கான ஏஜெண்ட் அவர். கடைக்குப்போனா, அவங்களே சாமிக்குண்டான எல்லாப்பொருட்களையும் கொடுத்துடுவாங்க.. காவி வேட்டி உட்பட.... ஆனா, எண்ணெய்க்கு தனிச்சீட்டாம். அத பக்கத்துல இருக்கிற அவங்களோட இன்னொரு கடையிலதான் தனியா பணம்கொடுத்து வாங்கணுமாம்..
கோயிலின் முகப்பு.. அந்தப்பக்கம் இருக்கிற நீலக்கூரைதான் நுழையும் வழி..

அர்ச்சனைப்பொருட்கள் இருக்கிற தட்டுல எண்ணையைக்காணோம்ன்னு புகார் பண்ணப்பதான் இதை சொன்னாங்க. அதை மொதல்லயே சொல்லக்கூடாதோ!!.. சொன்னா யாவாரம் எப்படி நடக்கும் :-)). முக்கியமானதொண்ணு... இங்கே ஆண்கள் மட்டுமே மூலவர்கிட்ட போய் கும்பிட அனுமதி உண்டு. அவங்க கொடுக்கிற காவிவேட்டியை கட்டிக்கிட்டு, பக்கத்து கட்டடத்துல வெளியிலயே இருக்கிற ஷவர்ல குளிச்சுட்டு ஈர ட்ரெஸ்ஸோடத்தான் அர்ச்சனைத்தட்டை தொடணும். அதேமாதிரி, பெண்கள் மறந்தும் தட்டையோ, அல்லது ஆண்களையோ தொட்டுடக்கூடாதாம்.

செருப்புக்கு தனியிடமிருக்கு.. டோக்கனெல்லாம் எதுவும் இருக்கிறமாதிரி தெரியலை. பயப்படாதீங்க.. இந்த தலத்துல திருடுனா சனீஸ்வரனின் கோபத்துக்கு ஆளாகிடுவோம்ன்னு ஒரு நம்பிக்கை. கழட்டிப்போட்டுட்டு அப்படியே வலதுபக்கம் திரும்பினா கார்ப்பெட் விரிச்சு வரவேற்புகொடுக்கிறாங்க. பத்தடி நடந்து இடதுபக்கம் திரும்பினா, கோயிலின் முகப்புவாயில். அங்கியே, என்வழி தனீ வழின்னு ஆண்கள் தடுப்புல பிரிஞ்சுடறாங்க. நடுவால ஒரு சூலம். அதுல அர்ச்சனைத்தட்டுல இருக்கிற சின்ன கறுப்புத்துணியை குத்தி மாட்டிட்டு எருக்கிலை மாலையையும் அதுல போடணும். ஆண்கள் வரிசையில் எக்கச்சக்க கூட்டம். மஹாராஷ்ட்ராவில் எருக்கிலை மாலையை,  முக்கியமா அனுமனுக்குத்தான் சாத்துவாங்க. அனுமன் இருக்குமிடத்தில் சனீஸ்வரன் வாலைச்சுருட்டிக்கிட்டு இருப்பாராம்.

இந்த வரிசையில்போய் வலப்பக்கம் திரும்பினா மூலவர்..

இது ரெண்டையும் முடிச்சுட்டு, நாலே படியேறினா ரெண்டு பெரிய பாத்திரங்கள் இருக்குது. ஒண்ணில் தேங்காயையும், இன்னொண்ணில் ஊதுவத்தியையும் போட்டுடணுமாம். மூலவருக்கு அர்ப்பணிக்காம இங்கியே கலெக்ஷன் பண்றதோட ரகசியம் என்னவோ!!.. (ஆனா, சிலர் ஊதுவத்தியை மூலவர் இருக்கும் வளாகத்தில் அங்கங்கே இடைவெளிகளை கண்டுபிடிச்சு செருகிடறாங்க. பார்த்து நடக்கலைன்னா அப்புறம் இங்கே வந்துபோனதுக்கான சூட்டுஅடையாளம் நிச்சயமா கைகால்கள்ல இருக்கும்:-))))

இப்ப படியேறினதும், மறுபடியும் வரிசை நிற்குது மூலவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்றதுக்கு. ரங்க்ஸையும், பையரையும் வரிசையில் விட்டுட்டு ரெண்டே எட்டுல நாங்க மூலவர் இருக்குமிடத்துக்கு வந்துட்டோம். ஆனா, அவங்க அங்கே வர்றதுக்கு ஒருமணி நேரமாவது ஆகியிருக்கும். ரொம்ப பெருசா எதிர்பார்த்துப்போனதுக்கு சின்ன ஏமாற்றம்தான். ஒரு பெரிய வேப்பமரம். அதுக்கடியில ஒரு பத்துக்குப்பத்து அளவுல மேடை. அதுல கருங்கல் ரூபத்துல சனீஸ்வரனும், பக்கத்துல கண்காணிக்கிறதுக்கு அனுமனும்.இதான் மூலஸ்தானம். அதுவும் திறந்தவெளியில்..

இதுக்கு எதிர்க்க இருக்கிற மண்டபத்தில், கிருஷ்ணர், புள்ளையார் மற்றும் இன்னபிற தெய்வச்சிலைகள் வரிசையா இருக்கு. தனிச்சன்னிதிகள் எதுவுமில்லை. அம்புட்டுத்தான் மொத்தக்கோயிலும். புகைப்படம் எடுக்கத்தடை இருக்கு. நாங்க மண்டபத்துல நின்னுக்கிட்டு ஃப்ளாஷ் இல்லாம நாலஞ்சு எடுத்தோம்.

வரிசையா எல்லோரும் எண்ணெய்யால் குளிப்பாட்டிட்டு போறாங்க.  மார்பிள் தரையில் இவ்வளவு எண்ணெய் சிந்திக்கிடந்தா,.. வழுக்காம இருக்கணுமேன்னு ஒருபக்கம் பயமாத்தான் இருக்குது. ஸ்கேட்டிங் பண்றமாதிரி நடந்தேன்னு பையர் அப்புறமா சொன்னார். மேடையிலிருந்து இறங்கி, என்னதான் கார்ப்பெட்ல காலைத்துடைச்சிக்கிட்டாலும் எண்ணெய்வாசம் கோயில்முழுக்க வீசத்தான் செய்யுது. இங்கே நிறைய திருப்பணிகளும் நடக்குது. விருப்பப்பட்டா, பணம் கட்டலாம்.

அந்தப்பாதையின் கடைசியில்தான் பிரசாத ஸ்டால். தேங்காய்பர்பியை பிரசாதமா கொடுக்கிறாங்க. ஒருவேளை முகப்பில் வசூலிக்கப்படும் தேங்காய்கள் இங்கேதான் வருதோ என்னவோ?.. பிரசாதம் வாங்கியாச்சு.. அப்புறம்?.. நடையைக்கட்டவேண்டியதுதான். கோயிலின் ஒருபக்கத்தில் நீளமான ஒரு ஹால் இருக்குது. அன்னதானக்கூடமாம். இப்போ காலியாத்தான் இருக்குது. அப்படியே வலம்வந்து திரும்பினா கோயிலின் முகப்பு வந்துருது.

அன்னதானக்கூடம் காலியாக..

பசங்களுக்கு இங்கே ரொம்ப நேரம் இருக்கப்பிடிக்கலை... போலாம்..போலாம்ன்னு தொணப்ப ஆரம்பிச்சுட்டாங்க. லஞ்ச்கூட இங்கே வேணாமாம். 'நல்ல ஹோட்டலே இல்லை.. எல்லாம் ஷிர்டிக்கு போயி பாத்துக்கலாம்'ங்குது ரெண்டும். சரீய்.. ஷிர்டி போறதுவரை பர்பியை வெச்சு சமாளிச்சுக்கிறேன் :-)).

இந்த ஊரின் முக்கியமான சிறப்புகள் என்னன்னா, இங்க வீடுகள், கடைகள்ன்னு எதுக்குமே கதவுகள் கிடையாது. சாமியோட உத்தரவாம்.. இந்த ஊர்ல திருடினா சனீஸ்வரனோட கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்ன்னு ஐதீகம். 'சனி'யோட விளையாடற துணிச்சல் எத்தனைபேருக்கு இருக்கும்!!.  ஆனா, நாங்க போனப்ப சிலவீடுகளில் ஜன்னலுக்கு கதவுகள் வெச்சிருப்பதையும், வாசல்கதவுக்கு பதிலா தடுக்குகள் வெச்சிருப்பதையும் பார்த்தோம். அதேமாதிரி, கோயில்ல அவ்வளவுபெரிய வேப்பமரம் இருந்தும், சிலைக்குமேல் நிழல் விழறதில்லை. தப்பித்தவறி விழுந்தாலும்,.. அந்த குறிப்பிட்ட கிளை கருகி முறிஞ்சுவிழுந்துருமாம்.
கதவில்லாத வீடுகள்..

ஒரு கிராமக்காட்சி..

ஷிங்கனாப்பூரிலிருந்து ஷிர்டி 65 கிலோமீட்டர் தூரத்தில் இருக்குது. சுமாரான பாதைதான். டாபா மாதிரியான சின்னச்சின்ன ரெஸ்டாரண்டுகள் இருக்குது. எக்கச்சக்கமா கார்கள் நின்னுக்கிட்டிருந்த ஒரு டாபாவில் 'இங்கே க்வாலிட்டி நல்லாருக்கும்'ன்னு நம்ம்ம்பி நுழைஞ்சோம். ஆர்டர் கொடுத்துட்டு, வெயிட்செஞ்சுட்டிருந்தப்பதான் பக்கத்து டேபிள்லேர்ந்து ஒரே கூச்சல்..

'கூப்பிடு.. மேனேஜரை..' .. என்னவாம்!!.. சாப்பாடு வந்த ப்ளேட் சுத்தமில்லை. சரியா கழுவாம கொண்டாந்திருக்காங்க. அடப்பாவமே!!.. சுதாரிச்சுக்கிட்ட எங்களைமாதிரி நிறையப்பேர் ஆர்டரை கேன்சல் செஞ்சுட்டு வெளியேறிட்டோம். ஷிர்டி நகருக்குள்ளே எக்கச்சக்கமான ரெஸ்டாரண்டுகள், ஹோட்டல்கள் இருக்குது. அங்கே பார்த்துக்கலாம். ஷிர்டிக்குப்போலாம்.. ரைட்..ரைட்...

கொஞ்சம் படங்களை இங்கே வலையேத்தியிருக்கேன்.






47 comments:

துளசி கோபால் said...

பயணம் (எழுத்து) நடை எல்லாம் அமர்க்களமா இருக்குப்பா. ரொம்பவே ரசிச்சுப் படிச்சேன்.

சண்டிகர் சனி ஒன்னு எழுத பாக்கி நிக்குது. நேரம் வரட்டும்:-)

படம் எடுக்காதேன்னு போர்டு இருந்தாலுமே.......... நம்மாட்களுக்குக் காமிக்கணும் என்ற கடமை ஒன்னு இருக்குல்லே:-)

kobikashok said...

நல்ல பதிவுகள் நண்பரே என்னுடைய வலை பதிவில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்

சுந்தரா said...

இந்தக்காலத்தில், கதவில்லாத கடைகளும் வீடுகளுமா???

ஆசர்யம்தான்!

கோமதி அரசு said...

சனி தேவ் எப்படி ஊருக்குள் வந்தார் என்று தெரிந்து கொண்டேன்.

விபரங்கள் மிக அழகாய் சொல்லிவிட்டீர்கள்.

சனீஸ்வரன் தரிசனமும் நன்கு கிடைத்தது.

நன்றி அமைதிச்சாரல்.

சசிகுமார் said...

//இதை மொதல்லேயே சொல்லியிருந்தா,.. நேத்தே கொண்டுவந்திருப்பாங்கல்ல. சாமிக்கும் நல்ல நேரம் வந்தாத்தான் எதுவும் நடக்கும்போலிருக்கு.//

சனி பகவானையே கிண்டல் பண்றீங்களா இருங்க இந்த பதிவுக்கு ஓட்டு கிடைக்காம பண்ண சொல்றேன்.

Anonymous said...

ஆன்மீகப் பயணமும் உங்களின் தகவல்களும் அருமை!

அமுதா கிருஷ்ணா said...

திரும்ப ஒரு முறை போய் வந்த திருப்தி.

வல்லிசிம்ஹன் said...

என்னது, இன்னம் வளருகிறாரா? புரியலையே. சரி சனி பகவான் கலிகாலத்தில வளரத்தான் செய்வார்.:)
கொஞ்சம் மரியாதை செலுத்த வேண்டிய பார்ட்டிதான். இடமெல்லாம் படு சுத்தமா இருக்கே. நல்ல நடை சாரல். படிக்க சுகமா இருக்கு.

Chitra said...

Interesting photos and info. :-)

'பரிவை' சே.குமார் said...

மிக அழகாய் விபரங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல எழுத்து நடை சகோ. சமீபத்தில் ஒரு வங்கியின் கிளை திறக்க முடிவெடுத்து இருக்கிறார்கள் என நாளேட்டில் படித்தேன் - கதவுகள் இல்லாமல்!

பயணக்குறிப்பும், புகைப்படங்கள் பகிர்வும் அருமை. மிக்க நன்றி.

raji said...

சுவாரஸ்யமான பதிவு
ஃபோட்டோக்களும் அற்புதம்
பகிர்வுக்கு நன்றி

-தோழன் மபா, தமிழன் வீதி said...

சரளமான நீண்ட நடை. பதிவு அருமை, வாழ்த்துகள்.

Menaga Sathia said...

சூப்பர்ர் பதிவு!!

ரிஷபன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் சுவாரசியமா படிச்ச பயணப் பதிவு.. என்ன ஒரு சரளமான நடை.. கூடவே கூட்டிகிட்டு போகிற மாதிரி..

டக்கால்டி said...

Good Naration. Thanks for sharing

ஹேமா said...

சாரல்...வாசிக்க சுவாரஸ்யமா இருக்கு.நன்றி !

pudugaithendral said...

ஷனி சிங்கனாபூர்னு சொன்னாலே ஆஷிஷ்க்கு ஞாபகம் வருவது கதவு இல்லாத வீடு தான் :))

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான தகவல்களுடன் அருமையான பதிவு.

//வீடுகள், கடைகள்ன்னு எதுக்குமே கதவுகள் கிடையாது.//

இருக்கிற ஜன்னல், கதவுகளை சரியாகப் பூட்டினோமோ என தூங்கப் போகையிலும், வெளியில் செல்லுகையில் ஆக்ரமிக்கிர சிந்தனையுடன் நாம:))!

தனி ஆல்பத்தில் வலையேற்றிய படங்கள் அத்தனையையும் ரசித்தேன். விரையும் ஊர்தியிலிருந்து எடுத்த படங்கள் என ஒரு பதிவு என ட்ராஃப்டில் உள்ளது:)!

Unknown said...

mee the first
nalla anupavam..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

சில கோயில்கள்ல, கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா சமயங்களில் படம் எடுக்கறாங்கல்ல. அப்ப புனிதம் கெடாதா?.. நாம எடுக்கறச்ச மட்டும்தான் விதிகளெல்லாம்... இருந்தாலும், நாமெல்லாம் கடமை தவறாத வீரிகள்ன்னு சொல்லித்தெரிய வேண்டியதில்லை :-))))

ஆஹா!! சண்டிகர் சனியுமா.. படிக்க காத்திருக்கோம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அசோக்,

இணைப்பு கொடுத்ததுக்கும், முதல்வரவுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

முதல்முதலா கேள்விப்பட்டப்ப எனக்கும் இதேமாதிரிதான் ஆச்சரியமா இருந்திச்சு. இங்கே திருடினா அந்த ஊர் எல்லையை எப்பாடுபட்டாலும் தாண்டமுடியாம சனி முடக்கிடுவாராம். சனி கிட்ட யாராவது வம்பு வெச்சுப்பாங்களா!!. அதான் நோ கதவுகள் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

ரசித்தமைக்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

தாராளமா சொல்லிக்கோங்க.. நமக்கு மாருதி துணையிருக்கார். அவரைக்கண்டா சனீஸ்வரன் பெட்டிப்பாம்புதான் :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி,

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

போயிட்டு வந்தப்புறம் இதெல்லாம் உங்களுடன் பகிர்ந்துக்கிடும்போது எனக்கும் அப்படித்தான் தோணுது :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

பூமிக்குள்ள வளந்துட்டே போறாராம்.. ஆராய்ச்சி செய்ய முடியாத பார்ட்டியாச்சே :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

ரசிச்சதுக்கு நன்றிங்க,.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

விபரங்கள் யாருக்காவது பயன்பட்டா மகிழ்ச்சியே :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

அந்த வங்கியின் பாதுகாப்புப்பெட்டகத்துக்கு கதவு இருக்குமா??.. சும்மா ஒரு சந்தேகம் :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

ஆல்பத்துல இருக்கிற படங்களையும் கண்டுக்கோங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தோழன் மபா,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

நீங்கல்லாம் ரசிச்சதே எனக்கு திருப்தியா இருக்கு. நடைன்னெல்லாம் ஒண்ணும் ஃபிக்ஸ் பண்ணிக்கலை. மனசுல தோணுறதை அப்படியே தட்டச்சுவேன் அவ்வளவுதான் :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க டக்கால்டி,

நல்லாருக்கு உங்க பேரு :-))))

வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

நான் கூட சனி சிங்க்னாபூர் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேனே. எனக்கு இவ்வளவு விஷயஞானம் இல்லை. உங்க பதிவு விளக்கமா தெளிவா புரியும்படி இருக்கு. நன்றி.

Thenammai Lakshmanan said...

எப்பிடி சாரல் இவ்வளவ்ஃபோட்டொஸ் எடுத்தீங்க.. எங்க வீட்டுக்காரர் காமிராவை நான் கையில் எடுத்தாலே டென்ஷன் ஆகிடுறாரே.

உங்க கூடவே வந்து தர்ஷன் பண்ண மாதிரி இருந்துச்சு. தாங்க்ஸ்.

Unknown said...

நான் கூட சனி சிங்க்னாபூர் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். உங்களுக்கு அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கண்டிப்பாக பார்க்கவும்.http://krvijayan.blogspot.com/2010/11/blog-post_18.html

ப்ரியமுடன் வசந்த் said...

//இங்கே ஆண்கள் மட்டுமே மூலவர்கிட்ட போய் கும்பிட அனுமதி உண்டு.//

ஆணாதிக்க சாமி :))

இந்தச்சாமிய கண்டுபிடிச்சு ஊருக்குள்ள கொண்டுவந்த கதை சுவாரஸ்ய்மா இருந்துச்சுங்க...

Asiya Omar said...

பகிர்வு அருமை.அனுபவம் படிக்க எப்பவும் எனக்கு பிடிக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

ரசிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

ஆமாம்ப்பா.. இந்தக்காலத்துல இப்படியும் ஒரு ஊரான்னு ஆச்சரியமா இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

தானியங்கி பூட்டுகள் இருந்தாலும் அதையும் நம்பாம, கோத்ரெஜ் பூட்டு போட்டாத்தான் நமக்கு திருப்தி :-))

ட்ராப்ட்ல இருக்கிற இடுகையை சீக்கிரமே வெளியிடுங்க.. நேயர் விருப்பம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

எனக்கும் அவ்வளவு ஞானமெல்லாம் கிடையாதும்மா. என்னோட சினேகிதியொருத்தி நாலஞ்சு தடவையாவது போயிட்டு வந்திருப்பாங்க.. அப்பப்ப அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டதுதான், கூகிளாண்டவர் சொன்னது மீதி.

இங்கே மும்பையிலும் ஷிங்கனாப்பூரை நகலெடுத்ததுபோல ஒரு கோயில் இருக்குதாம்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனம்மை,

அந்த கேமராவை எனக்கு நேந்து விட்டாச்சுங்க :-))))

LinkWithin

Related Posts with Thumbnails