முன்னெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு செய்ற மாதிரியே, நவராத்திரி வர்றதுக்கும் பத்துப்பதினஞ்சு நாளுக்கு முன்னாடியிருந்தே பரபரப்பு தொத்திக்கும். இந்தவருஷம் என்ன பொம்மை புதுச்சா வாங்கலாம்.. எத்தனை படிகள் அமைக்கலாம், எப்படியெல்லாம் அலங்காரம் செய்யலாம்ன்னு மனசுக்குள்ளயே கணக்குகள் ஓடிக்கிட்டிருக்கும். இப்பல்லாம் படிகள் கட்றதுக்கு கூட மெனக்கெட வேண்டியதில்லை. ரெடிமேடா படிகள் கிடைக்குது. கொலுவெல்லாம் முடிஞ்சு ஏறக்கட்டினதும், அதை ஷெல்பா மாத்திக்கலாம். ஆனாலும், எங்கூட்ல இன்னும் பழைய முறைப்படி, கிடைச்ச பொருட்களைக்கொண்டுதான் படி கட்டுவோம். பசங்களுக்கு க்ரியேட்டிவிட்டியை கத்துக்கொடுக்கிறோமில்ல :-)))). இப்பவும், தையல்மிஷின், புக் ஷெல்ப், அட்டைப்பெட்டிகள்ன்னு சகலமும் படிக்கட்டா மாறியிருக்கு.
கொலுவின் முழுத்தோற்றம்.
இதுல அந்த தவழும் கிருஷ்ணர், விவேகானந்தர், மற்றும் தாத்தா,பாட்டி பொம்மைகள் எங்க வீட்டுல இருபத்தெட்டு வருஷமா இருந்திட்டிருக்கு. மத்தவங்களையெல்லாம் அப்பப்ப டூர் அடிக்கும்போது, நவராத்திரியை மனசுல வெச்சிக்கிட்டு வாங்கிப்போட்டுக்கிட்டு வந்தேன்.
வழக்கம்போல் முதல்படியில் புள்ளையாரும் கலசமும்.
பெரிய வூட்டுக்கல்யாணம்..
முளைப்பாரி இப்பத்தான் லேசா தலை காட்டுது..
மும்பையில் நவராத்திரி விழா களை கட்டிடுச்சு. இரவு ஏழுமணியளவில் மக்களெல்லாம் அங்கங்கே கூடி கர்பா(கும்மி) , மற்றும் தாண்டியா(கோலாட்டம்) ஆடி சந்தோஷப்படறாங்க. பத்துமணிக்கு மேல எங்கியும் பாட்டுச்சத்தம் கேக்கக்கூடாது. எங்காவது யாராவது மீறினா, போலீஸ் வந்து லேசா எச்சரிக்கை செஞ்சுட்டு போறாங்க. அஷ்டமி என்பதால் இன்னிக்கு மட்டும் விதிவிலக்காக, பன்னிரண்டு மணிவரைக்கும் ஆட்டம் போடலாம். பாரம்பரியமான தாண்டியா நடனங்களைப்போலவே 'டிஸ்கோ தாண்டியா'வும் பிரபலமாகிக்கிட்டு வருது. அதாவது ரீமிக்ஸ் பாடல்களுக்கு தாண்டியா நடனம் ஆடுறதைத்தான் அப்படி சொல்றாங்க :-))
தினமொரு சுண்டலும், நாளொரு கர்பாவும், பொழுதொரு பாராயணமுமாக நவராத்திரி நல்லாவே போயிட்டிருக்கு. தீமைகளை அழித்து, நன்மையை நிலை நிறுத்தும் இந்த பண்டிகை எல்லோர் வாழ்விலும் நன்மைகளை கொண்டுவரட்டும்..