Showing posts with label குடியரசு தினம். Show all posts
Showing posts with label குடியரசு தினம். Show all posts

Sunday, 26 January 2020

71-வது வாழ்த்துகள்


பக்கத்து ஊரிலிருக்கும் ரயில் நிலையத்தின் வெளியே உள்ள மைதானத்தில், நவி மும்பையின் சிட்கோவானது, நடைப்பயிற்சி, ஸ்கேட்டிங், போன்றவற்றுக்கான பாதைகளை அமைத்துள்ளது. ஸ்கேட்டிங்கிற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள நேரத்தை மற்றவர்கள் யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். பணி ஓய்வு பெற்ற மக்கள் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு தங்கள் பொறுப்பில் வளர்த்தும் வருகிறார்கள். 

உடற்பயிற்சியில் ஆர்வமும் அனுபவமும் உள்ள மக்கள் தாங்களாகவே இணைந்து பல்வேறு குழுக்களாக அமைந்துள்ளனர். அதாவது, இது 'தானாச்சேர்ந்த கூட்டம்'. இதில், யோகாவில் பயிற்சி உள்ளவர், பிற உடற்பயிற்சிகளில் அனுபவமுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது வழக்கம். இங்கே எல்லோரும் மாணவரே, எல்லோரும் குருவே. 

கூட்டத்தில் இணைய விருப்பமில்லாதவர்கள் தனித்தனியாக சித்தம் போக்கில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம், இன்ன பிற உடற்பயிற்சிகள் போன்றவற்றை ஆங்காங்கே அமர்ந்து செய்வது வழக்கம். இதில் இரண்டு குழுக்கள் கொடியேற்றுதல், உரையாற்றுதல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம், கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி சிறு ஊர்வலம்,என இன்றைய குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அவற்றில் சில காட்சிகள் இங்கே..





கொடி வந்தனம்


வந்தே மாதரம் என்போம்

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்




தாயின் மணிக்கொடி பாரீர்..
வேற்றுமையில் ஒற்றுமை,.. அதுவே இந்தியா. அந்த ஒற்றுமையையும் ஒருமைப்பாடையும் அசைத்துப்பார்க்கவும் சோதித்துப்பார்க்கவும் அடிக்கடி சில நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனைகள் சூழ்ந்துள்ளன. அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி நாம் எப்போதுமே ஒரு தாய் மக்கள்தான் என்பதை நிரூபிப்போம். தாயின் மணிக்கொடி வாழியவே. அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

Friday, 26 January 2018

69 - வது வாழ்த்துகள்

குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தினங்களில் மும்பையின் முக்கியமான கட்டடங்கள் நம் மூவண்ணக்கொடியை நினைவூட்டும் வகையில் மூவண்ண பலூன்கள் அல்லது விளக்குகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். நவிமும்பையின் மாநகராட்சிக்கட்டடமும்  அந்தப்படியே மூவண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருந்தது காண கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. காமிராவில் சிறைப்பட்ட அக்காட்சி உங்களுக்காக..


 225 அடி உயரக்கம்பத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் நம் இந்தியத்தாயின் மணிக்கொடி. இதைப்பற்றி ஏற்கனவே இங்கே எழுதியிருக்கிறேன்.










அனைவருக்கும்
இனிய
குடியரசு தின நல்வாழ்த்துகள்

Monday, 26 January 2015

66 - வது வாழ்த்துகள்..

அனைவருக்கும் இனிய 66-வது குடியரசு தின நல்வாழ்த்துகள்.

இந்தியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பத்தில் 225 அடி உயத்தில் பறக்கும் நமது தேசியக்கொடி. இது நவி மும்பை மாநகராட்சியின் புதிய கட்டடத்தில் 24 மணி நேரமும் பறந்து கொண்டிருக்கிறது. (இதைப்பற்றிய விரிவான கட்டுரை பின்னர் வரலாற்றில் பதியப்படும். வரலாறு முக்கியம் மக்கள்ஸ்..)




வழக்கத்தை உடைக்கும் விதமாக ஆரஞ்சு மிட்டாய்க்குப்பதில் சீரக மிட்டாய் :-))


LinkWithin

Related Posts with Thumbnails