Tuesday, 26 June 2012

என் காமிரா க்ளிக்கியவை... கல்கி புகைப்படக்கேலரியில்

சிறந்த புகைப்படக்கலைஞர்களை அவர்கள் எடுத்த படங்களுடன் "புகைப்படக்கேலரி" என்ற பகுதியில் வாராவாரம் கல்கியில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.


அந்த வரிசையில், இந்த வாரக் கல்கியின் புகைப்படக்கேலரியில் என்னுடைய காமிரா பிடித்து வைத்த சில தருணங்கள் வெளியாகியிருக்கின்றன. 

எத்தனை ஆயிரக்கணக்கான படங்கள் எடுத்தாலும், ஒரு சில படங்கள் நமக்கு பிரத்தியேகமான விருப்பப் படங்களாக அமைந்து விடுவதுண்டு. அந்த வகையில் ஃப்ரூட்டி அருந்தும் குட்டிப்பாப்பாவின் இந்தப் புன்னகைப்படம் எனக்கு மறக்க முடியாத ஒன்று. ஏனென்று பேட்டியிலேயே சொல்லியிருக்கிறேன் :-)
அதே மாதிரி, என் தம்பியின் பெண் சார்மிஷாவின் இந்தப்படமும் ரொம்பப் பிடிக்கும். செம சுறுசுறு பார்ட்டி அவங்க. இந்தப்படம் எடுக்கும்போது, 103 டிகிரி காய்ச்சல். அதன் எந்த அறிகுறியாவது தெரிகிறதா பாருங்கள்.  சித்தப்பாவின் அரவணைப்பில் உற்சாகப்பூவாய்ச் சிரித்துக் கொண்டிருகிறாள்.
பத்திரிகையில் தன்னுடைய படத்தைப் பார்த்து விட்டு, காலையிலேயே போன் செய்து, "அத்தை,.. போட்டோல நான் ஈஈ..ன்னு சிரிச்சுட்டிருக்கேனே" என்று சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள் :-)

நமது உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை இன்னும் உற்சாகமாக இயங்க வைக்கும் என்பது மிகவும் உண்மை. அந்த வகையில் கல்கி கொடுத்திருக்கும் இந்த அங்கீகாரத்திற்கு மிக்க நன்றிகள்.

பேட்டியெடுத்து கல்கியில் வெளியிட்ட 'பிட்'ஆசிரியர் ஜீவ்ஸ் என்ற ஐயப்பன் கிருஷ்ணனுக்கும், பத்திரிகையில் பார்த்தவுடன் குழுமத்தில் பகிர்ந்து வாழ்த்திய வல்லமை குழும நண்பர் இளங்கோவனுக்கும், பத்திரிகை வெளியாகுமுன்பே ஆன்லைனில் பார்த்தவுடன் குறுஞ்செய்தி அனுப்பியும், குழுமத்தில் பகிர்ந்தும் வாழ்த்திய ராமலக்ஷ்மிக்கும் நன்றிகள்..

24 comments:

ராமலக்ஷ்மி said...

மீண்டும் வாழ்த்துகள் சாந்தி, மென்மேலும் உயரங்களைத் தொட:)!

CS. Mohan Kumar said...

மிக மகிழ்ச்சி ! வாழ்த்துகள் ! குழந்தைகள் படங்கள் மிக அழகு

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வாழ்த்துகள் . இன்னும் என்னல்லாம் திறமைகள் ஒளித்து வச்சிருக்கீங்க.?

சசிகலா said...

அழகோ அழகு வாழ்த்துக்கள் .

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்..

மாதேவி said...

வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

மேன் மேலும் பல பாராட்டுகளை உங்களை அடைய வாழ்த்துகள்....

படங்கள் இரண்டுமே அழகு..

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்க்கா.

போன பதிவின் வானம்+சூரியன் படங்களில் ஏதேனும் ஒன்றினையும் கொடுத்திருக்கலாம். அட்டகாசமாக இருந்தன.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நேற்று தான் 01.07.2012 தேதியிட்ட கல்கியின் பக்கம் 48+49 இல் பார்த்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள், வாழ்த்துகள். சூப்பர்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அக்கா.

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் சகோ.சக பதிவராய், கல்கியில் பார்த்து மிக்க சந்தோஷமடைந்தேன்.

நீச்சல்காரன் said...

────────────────╫────────────────────────────╫────
───╫╫╫╫╫───╫──────────────────────────────────────
──╫─╫───╫──╫──╫╫─╫╫╫──╫─────╫───╫╫╫╫╫────╫────╫╫──
───╫────╫──╫─╫──╫───╫─╫─────╫───╫──╫─────╫───╫──╫─
╫╫╫╫╫╫╫╫╫╫╫╫─╫──╫───╫─╫─────╫──╫╫╫╫╫╫╫╫──╫───╫──╫─
─╫──────╫──╫─╫──╫───╫─╫─────╫─╫────╫───╫─╫───╫──╫─
──╫╫╫╫╫╫───╫─╫──╫───╫─╫╫╫╫╫╫╫──╫╫╫╫────╫─╫╫╫╫╫╫╫╫─
───────────────────╫────────╫────────╫╫───────────
────────────────╫╫╫─────────╫───────╫─────────────
வாழ்த்துகள்

Unknown said...

வாழ்த்துக்கள் அக்கா.

ஸ்ரீராம். said...

உங்கள் சென்ற பதிவிலேயே வாழ்த்துகளைச் சொல்லியிருந்தேன். மறுபடியும் 'எங்கள்' வாழ்த்துகள்!

VijiParthiban said...

வாழ்த்துக்கள் அக்கா .

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்

CS. Mohan Kumar said...

கல்கி புத்தகத்தில் உங்கள் இதே பதிவை பார்த்தேன். நடு பக்கத்தில் prominent-ஆக பிரசுரமாகியுள்ளது பார்த்து மிக மகிழ்ந்தேன். நடு பக்கத்தில் வருவது பெரிய விஷயம் தானே ? வாழ்த்துகள்..மீண்டும் ஒரு முறை !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மிக அழகான படங்கள். வாழ்த்துக்கள்.

மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துகள் சாந்தி. நன்றி ஜீவ்ஸ், இளங்கோவன் & ராமலக்‌ஷ்மி

arul said...

nice clicks

அன்புடன் அருணா said...

அட!பூங்கொத்துங்க!

Anonymous said...

WOWWWWW.....!!!!

அமைதி அப்பா said...

இன்றுதான் கல்கியில் படித்தேன்.(ரொம்ப தூங்கிட்டேனோ?!) உடனடியாக இங்கே வந்து, மேலும் சில விபரங்களையும் அறிந்துக் கொண்டேன்.

சார்மிஷாவிற்கு என்னுடைய வாழ்த்துகள்.

*************

//உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை இன்னும் உற்சாகமாக இயங்க வைக்கும்//

இதன் மூலம் இன்னும் கூடுதலாக பல உயரத்தை அடைவீர்கள்.

பாராட்டுகள்!

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துரையிட்ட அனைவருக்கும்,..

[im]http://images.mylot.com/userImages/images/postphotos/2113826.gif[/im]

LinkWithin

Related Posts with Thumbnails