Friday 28 June 2013

பொம்மை மனிதர்கள்..

ஒரு விடையைப் பெறுவதற்காக அனேகமான கேள்விகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

‘ஆம்’ என்ற பதில் வந்து விடுமோவென்ற அச்சத்தினால் கூட, நிறையக்கேள்விகள் தயங்கி நின்று விடுகின்றன.

வேலி தாண்டும் வெள்ளாட்டை நினைவு படுத்துகிறது குறுகிய சாலைத்தடுப்பை அனாயாசமாகத் தாண்டிச்செல்லும் ஒரு வாகனம்.

அதிகம் பேசுவதால் மட்டுமன்றி தேவையான இடங்களில் பேசாமல் இருப்பதாலும் சில சமயங்களில் அவதிப்பட நேரிடுகிறது.

நாட்டியமாடும் மின்னலுக்கு, இடி ஜதி சொல்கிறதென்று, போட்டியாக மேளம் கொட்டுகிறது தகரக்கூரையில் மழை.

விலையுயர்ந்த நேரத்தை வீணாய்ச் செலவழிப்பவன் சோம்பேறி, பயனாய்ச் செலவழிப்பவன் உழைப்பாளி, பார்த்துப்பார்த்துச் செலவழிப்பவன் புத்திசாலி.

இறைவன் நம்மை இவ்வுலகிற்கு தனியே அனுப்புவதில்லை. திறமையெனும் நண்பனுடன்தான் அனுப்பி வைக்கிறார்.

'வாழ்க்கையென்றால் அப்படித்தான்’ என்று நாமாகவே சொல்லிக் கொள்கிறோமே ஒழிய, அது தன்னைப்பற்றி எதுவுமே சொல்லிக் கொள்வதில்லை.

சூரியனை மட்டுமே நோக்கியிருக்கும் சூரியகாந்தியாய் வாழ்க்கையின் நல்ல பகுதிகளை மட்டுமே நினைவில் நிறுத்துவோம். நிழல்கள் காலடியில் இருந்து விட்டுப் போகட்டுமே.

மனித உறவுகள் பொம்மைகளாய் மாறி விட்ட யுகத்தில், பொம்மைகளையும் உறவினராக்கிக்கொள்ள குழந்தைகளால் மட்டுமே முடிகிறது. 

22 comments:

ராமலக்ஷ்மி said...

அத்தனை துளிகளும் அருமை.

*
'வாழ்க்கையென்றால் அப்படித்தான்’
*
‘ஆம்’ என்ற பதில் வந்து விடுமோவென்ற அச்சத்தினால்

சிறப்பு.

படமும் மிக நன்று.

இராஜராஜேஸ்வரி said...

இறைவன் நம்மை இவ்வுலகிற்கு தனியே அனுப்புவதில்லை. திறமையெனும் நண்பனுடன்தான் அனுப்பி வைக்கிறார்.

வாழ்க்கைத்துளிகள் ரசிக்கவைத்தன..!

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன எடுத்துக்காட்டுக்கள் அருமை... பாராட்டுக்கள்... நன்றி...

கரந்தை ஜெயக்குமார் said...

மனித உறவுகள் பொம்மைகளாய் மாறி விட்ட யுகத்தில், பொம்மைகளையும் உறவினராக்கிக்கொள்ள குழந்தைகளால் மட்டுமே முடிகிறது.
அருமை அய்யா அருமை

பால கணேஷ் said...

சாரல் துளிகள் அனைத்தும் சத்து மிக்க துளிகள். அதிலும் 4, 6,7 ஆகிய மூன்றையும் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்து ரசிக்கிறேன். வெகு ஜோர்!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை..

பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

//நாட்டியமாடும் மின்னலுக்கு, இடி ஜதி சொல்கிறதென்று, போட்டியாக மேளம் கொட்டுகிறது தகரக்கூரையில் மழை.//
நல்ல ரசிப்பு.

//மனித உறவுகள் பொம்மைகளாய் மாறி விட்ட யுகத்தில், பொம்மைகளையும் உறவினராக்கிக்கொள்ள குழந்தைகளால் மட்டுமே முடிகிறது.

உண்மை.

'பரிவை' சே.குமார் said...

மனித உறவுகள் பொம்மைகளாய் மாறி விட்ட யுகத்தில், பொம்மைகளையும் உறவினராக்கிக்கொள்ள குழந்தைகளால் மட்டுமே முடிகிறது.

அருமை அக்கா...

வல்லிசிம்ஹன் said...

மனத்திலிருந்து வரும் நீதி வார்த்தைகள். வெகு அருமை சாரல். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசித்தமைக்கும் படத்தை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜேஸ்வரி,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயக்குமார்,

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

ரசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

ரசித்தமைக்கு மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிம்மா.

ADHI VENKAT said...

//மனித உறவுகள் பொம்மைகளாய் மாறி விட்ட யுகத்தில், பொம்மைகளையும் உறவினராக்கிக்கொள்ள குழந்தைகளால் மட்டுமே முடிகிறது//

அருமையான துளிகள்...

Advocate P.R.Jayarajan said...

எல்லாமே பட்டாசான வரிகள் இல்லைஇல்லை.. கவிதைகள்... வாழ்த்துகள்...

Advocate P.R.Jayarajan said...

//மனித உறவுகள் பொம்மைகளாய் மாறி விட்ட யுகத்தில், பொம்மைகளையும் உறவினராக்கிக்கொள்ள குழந்தைகளால் மட்டுமே முடிகிறது. //

இது உள்ளபடியே மிக யதார்த்தம்...

Asiya Omar said...

படமும் பகிர்ந்த சாரல் துளிகளும் மிக அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails