Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

Thursday, 8 August 2013

முதன்முதலாக... பரவசமாக..

முதன்முதலாகக் கம்ப்யூட்டரைப் பார்த்தபோதும், அதைக் கையாண்டபோதும் ஏற்பட்ட அனுபவங்களை எழுதச்சொல்லி ஆதி அழைத்திருக்கிறார். 

'விக்ரம்' படம் வந்தபொழுது, அந்தப்படத்தை மிகவும் ஆவலாக அனைவரும் போய்ப்பார்த்தமைக்கு கமலோ, அம்பிகாவோ, வசனமெழுதிய சுஜாதாவோ ஒவ்வொரு வகையிலும் காரணமென்றாலும், 'கம்ப்யூட்டரெல்லாம் காட்டறாங்கப்பா." என்ற காரணம்தான் அதிமுக்கியமானதாக இருந்தது. அப்பொழுதெல்லாம் ஆ.. ஊ என்றால் எதற்கெடுத்தாலும், எந்தப்பொருளையாவது விற்கவேண்டுமென்றாலும் அதைக் கம்ப்யூட்டருடன் சம்பந்தப்படுத்தினால் போதும். மார்க்கெட் பிய்த்துக்கொண்டு போகும். டிஸ்கோவுக்கும் நதியாவுக்கும் அடுத்தபடியாக கம்ப்யூட்டரின் பெயரைச்சூட்டிக்கொண்டிருந்த பொருட்கள் எத்தனையெத்தனையோ. 'கம்ப்யூட்டர் சேலை' என்று ஒன்று பிரமாதமாக வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அதுவே டிசைன் செய்ததாம். ராக்கெட் விடும் கம்ப்யூட்டருக்கு சேலை நெய்யுமிடத்தில் என்ன வேலை என்று நினைத்தாலும், ஆளுக்கொன்று வாங்கத்தவறவில்லை நாங்கள்.

இப்படியாகத்தானே பெயருடன் முதலில் பரிச்சயம் ஏற்பட்டாலும் நேரில் அதைத் தரிசனம் செய்யும் வாய்ப்பென்னவோ கன காலம் கழித்துத்தான் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டர் என்பது நவீன முறையிலான டைப்ரைட்டர் என்ற எண்ணம் மாறி, அது என்னவெல்லாம் செய்யுமென்று ஓரளவு தெளிவு வந்திருந்தது. விண்டோஸ் 3.1 கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில்தான் விண்டோஸ்-95வை அறிமுகப்படுத்துவதற்காக NIITயினர் தொலைக்காட்சியில் தொடராக கேள்வி பதில் முறையில் ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து பார்த்ததில் 'இதான்,.. இப்படித்தான்' என்று புரிதல் ஏற்பட்டிருந்தது. நாமும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆரம்பித்து, ரங்க்ஸ், "மைக்ரோசாப்ட் ஆபீஸ் கத்துக்கோ. பிரயோசனமா இருக்கும்' என்றதில் வகுப்பில் சேர்வதில் முடிந்தது.

தேடிப்பிடித்து, இன்ஃபொடெக்கின் franchise நடத்திக்கொண்டிருந்த ஒரு வகுப்பிலும் சேர்ந்தேன். அப்பொழுதெல்லாம் மைக்ரோசாப்ட் ஆபீசில் வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட் மட்டுந்தான் இருந்தது. அதிலும் வீட்டில் வெட்டி ஆபீசராய் இருந்த காரணத்தாலோ என்னவோ 'ஆபீஸ் கத்துக்கறேன்' என்று சொல்லிக்கொள்வதே ஒரு பெருமையாகவும் இருந்தது. கி..கி..கி.. முதல் நாள் வகுப்பில் கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்ததும் ஏதோ தெய்வத்தின் முன் அமர்ந்திருந்தது போலிருந்தது. கர்சர், மௌஸ் என்று ஒவ்வொன்றையும் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே டைப்ரைட்டிங் தெரியும் ஆகவே ஃபிங்கரிங் பிரச்சினை இல்லை. டைப்ரைட்டரில் அடுத்த வரி டைப் செய்ய வேண்டும்ன்றால் ஒரு லீவரை நகர்த்த வேண்டும். இதில் தானாகவே நகர்ந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அந்த வகுப்பு முடியுமுன்பே அதெல்லாம் சலித்து விட்டது :-) என்றாலும் அவர்கள் நடத்திய தேர்வில் ஒவ்வொரு தாளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி மொத்தமாக 96% எடுத்தேன். 

வகுப்புக்குப் போய்க்கொண்டிருந்த சமயம், ரங்க்சின் ஆபீசில் ஒவ்வொரு செக்ஷனுக்கும் மேம்பாட்டுக்காக ஒரு தொகை ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். ரங்க்சிடம் நான் ஆபீசுக்குக் கம்ப்யூட்டர் வாங்கிப்போடச்சொன்னேன். அதான், மைக்ரோ சாப்ட் ஆபீஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து அது ஆபீஸ் வேலைகளை எப்படியெல்லாம் எளிதாக்குகிறது என்பது நான் வகுப்புக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து புரிய ஆரம்பித்திருந்ததே. ரங்க்ஸின் வேலைப்பளு குறையுமே என்ற நல்லெண்ணம்தான். ஆபீசில் கம்ப்யூட்டர் வாங்கியபிறகு, அடிக்கடி போன் செய்து சந்தேகம் கேட்டுக்கொள்வார். 

ஆபீசில் வாங்கிய கம்ப்யூட்டரைப் பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை எங்களையெல்லாம் அழைத்துச்சென்றார். குழந்தைகள் கேம்சில் மும்முரமாகிவிட நான் எனக்குத் தெரிந்ததை ரங்க்சிற்கு வகுப்பெடுத்தேன். முக்கியமாக எக்செலும், வேர்டில் மெயில் மெர்ஜும் கற்றுக்கொண்டார். அதன் பின் அடிக்கடி நாங்கள் ஆபீசுக்குப் போவது வழக்கமானது. குழந்தைகள் கேம்சை விட்டுவிட்டு பெயிண்ட் ப்ரஷ், வேர்ட் போன்றவற்றில் பழக ஆரம்பித்தனர். நானோ வகுப்பில் கற்றுக்கொண்டதை இங்கே பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பேன். 
இந்தச்சமயத்தில்தான் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கலாமென்று முடிவெடுத்தோம். குழந்தைகளின் படிப்புக்கும், ரங்க்சின் வேலைக்கும் உதவியாய் இருக்குமென்று முடிவெடுத்து, வாங்கி வீட்டினுள் அது வலது காலெடுத்து வைத்து நுழைந்தபோது ஏதோ சாதித்து விட்ட பெருமிதமும் ஏற்பட்டது. குழந்தைகள் விளையாடிய நேரம் போக என் கைக்கும் எப்பவாவது கிடைக்கும் :-)) பாட்டுக்கேட்பது, சினிமா பார்ப்பது என்று அது ஒரு மினி டிவியாகவும் ரேடியோவாகவும் உருவெடுத்தது.

கற்றுக்கொண்டாலும் வேலைக்குச்செல்ல நான் முயற்சிக்கவில்லை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாத சூழ்நிலையில் இரண்டொரு சமயம் குழந்தைகளையும் வகுப்புக்குக் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை அங்கே ஆபீஸ் ரூமில் உட்கார வைத்து விட்டு நான் வகுப்புக்குப் போன சம்பவங்களுமுண்டு. இந்த நிலையில் வேலைக்கு எங்கே முயற்சி செய்ய?.. எம்மெஸ் ஆபீசைத்தவிர வேறு கோர்ஸுகள் கற்றுக்கொள்ள நான் முயற்சிக்கவுமில்லை. இதனாலேயே பக்கத்துப் பள்ளியில் கிடைக்கவிருந்த கம்ப்யூட்டர் டீச்சர் வேலை கைவிட்டுப்போனது. அதற்கு basic-க்கும் கற்றிருக்க வேண்டுமாம். இந்த பேசிக் நாலெட்ஜ் இல்லாததால் ஒரு நல்ல டீச்சரை அந்தப் பள்ளி இழந்தது (யாருப்பா அங்கே கல்லெடுக்கறது?.. உண்மையைச்சொன்னா ஒத்துக்கணும். ஓக்கே? :-) ). ஆனாலும் கற்ற வித்தை கை கொடுத்தது. எங்கள் குடியிருப்பில் காஷியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்ததால் வரவு செலவு இத்யாதிகளை வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் அழகாகக் கணக்கிட்டு, ப்ரிண்ட் எடுத்து ஒவ்வொரு wing-ன் நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டச்செய்தேன். இது அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. 

சினிமா பார்க்கவும் சாலிடெர், ஃப்ரீசெல் போன்ற ஒலிம்பிக் தரமுள்ள விளையாட்டுகளை விளையாடுவதையும் தவிர எப்பவாவது வேலையும் செய்யும் கம்ப்யூட்டரில் அப்பொழுதெல்லாம் சில சமயங்களில் மட்டும்தான் எதையாவது வாசிப்பேன். அதுவும் தமிழ் வாசிப்பது அபூர்வம். தமிழிலும் இருக்கிறதென்று தெரிந்தால்தானே வாசிப்பதற்கு :-). அப்படியிருந்த நிலை மாறி இப்பொழுது கம்ப்யூட்டரே பழியாகக் கிடப்பதும், அதில் எழுத ஆரம்பித்திருப்பதும் எனக்கே ஆச்சரியமூட்டுகிற மாற்றம்தான். அதைப்பற்றியும் எழுத வேண்டும்தான். தம்பி குமாரும் அதைத்தான் எழுத அழைத்திருக்கிறார். எழுதி விடுவோம் :-))

விருப்பமிருப்பவர்கள் அனைவரும் இந்தத்தொடர்பதிவைத் தொடரலாம்..

Monday, 14 November 2011

மழலை உலகம் மகத்தானது...(தொடர்பதிவு)


எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறோம்..
ஒவ்வொரு மாசமும் பதினான்காம் தேதி வருது.. ஆனா, நவம்பர் மாசம் வர்ற பதினான்காம் தேதிக்குன்னு ஒரு சிறப்பு இருக்குது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமா கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தோட சிறப்பு.

நவம்பர் 20-ஐ அனைத்துலக குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும் யூனிசெஃப் அமைப்பும் கடந்த 1954-டிசம்பர் பதினாலுலேர்ந்து கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. உலகம் முழுக்க இருக்கற குழந்தைகளுக்கிடையில் புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்த நாள் பிரகடனப் படுத்தப்பட்டிருக்குது. அத்தோட ஜூன் ஒண்ணாம் தேதியும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்படுது.
முள்ளில்லா ரோஜாக்களும் அவங்க ராஜாவும்..
அப்படியிருந்தும் நாம மட்டும் ஏன் நவம்பர் 14-ஐ குழந்தைகள் தினமாகக் கொண்டாடுறோம்ன்னா அதுக்கு முழுக்க முழுக்க நம்ம நேருமாமாதான் காரணம். வடக்கே சாச்சா நேருன்னும் தெற்கில் நேருமாமான்னும் அழைக்கப்படற நம்ம சுதந்திர இந்தியாவோட முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 1889ஆம் வருஷம் பிறந்தார். அவர் குழந்தைகள் மேல் ரொம்பவும் பாசம் கொண்டவர். அதனாலதான் அவரோட பிறந்த தினமே இந்தியாவில் குழந்தைகள் தினமா கொண்டாடப்படுது.

குழந்தைகள்ன்னதும் நமக்கு மொதல்ல ஞாபகம் வர்றது அவங்களோட வெள்ளை மனசுதான்.எந்தக் கவலையுமே இல்லாம ஆடிப்பாடி விளையாடித் திரிஞ்ச நம்ம குழந்தைப் பருவத்தை நினைக்கிறச்சே,..”ஹூம்.. அதெல்லாம் ஒரு பொற்காலம்”ன்னு ஒரு ஏக்கப்பெருமூச்சு வர்றதையும், கூடவே இப்பத்திய குழந்தைகளோட குழந்தைப் பருவம் எப்படிக் கழியுதுன்னு ஒப்பிட்டுப் பார்க்கறதையும் நம்மால நிச்சயமா தவிர்க்க முடியலை. ஏன்னா, இப்பத்திய குழந்தைகள் வாழும் சூழல் அப்படி. அதை நாமே உருவாக்கி வெச்சிட்டோம்ங்கறதும் வேதனைக்குரிய உண்மையே.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 40% இருக்கும் குழந்தைங்க சந்திக்க நேரிடும் பிரச்சினைகள் இன்னும் இருக்கு. இதுல முக்கியமானது ஆண்குழந்தை மோகத்தால் பெண்குழந்தைகளைக் கருவிலேயே அழிப்பது. இது போக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்து பிறத்தல், சரியான எடையில் பிறக்காம இருக்கறது, பிறந்த குழந்தைங்களும் தாக்குப் பிடிக்க முடியாம சின்ன வயசுலயே இறந்துடுறது, குழந்தைங்க மீது நடத்தப் படற வன்முறைகள்ன்னு எவ்வளவோ இருக்கு.

இந்தக் காலத்துக் குழந்தைகள் எதிர் நோக்க வேண்டியிருக்கற வாழ்க்கை சவால்கள் நிறைஞ்சதாவே இருக்குது. இன்றைய குழந்தைகள் வளர்ந்து பெரியவங்களாகும்போது தனக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கணும்ன்னு குறிக்கோளோட இருக்கறாங்க. அப்டி நினைக்கிறது தப்பேயில்லை. ஆனா, அப்படி இருந்தாத்தான் வாழ்க்கையில் ஜெயிச்சதாவும், அப்படியில்லைன்னா தான் எதுக்கும் லாயக்கில்லைன்னும் நினைக்கிறாங்க. சின்னத் தோல்விகளைக்கூட தாங்கிக்கற மனப்பக்குவம் அவங்களுக்கில்லை. எது சரி?.. எது தப்பு?ன்னு சரியான முடிவெடுக்கத் தெரியாம சட்ன்னு குழம்பிடறாங்க.

இதற்கெல்லாம் நம்ம கூட்டுக் குடும்ப கலாச்சாரம் அழிஞ்சுட்டு வர்றதும் பள்ளிகள்லயும் மாரல் வகுப்புகள் நடக்கறதில்லைங்கறதும் ஒரு முக்கியக் காரணம். அந்த வகுப்புகளுக்கான நேரத்தையும் உடற்பயிற்சி வகுப்புகளுக்கான நேரத்தையும் மத்த பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கறதுதான் இப்பல்லாம் நடக்குது. “ஓடி விளையாடு பாப்பா”ன்னு பாரதி பாடி வெச்சுட்டுப் போயிட்டார். ஆனா, இப்பத்திய குழந்தைகளோட குழந்தைப் பருவம் வகுப்பறையில் கரும்பலகை முன்னாடி இல்லைன்னா வீட்ல தொலைக்காட்சி, அல்லது கணினி முன்னாடி மட்டுமே கழியுது. இதுல எங்கேயிருந்து ஓடி விளையாடறது?..

குழந்தைகளுக்கு அந்தக் காலத்துல நல்லது கெட்டது, நம்ம கலாச்சாரப் பண்புகள், அப்றம் மற்றவர்களோட நல்ல உறவு முறைகளை பராமரிக்கச் சொல்லித் தரும் அனுபவப் பெட்டகங்களா தாத்தா பாட்டிகள் இருந்தாங்க. இப்ப அவங்கல்லாம் முதியோர் இல்லத்துக்குப் போயாச்சு. வீட்ல இருக்கற தாத்தா பாட்டிகள்லயும் சிலபேர் போட்டி போட்டுக்கிட்டு சீரியல் பாக்கறதும், ரிமோட்டுக்காக பேரப்பிள்ளைகள் கிட்ட மல்லுக்கு நிக்கிறதும்தான் சில வீடுகள்ல நடக்குது.

கதை சொல்லும் தாத்தா பாட்டியின் இடத்தை இப்ப தொலைக்காட்சியும் கணினியும் பிடிச்சுக்கிட்டது. அதிலும் முக்கியமா தொலைக்காட்சி குழந்தைகள் மனசுல ஏற்படுத்தும் தாக்கம் ரொம்பவே அதிகம். இப்பல்லாம் குழந்தைகளுக்கான நல்ல சினிமாவோ, இல்லை கார்ட்டூங்களோ கூட வர்றதில்லை. நிதர்சனத்தைக் காட்டுறதா சொல்லிக்கிட்டு காண்பிக்கப்படற அடிதடி, ரத்தம், முறையற்ற உறவுகள் மற்றும் வன்முறைகள் நிரம்பி வழியும் அந்தக் காட்சிகள் குழந்தைகளோட பிஞ்சு மனசுல நிச்சயமா விஷ விதைகளைத் தூவுது. சமுதாயத்தைப் பத்தின அவங்களோட சிந்திக்கும் கோணத்தையே நிச்சயமா மாத்துது.

இப்பத்திய கல்வியமைப்பும் குழந்தைகளுக்கு ரொம்பவே மன அழுத்தம் கொடுக்கக் கூடியதா அமைஞ்சுருக்கு. அவங்களுக்கு பிடிச்சதையோ அல்லது அவங்க எதுல திறமைசாலியோ அதைப் படிக்க அனுமதிக்கப்படாம, பெற்றோர்களோட விருப்பத்தை நிறைவேத்த நிர்ப்பந்திக்கப் படறாங்க. எல்லாத்துலயும் முதலிடம் வந்தேயாகணும்ன்னு பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் சமுதாயத்துலேர்ந்து வர்ற எதிர்பார்ப்புகளை நிறைவேத்த முடியாம திணறிப் போற குழந்தைகள் எக்கச்சக்கம்.
பாவம்.. குழந்தைகள். எத்தனைதான் பாரம் சுமப்பாங்க??
குழந்தைத் தொழிலாளர்கள் கூடாதுன்னு எத்தனை முறை எச்சரிக்கை செஞ்சாலும், சட்டம்,அபராதம், தண்டனைன்னு அரசாங்கம் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் அந்தக் கொடுமை ரகசியமாத் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு. ஏன்னா, அவங்களுக்குக் குறைவான கூலி கொடுத்தாப் போதுமில்லே.. ஆனா, அதுக்குப் பதிலா விலையுயர்ந்த அவங்களோட குழந்தைப் பருவத்தை பறிச்சுக்கிறோம்ன்னு யாருக்குமே தோணறதில்லை.

வீட்டோட நிலை காரணமா குழந்தைங்க பள்ளிக்கு அனுப்பப் படாம வேலைக்கு அனுப்பப்படுறதா காரணம் சொல்லப்படுது. பள்ளியில் சேர்க்கப்படற பத்துக் குழந்தைங்கள்ல நாலுபேர் ஆரம்பப் பள்ளியோட நின்னுடறாங்க, பத்துல அஞ்சு பேர் அஞ்சாம் வகுப்பைக் கூடத் தாண்டறதில்லை. பத்துல ஏழு பேர் மேல் நிலை வகுப்போட நின்னுடறதா புள்ளி விவரம் சொல்லுது. இப்படி பள்ளிப் படிப்பை நிறுத்தும் குழந்தைகளில் மூன்றில் ரெண்டு பங்கு அளவு பெண்குழந்தைளாக இருப்பது இன்னொரு கொடுமை. சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை நூறு சதவீதம் ஒழிச்சு அவங்களைப் பள்ளிக்கு அனுப்பினா நிச்சயமா அடுத்து வர்ற தலைமுறைகளும் பயனடையும். இதுக்கு பெற்றோர், ஆசிரியர், சமுதாயம்ன்னு எல்லோரோட ஒருங்கிணைஞ்ச முயற்சியும்  நிச்சயமாத் தேவை.

இன்றைய குழந்தைகள்தான் வருங்கால இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவும் அஸ்திவாரமாகவும் இருக்காங்க. அப்படிப்பட்டத் தூண்களைப் பலமுள்ளதா ஆக்க வேண்டியதும், அவங்க எதிர் கொள்ள வேண்டியிருக்கற பாதையை இடைஞ்சல்கள் இல்லாமச் சீர்திருத்திச் செப்பனிட்டுக் கொடுக்கறதும் நம்ம கடமைதானே?. இதைச் செஞ்சாத்தானே குழந்தைகள் தினம் கொண்டாடுறதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இப்படியொரு நல்ல சூழல்ல வளர்ற குழந்தைகளுக்கு வருஷம் முழுக்கக் குழந்தைகள் தினக் குதூகலமும் கிடைக்கும்.
வர்ஷா வடிவமைச்ச லோகோ..
ஊக்குவிக்கப்படற குழந்தைகள் நிச்சயம் சாதிப்பாங்கங்கறதுக்கு டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த   வர்ஷா குப்தா ஒரு நல்ல உதாரணம். இந்தியாவின் இசைக் கருவிகளை நினைவூட்டும் விதமா கூகிளின் லோகோவை வடிவமைக்கிறதுக்காக நடந்த போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சிருக்காங்க மூணாம் வகுப்பு படிக்கும் இந்த ஏழே வயசான குட்டிப்பெண். பரிசா ஒரு மடிக்கணினியும், அவங்க படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் மதிப்புல தொழில் நுட்ப வசதிகளும் கிடைச்சிருக்குது.அவங்க வடிவமைச்ச லோகோதான் இன்னிக்கு கூகிளின் முகப்பை அலங்கரிச்சுட்டிருக்குது.

நல்ல வாய்ப்புகளும் உற்சாகமும் கிடைச்சா எந்தக் குழந்தையும் சாதிக்கும். குழந்தைகளைக் கொண்டாடுவோம். அவங்களை வாழ்த்துவோம். அவங்களுக்காக ஒரு நாலஞ்சு வரிகளை எழுதியிருக்கேன். 


எங்களுக்கே என்றதோர் உலகம்
அதில்
ஆட்சியாளர்கள் மட்டும்
நாங்களில்லை..

கிட்டிப்புள்ளென்றும் பம்பரமென்றும்
கிராமமென்றும் கிணறென்றும்
டோரிமானென்றும் நிக்ளோடியனென்றும்
விளங்கவியலா விசித்திரச் சொற்களால்
குழம்புவதும் குழப்புவதுமே
எங்களது வாடிக்கையாகிப் போய்விட்டது..

துரத்தித் திரிந்த தும்பிகளையும்
பூவரச இலை பீப்பீயையும்
நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து
விவரிக்கும்போது
பனையோலைக் காற்றாடிகளுடன்
ஓட ஆரம்பித்திருக்கிறோம் நாங்கள்
சென்ற தலைமுறையின்
மனதெங்கும் அப்பிக் கிடக்கும்
செம்மண் புழுதியில்..

கணினி ஜன்னலில் முகம் புதைத்து
ஆசுவாசமுறும்
கூண்டுக்கிளிகளை
நோக்கி நகைக்கின்றன
அந்தக் காலச் சுதந்திரக்கிளிகள்..

டிஸ்கி: ஷைலஜா மேடம் அழைச்ச தொடர்பதிவுக்குப் பொருத்தமா அமைஞ்சுட்டதால, வல்லமையின் குழந்தைகள் தினச் சிறப்பிதழுக்காக எழுதியதையே இங்கே தொடர்ந்துட்டேன். இந்தத் தொடர்பதிவைத் தொடர.. 

பெண் பதிவிகளில்,

ஆண் பதிவர்களில்,
ஆகிய நால்வரையும் அழைக்கிறேன். 

பெண்களில் இருவர், ஆண்களில் இருவர்ன்னு அழைக்கணும், முடிஞ்சா இடுகையுடன் ஒரு கவிதையும், ஒரு புதிரும் இணைச்சா நலம். 

குழந்தைங்க அப்றம் குழந்தையுள்ளம் கொண்டவங்க அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

Monday, 26 September 2011

தெரிஞ்சுக்கிட்டுச் சாப்பிடலாமே..

இது நம்ம ராஜி அழைச்ச தொடர்பதிவு.. பாசக்கார புள்ளை. விட்டுட்டுச் சாப்பிட மனசில்லாம என்னை தொடரச் சொன்னாங்க. அப்புறம் பார்த்தா, தொடரச் சொல்லி அழைச்ச அவங்களே மறந்து போற அளவுக்கு ரொம்ப நாளு லீவு வுட்டுட்டேன். ஞாபகப்படுத்தலாம்ன்னு நினைச்சுட்டு, கடைசில அவங்களே கன்பியூஸ் ஆகி மறந்துட்டாங்களோ என்னவோ!!  ராஜி.. ச்சும்மா வெளாட்டுக்கு :-))

இந்த கேள்வித்தாளை பார்த்தாலே என்னவோ பரீட்சைக்கு போற மாதிரியே ஒரு ஃபீலிங்கு.. பாசாகணும்ன்னு வேண்டிக்கிட்டு தொடருகிறேன். கொஞ்சம் பார்த்து மார்க்கு போடுங்க ராஜி :-)

இனி, கேள்விக்கணைகள்...

இயற்கை உணவை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதுண்டா?
உண்டுங்க எசமானி. எங்க ஊர்ல இந்த வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, இது மாதிரி காய்கறிகள், அப்றம் ஆப்பிள் ஆரஞ்சு மாதிரியான பழவகைகள் எல்லாம் இயற்கையாத்தான் விளைவிக்கிறாங்க. இன்னும் செயற்கை காய்கனிகள் தயாரிக்க ஆரம்பிக்கலைங்க.. 

ஆஹா!!.. கிண்டலா????

ம்.. இல்ல்ல.. சுண்டல். முளைவிட்ட பயறுகளை சாலட்ட்டுன்னு இங்கிலிபீசுலயும், சுண்டல்ன்னு நம்மூர் மொழியிலயும் செய்யறதுண்டுங்க. அப்புறம், சமையலுக்கு காரட்டு, பீட்ரூட்டு, கோஸு, தக்காளின்னு காய் நறுக்கறச்சே, வாணலியில கொஞ்சமும், அப்பப்ப வாய்ல கொஞ்சமும் போட்டுக்கறது உண்டுங்க. ஏங்க,... இதெல்லாம் இயற்கை உணவுதானே??? 

மனசுக்குள்(ஸ்ஸப்பா.... முதல் கேள்விக்கே இப்டியா!!..) சரி அடுத்த கேள்வி.

இயற்கை உணவுப் பழக்கம் எந்த விதத்தில் உங்களுக்கு பயன் தருகிறது?
நினைச்சா சட்ன்னு தயாரிச்சுடலாம்ங்க. சமைக்கிற நேரம் மிச்சம். எல்லாத்துக்கும் மேல தேவையில்லாம உப்பு, புளி, சர்க்கரை, எண்ணெய்ன்னு உடம்புக்குள்ள ஒரு மளிகைக் கடையை ஆரம்பிக்காம ஆரோக்கியமா இருக்கலாமே. எப்பப்பாரு வறுத்தது, பொரிச்சதுன்னு வயித்துக்குள்ள தள்ளிக்கிட்டிருக்காம அதுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமில்லியா நம்ம ஜீரண உறுப்புகள் சரிவர இயங்கணும்ன்னா, அப்பப்ப சாப்பாட்டுக்கே லீவு விடறது நல்லதாம். அதை விரதம்ன்னு கூட சொல்லுவாங்க. அதோட வெறுமே ஜூஸா குடிக்காம பழங்களாவோ, காய்களாவோ சாப்டுறது இன்னும் நல்லது. சமைக்கிறதுனாலகூட சில விட்டமின்கள் அழிஞ்சு போகுது. அதெல்லாம் வீணாகாம அப்டியே நமக்கு கிடைக்குது. முக்கியமா முளைவிட்ட பயிறுகள்ல இரண்டு மடங்கு சத்து இருக்குதாம். சமைக்கிறதுனால இதெல்லாம் வேஸ்ட்டாத்தானே போகுது. இயற்கையா கிடைக்கிற சத்துகளை வீணடிச்சுட்டு, டானிக்குகளை வாங்கி முழுங்கறோம்.. (பாவம் அவங்களும் பொழைக்க வேணாமா :-))

ம்..ம்... இந்த பாயிண்டை நோட் செஞ்சுக்கறேன்.
ஹைய்யோ.. இதை கலைக்க மனசே வராதே.. எப்படி சாப்டுவாங்க??
அவல் எப்பவும் கையிருப்பில் இருந்தா ரொம்ப நல்லது தெரியுமோ, நனைச்சுப் பிழிஞ்ச அவலோட சர்க்கரை அல்லது வெல்லம், வாழைப்பழம், தேங்காய், ஏலக்காப்பொடி போட்டு பிசைஞ்சு சாப்ட்டா.... அமிர்தம் தோத்துடும். விஷுவன்னிக்கு இதுதான் சாமிக்கே நைவேத்தியம் செய்வோம்ன்னா பார்த்துக்கோங்களேன்.

அன்றாடம் சரியான நேரத்தில் சாப்பிடுவீர்களாஅல்லது பசிக்கும் நேரத்தில் உண்பீர்களா?
'பசித்துப் புசி' அப்டீன்னு நம்ம ஔவையார் பாட்டி சொல்லியிருக்காங்க. 'நேரத்துக்கு சாப்டுறது உடம்புக்கு நல்லது'ன்னு எங்க பாட்டி சொல்லியிருக்காங்க.நான் ரெண்டு பாட்டிகளின் சொல்லையுமே தட்றதில்லைங்க... இருந்தாலும் பசிக்குதோ இல்லியோ நேரத்துக்கு சாப்ட்டுடுவோம். நேரந்தவறி சாப்டுற பழக்கத்தால நம்ம உடம்புல 'வாதம், பித்தம்,கபம்' இதுகளோட சம நிலை பாதிக்கப்படுமாம். இப்படி பாதிக்கப் படறதால வியாதிகளும் வர ஏதுவாயிருக்குமாம். 

வலைப்பதிவில் சமையல் சம்பந்தமாக எழுதுவதற்கு யார் உங்களுக்கு தூண்டு கோலாக இருந்தார்கள்?
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'ங்கற குறிக்கோள்தான் தூண்டுகோலா இருந்துது. ஆரம்பத்துல எல்லாம் சமையலப் பத்தி இடுகையெல்லாம் எழுதணும்கற ஐடியாவே இல்லை. அதுக்கெல்லாம் ரொம்பப் பெரிய ஜாம்பவான்களெல்லாம் இங்கே இருக்காங்க. அப்றம், இதுவும் படைப்புகள்தானேன்னு பகிர்ந்துக்க ஆரம்பிச்சேன். 

புதியதாக ஏதாவது உணவு வகை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?..  அது சரியாக வரவில்லை என்றால்  என்ன செய்வீர்கள்?
ஹி..ஹி.. இது ஒரு நல்ல்ல கேள்வி.. சமையல் கத்துக்க ஆரம்பிச்ச ஆரம்பக் காலங்கள்ல, நமக்கு எல்லாமே புது உணவு வகைகளாத்தானே இருந்திருக்கும். சரி வரலைன்னா இன்னொருக்கா செய்றதுதான். இப்பல்லாம், மொதல்ல கொஞ்சமா செஞ்சு நான் மட்டும் ருசி பார்ப்பேன். எப்படியும் சரியா வந்துடும். அப்றம் வேற வேற காம்பினேஷன்கள்ல விதவிதமா செஞ்சு அசத்திடுவேனில்ல.  "நாளைக்கு அம்மா கிட்ட சொல்லி இன்ன அயிட்டத்தை செஞ்சுக்கிட்டு வா"ன்னு, என் பெண்ணோட தோழிகள் மெனக்கெட்டு ஆர்டர் கொடுத்து விடுற அளவுக்கு ஓரளவு நல்லாவே செய்வேன்.

உங்களது அன்றாட சமையலில், நீங்கள் கட்டாயம் தவிர்க்கும் சமையல் சம்பந்தமான பொருட்கள் ஏதாவது மூன்று.
எண்ணெய், டால்டா,நெய் இது மாதிரியான கொழுப்புச் சத்துள்ள பொருட்களை அதிகம் சேர்த்துக்கறதில்லை. (பசங்களோட ஆர்டர் :-)) பசங்களோட வளர்ச்சியின் ஒவ்வொரு கால கட்டத்துலயும், எங்கூட்ல ஒவ்வொரு வித சமையலுக்கு கிராக்கி இருந்தது, இருக்குது. அதனால எதையும் முழுசும் தவிர்க்க முடியாது, ஆனா, அளவோட பயன்படுத்துவோம். 

தினப்படி சமையலில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் சமையல் பொருட்கள் சில?
வெங்காயம், தக்காளி, பயிறு, பருப்பு, கீரை, காய்கறி வகைகள்.. தெனமும் சப்பாத்திக்கு சைடிஷ் செய்யணுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணா சேர்த்துக்கறதுதான். 

குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உண்டாகிறது?
குடும்பத்தினருக்கிடையே நிச்சயமா அன்னியோன்னியம் கூடுது.சாப்பாட்டுக்கு அப்பாற்பட்டு யாராருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுங்கறதை தெரிஞ்சுக்க முடியும். அன்னன்னிக்கு நடந்த விஷயங்களை ஒருத்தரோடு ஒருத்தர் பகிர்ந்துக்கறதுனால, ஏதாச்சும் ஆலோசனை தேவைப்பட்டா நிச்சயமா கிடைக்கும். எங்கூட்ல எல்லோரும் சாப்பாட்டு நேரத்துல வீட்ல இருந்தா, ஒண்ணா உக்காந்துதான் சாப்டுவோம். முக்கியமா இரவுச் சாப்பாடு கண்டிப்பா ஒண்ணாத்தான் இருக்கும். இது மட்டுமில்லாம, சாப்பாட்டை ஒவ்வொரு தடவையும் சூடு செஞ்சுக்கிட்டே இருக்க வேண்டிய தேவையில்லை. இதனால கேஸும் மிச்சமாகுதே :-)

உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் நீங்கள் விரும்பாத உணவு பரிமாறப் பட்டால் என்ன செய்வீர்கள்?
இதுவரைக்கும் அப்படியானதில்லை. ஆர்டர் கொடுக்கறச்சே க்ராஸ் செக் செஞ்சுட்டுத்தான் பணியாளர் அடுக்களைக்கே போவார். அந்தந்த உணவகங்களோட ருசியும் மாறுபட்டதில்லை. அதனால இப்படியொரு சூழ்நிலையை இதுவரை சந்திச்சதுமில்லை. அப்படி சந்திக்க நேர்ந்தா கண்டிப்பா கூப்பிட்டு அவங்க மனசும் நோகாம சொல்லிடுவேன். ஷிங்கனாப்பூர் போயிருந்தப்ப, பரிமாறும் தட்டை சரியா சுத்தம் செய்யலைன்னு பக்கத்து டேபிள் ஆள், ஹோட்டல் மேனேஜர் கிட்ட சொன்னப்ப, இந்த ஹோட்டல் வேணாம்ன்னு வெளியே வந்துட்டோம். உடல் ஆரோக்கியத்தை அடகு வைக்க முடியாதில்லையா..


ஆரோக்கியம்ன்னதும் சில விஷயங்கள் ஞாபகம் வருது. பொதுவாகவே சாப்பிடுறப்ப அரை வயித்துக்குத்தான் சாப்பிடணுமாம். அப்ப மீதி?.. கால் வயித்துக்கு தண்ணி குடிச்சுட்டு மீதி கால் வயித்தை காலியா விடணுமாம். இப்படி செய்யறதால சாப்பாடு ஒழுங்கா சீரணமாகுது. முடிஞ்சா வாரத்துக்கொருக்கா விரதமிருக்கறதோ, இல்லை ஒரு பொழுது மட்டும் சாப்பிடறதோ, நம்ம வயித்துக்கு நாம செய்யற உதவியாயிருக்கும். வயிறும் நம்மை வாழ்த்தும்.பாவம்.. அதுவும் எவ்வளவுதான் ஓவர்டைம் பார்க்கும் :-)


'உணவே மருந்து,.. மருந்தே உணவு'ன்னு சொல்லுவாங்க. அந்தக் காலத்துலயெல்லாம் சரியான உணவுப் பழக்கம் இருந்ததால வியாதிகள் வர்றது குறைச்சல். அப்படியும் மீறி வந்துட்டுதுன்னா, மூலிகைப் பொருட்களெல்லாம் சேர்த்து, சரியான சமையல் செஞ்சு சாப்பிட்டே வியாதியை விரட்டிடுவாங்க. இந்த மூலிகைகள்ல பெரும்பகுதி நம்ம அஞ்சறைப் பெட்டியில இருக்கறதாத்தான் இருக்கும். இப்ப, நம்மோட வாழ்க்கை முறைக்கு ஒத்து வராத, மாறிவரும் உணவுப் பழக்கத்தால வியாதியை வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கிறோம்ன்னே சொல்லலாம். பண்டிகை சமயங்கள்ல மட்டுமே செய்யப்பட்ட வறுத்த, பொரிச்ச உணவுகளை இப்போ தினமும் ஃபுல் கட்டு கட்றோம் :-) 


இப்படி ஃபுல் கட்டு கட்டினதுனால அஜீர்ணம் ஏற்பட்டா, எங்க பாட்டி, வெத்தலையில் ரெண்டு கல்லுப்பு, நல்ல மிளகு, ரெண்டு பூண்டுப் பல், துளியூண்டு சீரகம் வெச்சு, மடிச்சுத் தருவாங்க. மென்னு முழுங்கிட்டு பொறுக்கற சூட்டுல வென்னீரைக் குடிச்சாப் போதும், சரியாகிடும். அதே மாதிரி மோர்ல கொஞ்சூண்டு பொடி செஞ்ச பெருங்காயத்தை கலக்கியும் தருவாங்க. ரெண்டுமே கை கண்ட மருந்து. இங்கே ஹோட்டல்கள்ல சாப்பிட்டப்புறம் ஒரு கிண்ணத்துல பெருஞ்சீரகம் கொண்டாந்து வைப்பாங்க. அதுவும் இந்தக்காரணத்துக்காகத்தான் வைக்கப்படுதோ என்னவோ.


சமைக்கும் பாத்திரங்களைப் பொறுத்தும் உணவோட ருசி மாறுது. அந்தக் காலத்துல ஸ்வர்ண பாத்திரம்ன்னு சொல்லப்பட்ட மண்பாண்டங்களை சமையலுக்கு பயன் படுத்தினாங்க. இப்ப தண்ணீர்ப் பானையைத் தவிர வேற எதுக்கும் மண் பாண்டங்களை நாம உபயோகப்படுத்தறதில்லை. மத்த இடங்களைப் பத்தி எனக்கு தெரியாது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை அசைவம்,.. முக்கியமா மீன் குழம்பு செய்யணும்ன்னா மண் பாத்திரத்துலதான் செய்வாங்க. 


செப்பு,செம்புன்னு சொல்லப்படற தாமிரப் பாத்திரங்கள்ல இரவு முழுக்க தண்ணீர் நிரப்பி வெச்சு, காலையில அதை குடிச்சா உடலுக்கு நல்லதாம். ஆனா, வெண்கலம் மற்றும் தாமிரப்பாத்திரங்களை சமையலுக்கு பயன் படுத்தறதாயிருந்தா ஈயம் பூசித்தான் பயன் படுத்தணும். ஈயச்சொம்பு ரசத்தின் ருசியே தனியாச்சே :-)). அப்டி ஈயம் பூசலைன்னா அதுல வெச்சிருக்கற சாப்பாடு கண்டிப்பா ருசி கெட்டுப் போயிடும். இங்கே சில பேர் ஃபில்டர் செய்யப்பட்ட தண்ணியை, குழாய் பொருத்தப்பட்ட தாமிரப் பானையில ஊத்தி வெச்சுத்தான் பயன் படுத்துவாங்க. இப்பல்லாம், வெளியே எவர்சில்வராலயும் உள்ளே தாமிரத்தாலயும் ஆன, தண்ணீர் குடிக்கும் தம்ளர்களும் மார்க்கெட்டுக்கு வந்துடுச்சு.
உள்ளே செப்பு, வெளியே எவர்சில்வர்.. 
சாப்பாட்டில் சில பொருட்களை நாம தினம் தினம் பயன்படுத்துவது நல்லது. அதுல முக்கியமான மற்றும் முதலிடத்தை நல்ல மிளகு பிடிச்சுக்குது. 'பத்து மிளகு இருந்தா பகை வீட்டிலும் பசியாறலாம்'ன்னு சொல்லுவாங்க. அதுக்கேத்த மாதிரி இது செய்ற வித்தைகள் எக்கச்சக்கம். செரிமானக்கோளாறு, ஃபுட் பாய்சன், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, போன்ற வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை இது சரியாக்குகிறது, சீரண சக்தியை கூட்டுகிறது, மன அழுத்தம், மூச்சுக் கோளாறுகளையும் இது சரிப்படுத்துதாம்.


ஜலதோஷம் வந்தா, ரெண்டு நல்லமிளகை ஊசியில் குத்தி அதை தீயில் காட்டி, அதுல வர்ற புகையை சுவாசிச்சா சரியாகுமாம்.கொஞ்சம் கிர்ர்ர்ர்ர்ர்ன்னு இருக்கும். இருந்தாலும் ஓரளவு நிவாரணம் கிடைக்குது. அதே மாதிரி தொண்டை கரகரப்பு வந்தா நெய்யில் பத்துப் பதினஞ்சு நல்ல மிளகை, லேசா பொரிச்செடுத்து வெச்சுக்கிட்டு, ரெண்டு மூணா கடிச்சு முழுங்கிட்டு கொஞ்சம் வென்னீர் குடிச்சாலும் தொண்டைக்கு இதமா இருக்குது. காய்ச்சல் வந்தாக்கூட மிளகு ரசமும், மிளகு தட்டிப் போட்ட சுக்கு மல்லிக் காப்பியுமே பாதி நோயைக் குணப்படுத்திடுதே.


இஞ்சியும் இதே குணங்களைக் கொண்டதுதான். மோர்ல கொஞ்சூண்டு இஞ்சியைத் தட்டிப் போட்டுக் குடிச்சா அதோட ருசியே அபாரம். இதுகூட கொஞ்சூண்டு பெருங்காயத்தூள் சேர்த்துக்கிட்டா 'யே தில் மாங்கே மோர்'ன்னு பாடுவீங்க :-) தலைவலி வந்தா சுக்கை இழைச்சு, வலிக்கும் இடத்தில் பத்துப் போட்டா வலி குறையுது. மூட்டு வலிக்கும் பத்துப் போட்டா குணம் கிடைக்குதாம். ஆனா ஒண்ணு,.. வடிவேலு மாதிரி  பத்துப்(10) போடக் கூடாது :-) 


வாய்வுப் பதார்த்தங்களையோ இல்லை அசைவத்தையோ சமைக்கிறப்பவோ பூண்டு சேர்த்துக்கறது வழக்கம். உடம்பிலிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. வாரமொருமுறை பூண்டு சேர்த்து குழம்பு சாப்பிட்டா உடலுக்கு நல்லது. சுட்ட பூண்டும் சாப்பிடலாம். தீக்கங்கு இல்லைன்னா, கவலையில்லை.. வெறும் வாணலியில் வறுத்தாக் கூட அந்த ருசி பரவாயில்லாம இருக்கு.


வெந்தயத்தைப் பத்தி சொல்லியே ஆகணும். வெந்தயத்தையோ அல்லது வெந்தயக்கீரையையோ அரைச்சு, தலையில் தேய்ச்சு ஊற விட்டு, குளிச்சா முடிக்கு நல்லது. உடம்பும் குளுமையாயிருக்கும். வெந்தயப்பொடி, அல்லது அரை டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் ராத்திரியே அரைகிண்ணம் தயிர்ல ஊற விட்டு, மறு நாள் காலையில், 'கடக்'ன்னு முழுங்கி வந்தா, சர்க்கரை வியாதி இருக்கறவங்களோட இரத்தத்துல சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுல இருக்கும். கீரையை சமைச்சுச் சாப்பிட்டாலும் நல்லதுதான். கசப்பு தெரியாம இருக்கத்தான் தயிரும்,.. 'கடக்'கும் :-)


மஞ்சள் இல்லாம நம்ம சமையல் முழுமை பெறுமா என்ன??.. சூடான பால்ல மிளகுப் பொடியும், சிட்டிகை மஞ்சளும் போட்டுக் குடிச்சா இருமல் குணமாகுமுன்னு சின்னப் புள்ளைக்கு கூட தெரியுமே :-)) அதே மாதிரி பித்தம் காரணமா வாய்க்கு ருசியில்லாம இருந்தா, சீரகம் அதுக்கு நிவாரணம் கொடுக்குது. கேரளாவில் தெனமும் குடிக்கிறதுக்கு ஜீரக வெள்ளம் தயார் செய்யறதுக்கு அந்த மக்கள் அலுத்துக்கறதேயில்லை. 


அன்றாடம் பயன்படுத்துற காய்கனிகளும் அதன் சத்துக்களும்..


Fruit
VitaminContent in fruit (mg)

Apricots
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,2
0,06
0,05
0,06
5000
0,004

Apple
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,005
0,02
0,01
0,05
5000
0,003

Banana
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,008
0,04
0,03
0,36
10.000
0,016

Blackberries
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,015
0,08
0,04
0,07
150.000
0,008

Cherries
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,012
0,02
0,02
0,04
10.000
0,004

Grapefruit
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,028
0,07
0,02
0,03
40.000
0,015

Grapes
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,005
0,03
0,01
0,08
3000
0,001

Kiwi
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,007
0,01
0,02
0,12
70.000
0,023

Lemon
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,001
0,06
0,02
0,04
40.000
0,008

Lime
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
vitamine a 50 IU
vitamine b6 0,43 mg
vitamine b 0,020 mg
vitamine c 29,1 mg
If you have information on these values please contact us

Lychee
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,002
0,09
0,04
0,04
23.000
-

Mango
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,053
0,03
0,04
0,04
23.000
0,023

Melon
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
If you have information on these values please contact us

Orange
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,012
0,07
0,03
0,06
49.000
0,018

Peach
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,016
0,01
0,02
0,02
7000
0,002

Pear
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,002
0,01
0,01
0,02
4000
0,001

Pineapple
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0
0,07
0,02
0,09
25.000
0,004

Plum
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,062
0,02
0,03
0,1
5000
0,002

Pumpkin
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,025
0,04
0,04
0,02
16.000
0,007

Raspberries
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,004
0,09
0,06
0,06
5000
0,024

Strawberry
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,002
0,02
0,03
0,06
60.000
0,065

Tomato
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,088
0,05
0,02
0,08
15.000
0,008

Water melon
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,045
0,04
0,05
0,07
6000
0,001
Vegetable
VitaminContent in vegetable (mg) *

Artichoke
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,008
0,14
0,01
0,03
8000
0,05

Asparagus
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0
0,04
0,04
0,03
12.000
0,056

Avocado
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,11
0,06
0,12
0,36
17.000
0,008

Broccoli
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,2
0,1
0,3
0,21
110.000
-

Brussels sprouts
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,031
0,1
0,12
0,23
66.000
0,087

Cabbage
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,01
0,1
0,15
0,2
80.000
0,069

Carrot
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,6
0,01
0,01
0,03
1000
0,016

Cauliflower
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,001
0,05
0,07
0,2
80.000
0,044

Chicory
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,17
0,05
0,06
0,06
4000
0,05

Corn
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,007
0,12
0,07
0,1
0
0,034

Cucumber
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,034
0,03
0.01
0.03
10.000
0,005

Green paprika
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,022
0,03
0,07
0,18
70.000
0,055

Leek
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,094
0,12
0,04
0,25
20.000
-

Mushroom
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0
0,07
0,3
0,12
5000
0,032

Olives
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,049
trace amount
trace amount
0,02
0
trace amount

Onion
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,001
0,03
0,01
0,17
10.000
0,01

Peas
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,3
0,06
0,05
0,05
1000
0,022

Pickels
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,027
0
0
0,04
2000
0,004

Potatoes
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0
0,12
0,04
0,3
14.000
0,023

Radishes
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,002
0,05
0,03
0,08
20.000
0,028

Red paprika
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,2
0,03
0,07
0,18
150.000
0,055

Sauerkraut
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,003
0
0,04
0,13
25.000
0,009

Spinach
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,24
0,04
0,1
0,15
25.000
0,1

Zucchini
Vitamin A
Vitamin B1
Vitamin B2
Vitamin B6
Vitamin C
Folate (folic acid)
0,061
0,05
0,09
0,15
16.000

டிஸ்கி 1: 
நாம தினமும் சமையலுக்கு உபயோகப் படுத்தற காய்கனிகள்ல என்னென்ன சத்து எவ்ளோ இருக்குன்னு தெரிஞ்சுக்க வேணாமா... சிரமம் பார்க்காம ஸ்க்ரோல் செஞ்சு படிச்ச உங்களுக்கு நன்றி :-)) 

டிஸ்கி 2: அட்டவணை கொடுத்த இணையமே உனக்கு நன்றி




LinkWithin

Related Posts with Thumbnails