1.பிறர் தமது மனத்துயரை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவரது மன இருளைப்போக்கி ஆறுதலளிக்கும் சிறு விளக்கொளியாக நமது வார்த்தைகள் இருக்க வேண்டும். மாறாக வீட்டையே கொளுத்திச் சாம்பலாக்கும் பெரு நெருப்பாக இருந்து விடக்கூடாது.
2.மயக்கமும் கலக்கமும் வாழ்வில் குழப்பமும் ஏன் வருகிறது என்று எதிர்மறையாகச் சிந்திப்பதை விடவும் குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க முடியும், கலங்கினால்தான் மனது நன்கு தெளியும், மயங்கி விழித்தபின் ஒரு தெளிவு நிச்சயம் பிறக்கும் என்று நேர்மறையாகச் சிந்திப்பது நல்லது...
3.போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும்போதோ,பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும் போதோ, நேரமாவதைப் பற்றிச் சலிப்படைந்து பொறுமை இழப்பதில் பயனில்லை. மாறாகச் சற்றே நம்மைச் சுற்றி நோக்கினால், மரக்கிளையில் கீச்சிடும் குருவி, விளக்குக் கம்பத்திலமர்ந்து கொஞ்சும் மைனாக்கள், குழந்தையின் விரல் பிடித்தோ, தோளில் சுமந்தோ அழைத்துச் செல்லும் பாசக்கார பெற்றோர்கள் போன்ற, அவசர உலகில் காணத்தவறும் இனிய தருணங்கள் பலவற்றைக் காண முடியும்.
4.வாழ்தல் என்பதென்னவோ இனிமையானதும் எளிமையானதுமாகத்தான் இருக்கிறது. அதைக் கடினமானதாய் மாற்றிக்கொள்ள மனிதன் பெருமுயற்சி எடுக்கும் வரை.
5.சின்னச்சின்ன முடிச்சுகளாலான கயிற்றைப் பற்றிக்கொண்டு மலையேறுவது போன்றதே வாழ்வில் வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு சிறுகச்சிறுக நாம் அடையும் முன்னேற்றம். ஒரே நோக்கில் முன்னேறினால் இலக்கை அடைவது நிச்சயம்.
6.வாழ்க்கைப்படிகளோ அல்லது மாடிப்படிகளோ எவ்வளவு உயரத்திலிருந்து வீழ்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு காயமும் அதிகம் படும்.. ஆகவே எப்போதும் விழிப்பாகவும் ஊன்றியும் அடியெடுத்து வைப்பது நன்று.
7.அன்பு, நம்பிக்கை, நேர்மை போன்ற அஸ்திவாரங்களின் மேல் எழுப்பப்படும் பாலங்களே உறவுகளைப் பிணைத்துப் பலப்படுத்துகின்றன.
8.வாழ்வில் வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனும், அதற்காகத் திட்டமிடுகிறான், முயற்சிக்கிறான், கடுமையாக உழைக்கிறான், தன்னுடைய இலக்கை நோக்கிக் குறி தவறாமல் நடக்கிறான். ஆனால் அந்த வெற்றியை, முயற்சி செய்ய விரும்பாத சிலர் 'அதிர்ஷ்டம்' என்று அழைத்து அலட்சியப் படுத்துகிறார்கள்.
9.எதிலும் குறை காண்பவர்களைத் திருப்திப் படுத்துவதென்பது காதறுந்த ஊசியில் நூல் கோர்ப்பதற்குச் சமம்.
10.சாதாரணமாய் நினைத்து வீணே கழிக்கும் ஒவ்வொரு பொழுதும் காலத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகும்.
44 comments:
7.அன்பு, நம்பிக்கை, நேர்மை போன்ற அஸ்திவாரங்களின் மேல் எழுப்பப்படும் பாலங்களே உறவுகளைப் பிணைத்துப் பலப்படுத்துகின்றன.
9.எதிலும் குறை காண்பவர்களைத் திருப்திப் படுத்துவதென்பது காதறுந்த ஊசியில் நூல் கோர்ப்பதற்குச் சமம்.
அனைத்து வரிகளுமே சிறந்தவை என்றாலும் மனம் ஒன்றிப்போன வரிகள் இவை.
சாரல் துளிகள் அருமை டா.:)
எல்லாத் துளிகளும் அருமை.
/எதிலும் குறை காண்பவர்களைத் திருப்திப் படுத்துவதென்பது காதறுந்த ஊசியில் நூல் கோர்ப்பதற்குச் சமம்./
சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்.
எண்ணத்துளிகள் பத்தும் பொக்கிஷங்கள்.
அனைத்து துளிகளும் மிகவும் அருமையாக உள்ளது....
நன்றி,
மலர்
http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
.அன்பு, நம்பிக்கை, நேர்மை போன்ற அஸ்திவாரங்களின் மேல் எழுப்பப்படும் பாலங்களே உறவுகளைப் பிணைத்துப் பலப்படுத்துகின்றன.
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
அருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றிங்க.
எண்ணத்த துளைகள் எப்போதும் நினைவில் கொள்ளத் தக்கவை.
எல்லாமே நல்லா இருக்கு வாழ்த்துகள்
Nice.
மனதில் தைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்...
முக்கியமாக 1, 7 & 10
சிறப்பான சிந்தனைகள்.... பாராட்டுகள்.
தாங்கள் சொல்லிப்போனவைகளை
எப்போதும் நினைவில் கொண்டால்
வாழ்வே நிச்சயம் ஒரு அழகிய பூங்காவே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனைகள் !
நல்ல சிந்தனைத்துளிகள்.அருமை.
.போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும்போதோ,பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும் போதோ, நேரமாவதைப் பற்றிச் சலிப்படைந்து பொறுமை இழப்பதில் பயனில்லை. மாறாகச் சற்றே நம்மைச் சுற்றி நோக்கினால், மரக்கிளையில் கீச்சிடும் குருவி, விளக்குக் கம்பத்திலமர்ந்து கொஞ்சும் மைனாக்கள், குழந்தையின் விரல் பிடித்தோ, தோளில் சுமந்தோ அழைத்துச் செல்லும் பாசக்கார பெற்றோர்கள் போன்ற, அவசர உலகில் காணத்தவறும் இனிய தருணங்கள் பலவற்றைக் காண முடியும்.//
எது அனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது அமைதிச்சாரல்.
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகள், முதல் கருத்தே அபாரமாக உள்ளது...
தொடருங்கள்,,,
அனைத்து எண்ணத்துளிகளும் அருமை..
என் மனதை கவர்ந்த துளி 8 வது...
அனைத்தும் நல்முத்துக்கள்.
எல்லா துளிகளுமே நல்ல கருத்துகளைச் சொல்கின்றன. குறிப்பாக 1,9,10.
ம்னம் பதிந்த கருத்துக்கள்
படமும் பொன்மொழிகளும் அழகோ அழகு, பாராட்டுக்கள் மேடம்.
வாங்க சசிகலா,
வரவுக்கும் ரசித்தமைக்கும் ரொம்ப நன்றிங்க.
வாங்க தேனக்கா,
ரொம்ப நன்றிக்கா வரவுக்கும் வாசிச்சதுக்கும் :-)
வாங்க ராமலக்ஷ்மி,
வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க.
வாங்க ஸாதிகா,
வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க.
வாங்க மலர்,
வரவுக்கும் ரசிச்சதுக்கும் நன்றிங்க.
வாங்க ராஜராஜேஸ்வரி,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆதி,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க முரளிதரன்,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.
வாங்க லக்ஷ்மிம்மா,
வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிம்மா.
வாங்க மோகன் குமார்,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தனபாலன்,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெங்கட்,
வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.
வாங்க ரமணி,
வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி :-)
வாங்க ஷைலஜாக்கா,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரமா,
வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
வாங்க கோமதிம்மா,
ரசித்ததைச் சொன்னதை ரசித்தேன் :-)
ரொம்ப நன்றிம்மா.
வாங்க இரவின் புன்னகை,
வரவுக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி.
வாங்க ஆசியா,
ரசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி.
வாங்க மாதேவி,
வரவுக்கும் வாசித்தமைக்கும் நன்றி.
வாங்க ஸ்ரீராம்,
பிடிச்ச கருத்துகளைக் குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி :-)
வாங்க ரிஷபன்,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வை.கோ ஐயா,
வாசித்தமைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.
Post a Comment