Wednesday 13 April 2016

சித்திரைப்பெண் வந்திட்டாள்..

விடிந்தால் தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. வருஷாவருஷம் செய்யும் வழக்கப்படி இந்த வருஷமும் கனிகாண எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்தாயிற்று. எப்பொழுதோ திருவாங்கூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பூர்வீகப் பாசம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளிலும் கோயில்களிலும் இருள் பிரியாத விடியலில் கனி கண்டு, தன்னிலும் வயதில் சிறியவர்களுக்குக் கைநீட்டம் கொடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. மும்பையிலும் ஐயப்பன் கோயில்களிலெல்லாம் பெரிய உருளியொன்றில் எல்லா வகைப்பழங்களையும் நிரப்பி வைத்து, கனிகாணல் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டு, தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்குக் கைநீட்டமும் அளிக்கப்படுகிறது.

எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்ப்புத்தாண்டைக்கொண்டாடும் முறை பற்றி முன்பொரு முறை எழுதியதை இங்கே சுட்டியைச்சொடுக்கி வாசிக்கலாம்.

சற்றே எளிமையாக ஒரு கனிவைப்பு..

 கனிகண்டு கை நீட்டமும், மஞ்சள் குங்குமமும் எடுத்துக்கொண்டு,

கிருஷ்ணனின் அருள் பெற்று,


வாழ்வு என்றென்றும் ஒளிமயமாக இனிமையாக அமையட்டும்.
தமிழ்ப்புத்தாண்டை வரவேற்று ஒரு கலி விருத்தம்

எத்திக்கும் பொற்கொன்றை ஏந்தெழில் விளங்கிட
தித்திக்கும் கானத்தில் திளைத்திடும் கோகிலம்
சித்திரைப்பெண் வந்திட்டாள் சீர்நிறைக் கொடையொடு
சித்தமெலாம் இனித்திடவே சகமெலாம் வாழ்கவே

அனைவரும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று  இனிதே வாழ இனிய சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

4 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான புத்தாண்டுச் சிறப்புப் பதிவு

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

முத்துச் சிதறலை
சிந்தையில் அள்ளினேன்
பயனுள்ள தகவலுடன்
சிறந்த பாடல் காணொளியுடன்
பதிவு மிக மிக அருமை

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனியத் தமிழ்ப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கைநீட்டம் விளக்கம் அருமை. கைநீட்டம் வாங்கி சேர்த்த காலங்கள் மனதில் ஓடுகிறது.

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் அருமையான பகிர்வு. புத்தாண்டு வாழ்த்துகள்!

LinkWithin

Related Posts with Thumbnails