அது ஒண்ணுமில்லை.. என்னோட புது இடுகைகள் எதையும் தமிழ்மணம் இணைச்சுக்க மாட்டேங்குது. பிடித்தமான இடுகைகளுக்கு ஓட்டுப்போட்டாலும் , "யார் நீ???" அப்படீன்னு கேக்குது. பாஸ்வேர்டு கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்குது. தமிழ்மணத்துக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டுட்டு, அம்மா கை சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிட்டு உக்காந்திருக்கேன் :-)))). உங்கள் யாருக்காவது இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருந்தா எப்படி சமாளிச்சீங்கன்னு சொன்னா புண்ணியமா போவும். (பிரச்சினையை தீர்ப்பவர்களுக்கு நாலு நல்ல ஓட்டும் பத்து கள்ள ஓட்டும் போடறேன், அல்லது நேத்து முதல் நாள் முதல் ஷோவா பார்த்த, எந்திரன் படத்தின் டிக்கெட்டின் ஜெராக்ஸ் அனுப்பப்படும்:-))
நம்ம பிரச்சினை அப்புறம்... இன்னிக்கு பாபுஜி,.. அதாவது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.... அதாவது காந்தி தாத்தாவோட பிறந்தநாள். அதனால அவருக்கு ரொம்ப பிடிச்ச இந்த பஜனைப்பாடலை அவருக்கு பிறந்தநாள் பரிசா வழங்குகிறேன்.. வேறெதுவும் எழுதத்தோணலை..
இப்போதெல்லாம், பெரிய தலைவர்களின் பிறந்தநாட்கள், வெறும் விடுமுறை நாட்களாக மாறிவிட்டன. அதுவுமில்லாம காந்தியடிகளைப்பத்தி புதுசா சொல்றதுக்கு என்ன இருக்கு??... அதனால இந்தப்பாட்டைக்கேட்டுக்கிட்டே அவரை நினைவு கூர்வோம்....