Wednesday 8 May 2013

ஆகாயத்திலொரு அழகுத்திருவிழா.. (பாகம்-2)

ஒவ்வொரு நிமிடத்திற்கும் கலக்கலாய்க் கலர்கலராய் ஆடை மாற்றிக் கொண்டேயிருக்கிறாள் ஆகாயப்பெண். அவளுக்கும் அலுக்கவில்லை, சப்ளை செய்யும் சூரியனாருக்கும் அலுக்கவில்லை. பார்க்கும் நமக்கு மட்டும் அலுக்குமா என்ன?. 

நீல வெல்வெட்டில் வர்ணக்குப்பியைக் கொட்டிக்கவிழ்த்த குறும்புக்குழந்தை யார்?.. இப்பவே தெரிந்தாகணும் :-))


மழைக்காலத்தைய மந்தஹாசமானதொரு மாலைப்பொழுதில் மலைப்பகுதியில் மாட்டிய மரங்கள்...


கம்பத்தை விட விளக்கைப் பெரிதாகப் படைத்த சிற்பி யாரோ!!!

இன்னுமொரு நாளே.. புறப்படுவோம் இலக்கு தேடி..

வேகவேகமாய் உருவங்களை மாற்றிக்கொள்ளும் மேகங்களிடம் உருவங்களைக் கண்டறிதல் சிறுகுழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் வேடிக்கையான பொழுதுபோக்கு. இந்தப்படங்களிலிருக்கும் மேகங்களில் உங்களுக்கு என்ன உருவம் தெரிகிறதென்று சொல்லுங்களேன். கண்டறிந்து விளையாடுவோம் :-))





நிலமும் நீரும் ஆகாயமும் நெருப்பும் காற்றுமாக பஞ்சபூதங்களும் சந்திக்கின்றன இந்தக் குமரி முனையில்..

கதிரவனின் கண்ணாமூச்சி விளையாட்டு. எத்தனைதான் மேக முந்தானையில் முக்காடிட்டுக் கொண்டாலும் கொண்டையை மறைக்கத்தெரியவில்லை :-))))



இதோ கண்டுபிடித்து விட்டேனே :-))

முதல் பாகம் இங்கேயிருக்கு..

LinkWithin

Related Posts with Thumbnails