எட்டூருக்கு மணக்கும் எங்கள் நாஞ்சில் நாட்டு தீயல், குமுதம் சிநேகிதியால் இனிமேல் எட்டுக் கண்டங்களிலும் மணக்கப்போகிறது. ஏழு கண்டங்கள்தானே உண்டு.. எட்டாவது கண்டம் எது? எனக்குழம்பாதீர்கள். கழுத்துக்கும் கண்டம் எனப்பெயருண்டே :-). செய்து சாப்பிட்ட பின் ருசி நாக்கோடு நின்று விடாமல் கழுத்து வரைக்கும் பரவும் என உறுதியிட்டுக்கூறுகிறேன் :-)
தீயலின் செய்முறையை அறிய சுட்டியைச் சொடுக்குங்கள்.
"ஆடிச்சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் குமுதம் சிநேகிதியின் ஆகஸ்ட் மாத இதழில் நான் எழுதிய "நாஞ்சில் நாட்டு தீயல்" வெளியாகியிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வெளியிட்ட சிநேகிதிக்கும், திருவட்டாறு சிந்துகுமார் அண்ணனுக்கும் மிக்க நன்றி.
தீயல் எட்டுத்திக்கும் மணக்கட்டும்... ட்டும்.. டும்.. ம்..
3 comments:
வாழ்த்துக்கள்
தீயல் என்றாலே தனி ருசிதான் நாவறியும்,
வாழ்த்துகள் தொடரட்டும்... ட்டும்...
வாழ்த்துக்கள் சகோ...மிக மகிழ்ச்சி..
Post a Comment