Monday, 2 May 2016

உழைப்பாளர் தினம் - மே தினம் - மஹாராஷ்ட்ர தினம்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, மேற்கு மற்றும் நடு இந்தியாவில் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பிரதேசங்கள், மன்னர்கள் ஆண்ட ராஜ்ஜியங்கள் போன்றவற்றை இணைத்து மராட்டிய மாகாணம் உருவானது. தற்கால குஜராத் மாநிலம், மகாராட்டிர மாநிலத்தின் கொங்கன், தேஷ், கான்தேஷ் பகுதிகள், கர்நாடகத்தின் வடமேற்குப் பகுதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணம், ஏமன் நாட்டின் ஏடன் நகரம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கியிருந்தன. 


தனி மாநிலம் வேண்டுமென்று போராடிய சம்யுக்த மராட்டிய இயக்கத்தினரின் ஒரு போராட்டத்தின் போது 105 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து, முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மராட்டிய மாகாணம் கலைக்கப்பட்டு, தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960ல்உருவானது. மஹாராஷ்டிர மாநிலம் பிறந்த இத்தினத்தை இங்குள்ள மக்கள் "மஹாராஷ்டிர திவஸ்" என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் உழைப்பாளர் தினமான மே தினமும், மஹாராஷ்ட்ர தினமும் ஒவ்வொரு வருடமும் இணைந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. 



மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசப்படும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள், முந்தைய ஹைதராபாத் மாகாணத்தின் எட்டு மாவட்டங்கள் போன்றவை இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. குஜராத்தி மொழி பெருவாரியாகப்பேசப்படும் பகுதிகள் இணைக்கப்பட்டு குஜராத் மாநிலமும் இதே நாளில்தான் உருவானது. இன்றைய தினம் தாதரிலிருக்கும் சிவாஜி பார்க்கில் ஊர்வலங்கள், மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுவதோடு மராட்டிய மாநில ஆளுநரின் உரையும் கட்டாயம் இடம் பெறும். மஹாராஷ்டிர தினத்தன்று மாநிலம் முழுவதும் மதுபான விற்பனையும் கண்டிப்பாகத்தடை செய்யப்பட்டிருக்கும்.








வால்: மஹாராஷ்டிர தினத்தையும் உழைப்பாளர் தினத்தையும் இணைத்துக்கொண்டாடும் எங்கள் வழக்கப்படி, உழைப்பாளர்களின் உழைப்பும் சாதனைகளும் இங்கே ஒளிப்பட வடிவில் கொண்டாடப்படுகின்றன :-)

4 comments:

Yaathoramani.blogspot.com said...

நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
அற்புதமான படங்களுடன்
அறியாத சரித்திரத் தகவலையும் அறிந்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

மஹாராஷ்டிர திவஸ் பற்றி அறிந்து கொண்டோம். படங்களும் பகிர்வும் அருமை.

உழைப்பாளர் தின, மே தின, மஹாராஷ்டிர திவஸ் வாழ்த்துகள்!

மோகன்ஜி said...

படங்கள் கூறும் பல கதைகள்!

சிவகுமாரன் said...

நிறைய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails