வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டம் பிப்ரவரி-14 தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஒவ்வொரு நாளும்,
ரோஜா தினம்
காதலை வெளிப்படுத்தும் தினம்
சாக்லெட் தினம்
டெடி தினம்Hug day
Kiss day
என ஒவ்வொரு தினமாகக் கொண்டாடப்பட்டு, 14-ம் தினத்தன்று இரு மனங்கள் இணைந்து ஒரு மனமாகும் காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
வேலண்டைன் எனும் துறவியின் உண்மையான தியாகத்தை மதிக்கும் முகமாக, அன்பைப்பரப்பும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு, தன் பாதையிலிருந்து விலகி, வியாபார மயமாகிக்கொண்டிருக்கிறது. மேற்கு நாடுகளின் நாகரிகத்தாக்கத்தால் இந்தியாவில் தற்சமயம் கடைப்பிடிக்கப்படும், அன்னையர், தந்தையர், மகள், மகன், தாத்தா, பாட்டி, ஒன்று விட்ட சித்தி, கொண்டான் கொடுத்தான் போன்ற தினங்களின் வரிசையில் காதலர் தினமும் ஒன்று.
பெரும்பாலும் தனிக்குடித்தனமாகவோ, அல்லது வீட்டிலிருந்து வெளியேறி தனியாகவோ வசிக்கும் மக்கள் வருடத்திற்கொரு முறை குடும்பத்தினரைச் சந்தித்து அளவளாவுவதற்கு ஒரு தினத்தை நிர்ணயித்துக்கொண்டதை, கார்ப்பரேட் உலகம் வியாபாரமயமாக்கியது. அதன் பொருட்டே பரிசுப்பொருட்களின் சந்தை ஆன்லைனிலும் விரிவடைந்து தன் ஆக்டோபஸ் கரங்களால் உலகெங்குமிருந்து காசை வாங்கி தன் கல்லாவை நிறைத்துக்கொண்டிருக்கிறது. தற்போதைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோனோரிடம் காதலை விட இப்பரிசுப்பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பொருட்கள் கொடுக்கப்படவில்லையெனில் காதலையே சந்தேகப்படுவதும் முறித்துக்கொள்வதும் கூட காணப்படுகிறது. அன்பையும் அதைக்கொடுப்பவரையும் விட பரிசுப்பொருட்கள்தாம் உயர்ந்தவையா?
4 comments:
இப்போதைய கொண்டாட்டங்கள் குறித்த சிறப்பான சிந்தனை. எல்லாமே வியாபாரம் ஆகிவிட்டது என்பது வேதனை கலந்த உண்மை.
டெடி பியர் அழகாய் இருக்கு
வாங்க வெங்கட்,
மிக்க நன்றி.
வாங்க ஸ்டார்ஜன்,
மிக்க நன்றி
Post a Comment