மக்களைப் பள்ளியில் பார்வதி சேர்த்திடுமுன்
மிக்க விரைந்து உரைத்திடுக - தக்கதோர்
ஓலைக் கொருவிலக்கம் உண்ட துவல்லெனில்
மாலைக்குள் ஏறும் தொகை
என்றும் சுடலையே ஏற்றவிடம் - அன்னையவள்
கண்டாளே புற்றினைக் கோவிலாக பிள்ளையும்
கொண்டான் அரசடி தான்
கனியால் கசந்தவன் குன்றேறி நின்றான்
இனிதாய் உரைகூறி அம்மையும் பற்றிவர
ஒக்கல் இறங்காயோ ஓர்பிடி நீவிடாயோ
பக்கலில் தேடுகிறான் பார் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)
அழகிய படத்தைத்தந்துதவியமைக்கு நன்றி பத்மாசனி ஸ்ரீமதன்
குமிழ்நகை கண்டு குதித்துவந்த வானம்
குமிழொளிந்து வண்ணவில்லாய் தானிறங்கி பாலன்
மழலை மொழிகேட்டு தான்மயங்கி மங்கி
அழகற்றுச் செல்லுதே வில் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)
நம் வித்யா சுப்ரமணியன் வரைந்த படத்திற்காக கிச்சா என்னை எழுத வைத்த வெண்பா
உருவுதடம் நீக்கி உறிதொங்கி வெண்ணெய்
திருடுவாய் ஏடணையொ ளிக்கவொட்டா கண்ணா
சதங்கை சிணுங்கிட சாயுமுரல் கத்த
சிதறுதே வெண்ணெயும் காண் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)
வால்: படங்கள் கொடுத்த தூண்டுதலால் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே சேமிக்கப்படுகின்றன.
4 comments:
படமும் பாடலும் மிக அருமை.
மிக மிக அற்புதம்
மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிகக் குறிப்பாக எழுத வைத்தவருக்கும்...
வாங்க கோமதிம்மா,
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க ரமணி,
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment