Sunday, 9 January 2011

ஸ்டாப் வந்துட்டுது...... இறங்கிக்கறேன்!!..


கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு எப்படி ஓடிப்போச்சுன்னே தெரியலை..  இந்தவாரத்தைச்சொன்னேன். என்னையும் நம்ம்ம்ம்ம்ம்பி இந்த பொறுப்பை ஒப்படைச்ச சீனா ஐயாவுக்கும், வலைச்சரக்குழுவினருக்கும், மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

ஏன்னா,.. வழக்கமா படிக்கிற பதிவுகள் தவிர நெறைய புதிய பதிவுகளையும் கண்டுக்கிடறதுக்கு, எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இருந்திச்சு. அதையெல்லாத்தையும், பிரபலம்,புதுசுன்னு கதம்பமா தொடுத்துட்டேன். ஜூரமெல்லாம் ஒண்ணும் வரலை. மத்தபடி பரீட்சைக்கு படிக்கிறமாதிரி ஜாலியா படிச்சுட்டே இருந்தேன் :-))). வலைச்சரப்பொறுப்பை சாக்குவெச்சு, கணினியை ஆக்கிரமிக்க முடிஞ்சது. இல்லைன்னா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல எனக்கு அனுமதிகிடைக்காது :-))

பின்னூட்டமிட்டு 'ஊக்கு'வித்த உங்கள் அனைவருக்கும், பின்னூட்டம் போடலைன்னாலும்..  தினமும் படிச்சுட்டுப்போன மற்ற அனைவருக்கும்,  'லேட்டானாலும் லேட்டஸ்டா, நமக்கெல்லாம் தளம் கொடுத்து உதவிய கூகிளம்மனுக்கும்(இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு ஆரும் திட்டப்டாது:-)) நன்றி'.... ('சொல்ல மறந்தா,  பாஸ்வேர்டு மறந்துபோகக்கடவதாக' அப்படீன்னு யாரோ சொல்றமாதிரியே.. காதுக்குள்ள கேட்டுக்கிட்டிருக்கு). 

மறுபடியும்,..  அடுத்து வரப்போற ஆசிரியருக்கு வாழ்த்துக்களும், எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும், வரப்போற பொங்கலுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களும் சொல்லிக்கிறேன்.




Saturday, 8 January 2011

கத்துக்கலாம்..வாங்க.

"வாங்கக்கா.."

"வரச்சொன்னியாமே... குழந்தை வந்து கூப்பிட்டா.."

"ஆமாங்க்கா.. புதுச்சா கணினி வாங்கியிருக்கோம். எனக்கு அதப்பத்தி ஒண்ணும் தெரியாது. அதான் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கூப்பிட்டு வரச்சொன்னேன்."

"நானும் உன்னைமாதிரிதான்.. ஆனா, தெரியாததை இணையத்துல தேடிப்பார்த்து தெரிஞ்சுக்குவேன். தமிழ்ல நிறைய வலைப்பூக்கள்ல எக்கச்சக்கமான விபரங்களெல்லாம் கொட்டிக்கிடக்கு .."

"வலைப்பூக்கள்ன்னா என்னக்கா.... ரோஜா, மல்லிகை மாதிரியா.."

வலைச்சரத்துக்கு வந்தா மிச்சத்தையும் படிக்கலாம் :-)))))

Friday, 7 January 2011

ஃபோகஸ் லைட்...

'எக்ஸ்போ-11' என்று சீரியல் பல்புகளாலேயே வடிவமைக்கப்பட்டிருந்த வளைவு நுழைவாயிலின் அருகே, நடந்துபோய்க்கொண்டிருக்கும் அந்த தம்பதியையும், கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்களே,..  அந்தக்குழந்தையையும் நல்லா பார்த்துவெச்சுக்கோங்க. பொருட்காட்சியில் ஒவ்வொரு இடங்களாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டமா இருக்கிற இடங்கள்ல குழந்தைகளை பத்திரமா கையில் பிடிச்சுக்கவேண்டாமோ!!.. இவங்க கையிலிருந்து நழுவி அவன் ஓடறதும், துரத்திப்பிடிக்கிறதுமா இருக்குது.

"அப்பா... எனக்கு பட்டம் வேணும்,.. வாங்கித்தாங்க"

"நீ சின்னக்குழந்தைடா.. உனக்கு பட்டமெல்லாம் விடவருமா.. சும்மா பிச்சுப்போட்டுடுவே.. என்னங்க,.. அதெல்லாம் வாங்கவேணாம்"

"பரவாயில்லைம்மா, குழந்தை ஆசைப்படுறானில்ல.. இருக்கட்டும். சின்ன வயசுல பட்டம்ன்னா எனக்கு உசிரு. அந்த ஜாலியே தனி. வெங்கட் நாகராஜ்ங்கிறவர் அதப்பத்தி என்னமா எழுதியிருக்காரு தெரியுமா"

வாமன் ஹரி பேட்டே ஜூவல்லர்சின் ஸ்டாலை கடந்துபோகும்போது, வெளியே ஃப்ளக்ஸ் பேனரில் வரையப்பட்டிருக்கும் ஜிமிக்கிகள்,  ஒரு நிமிஷம் கடைக்குள்ள வந்துதான் பாரேன்னு கூப்பிடுது. ஆபத்தை உணர்ந்த கணவன், 'என்னத்த பெரிய ஜிமிக்கி!!!.. உன்னோட முகத்துக்கு ஜிமிக்கியைவிட தோடுதான் நல்லாருக்குது. அப்படியே அம்மன் சிலை மாதிரி இருக்கே தெரியுமா?..' என்றான் அவசரமாக.

மேலும் படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-)))))))



Thursday, 6 January 2011

மகளிர் அணி..

அந்த ஊரின் லேடீஸ் க்ளப் தன்னுடைய ஐந்தாவது ஆண்டுவிழாவை மிக சிறப்பாக நடத்த திட்டமிட்டிருந்தது. ஆகையால், அந்த புகழ்பெற்ற மண்டபமொன்றில் விழா ஏற்பாடாகியிருந்தது. பந்தல்களும், பந்தல்களில் தொங்கும் ஒளிச்சரங்களும் கண்ணைப்பறித்தன. அனைவரும் மண்டபத்தின் உள்ளும் வாசலிலுமாக கூடியிருந்து சிறப்புவிருந்தினருக்காக காத்திருந்தார்கள். அந்த ஊரில் சிறிய அளவில் பத்திரிகை நடத்திவரும் ஒருவரை விருந்தினராக அழைத்திருந்தார்கள். காரில் வந்திறங்கிய விருந்தினருக்கு மாலைமரியாதைகளை அளித்தபின், உள்ளே அழைத்துச்சென்றார்கள் விழாக்குழுவினர்.

பேச்சும் பாராட்டுக்களும், பொன்னாடைகளுமாக விழா நிறைவுற்றது. விழாக்குழுவினரில் ஒருவர் சிறப்புவிருந்தினரிடம் ஏற்கனவே விழாவுக்குப்பின் ஒரு கலந்துரையாடல் இருப்பதாகவும், அதில் அவர் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்றும் கூறி அனுமதி வாங்கியிருந்தார்.

அனைவரும் ஓய்வாக நாற்காலிகளை எடுத்துப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒரு பெண் சிறப்புவிருந்தினரை வந்ததிலிருந்தே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியில் ஆர்வம் தாங்காமல் கேட்டுவிட்டார்.

"மேடம்... நீங்க ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களே.. தவறாம ஜிம்முக்கெல்லாம் போவீங்களா!!..."

"இல்லைம்மா,.. கோவை2தில்லி சொல்லியிருக்கிற தோய்ப்பு நடனத்தை தினமும் மூணுதடவை செய்வேன், அவ்ளோதான். அப்புறம், மாதேவி சொல்லியிருக்கிறமாதிரி அகத்திப்பூவை அடிக்கடி சமைச்சு சாப்பிடுவேன். இப்படி , எளிமையாத்தான் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துட்டு வரேன். மத்தபடி பெரிய காரணம் எதுவுமில்ல.. "

மேலும் படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-))))


Wednesday, 5 January 2011

பாப்பா.. பாப்பா.. கதை கேளு.

அன்றைக்கு குழந்தைகளின் கும்மாளம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர்களின் அம்மா சவிதா. , "என்ன!!.. ஒரே சத்தக்காடா கெடக்குது?" என்று கேட்டபடி வீட்டுக்குள் நுழைந்தார் மரகதம்பாட்டி.

பாட்டியின் கையிலிருந்த கூடையிலிருந்து குங்குமப்பிரசாதத்தை எடுத்துக்கொண்டபடியே சவிதா," ஏம்மா இவ்ளோ நேரம்??.. கோயில்ல ரொம்ப கூட்டமா?" என்று கேட்டாள்.

"கோவில்ல நம்ம சௌந்தரம்மா(கேணிப்பித்தன்) மகளைப்பார்த்தேன். ஊருக்கு வந்திருக்கா போலிருக்கு. ஹூம்!!.. எப்படியிருந்த குடும்பம்.."

"என்ன பண்றது!!.. காலம் யாரை எங்க கொண்டுபோய் வைக்கும்ன்னு யாருக்குத்தெரியும்!!.."

அப்படியே, வர்ற வழியில ஜெயந்தியையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்தேன். அதான் இம்புட்டு நேரமாயிடுச்சு.இந்தப்பொண்ணோட ரௌத்திரத்துக்கு பின்னாடி இருக்கிற கதை(ராகவன்)யை நினைச்சா மனசு அப்படியே கலங்கிப்போகுது.."

இதற்கிடையில் பசங்களின் கூச்சல் அதிகமானது."அது என்னங்கேன்.. .. ஒரே வாக்குல" செல்லமாக அதட்டினாள் பாட்டி.

" பாட்டி.. அம்மாட்ட கதை சொல்லச்சொன்னோம். அம்மா எனக்கு கத சொல்லத்தெரியாதுன்னு சொல்றாங்க" என்று புகார் வாசிக்கப்பட்டது.

"கதைதானே... பாட்டி சொல்றேன். கேட்டுக்கிட்டே சாப்பிடுவீங்களாம். சரியா?.."

மேலும் படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-))


Tuesday, 4 January 2011

புதுப்படம்...

 நகரின் நடுவில் அமைந்திருந்த அந்த பெயர்போன ஹோட்டலின் பன்னிரண்டாவது மாடியில், பன்னிரண்டாவது அறை. சோபாக்கள் எதுவுமில்லாமல் தரைத்தளத்துக்கு அமைக்கப்பட்ட திவான்கள். அதன்மேல் இரண்டுமூன்று உருட்டுத்தலையணைகள். அறைக்குள் சுமார் ஏழெட்டுப்பேர் அவரவர் சௌகரியத்துக்கேற்ப சாய்ந்துகொண்டும், உட்கார்ந்துகொண்டும், மடியில் தலையணைகளை வைத்துக்கொண்டும் இருந்தார்கள். நடுநாயகமாக ஒருத்தர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஒரு புதுப்படத்துக்கான கதைக்கலந்துரையாடல் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தது . கதை காற்றுவாக்கில் கசிந்துவிடாமலிருக்க, அறையின் ஜன்னல்கள் இறுக மூடப்பட்டிருந்தன.

டயரக்டர்: நாலு நாளா ரூம்போட்டு யோசிச்சும் நம்ம படத்துக்கு ஒரு கதை சிக்க மாட்டேங்குதே. வாங்கிட்டு வந்த டிவிடியெல்லாம் வீணாப்போச்சே..  ஸ்விட்சர்லாந்துல போய் யோசிச்சாத்தான் கதை சிக்கும்போலிருக்கு.

உதவி டயரக்டர் 1: சார்.. நான் ரொம்ப நாளா ஒரு கதையை யோசிச்சு வெச்சிருக்கேன். நீங்க சரீன்னா சொல்லுவேன்..

டயரக்டர்: சொல்லு.. சொல்லு.

உ.டயரக்டர் 1:ஓப்பன் செஞ்சா.. ஒரு காலேஜ். ஆண்டுவிழாவுக்கு ஹீரோ வந்திருக்கார். அப்ப, படிக்கிறகாலத்துல வாங்குன பல்பெல்லாம் ஞாபகம்வருது. யாருமே ஆட்டோக்ராப் கேக்காத சோகத்துல வீட்டுக்கு வந்தா அவரோட பையன் ஒரு மெகாபல்பு கொடுக்கிறான்.

இணை இயக்குனர்: டயரக்டர் சார்.. இதை R.கோபி எழுதியதிலிருந்து காப்பியடிச்சு சொல்றார்.. நான் ஒரு கதை வெச்சிருக்கேன். நான் சொல்றேன் சார்....

மீதியை படிக்க வலைச்சரத்துக்கு வாங்க :-))))




Monday, 3 January 2011

அழைப்பிதழ்...

காலம்:  இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு.(போறாத காலம்ன்னு மனசுக்குள்ள நினைக்கிறது கேக்குது :-))))

நிகழ்வு: சிறப்பாசிரியர் பணியேற்பு.

இடம்: வலைச்சரம்.

அன்புடையீர்,

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இன்றிலிருந்து (3-1-11) ஒருவாரத்துக்கு வலைச்சரத்தின் சிறப்பாசிரியர் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஆதலால், தாங்கள் சுற்றம்சூழ, நண்பர்களையும் அழைத்துக்கொண்டு, அங்கே வந்திருந்து மொய்யெழுதி நிகழ்ச்சியை சிறப்பிக்கும்படி கேட்டுக்கொல்கிறேன்.
அன்புடன்,

அமைதிச்சாரல்..




LinkWithin

Related Posts with Thumbnails