Saturday 7 August 2010

சும்மா இருப்பது எப்படி??...

பிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி??'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்காது. இதை ஏன் பரிசோதிச்சு பார்க்கக்கூடாது?..ன்னு ஒரு தோணல். சும்மா.. கொஞ்ச நாளைக்கு ப்ளாக்குக்கு லீவு வுட்டுட்டா என்ன?..

லீவ் விட்டுட்டு சும்மா இருந்தா, அடுத்து என்ன பதிவு போடலாம்.. எப்படி மேட்டர் தேத்தலாம்ன்னு துறுதுறுன்னு இருக்கிற மூளை துருப்பிடிச்சுடுமே :-). சும்மா இருக்கிற மனிதனின் மனசு, சாத்தானின் இருப்பிடம்ன்னு சும்மாவா சொன்னாங்க. சும்மாவே டென்ஷனான லைஃப்.. இதுல சாத்தானும் கூட்டணி வெச்சுக்கிட்டா கேக்கவா வேணும்.

மனுஷனுக்கு பிறக்கிறதிலிருந்து கடைசிவரை டென்ஷன்தான். பிறக்கும்போது, நல்லபடியா பிறக்கணுமேன்னு டென்ஷன்.. அப்புறம் வளர்ச்சிகள் சரியா இருக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம், நல்ல ஸ்கூலில் அட்மிஷன் கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம், நல்லாப்படிச்சு நல்ல மார்க் வாங்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் நல்ல வேலை கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் வாழ்க்கைல பிரச்சினை இல்லாம இருக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் காலாகாலத்துல குழந்தை பிறக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் அதை நல்லபடியா வளர்க்கணுமேன்னு டென்ஷன். அப்புறம்........O. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை மறைமுகமா குறிப்பிட்டிருக்கேனாக்கும். இதில் பதிவு போடும் டென்ஷனை சேர்க்கலை. :-)). (அதையும் சேர்த்தா தலையை பிச்சிக்க வேண்டியிருக்கும்)

டென்ஷனை குறைக்க நிறைய வழிகள் இருக்கு. நெறைய பேர் பாட்டு கேக்கச்சொல்லி சிபாரிசு பண்ணுவாங்க. அதுக்காக வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு எந்த நேரமும் பாட்டுக்கேட்டுக்கிட்டே இருந்தா.. அப்புறம், வீட்லயோ, இல்லை.. ஆப்பீசிலோ , பாட்டுக்கேக்க வேண்டியிருக்கும். விருப்பமான பாடல்களை கேட்டுக்கிட்டே வேலைசெஞ்சா, அலுப்பே தெரியாது. ஆடிப்பாடி வேலைசெஞ்சா அலுப்பிருக்காதுன்னு சும்மாவா சொல்லிவெச்சாங்க..


எங்கூர்ல சும்மாவே ஆடுவாங்க.. இப்போ பண்டிகை சீசன் வேற தொடங்கியாச்சு. இனி நவராத்திரி முடியறவரை, அங்கங்க கர்பா டான்ஸ் வகுப்புகள் நடக்கும். கர்பான்னா வேற ஒண்ணுமில்லை.. நம்மூர் கும்மிதான். வலையில் அடிக்கிற கும்மியில்லை... நிஜமான கும்மி :-)). டென்ஷனா இருக்கும்போதோ, இல்லை ஜாலிமூட்ல இருக்கும்போதோ, பிடிச்ச பாட்டை ஒலிக்க விட்டுட்டு, வேர்க்கவிறுவிறுக்க ஒரு ஆட்டம் ஆடிப்பாருங்க. மனசும் உடம்பும் அப்படியே லேசாகி காத்துல பறக்கிறமாதிரி இருக்கும்.

பக்கத்துல பூங்கா இருந்தா அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாம். குழந்தைகள் விளையாடுறதைப்பாத்துக்கிட்டே இருந்தா எல்லா டென்ஷனையும் மறந்துடுவீங்க. யாரும் இல்லைன்னா அந்த ஊஞ்சலில் உக்காந்து, கொஞ்ச நேரம் ஆடிப்பாருங்க. என்ன தப்பு??. (தோட்டக்காரர் பார்த்தா ஆபத்து). அப்பப்போ, நமக்குள்ள இருக்கிற சின்னக்குழந்தையை, கொஞ்சம் வெளியே வரவிடுங்க. ஒருமுறைதான் பிறக்கிறோம்.. ஒருமுறைதான் இறக்கிறோம். இடைப்பட்ட காலத்தை சந்தோஷமாக, பிறருக்கு உபயோகமாக கழிப்பதை விட்டுட்டு என்ன சாதிக்கப்போறோம்??.

டீயில ஈ விழுந்துடுச்சேன்னு கவலைப்படறவனைவிட, 'என்ன்ன்ன பெருசா.. ரெண்டு சொட்டு டீயை வேண்ணா குடிச்சிருக்கும்' ன்னு சமாதானப்படுத்திக்கிட்டு, அதை தூக்கிப்போட்டுட்டு.. டீயை குடிக்கிறவந்தான் வாழ்க்கையில் சந்தோஷமா இருப்பான் :-)))

தலைப்புக்கும் இடுகைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?.. ஹி..ஹி.. இந்த வழிமுறைகளை எல்லாம் கடைப்பிடிக்கணும்ன்னா, அவ்வப்போது சும்மா இருந்தாத்தான் முடியும், அவ்வளவுதான்.... வேணும்ன்னா, இதெல்லாம் நம்மை ரீசார்ஜ் செய்யுதுன்னு நினைச்சுக்கோங்களேன் :-))).



38 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//டீயில ஈ விழுந்துடுச்சேன்னு கவலைப்படறவனைவிட, 'என்ன்ன்ன பெருசா.. ரெண்டு சொட்டு டீயை வேண்ணா குடிச்சிருக்கும்' ன்னு சமாதானப்படுத்திக்கிட்டு, அதை தூக்கிப்போட்டுட்டு.. டீயை குடிக்கிறவந்தான் வாழ்க்கையில் சந்தோஷமா இருப்பான் :-)))//

சத்தியமா மூணு வருசத்துக்கு முன்னாடி இப்டித்தாங்க மதுரையில வேலை பார்க்குறப்போ குடிக்கிற டீயில விழுந்துடுச்சு ஈய எடுத்து சிகரெட் வேணுமான்னு அதுகிட்ட கேட்டு அப்படியே அத தூக்கிப்போடு டீய குடிச்சேனுங்க...பசங்க அன்னிக்கு பூரா செம ஓட்டு ஓட்டுனாய்ங்க....!

வாழ்க்கைய ரசிக்க மட்டுமில்ல அனுபவிக்கவும் தெரியணும் சிம்பிளா சொல்லிட்டீங்க...!

ஹேமா said...

இந்தப் படங்களே டென்சனைக் குறைக்குது.எல்லாம் எங்க மனசுதான்.
சந்தோஷமா இருப்போம்.

Anonymous said...

சும்மா இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சது. எப்பவும் அதைத்தா செய்யறேன் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு...

அன்றாட வாழ்க்கையில் நடக்கிற விசயங்கள எப்படி ரசிக்கனுமுன்னு ரொம்ம்ப எளிதா சொல்லியிருக்கீங்க...

எல் கே said...

சரி இப்ப என்ன லீவ் விட்டாச்சா

நசரேயன் said...

ரெம்ப டென்ஷன் ஆவாதீங்க, உடம்புக்கு நல்லதில்லை

Prathap Kumar S. said...

//ரெண்டு சொட்டு டீயை வேண்ணா குடிச்சிருக்கும்' ன்னு சமாதானப்படுத்திக்கிட்டு, அதை தூக்கிப்போட்டுட்டு.. டீயை குடிக்கிறவந்தான் வாழ்க்கையில் சந்தோஷமா இருப்பான் :-)))//

ஹஹஹஹ... இதை இப்படியும் எடுத்துக்கலாமோ...???

உண்மையிலேயயே சும்மா உக்காற்து ரொம்ப கஷ்டம்ங்க... இந்த பதிவுலேருந்து தெரியுது...
நீங்க சும்மா மட்டும்தான் இருக்கீங்கன்னு... என்ஜாய்...:))

kavisiva said...

வாழ்க்கை வாழ்வதற்கேன்னு சிம்பிளா சொல்லிட்டீங்க

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ந‌ல்லா இருக்கு... சும்மா இருக்கிற‌து பெரிய‌ க‌ஷ்ட‌ம்!!!!!!... ஆமா அசைவ‌ம் சாப்பிடுற‌வ‌ங்க‌ளுக்கு ஈ விழுந்த‌ டீ ஓகே!!... சைவ‌ம் சாப்பிடுற‌வ‌ங்க‌ளுக்கு?..

Vidhya Chandrasekaran said...

ஆனா பாருங்க. நான் சும்மா இல்ல. ஏன்னா உங்களுக்கு பின்னூட்டம் போட்டுகிட்டிருக்கேன்:))

ரசிகன் said...

//பிறக்கும்போது, நல்லபடியா பிறக்கணுமேன்னு டென்ஷன்.. அப்புறம் வளர்ச்சிகள் சரியா இருக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம், நல்ல ஸ்கூலில் அட்மிஷன் கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம், நல்லாப்படிச்சு நல்ல மார்க் வாங்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் நல்ல வேலை கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் வாழ்க்கைல பிரச்சினை இல்லாம இருக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் காலாகாலத்துல குழந்தை பிறக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் அதை நல்லபடியா வளர்க்கணுமேன்னு டென்ஷன். அப்புறம்........O. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை மறைமுகமா குறிப்பிட்டிருக்கேனாக்கும். //

தென்னாலில்ல பயம் பயம் கமல் பேசுன மாதிரி டென்ஷனுக்கு புது லிஸ்ட் கொடுத்துட்டிங்க போல.. ரசித்தேன்..:))

அம்பிகா said...

சின்ன அம்மிணி said...
சும்மா இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சது. எப்பவும் அதைத்தா செய்யறேன் :)

:-)))
நல்ல பகிர்வு.

Anonymous said...

எல்ல்லோரும் இப்பிடி லீவ் எடுத்தா என்ன அர்த்தம் ?எனக்கு போர் அடிக்குமே ..பதிவு நல்லா இருந்தது ,படங்கள் எல்லாமே அருமை ..லீவ் எடுத்தாலும் சீக்ரமா வந்திடுங்க இல்லேனா பெரிய பைன் கட்ட வேண்டியது தான் இப்பவே சொல்லிட்டேன் .

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

ஈக்கு சிகரெட்டா.. இருங்க,அன்புமணி ஐயாகிட்ட புடிச்சுக்கொடுக்கிறேன் :-)))

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

ஒவ்வொண்ணும் சூப்பரா இருக்குதுல்ல :-))

be happy :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

நா மட்டும்தான், தனியாளா சும்மா இருக்கிறனோன்னு பயந்துட்டேன். நல்லவேளை துணைக்கு வந்தீங்க :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கடல்,

அவ்வளவுதானே,.. தொப்பக்கடீர்ன்னு குதிச்சுடலாம். நான் கடப்பாரை நீச்சலில் கோல்ட்மெடல் வாங்கியிருக்கேனாக்கும். ஆகவே, பயமில்லை :-))

நன்றிங்கோவ்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

ஒண்ணும் சொல்லாம சிரிச்சுட்டுப்போனா எப்படி :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெறும்பய,

அதேதாங்க.. நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

லீவு முடிஞ்சு திரும்பி வந்துட்டேன் :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

ஆஹா.. சகோதரபாசம்ன்னா இதுதான். ரொம்ப நன்றிப்பா.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அட.. சும்மா இந்த பக்கம் வந்தேன்...
வந்த இடத்துல சும்மா இருக்கும் போது என்ன செய்யலாம்னு சொல்லிட்டீங்க..
படங்கள் சூப்பர்.. ரொம்ப நன்றிங்க..

Thenammai Lakshmanan said...

டீயில் ஈயா முதல்ல கீழ கொட்டுங்க சாரல்..
சும்மா வந்தா பீதியக் கிளப்புறீங்களே.. ஆமாம் எனக்குக் கொடுத்த டீயில ஈ இல்லையே.சொல்லுங்க..

வெங்கட் நாகராஜ் said...

உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான வேலை சும்மா இருக்கறது தாங்க. சும்மா இருங்கன்னு சொல்லிட்டு, பூனை, யானை, பெங்குயின் எல்லாத்துக்கும் வேலை கொடுத்துட்டீங்களே! பாவங்க அதுங்க! நல்லதொரு பகிர்வுக்கு நன்றி. சும்மா இருக்க முயற்சி பண்ணலாம்னு நினைச்சேன், அதுக்கு முன்னாடி உங்களுக்கு பதில் எழுதுவோமேன்னு...

ஜெயந்தி said...

உங்கள் பதிவை படிச்சவுடனே இருந்த டென்ஷனெல்லாம் போயாச்சு. அதுனால உங்கள் பதிவை படிப்பதும் டென்ஷனை குறைக்க ஒருவழின்னு ஏன் போடல?

ராமலக்ஷ்மி said...

// யாரும் இல்லைன்னா அந்த ஊஞ்சலில் உக்காந்து, கொஞ்ச நேரம் ஆடிப்பாருங்க. என்ன தப்பு??. //

ஆடியிருக்கிறேன், ஆள் இருந்தாலும்:)!

// அப்பப்போ, நமக்குள்ள இருக்கிற சின்னக்குழந்தையை, கொஞ்சம் வெளியே வரவிடுங்க. ஒருமுறைதான் பிறக்கிறோம்.. ஒருமுறைதான் இறக்கிறோம். இடைப்பட்ட காலத்தை சந்தோஷமாக, பிறருக்கு உபயோகமாக கழிப்பதை விட்டுட்டு என்ன சாதிக்கப்போறோம்??.//

ரொம்பச் சரி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரதாப்,

எங்கே சும்மா உக்கார்றது.பாடறது, ஆடறதுன்னு ஏகப்பட்ட வேலை இருக்கே.. :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிசிவா,

அதேதாங்க. தேவையில்லாம எதுக்கு சிக்கலை உண்டாக்கிக்கணும்??.

எஞ்சாய்.....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாடோடி,

அப்படி ஒண்ணு இருக்கில்ல.. என்ன செய்யலாம்..... வேற டீ ஆர்டர் பண்ணிடலாமா!!!. எதுக்கு வீணா கவலைப்பட்டுக்கிட்டு???? :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வித்யா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரசிகன்,

ரசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

வரவுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

உங்களுக்காகவே லீவை சீக்கிரம் முடிச்சுட்டு வந்துட்டேன் :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

உங்களுக்கு கொடுத்த டீயில் ஈ.... இல்லைன்னுதான் நினைக்கிறேன், இருந்திச்சின்னா சொல்லுங்க, தூண்டில் போட்டு பிடிச்சிடலாம் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

சும்மா இருக்க நினைக்கிறதே, இந்தமாதிரி ஜாலியான வேலைகளை செய்யத்தானே :-)))

பதில் எழுதினதுக்கு ஒரு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயந்தி,

ஹை!!.. அப்படி ஒண்ணு இருக்கா.. நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஊஞ்சலாடுறது செம ஜாலியா இருக்கும் இல்லியா :-)))))

நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails