Thursday, 27 May 2010

வரலாறு ரொம்ப முக்கியம்....

வீடெங்கும் மலர்மாலைகளும் பூங்கொத்துகளுமாய் இறைந்து கிடந்தது. யாரோ தொலைபேசியில் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார் . 'இது ஆரம்பம்தான்... இனிமே பாருங்க. வாங்குறதுக்கு ரெண்டு கை பத்தாது'. ஒருத்தர் சூட்டிய புகழாரத்துக்கு புன்னகையே பதிலாக கிடைத்தது.

'பத்திரிக்கைக்காரங்க எப்போ வரட்டும்ன்னு கேக்கிறாங்க' என்ற கேள்விக்கு அப்பாயிண்ட்மெண்ட் டைரி பார்த்து , மறுநாள் சாயந்திரத்துக்கு நேரம் குறிக்கப்பட்டது . " இன்னிக்கு அவங்க பொண்ணுக்கு பிறந்தநாள். இன்னிக்கு முழுசும் அவங்ககூடதான் இருக்கப்போறாங்களாம். அப்பாயிண்ட் மெண்டையெல்லாம் கான்சல் பண்ண சொல்லிட்டாங்க . நாளைக்குத்தான் டைம் கொடுத்திருக்காங்க. " செக்ரட்டரி சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இந்த வாரக்கடைசியிலேயே ஃபங்க்ஷன் வெச்சுக்கணும்... என்று வந்து நின்ற ரசிகர் மன்ற தலைவருக்கு, 'ஏற்பாடெல்லாம் பலமா இருக்கணும்.. புரிஞ்சதா?.. ஏர்போர்ட்டிலிருந்து விழாமேடை வரை வரிசையா வினைல் போஸ்டர் இருக்கணும். ஃபங்க்ஷன்ல எடுத்த போட்டோக்களை, முக்கியமான பத்திரிக்கைகளுக்கு அனுப்பிடுங்க. வீடியோ நல்ல க்வாலிட்டியா இருக்கணும். முக்கியமா அந்த பொன்னாடையை மறந்துடாதீங்க 'என்றெல்லாம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

என்ன ஃபங்க்ஷன்?... எதுக்கா?... என்னாங்க இப்படி கேட்டுப்புட்டீங்க!!!
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;

நம்ம தம்பி அஹமது இர்ஷாத் எனக்கு Best Story Writer விருது கொடுத்திருக்காரு. அதுக்கான விழாதான் நடக்கப்போவுது. உண்மையிலேயே சந்தோஷமா இருக்கு . நன்றிப்பா.

விருதுக்கு மேட்சிங்கா காஸ்ட்யூம், அக்சஸரீஸ் இருக்க வேண்டாமா?.. ஷாப்பிங் போறேன். வர்ட்ட்ட்ட்ட்ட்டா!!!

கிடைக்கிறதை பகிர்ந்து கொடுக்கணும் . நான் கொடுக்கப்போவது இவர்களுக்கு;
33 comments:

எல் கே said...

மேலும் பல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள். எனக்கும் விருது கொடுத்ததற்கு நன்றிகள் பல

அன்புடன் மலிக்கா said...

ஹை நான் ஃபஸ்டா இல்லையா.

விருதுக்கு வாழ்த்துக்கள். சூப்பாரான தேர்வா எடுத்துட்டுவாங்க. உங்களபாத்து நாங்க காப்பியடிக்கமாட்டோம்..

Prathap Kumar S. said...

congrats...

சீக்கிரமே... சாகித்ய அகாடமி மற்றும் புலிட்சர் விருதுகளை வாங்க வாழ்த்துக்கள் :)

(கொடுத்த காசுக்கு மேலேயே கூவிட்டனோ...? )

Paleo God said...

அட இன்னொரு விருதா? :-)

மிக்க நன்றிங்க!

Ahamed irshad said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும்...

மங்குனி அமைச்சர் said...

ஸ்டோரின்னா என்னா சார் ??

சும்மா தமாசு
வாழ்த்துக்கள்

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

Chitra said...

congratulations!


நான் விட்டதே ஒரு கதை - அதுவும் ஏப்ரல் 1 அன்று.... அதற்குள்ள விருதா? சூப்பர்!
உங்கள் பாராட்டு விழா மேடையில, எனக்கும் ஒரு chair ....... இதோ வந்திட்டேன்.....!!!

pudugaithendral said...

congrats

சந்தனமுல்லை said...

அமைதிச்சாரல்,தங்களுக்கு விருது இங்கே

http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_27.html

kousalya raj said...

விருது வழங்கிய உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

விருது பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என சொல்ல வந்த என் கையிலும் ஒரு விருது:)! ரொம்ப ரொம்ப நன்றி சாரல்!!

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் அன்பு சாரல்.
இன்னிக்குப் பூராவுமே விருதுகளாகப் பார்க்கிறேன். :)
கதை எழுதினா விருது தராங்களா. ஆஹா ஏகப்பட்ட கதைகளை முன்னமேயெ சொல்லிட்டேனெ சொக்கா.
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

பொண்ணோட பிறந்தநாள் கொண்டாடியாச்சா!!! வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்க வாழ்த்தின முகூர்த்தம் வைரம் கிடைச்சிருக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மலிக்கா,

ம்ஹூம்.. நீங்க ரெண்டாவது. வடையை எல்.கே எடுத்துட்டுப்போயிட்டார்.

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சில்,

ஆஸ்கரே தேடிவந்துடுச்சு. புலியும் சீக்கிரம் வந்துடும்.

கம்பெனி சீக்ரெட்டையெல்லாம் இப்டி பப்ளிக்கா சொல்லலாமா :-)))))))))

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷங்கர்,

இன்னும் நிறைய விருதுகள் வாங்கணும்ன்னு வாழ்த்துகிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது,

நன்றிகள்.. விருது கொடுத்ததுக்கும் வரவுக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மங்குனி அமைச்சரே,

நீங்க மங்குனியேதான். ப்ரொஃபைல் பாக்கிறதில்லியா :-))))))

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

அந்த சுபயோக சுபதினத்தில்தான் நானும் கதைவிட ஆரம்பிச்சேன் :-))))

பக்கத்து சேரில் கர்ச்சீப் போட்டு வெச்சிட்டேன். சீக்கிரம் ஓடிவாங்க.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

ஆஹா... பெண்களுக்கு பிரியமான வஸ்து. இதோ வந்திட்டேன்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கௌசல்யா,

முதல்வரவா!!!..நன்றி.

வாழ்த்துக்களுக்கும் நன்றி. அடிக்கடி வரணும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

முத்துமுத்தா கதைகள் எழுதிக்குவிக்கும் கைக்கு பரிசு கண்டிப்பா கொடுக்கணும் :-)

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ஊருக்கு வந்திட்டீங்க போலிருக்கு. பேத்தி நலமா!!. கொஞ்ச நாளுக்கு அவங்க ஞாபகமாவே இருக்கும் இல்லியா ?..

உங்களுக்கு சர்ப்'ரைஸ்' காத்திட்டிருக்கு.

நன்றிங்க.

Anonymous said...

வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்

ரிஷபன் said...

உங்க மனசுல இடம் பிடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. மிக்க நன்றி அமைதிச்சாரல்..
எல்லோருக்கும் வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சின்ன அம்மிணி,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரரே.

அப்பாவி தங்கமணி said...

வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்

LinkWithin

Related Posts with Thumbnails