சிவனுக்கு உரிய இரவு எனப் பொருள்படும் சிவராத்திரியானது ஐந்து வகைப்படும். அவை,
நித்திய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி
இதில் மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியன்று வரும் மஹா சிவராத்திரி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று முழு உபவாசம் இருப்பர். மஹாராஷ்டிராவில் விரதமிருக்கும் தினத்தன்று "சாபுதானா கிச்சடி" எனப்படும் ஜவ்வரிசி உப்புமாவையோ அல்லது ஜவ்வரிசி வடையையோ மட்டும் ஒரு பொழுது சாப்பிடுவார்கள். காலையில் குளித்தபின், கோவிலுக்குச் சென்று வந்து, அன்றிரவு முழுவதும் சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள் கோவிலுக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்வார்கள். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிலர் அன்று அந்தியில் வெள்ளி முளைத்து அதைக் கண்டபின் விரதம் நிறைவு செய்வார்கள். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். அன்றும் பகல் பொழுதை உறங்கிக்கழிக்கக்கூடாது.
சிவாய நம என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கேற்படாது.
ஓம் நமச்சிவாய..
3 comments:
சிறுவயதில் கண் விழித்து விளையாடி, கோவில் போய் கண் விழித்து இருந்து இருக்கிறேன், இப்போது மிடிவது இல்லை கண் விழிக்க. சிவபுராணம் படித்து கோவிலுக்கு போய் வழி பட்டு வருகிறேன்.
அருமையான பதிவுக்கு நன்றி.
ஓம் நமச்சிவாய!
விஸ்வரூப தரிசனம். அருமையான கோணம்.
மஹாராஷ்டிராவில் விரதம் அனுசரிக்கும் முறையை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
Post a Comment