அமுதசுரபி மாத இதழில் வாசகர் காந்தி ஜயந்தியையொட்டி, காந்திஜியின் மதுவிலக்குக்கொள்கையைக் கருத்தோட்டமாகக் கொண்டு வெண்பாப்போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப்போட்டிக்காக நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகிப் பிரசுரமாகியிருக்கிறது.
தேர்வாகிப் பிரசுரமான வெண்பாவைத்தவிர, நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:
மானத்தைக் கொல்லும் மதுவினைத் தள்ளுவதே
ஈனத்தைத் தீர்க்கும் வழியென்றார் — தேசத்து
உத்தமர் காந்தி உரைத்தசொல் ஏற்றக்கால்
சித்தம் தெளியும் சிறப்பு.
நாட்டினைக் காத்திடும் நல்வழியாய்க் காந்தியண்ணல்
காட்டி மதுவிலக்கைக் கோரியது — ஏட்டுடன்
நில்லாமல் வாழ்வினில் நேர்ந்தால் குடும்பத்தில்
செல்வமொடு சேர்ந்திடும் சீர்.
குடிப்பழக்கம் தீமை கொடுக்கும் எனவே
அடியோடு கள்ளை அறவே ஒறுத்து
மடியின்றி காந்தி முயன்ற அறத்தைப்
பிடித்திடின் சீர்எய்தும் பெற்று.
கள்ளினை உண்டால் களிப்பும் கெடுமென்றே
வள்ளல் உரைத்தார் வழிநின்று — தெள்ளி
மனமாசு நீக்கும் மகாத்மாசொல் கேளீர்
தினமும் விலக்கு துணிந்து.

1 comment:
நான்குமே அருமை.
Post a Comment