Saturday 6 August 2011

லொள்ளுடன் ஒரு அட்வைஸ் :-))).

அந்தக்காட்டுல சிங்கம்,புலி, சிறுத்தை முதலான மாமிச பட்சிணிகளும் மான் முயல், எலி, யானை போன்ற தாவரபட்சிணிகளும், ரெண்டையும் கலந்தடிச்சு சாப்டுற,.. வயித்துக்கு வஞ்சகம் செய்யாத பிராணிகளும், எக்கச்சக்கமா வசிச்சு வந்தன. மனிதர்களோட பார்வை இன்னும் படாத காடு.. ஆகவே எக்கச்சக்கமான மரங்கள் ரொம்பவே அடர்ந்து படர்ந்து சூரியக்கதிர்களே தரையில் விழாதபடிக்கு எக்கச்சக்க நிழல் கொடுத்து வந்தன. மிருகங்களும் வேட்டையாடப்படற பயமில்லாம சுதந்திரமா சுத்திக்கிட்டு வந்தன..

அங்க இருக்கற மிருகங்களோட ஒர்ரே கெட்ட பழக்கம் போதைப்பழக்கம்தான் திட திரவ வாயு நிலைகள்ல இருக்கற எல்லா பொருட்களையும் டேஸ்ட் செய்யாம விடறதில்லை. சாயங்காலமானா,..  பகலெல்லாம் வேட்டையாடின அலுப்புதீர, "வென்னீர் போட்டு வைய்யி.. இன்னிக்கி பிடிச்சுட்டு வந்ததை நெறைய வெண்ணெய் போட்டு பொன்முறுவலா வறுத்து வைய்யி"ன்னு மனைவியை நோக்கி உத்தரவு போட்டுட்டு,.. கடையை நோக்கி நடையைக்கட்டிடுவாங்க.. மனைவிகளெல்லாம் அவங்களைத்திருத்தறதுக்காக அறிவுரை சொல்லிச்சொல்லி அலுத்துப்போயிட்டாங்க.

(பய புள்ளைகளை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டாந்திருக்கேன்.. நீங்களாவது நல்லபுத்தி சொல்லுங்க :-))

ஒரு சாயங்காலம் நேரத்துல,.. கடைக்கு போயிட்டு தம்மடிச்சுட்டு வந்தது பத்தாதுன்னு பார்சல் வாங்கியாந்து, 'உற்சாகபானம்' அருந்திக்கிட்டிருந்த கரடிகிட்ட ஒரு எலி ஓடிவந்தது..

"அண்ணே.. அண்ணே.. வேணாம்ன்னே இந்தப்பழக்கம்.. இந்த போதைப்பழக்கத்தால உங்க குடும்பத்தை கவனிக்க மறந்துடறீங்களே.. இதெல்லாம் நல்லால்லை. இந்தக்காட்டைப்பாருங்க.. இயற்கை எவ்வளவு அழகா தாண்டவமாடுது.. இதையெல்லாம் பார்த்து ரசிக்காம குடியே கடி.. ச்சே!!.. கதின்னு கிடக்கறீங்களே. உங்களுக்கு ஏதாவதொண்ணுன்னா உங்க புள்ளைகுட்டிகளெல்லாம் நடு ரோட்டில் நிக்குமே.. அதுங்க பாவமில்லையா. அதுங்க முகத்துக்காகவாவது இந்தப்பழக்கத்தை விட்டுடுங்க"ன்னு கெஞ்சிக்கூத்தாடுச்சு.

எலியைக்கண்டதும், மொதல்ல எளக்காரமா நினைச்ச கரடிக்கு தன்னோட குட்டிகளைப்பத்தி எலி சொன்னதும், அதுங்க எதிர்காலத்தை நினைச்சு பயம் வந்துடுச்சு.. "ஆத்தாடீ.. எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா,.. என் குடும்பம் நடுக்காட்லேயில்ல நிக்கும்.. பரவால்லை.. பய மூளைக்காரந்தான்.. இந்த சின்னவயசுலயே இவ்ளோ ஞானமா!!!!.. இப்படி தன்மையா மென்மையா புரியவைச்சிருந்தா மனைவிங்க பேச்சை எப்பவோ கேட்டிருந்துருப்பேனே." ன்னு ஒரேயடியா ஆச்சரியப்பட்டுது.
(சத்தியம் பண்ற நேரத்துல இந்த எலித்தம்பி எங்க போனான்னு தெரியலியே.. )
"சரி எலித்தம்பி, நீ சொல்றதும் சரிதான்.." என்ற கரடி,.. 'நாளை முதல் குடிக்கமாட்டேன்.. சத்தியமடி தங்கம்..'என்று எலியின் தலையிலடிச்சு சத்தியம் செய்ய ஓரடி முன்னே வைக்க, தன் உயிரை காப்பாத்திக்க எலி ஈரடி பின்னே வைச்சது.. எலி மட்டும் அப்படியே நின்னுட்டிருந்துருந்தா இந்தக்கதை கிடைச்சுருக்குமா :-)))

"சரி வா.. யாம் பெற்ற அறுவையுரை பெறுக இவ்வனம்.. அப்படியே காலாற நடந்து இந்தக்காட்டையே போதையின் பிடியிலிருந்து விடுவிக்கலாம்" அப்டீன்னுட்டு எலியும் கரடியும் காட்டை சுத்திப்பார்க்க புறப்பட்டுதுங்க..

போற வழியில ஒரு குதிரை, ஏதோ ஒரு போதைப்பொருளை உறிஞ்ச படாதபாடு பட்டுட்டிருந்தது.. அதுகிட்டயும் இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து மூளைச்சலவை செய்ய, அதுவும் மனசு மாறி அவங்க கூட புறப்பட்டுச்சு. மூணுபேருமா காட்டுவலம் வர்றாங்க.. போறவழியில பார்க்க கிடைக்கிற மிருகங்களையெல்லாம் இப்படி ஒவ்வொண்ணா கூட்டு சேர்த்துக்கிட்டு வந்துக்கிட்டிருக்காங்க.
பாதையில ஒரு புலி, கையில் மதுக்கிண்ணத்தை ஏந்திக்கொண்டு பாட்டுப்பாடி ஆடிக்கிட்டிருந்தது. நெறைய பேரு தன்னோட வீட்டை நோக்கி வர்றதைப்பார்த்தது,.." என்ன என்ன..பிரச்சினை?.. எதுவானாலும் இப்ப தீர்ப்பு சொல்லமுடியாது"ன்னுது.

"ஏண்ணே.."ன்னு பரிதாபமா கேட்டன மிருகங்களெல்லாம். காட்டுராஜா சிங்கம்,.. காட்டு மந்திரியா புலியை நியமிச்சுட்டு வெளி நாட்டுக்கு சுற்றுப்பயணம் போனதுலேர்ந்து பதினெட்டுப்பட்டிக்கும் தீர்ப்பு சொல்ற உரிமை புலிகிட்டதான் இருந்துவந்தது. அதனாலயே அதுக்கு பவுசும் ஏறிப்போச்சு :-)


'ஆலமரம் சாஞ்சிருச்சே.. அதனால அதுக்கடியில மாட்டிக்கிட்ட,.. அரைக்காப்படி சொம்பும் நெளிஞ்சிருச்சே.. சொம்பு வாங்கியாரப்போயிருக்கற ஆளு வந்தப்புறம்தான் தீர்ப்பெல்லாம் சொல்லமுடியும். அதனால இப்ப வழக்கு என்னான்னு மட்டும் சொல்லிட்டுப்போங்க"ன்னுது புலி..

"வழக்கெல்லாம் ஒண்ணுமில்ல மதி மந்திரியாரே. எங்களையெல்லாம ஆளற பொறுப்புல இருக்கற அரசாங்கமே.. அதாவது மதி மந்திரியாரே மதுவருந்தலாமா..  அதுவும் எங்களை விட்டுட்டு தனியா அருந்தலாமா??!!.... போதைப்பொருட்களை உபயோகிக்கிறது தப்பில்லையா.. இதெல்லாம் எலித்தம்பி சொன்னதும்தான் எங்களுக்கு நல்லா புரிஞ்சது..  நீங்களும் புரிஞ்சுக்கோங்க. வேண்டாம்ண்ணே!!.. நாளைமுதல் மட்டுமல்ல இன்று முதலே அதை தூக்கியெறிங்க.. இந்தபிரச்சாரத்தைத்தான் நாங்க எல்லோரும் காடுமுழுக்க பரப்பிட்டு ஜமா சேர்த்துட்டு வரோம்"ன்னு யானை சொல்லிமுடிக்க.......'பளார்'ன்னு ஒரு அறைவிழுந்த சத்தம்.


யாரு அடிவாங்கினாங்கன்னு சுத்துமுத்தும் பார்த்தா,.. எலி கன்னத்தை தடவிவிட்டுக்கிட்டு நிக்குது.

"அட ஏண்ணே!!.. நல்ல விஷயத்தைத்தானே சொல்லிருக்கான். ஒரு சின்னப்பையனைப்போயி அடிச்சிட்டீங்களே"ன்னு அங்கலாய்த்தது கரடி.
புலி பதிலளிச்சது,.. "யாரு சின்னப்பையன்?.... இவனா!!!!.. நேத்தும் இப்படித்தான் எக்கச்சக்கமான போதையில.. இதே டயலாக்கை பேசிக்கிட்டு,... என்னைய பக்கத்து ஊரு காடுமுழுக்க மூணுமணி நேரம் அவங்கூட சுத்த விட்டுட்டான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்" 

இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள், வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல... காட்டுக்கும் கேடுதான் :-)


டிஸ்கி: இதை நாலுவரி குறுந்தகவலா அனுப்பிவெச்ச என் பெண்ணின் தோழிக்கு நன்றி :-)))))))))))





31 comments:

rajamelaiyur said...

//
இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள், வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல... காட்டுக்கும் கேடுதான் :-)
//
நல்ல அட்வைஸ்

rajamelaiyur said...

இன்று என் வலையில்


கலைஞர் டி.வி.க்கு, வெகு கச்சிதமாக ஒரு ‘கடக்!’- விறுவிறுப்பு ரிப்போர்ட்

MANO நாஞ்சில் மனோ said...

ஐயய்யோ காட்டுக்கு வந்த சோதனை ஹி ஹி....!!

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதோர் சிந்தனை
சொன்ன விதம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

வெங்கட் நாகராஜ் said...

வேண்டாங்க.... இப்படி செஞ்சுட்டீங்களே.... காட்டுக்குள்ளேயும் டாஸ்மாக் ஆரம்பிச்சுடுவாங்க இப்ப.... :)) நல்ல பகிர்வு.

சக்தி கல்வி மையம் said...

நல்ல அறிவுரை..

பனித்துளி சங்கர் said...

புதுமையான சிந்தனை விதைத்தது இந்த பதிவின் புனைவு நடை

இராஜராஜேஸ்வரி said...

அறியப்படும் நீதி என்னவென்றால் மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள், வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல... காட்டுக்கும் கேடுதான் :-)//

அருமை. பயபுள்ளைகளுக்கு புத்திவந்தால் சரிதான்.

காட்டுக்குள் கட் அவுட் வச்சாச்சா. அடுத்த தேர்தல் எப்போ?

ஹுஸைனம்மா said...

ஹும். நல்லது சொல்லப்போய், எலிக்கு இந்த கதி!!

பாச மலர் / Paasa Malar said...

அறிவுரை சொன்ன விதம் வித்தியாசம்...வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

வாசிச்சதுக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

ஹி..ஹி.. சோதனைதான். ஜெயிச்சு வந்துருவாங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குணசீலன்,

வாசிச்சு சிரிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

நாட்டுக்குள்ளயே 'கடை'யை ஒழிச்சுக்கட்ட நினைக்கும்போது காட்டுக்குள்ள இருக்கலாமா!!.. அதான் வேணாம்ன்னு பிரச்சாரம் செய்றாங்க
:-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேடந்தாங்கல்-கருன்,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பனித்துளி,

வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

தேர்தல் எப்போன்னு தெரியலீங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

தேர்தல் எப்போன்னு தெரியலீங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

நல்லது செய்ய நினைச்சதென்னவோ உண்மைதான்..ஆனா, அதுக்கு தன்னை தகுதியாக்கிக்கிட்டு இல்லே போயிருக்கணும் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

பிரசார நெடி அடிக்கலைதானே :-))

வாசிச்சதுக்கு நன்றீஸ்..

ராமலக்ஷ்மி said...

அறிவுறுத்திய விதம் அருமை சாரல்:)! அவசியமான பகிர்வு.

குறையொன்றுமில்லை. said...

சொன்னவிதம் சிரிக்கவும் சி
ந்திக்கவும் வைத்தது. அறிவுறையை
இப்படிகூட சோல்லலம்போல
இருக்கே

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு. நகைச்சுவையாகவும் இருக்கு. நல்லதொரு நீதிக்கதை. புலியிடம் அடி வாங்கிய எலியின் நிலை தான் பரிதாபமாக உள்ளது, பாவம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வெறுமனே சொன்னா பிரசார நெடி அடிக்காது!!.. அதான் கதை சொன்னேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

இனிப்பு தடவிய மாத்திரைன்னு வேண்ணா சொல்லலாம் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,

ரொம்ப நன்றிங்க :-))

கோமதி அரசு said...

ஆலமரம் சாஞ்சிருச்சே.. அதனால அதுக்கடியில மாட்டிக்கிட்ட,.. அரைக்காப்படி சொம்பும் நெளிஞ்சிருச்சே.. சொம்பு வாங்கியாரப்போயிருக்கற ஆளு வந்தப்புறம்தான் தீர்ப்பெல்லாம் சொல்லமுடியும். அதனால இப்ப வழக்கு என்னான்னு மட்டும் சொல்லிட்டுப்போங்க"ன்னுது புலி..//

ஆஹா அருமை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் விழிப்புணர்வு பதிவு.

sultangulam@blogspot.com said...

'அப்புறம் எப்படி காட்டுக்கு வருமானம் வர்ரதாம்'னு புலி கேட்கலையா?

'டாஸ்மார்க்கை எல்லாம் உடைக்கணும்'னு யாரோ சொன்னதுக்கு, 'சரக்கு போட்டாத்தானே எங்களுக்கு உடைக்கவே மூடு வரும்'னு யாரோ செய்த விமர்சனம் வேற நினைவுக்கு வந்து தொலைக்குது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

வாசிச்சு சிரிச்சதுக்கு நன்றிம்மா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுல்தான் ஐயா,

ஹி..ஹி.. நாட்டுக்குள்ள வந்து பயிற்சி எடுத்துட்டுப்போனா ஒருவேளை அதெல்லாம் யோசிக்குமோ என்னவோ :-))

வல்லிசிம்ஹன் said...

பாவம் எலி.தினமுமா பிரசரம் செய்யுது?
போதை நீடிக்கும் வரை பிரசாரம். போதை தெளிஞ்சதும் டாஸ்மாக்னு புலி கிளம்பி இருக்கும்:)
ஆலமரம் சாய்ஞ்சு சொம்பு நசுங்கிடுத்தா!!!ஹாஹாஹா. அருமையாக சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் மா.

LinkWithin

Related Posts with Thumbnails