குத்துவதால் மன்னுயிர் கத்திடுதே – சத்தமின்றி
சுத்திடினும் மட்டையால் சாகும் மருந்துக்கு
எத்திடுமிப் பொல்லாக் கொசு (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
ஆணவர் அஞ்சிட ஆரணங்கு செய்திட
மாணப் பெரிதே கவலையிது- வாணலியில்
அப்பாமல் வந்தால் அருசியாம் அம்முறைநீ
தப்பாமல் உப்புமா செய் (இருவிகற்ப நேரிசை வெண்பா)
விரும்பி வனங்களை யுண்டு - கரும்பாய்
வருக்கையும் மாவும் வகையாய் அளித்தும்
வருத்திடவும் செய்யுதே காண் (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
நீந்துபுனல் கொண்டோன் அருளினால் - ஏந்துபுகழ்
நாஞ்சிலாம் நாடிதுடன் என்றென்றும் வாழியவே
நாஞ்சிலின் சீர்மிகு கூர் (இருவிகற்ப நேரிசை வெண்பா)
அரவமிகு கோயிலின் நாமமிதன் பேராம்
அருமாந்த ஊரிதன் மன்புகழ் சாரலாம்
கொஞ்சும் இயற்கையையும் நங்கைநீ பாடுக
நாஞ்சிலின் நாரோயில் சீர் (இருவிகற்ப நேரிசை வெண்பா)
4 comments:
அசரவைக்கும் பாக்கள்... ஊற்றுப்போல சரசரவென்று கொட்டுகின்றனவே.. பாராட்டுகள் சாந்தி.. அந்த உப்புமா பா அதிசுவைப்பா.
சாதா பா வே வராது... வெண்பாவுக்கும் எனக்கும் தூரம் ஜாஸ்தி! அப்பாதுரை இதில் ஜித்தர்! பாக்களை ரசித்தேன்!
நானும் ரசித்தேன் :)
அனைத்தும் வீண்பாக்களல்ல. அருமாந்த வெண்பாக்கள். நாஞ்சில் புகழும், நாரோயில் நன்னினைவும் நெஞ்சில் நிறைந்ததப்பா. வாழ்க.
Post a Comment