Thursday 30 October 2014

கண்ணாமூச்சி..

எடுத்து வைக்கும் முதல் அடியைப்பாராட்டி ஊக்குவித்தால் ஆமையும் மாரத்தான் வெல்லும், மாறாக நகையாடினால் அந்த எள்ளல் நாளடைவில் சிறுத்தையைக்கூட முடக்கி விடும்.

எத்தனைதான் ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் இரையெடுக்க பூமிக்கு வந்து தீர வேண்டியிருக்கிறது.

பயமும் அவநம்பிக்கையும் கொண்டவரிடத்தில் தோல்வி ஒரு திருடனைப்போல் நுழைந்து உரிமையாளனைப்போல் குடி கொண்டு விடுகிறது.

நல்லவர்களாக இருப்பதை விட, நல்லவர்களாகவே நீடிப்பதுதான் அதிகக்கடினமானதும் சோதனைகள் நிரம்பியதுமாகும்.

வாழ்வில் நாம் இன்னொருவரை முன்மாதிரியாகக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நம்மை முன்மாதிரியாக யாரேனும் கொண்டிருக்கக்கூடும்.

தன்னை ஆக்கிரமிக்கும் பயங்களையும், அவநம்பிக்கைகளையும் வென்று, தன்னைச் சிறந்த முறையில் ஆளும் ஒவ்வொரு மனிதனும் மாமன்னனே.

சிற்றறிவு கொண்ட எறும்பிற்குக்கூட அதன் வாழ்வை நடத்தத் தேவையான அறிவை அளித்திருக்கும் இறைவன் மற்றவர்களையும் வெறுங்கையோடு அனுப்பி விடவில்லை.

பிறரின் நிம்மதியான வாழ்வையும் மகிழ்ச்சியான மனநிலையையும் கெடுக்கும் மனிதர்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

ஊகங்களுக்கும் வரையறுத்தல்களுக்கும் நடுவே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது உண்மை.

எப்பொழுதும் அப்படித்தான் என்பதால் எப்பொழுதுமே அப்படியிருக்கத்தேவையில்லை. மாற்றங்கள் ஏற்படலாம்.

8 comments:

ராமலக்ஷ்மி said...

சாரல் துளிகள் அனைத்தும் அருமை.

ஸ்ரீராம். said...

எல்லாமே நம்பிக்கையூட்டும் அருமையான வரிகள்.

pudugaithendral said...

மாற்றங்கள் ஏற்படலாம்....

சாரலில் நனைந்தேன்

Unknown said...

அனுபவித்து எழுதப்பட்ட வார்த்தை சிற்பங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சாரல் துளிகள்.........

வெங்கட் நாகராஜ் said...

அருமையான சாரல் துளிகள்.........

கரந்தை ஜெயக்குமார் said...

நம்பிக்கை வரிகள்
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

tha ma 3

LinkWithin

Related Posts with Thumbnails