Wednesday 24 September 2014

துணிவே துணை..

பொழியப்படும் அன்பை அலட்சியப்படுத்துவதைப் போன்றதொரு வன்முறை வேறெதுவுமில்லை.

சுகர் இல்லாத வரைக்கும்தான் சுகப்பிரும்மம். 

புரிந்து கொள்ளவில்லை என்று அங்கலாய்ப்பவர்களில் பலர் புரிய வைக்க முயற்சிப்பதேயில்லை.

ஒருவருக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறுவது என்பதை அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த வழங்கப்படும் உரிமமாகவே எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் சிலர்.

வாழ்க்கை எண்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

இடம், பொருள், காலம் என்று அத்தனையும் சாதகமாக இருப்பினும் துணிவு இல்லையெனில் அத்தனையும் வீணே.

கொள்ளும் பாத்திரத்திற்கேற்ப வடிவத்தை மட்டும் மாற்றிக்கொண்டு, தன்னியல்புகளை மாற்றிக்கொள்ளாத தண்ணீரின் குணம்தான் எத்தனை உன்னதமானது.

ஒன்றைப் புரிந்துகொள்ள இயலாவிட்டால் குறைந்தபட்சம் அதைப்பற்றித் தவறாக விமர்சிக்காமலாவது இருப்போம்.

பெய்த ஒவ்வொரு சூரியத்துளியும் குளத்தை நிரப்பியது வெடிப்புகளாலும், மீன்களின் கல்லறைகளாலும்.

ஒரு நொடி சலனம் பல கால நற்பெயரையும் கட்டமைப்பையும் தகர்த்து விடுகிறது.

7 comments:

ராமலக்ஷ்மி said...

சிறப்பான சிந்தனைகள்.

மகேந்திரன் said...

நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டிய
பொன்மொழிகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை.

முதலில் சொல்லியுள்ளதும் முடிவில் சொல்லியுள்ளதும் உண்மையில் நான் சமீப அனுபவத்தில் தெரிந்துகொண்டவைகளாக உள்ளன.

பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அன்பை அலட்சியப் படுத்துவதும் வன்முறைதான்
அருமை அருமை சகோதரியாரே

ஸ்ரீராம். said...

//சுகர் இல்லாத வரைக்கும்தான் சுகப்பிரும்மம். //

:))))

எல்லாமே அருமை.

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை...

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை....

//பொழியப்படும் அன்பை அலட்சியப்படுத்துவதைப் போன்றதொரு வன்முறை வேறெதுவுமில்லை.//

இந்த வன்முறையை பலமுறை அனுபவித்து விட்டேன்.... :(

LinkWithin

Related Posts with Thumbnails