Wednesday 4 January 2012

சென்றதும்.. வந்ததும்..

ஹாய்.. ஹாய்.. ஹாய்.. எல்லோரும் எப்படி இருக்கீங்க மக்கள்ஸ்?.. எல்லோரையும் போன வருஷம் 2011-ல் பார்த்தது. அதுக்கப்றம் இப்பத்தான் இங்க வர சந்தர்ப்பம் கிடைச்சது. கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயி 2012 வந்துடுச்சுப்பா :-)

எங்க பில்டிங்கிலும் கொண்டாட்டம் நடந்துது..போன வருஷங்கள்ல ஆர்ப்பாட்டமா நடந்ததை நினைச்சுக்கிட்டுப் போனா, ஒண்ணும் சுரத்தில்லை. பசங்க டான்ஸ் பண்றதுக்கு சரியான மேடையோ, இல்லை ஃபோகஸ் லைட்டோ இல்லாம, யாரு பெர்ஃபார்ம் பண்றாங்கன்னு இருட்டுல ஊன்றிப் பார்க்க வேண்டியிருந்தது. அதான் அப்டின்னா, டின்னரும் ஏனோதானோன்னு நடந்துது. டெஸர்ட்டுக்கான குல்பி தொன்னையில் பாயசம் மாதிரி குடிக்கணும் போலிருந்தது :-)
                                                  விருந்துக்காகத் தயாராகும் ரூமாலி ரொட்டி..
புது வருஷத்தை எல்லோரும் சிறப்பா கொண்டாடியிருப்பீங்க. புது வருஷத்துக்கான தீர்மானமெல்லாம் எடுத்துட்டு, ட்ரீட், பிக்னிக்ன்னு அமர்க்களமா எஞ்சாயிட்டு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பிச்சிருப்பீங்க இல்லியா. நம்மை இன்னும் மேம்படுத்திக்கறதுக்காக புத்தாண்டுல இதைச் செய்வேன், அதைச் செய்வேன்ன்னு நிறையத் தீர்மானங்கள் எடுக்கப்படறதும், முதல் வாரத்துல அதை எப்படியாவது நிறைவேத்தியே தீருவேன்னு உறுதியோட இருக்கறதும், அடுத்த வாரத்துலயே அந்த உறுதி தண்ணியில விழுந்த சோப்பாட்டம் கரைஞ்சு காணாமலே போயிடறதும் புதுசா என்ன? :-))

ஆனா, நம்மை இன்னும் மேம்படுத்திக்கணும்ன்னா மொதல்ல இது வரை நாம என்னென்ன செஞ்சுட்டிருந்தோம்ங்கறதையும் மொதல்ல கணக்குல எடுத்துக்கணும். அப்பத்தானே எதுல கோட்டை விட்டிருக்கோம், எதுல இன்னும் கவனம் செலுத்தணும்ன்னு முடிவெடுக்க முடியும். அப்படீன்னு நானும் கடையோட வரவு செலவுகளைப் பார்க்க உக்காந்தேன். ஜூப்பருன்னு சொல்ல முடியாட்டியும் பரவாயில்லாம கடை நடந்துருக்குது. போன வருஷத்தை விட இந்த வருஷம் குறைச்சலாத்தான் இடுகைகள் போட்டிருக்கேன்னாலும் அந்தக் குறையை ஒரே வருஷத்துல வலைச்சர ஆசிரியராவும், தமிழ்மண நட்சத்திரமாவும், நியமிக்கப்பட்ட சந்தோஷம் ஈடு கட்டிருச்சு. அத்தோட வல்லமை இணைய இதழின் துணையாசிரியரா பொறுப்பேத்துக்க அழைப்பு வந்து, அங்கியும் என்னாலான எலக்கியப் பணியை செய்ய முடிஞ்சதும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள்ன்னு அச்சுப் பத்திரிகைகளில் என்னோட படைப்புகள் வெளியானதும் எதிர்பாராத மகிழ்ச்சி :-) 

புதுக்காமிரா வாங்குனப்புறம் பிட்டே பழியாக் கிடந்து, கொஞ்ச நஞ்சம் கத்துக்கிட்டேன். கதை, கவிதை, கட்டுரைகள்ன்னு கலந்தடிச்சாலும் புகைப்படங்களை ப்ளாகில் அதிகம் பகிர்ந்துக்கிட்டதில்லை. எப்பவாவது ஒன்னு ரெண்டு இடுகைகள் போட்டதோட நிறுத்தியிருக்கேன். மிச்சத்தை ஃப்ளிக்கர்லயும், முகப்புத்தகத்துலயும் பகிர்ந்துக்கறதோட நின்னாச்சு இது வரைக்கும். அங்கேயும் "ஓ.கே. உனக்கு ஓரளவு படம் பிடிக்கத் தெரியுது"ன்னு ஒத்துக்கிட்டாங்க. அந்தத் தைரியத்துல இனிமே, அதுகளையெல்லாம் ப்ளாகிலும் போடலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு. ஐடியாவை நிறைவேத்தணும்ன்னா மொதல்ல காமிராவை இன்னும் நல்லா இயக்க கத்துக்கணும், அதோட முழு பயன்பாடுகளையும் உபயோகப் படுத்திப் பார்க்கணும்.  அப்படிக் கத்துக்கிட்டப்புறம் அழகழகா படங்கள் எடுக்கணும்ன்னு.. நினைக்கிறேன்.. நினைக்கிறேன்..  நினைச்சுட்டே இருக்கிறேன் :-)

புகைப்படம்ன்னதும்தான் ஞாபகம் வருது. நாளையிலேர்ந்து வர்ற ஞாயிற்றுக்கிழமை வரைக்கும், மும்பையின் கோரேகாவ்(Goregaon) பகுதியில் இருக்கற Bombay  Exhibition Centre-ல இந்த வருஷத்துக்கான PhotoFair  நடக்கப் போகுது. புகைப்படம் சம்பந்தமா ஆகாயத்தின் கீழே இருக்கற அத்தனை விஷயங்களும் ஒரு கூரையின் கீழே கிடைக்கும். கேமராக்கள், லென்ஸுகள், ட்ரைபாடுகள், அப்றம் தொழில்முறை வீடியோ, போட்டோகிராபர்களுக்கு உபயோகப்படற தீம்களுக்கான சிடிக்கள், ஸ்டூடியோக்கள்ல பின்புலத்துக்காக உபயோகப்படுத்தற அழகுத்துணிகள்ன்னு எக்கச்சக்கமா கொட்டிக் கிடக்கும். நாங்க ரெண்டு வருஷம் முந்தி போயிருந்தப்ப நுழைவுக்கட்டணமா 100 ரூபாய் கட்டணம் கட்டி, ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு கொடுத்ததும், கழுத்துல மாட்டிக்கன்னு ஒரு ஐடி கார்டு,   ஒரு பேனா, குறிப்புகள் எழுதிக்க ஒரு சின்ன நோட்பேட், எல்லாம் ஒரு பையில் போட்டுக் கொடுத்தாங்க. இந்த ஃபேர்ல கலந்துக்க, ஆன்லைன்லயும் விண்ணப்பம் கொடுக்கலாம். அங்கே போய் வரிசையில் நின்னு நேரத்தை வீணடிக்க வேணாம். இந்த தளத்துலயே எல்லா விவரங்களும் சொல்லியிருக்காங்க. விசிட்டர்களுக்குத் தனியா, கண்காட்சியில ஸ்டால் வைக்க நினைக்கிறவங்களுக்குத் தனியான்னு ரெண்டு விண்ணப்ப ஜன்னல்கள் இருக்குது.
மொபைல்ல க்ளிக்குனது.. :-)
தமிழ்மணம் சார்பா இந்த வருஷம், இனிமேலாவது நல்லா, நிறைய எழுதுன்னு சொல்லி ஊக்கப் பரிசா ராங்க் கொடுத்துருக்காங்க. 2011-ல் தமிழ்மணத்தோட முன்னணி வலைப்பதிவுகளா 100 பதிவுகளைத் தேர்ந்தெடுத்ததில் எனக்கு 49-ஆவது ரேங்க் கிடைச்சுருக்கு. இது உங்க அனைவரோட ஆதரவும் இல்லாம சாத்தியமே இல்லை. அதே சமயம் பொறுப்ஸ் கூடக்கூட கொஞ்சம் வெலவெலன்னு நடுக்கமா இருக்கு. வேற ஒண்ணுமில்லை. உருப்படியா நாலு இடுகைகள் எழுதி, சமுதாயத்தை முன்னேத்துற பணியைச் சரியா நிறைவேத்தணுமேங்கற நினைப்ஸ்தான் :-)). இந்த நினைப்ஸ்தான் பொழைப்ஸைக் கெடுக்குது :-). 

பெரும்பாலான சமயங்கள்ல, அடடே!!..அதைப்பத்தி எழுதலாமே.. அடடா..இதைப்பத்தி எழுதியிருக்கலாமேன்னு தோணினாலும்,
ப்ளாகை எண்ணிப் பார்க்கையில்
இடுகை கொட்டுது.
அதை டைப்ப நினைக்கையில்
மறந்து விட்டது..  ன்னு ஆகிடுது. அதுவும் கரெக்டா பயணத்துலயோ, இல்லை வெளியிடங்கள்ல எங்கியாச்சும் சுத்திக்கிட்டிருக்கும்போதோ ஒரு அருமையான கரு கிடைச்சு, 'அடடா' ன்னு சொல்ற அளவுக்கு மனசுலயே ஒரு இடுகையை தயாரிச்சு வெச்சுருப்போம்.அப்றமா ஞாபகப் படுத்தி எழுதிக்கலாம்ன்னு தள்ளிப் போடப்பட்டு அதெல்லாம் அப்டியே விட்டுப் போயிடுது. இனிமேலாவது அப்டி விட்டுப் போன விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமா எழுதத்தான் வேணும்.

பழசையெல்லாம் அசை போடறதுங்கறது ஒரு தனி சுகம். சும்மா நினைச்சுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்க மட்டுமில்லாம, கடந்த காலத்துல நாம செஞ்ச தவறுகள்லேர்ந்து பாடம் கத்துக்கவும், நம்மைத் திருத்திக்கிடவும் அதானே ஒரு வாசலா இருக்குது. தினமும் வீட்டைச் சுத்தப்படுத்தற மாதிரி மனசையும் அடிக்கடி சுத்தம் செஞ்சுக்கணும். இல்லைன்னா, எதிர்மறை எண்ணங்கள்ங்கற கிருமிகள் பெருகி ஒருநாள் நம்மையே அழிச்சுடும்.அதை விடுத்து நேர்மறை எண்ணங்களை கூடிய மட்டும் வளர்த்துக்கிட்டா, தினம் தினம் கொண்டாட்டம்தான்.


52 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான நினைவுகளை அசைபோட்டவிதம் ரொம்ப நல்லாருக்கு. இந்தாண்டு மேன்மேலும் உங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். போட்டோஃபைர் கண்காட்சியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள். அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

//ப்ளாகை எண்ணிப் பார்க்கையில்
இடுகை கொட்டுது.
அதை டைப்ப நினைக்கையில்
மறந்து விட்டது.. //

:-) seekiram antha post ellam podunga!

RAMA RAVI (RAMVI) said...

சுய அலசல் அருமை.எங்களுக்கெல்லாம் இந்த வருடம் ஒரு நல்ல புகைப்பட கலைஞர் கிடைக்கப்போகிறார் போல இருக்கே! வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

காமிராவைக் கையில எடுத்துட்டீங்களா... நல்ல புகைப்படங்களை எங்களுக்குத் தர வாழ்த்துக்கள்! (என்னா சுயநலம்) பதிவு படிக்க இனிமை. அது ஆண்டு முழுவதும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஜூப்பருன்னு சொல்ல முடியாட்டியும் பரவாயில்லாம கடை நடந்துருக்குது

பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

ப்ளாகை எண்ணிப் பார்க்கையில்
இடுகை கொட்டுது.
அதை டைப்ப நினைக்கையில்
மறந்து விட்டது.. ன்னு ஆகிடுது. அதுவும் கரெக்டா பயணத்துலயோ, இல்லை வெளியிடங்கள்ல எங்கியாச்சும் சுத்திக்கிட்டிருக்கும்போதோ ஒரு அருமையான கரு கிடைச்சு, 'அடடா' ன்னு சொல்ற//

பதிவர்னாலே அப்படித்தனோ!!!

rajamelaiyur said...

//ப்ளாகை எண்ணிப் பார்க்கையில்
இடுகை கொட்டுது.
அதை டைப்ப நினைக்கையில்
மறந்து விட்டது..
//

கவிதை ..கவிதை ..

குறையொன்றுமில்லை. said...

2011-ல் நிறையவே சாதனைகள் பண்ணீயிருக்கே சாந்தி. பொறுப்புகள் கூடிப்போயிருக்கு. இந்தவருடமும் மேன்மேலும் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

புது வருடத் தீர்மானங்களை மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க
கடந்த வருடத்தில் நீங்கள் லேசாகச் சொல்லிப் போனாலும்
நிறைய சாதிச்சிருக்கீங்க
அதைவிட கூடுதலா இந்த வருடம் இருக்கணும்னா
நீங்கள் கொஞ்சம் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்னு
நினைக்கிறேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ஹேமா said...

வாழ்த்துகள் சாரல்.இன்னும் கலக்குங்க 2012 ல் !

pudugaithendral said...

தினமும் வீட்டைச் சுத்தப்படுத்தற மாதிரி மனசையும் அடிக்கடி சுத்தம் செஞ்சுக்கணும். இல்லைன்னா, எதிர்மறை எண்ணங்கள்ங்கற கிருமிகள் பெருகி ஒருநாள் நம்மையே அழிச்சுடும்.அதை விடுத்து நேர்மறை எண்ணங்களை கூடிய மட்டும் வளர்த்துக்கிட்டா, தினம் தினம் கொண்டாட்டம்தான்.//

ரொம்ப சரி. பதிவு ரொம்ப அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்... 2012-ல் கலக்குங்க!

ஆச்சி ஸ்ரீதர் said...

பட படன்னு பல விசியங்களை சுவாரஸ்யமா சொல்லிருக்கீங்க.மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. 2012 இன்னும் சிறப்பா அமைய வாழ்த்துகள்!!! புகைப்பட ஃபேர் சுட்டிக்கு நன்றி. படங்களையும் இங்கு பகிர்ந்திட ஆரம்பியுங்கள். அந்த முதல் படம் சூப்பரான டைமிங்:)! பிரமாதம்!

ஹுஸைனம்மா said...

//ப்ளாகை எண்ணிப் பார்க்கையில்
இடுகை கொட்டுது.

அதான்..!!

//அதை டைப்ப நினைக்கையில்
மறந்து விட்டது..//

அதேதான்!!

//அப்றமா ஞாபகப் படுத்தி எழுதிக்கலாம்ன்னு தள்ளிப் போடப்பட்டு அதெல்லாம் அப்டியே விட்டுப் போயிடுது//

என்னமோக்கா, நீங்களும் நானும் எப்பவும் ஒரே "Ghz"-ல இருக்கோம் பாருங்க!! (இந்த அலவரிச, அலவரிசன்னு சொல்வாய்ங்களே, அது!!)

போன வருஷம் என் பிளாக்ல அவ்வளவு சுரத்தா எதுவும் எழுதுன மாதிரி இல்ல எனக்கும். ஒரே சோம்பல்!! இந்த வருஷம் இங்க் பாட்டில் தீர்ற வரைக்கும் எழுதித் தள்ளப்போறேன் பாருங்க!! :-))))

பெரிய பொறுப்புகளுக்கும், பத்திரிகைப் படைப்புகளுக்கும் வாழ்த்துகள்க்கா!! ஆமா, புக் ரிலீஸ் எப்போ? :-)))))

துளசி கோபால் said...

அடட....போன வருசம் வெற்றிவிழா வருடமா இருந்துருக்கே!!!! அப்படியே இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து இலக்கிய சேவை செய்ய என் இனிய வாழ்த்து(க்)கள்.

நானும் கேமெராவோட மேன்யூவலை தேடி எடுத்து ஒருக்கா வாசிக்கணும். Pபிட் மாணவியா இருந்தாலும்.....Bபிட் அடிக்கக்கூடாதுல்லையா?

மாதேவி said...

சென்ற வருடம்போல இவ்வருடமும் சிறக்கட்டும்.

Kanchana Radhakrishnan said...

பதிவு அருமை. வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

பழசையெல்லாம் அசை போடறதுங்கறது ஒரு தனி சுகம். சும்மா நினைச்சுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்க மட்டுமில்லாம, கடந்த காலத்துல நாம செஞ்ச தவறுகள்லேர்ந்து பாடம் கத்துக்கவும், நம்மைத் திருத்திக்கிடவும் அதானே ஒரு வாசலா இருக்குது. தினமும் வீட்டைச் சுத்தப்படுத்தற மாதிரி மனசையும் அடிக்கடி சுத்தம் செஞ்சுக்கணும். இல்லைன்னா, எதிர்மறை எண்ணங்கள்ங்கற கிருமிகள் பெருகி ஒருநாள் நம்மையே அழிச்சுடும்.அதை விடுத்து நேர்மறை எண்ணங்களை கூடிய மட்டும் வளர்த்துக்கிட்டா, தினம் தினம் கொண்டாட்டம்தான்.

புத்தாண்டு செய்தி மிகவும் நன்றாக இருக்கிறது.

சென்ற வருடத்தைவிட இன்னும் மேலும் மேலும் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வலைச்சரத்தில் (மார்கழி கலைகள் )
உங்கள் ’கலர் புல் கோலங்கள்.’

ஸ்ரீராம். said...

கவிதை கொட்டுவதும் டைப்ப நினைக்கையில் மறந்து விட்டதும் டாப்.
தமிழ்மண ராங்குக்கு வாழ்த்துகள்.
புத்தாண்டுச் சபதம் எதுவும் எடுப்பதில்லை என்பதை புத்தாண்டுச் சபதமாக (வழக்கம் போல) எடுத்து விட்டேன்!!

சென்ற வருடத்தின் வெற்றிகள் இருமடங்காக இந்த வருடமும் தொடர எங்கள் வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

இவ்வருடமும் சாதனைவருடமாக அமைய வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

//ப்ளாகை எண்ணிப் பார்க்கையில்
இடுகை கொட்டுது.
அதை டைப்ப நினைக்கையில்
மறந்து விட்டது..//


ஆஹா.... கவிதை...கவிதை...!!! :-))

உணவு உலகம் said...

பிறந்துள்ள புத்தாண்டு, இன்னும் பல சாதனைகள் நீங்கள் புரிய துணை புரியட்டும். வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

புத்தாண்டு வாழ்த்துகள்...கிருமிகளை ஒழிப்போம்...புகைப்படம் அருமை...

Chitra said...

Its been ages since I had Rumali rotis.

HAPPY NEW YEAR!
HAPPY PONGAL!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

கண்காட்சியில் கலந்துக்கிட்டு சிறப்பிச்சு இடுகையும் போட்டாச்சு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோம் இல்லே.. நல்லாருக்கீங்களா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராம்வி,

காமிராவை ஒரு வழி செஞ்சுடறதுன்னு முடிவெடுத்தாச்சு.. மத்தபடி படங்கள் நல்லாருக்கா இல்லியான்னு நீங்கதான் சொல்லணும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

முடிஞ்ச மட்டும் சுட்டுத்தள்ளி எல்லோரையும் ஒரு வழி பண்ணாம ஓய மாட்டேன்.. இது சாரல் சபதம் :-))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

ராஜராஜேஸ்வரி,

பதிவர்ன்னு ஆனப்புறம் எதைப் பார்த்தாலும் கேட்டாலும் இடுகைக்கான விஷயமாவே தோணுமாம் :-))

முடிஞ்சப்பல்லாம் இடுகை போடறதுதான் இதுக்கான மருந்தாம் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

கவுஜை நல்லாருக்கா இல்லையான்னு சொல்லலியே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

கலக்கோ கலக்குன்னு கலக்கி குழம்பிப்போயிடாம இருக்கணுமேங்கறதுதான் இப்பத்திய என் கவலை.

குழம்பினாத்தான் தெளியும்ன்னு எங்க வாத்தியார் சொல்லிக்கொடுத்ததும் ஒரு பக்கம் அடிக்கடி ஞாபகத்துல வந்து போயிக்கிட்டிருக்கு :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆச்சி,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

பதிவர்கள் மட்டுமல்ல, போட்டோ கிராபர் ஆனாக்கூட தன்னைச் சுத்தி என்ன நடக்குன்னு உத்துப் பார்த்துட்டே இருக்கணும் போலிருக்கு.. ஒரு கணத்துல சில அழகான காட்சிகளை தவற விடறப்ப ஐயோன்னு இருக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

தாமிரபரணிக்காத்தும் நாஞ்சில் நாட்டுக் காத்தும் சேர்ந்தடிச்சா அப்படித்தான் ஆகுமாம். வள்ளியூர் சித்தர் சொன்னாரு ;-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

நீங்க சொன்னது ரொம்ப சரி. பிட் அடிக்கறது ஆரம்ப காலங்கள்ல வேண்ணா உதவியா இருக்குமாயிருக்கும். அதுக்காக அப்படியே காலத்தை ஓட்ட முடியாதே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க காஞ்சனா,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

புதுக்குப்பை சேர்க்கணும்ன்னா பழசை ஒழிச்சுக் கட்டினாத்தானே நடக்கும். அப்படி சேர்ந்த புதுக்குப்பைகளை அடுத்த வருஷம் கடாசினா ஆச்சு :-)

சாந்தி மாரியப்பன் said...

@ கோமதிம்மா,

வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதுக்கு இங்கேயும் நன்றி சொல்லிக்கிறேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

சபதம் எடுத்துட்டு, நிறைவேற்ற முடியாம முழிக்கிறதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா :-))

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

உங்க அனைவருடைய வாழ்த்துகளும் ஆதரவும் என்னிக்கும் இருந்தா அதுவும் நடக்கும் :-)

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

டபுள் தாங்க்ஸ்.. ரெண்டு தடவை சொல்லியிருக்கீங்களே :-))

எப்பவாவது ப்ளாக் பக்கமும் எட்டிப்பாருங்க. சமையல் குறிப்பு சொல்லித் தர உங்களை மாதிரி ஆகுமா :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

திருமண வேலைகளின் பிஸி ஷெட்யூல்லயும் எட்டிப்பார்த்து வாழ்த்தினதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

பொல்லாத கிருமிகள்ப்பா அதெல்லாம்.. ஒழிச்சுக் கட்டித்தான் ஆகணும்..

அருமைன்னு சொன்னதுக்கு ஒரு ரூமாலி ரோட்டி பார்சேல்ல்ல்ல்ல் :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

ஆஹா.. நீங்கதானா.. நீங்களேதானா!!! வன வாசம் முடிச்சு வந்து எட்டிப்பார்த்ததுக்கு நன்றி..

நீங்க தொடர்ந்து பதிவு போட ஆரம்பிக்கும் அந்த கலகல நாளுக்காக காத்திருக்கோம்.

ADHI VENKAT said...

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ”கலக்கோ கலக்குன்னு கலக்க” வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails