Friday 8 January 2010

பெயர் போன பதிவர்

ஆகக்கூடி கடைசியில் நானும் பதிவர் ஆகிட்டேன்.வாசிப்புங்கிறதே ஒரு சுகமான அனுபவம். அதுவும் பாடப்புத்தகத்துக்கு உள்ளே மறைச்சு வெச்சு படிக்கிறதுங்கறது எம்புட்டு த்ரில் தெரியுமா!!!

வாராந்திர, மாத பத்திரிகைகள்தான் முதல் அறிமுகம்.அப்புறம் பாக்கெட் நாவல் வந்த புதிதில் அதையும் விட்டதில்லை. காலேஜ்லதான் மொதமொத லைப்ரரிக்கு போற பாக்கியம் கெடைச்சுது.பாலகுமாரனோட 'மெர்க்குரிப்பூக்கள்',கல்கியோட 'பொன்னியின் செல்வன்',சிவகாமியின் சபதம்,தியாகபூமி' அப்புறம் இன்னும் எக்கச்சக்கம்.(பெரிய லிஸ்ட், நெறைய பேரு கூட மறந்து போச்சு).

மஹாராஷ்ட்ரா வந்ததுக்கப்புறம்,தமிழில் வாசிக்க வாரப்பத்திரிக்கைகளை தவிர எதுவும் கெடைச்சதில்லை. கெடைக்குமாயிருக்கும்... கொஞ்சம்மெனக்கெடணும்.
அப்படியிருந்ததுக்கு, வலையில் தமிழ் படிக்கமுடியும்னு தெரிஞ்சதும் ...ஆஹா!!!!
அப்பிடியே தட்டித்தடவி மரத்தடியை கண்டுபுடிச்சேன்.

துளசிடீச்சர் அவங்க செல்லங்களைப்பத்தி எழுதியிருந்தாங்க.படிச்சிட்டு ஒரே கஷ்டமாப்போச்சு.ரொம்ப நாளா மனசுக்கு ஏதோ மாதிரி இருந்தது. மறுபடியும் படிக்க நெனைச்சு தேடினா லிங்க் மறந்து போச்சு. அதனாலென்னன்னு, கூகிள் கிட்டயே கேட்டேன், அது கொண்டுவிட்டது துளசி தளத்துக்கு.ஆரம்பத்துல படிச்சிட்டு சிரிச்சிட்டு போயிடுவேன்.அப்புறம் மனசுக்கு பட்டதை
சொல்லணும்னு தோணிச்சு.

'ஐம்கூல்' அப்பிடிங்கிற பேர்ல பின்னூட்டம் மட்டும் போட்டுட்டிருந்தேன்.அப்பத்தான் ஒரு நாள் ரங்க்ஸ் 'மக்கா..நீயும் ஏன் எழுதக்கூடாது'அப்பிடீன்னு ஒரு மின்னலை தூக்கிப்போட்டார்(எவ்வளவு நாள்தான் இடின்னே சொல்லி ஏமாத்துறது). என்டே அம்மே!!...இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை...நமக்கு அந்த தகுதி இருக்கா... இல்லைன்னாலும் வளத்துக்கிட கண்டிப்பா முயற்சி செய்வேன்.

ஏதோ கல்லூரி நாட்களில் கொஞ்சம் கிறுக்குவேன். கவிதைன்னு ஒன்னு எழுதினதுக்கு பொழைச்சுபோட்டும்ன்னு ஆறுதல் பரிசொண்ணு குடுத்தாங்க. அப்புறம் நான் க....வி....தை.... ன்னு கூட எழுதினதில்லை.

ஒரு முடிவெடுத்தா அப்புறம் நம்ம பேச்ச நாமே கேக்கக்கூடாது. வலைப்பூ ஆரம்பிப்பது இவ்வளவு ஈஸியா!!!.பேரு வைக்கும் படலம் ஆ...ரம்பம்.. புதுசா இருக்கணும், அழகா இருக்கணும்... 'ஐம்கூல்' என்ன ஆச்சா?.... அடப்போங்க... இதழ்கள் இல்லாமல் பூவான்னு பசங்க பேரைச்சேத்துக்கிட்டு 'ஐம்கூல்பாசு'
ஆனேனா.... டீச்சர் பயமுறுத்திட்டாங்க.... பெயரில் பாதி ஏற்கனவே இருக்கார்ன்னு அவங்க சொல்லவும் கூகிளாண்டவர் சன்னிதியில் போய் நின்னா... 'ஆம்..மகளே... ஆனா அவரு பீட்டரு'ன்னாரு. இம்போர்ட்டட் ஆட்டோ வந்துடுமோன்னு பயந்து தங்க்ஸும் ரங்க்ஸுமா 'அமைதிச்சாரல்' ஆகிட்டேன்.
பேரு போனது வருத்தமாத்தான் இருக்கு.( டீச்சர் 'அசிஸ்டெண்ட் க்ளாஸ் லீடர்'
பதவியெல்லாம் ஆஃபர் பண்ணாங்க).

முட்டி மோதி அங்க இங்க தேடிக்கண்டுபிடிச்சு, பட்டை மொதக்கொண்டு அடிச்சாச்சு. ஆனா புது இடுகையை இணைக்க முடியாம கஷ்டப்பட்டு, கடைசியில் தமிழ்மணத்துக்கே ஒரு விண்ணப்பம் வெச்சு .... சுபம்.

ஆதரவை நாடும்,
அமைதிச்சாரல்.








13 comments:

எல் கே said...

ippadithan nanum blog aramikanumnu ninachu rediffla blog start pannen appuram start pannathe maranthu poi (oru 2 years kalichu) again blogspotla start pannen.. per vaika perusua yosikala..

good one madam

LK

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் தல...

நசரேயன் said...

//தமிழ்மணத்துக்கே ஒரு விண்ணப்பம் வெச்சு .... சுபம்//

ஆரம்பிக்கும் முன்னாடியே சுபமா

தேவன் மாயம் said...

ஆதரவுடன் ஃபால்லோவும் -- ஓகேயா?

சந்தனமுல்லை said...

சுவாரசியமாக எழுதுகிறீர்கள்!
வாழ்த்துகள்...தொடர்ந்து எழுதுங்கள்!

imcoolbhashu said...

வாங்க L.K.

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

ஆனாலும், ரெண்டு வருஷம்கிறது ஃபோர் மச் :-)).

imcoolbhashu said...

வாங்க பிரியமுடன் வசந்த்,

பிரியமான வாழ்த்துக்களுக்கு நன்றி.

இப்படிக்கு,
வலையுலக தலைவியர் சங்கத்தில் இன்னுமோர் உறுப்பினர்.

imcoolbhashu said...

வாங்க நசரேயன்,

வருகைக்கு நன்றி.

சு(ப காரியம் ஆரம்)பம் அப்பிடின்னு படிக்கணும்.:-)

imcoolbhashu said...

வாங்க தேவன் மாயம்,

டபுள் o.k.

நன்றி.

imcoolbhashu said...

வாங்க சந்தனமுல்லை,

வருகைக்கும் வாழ்த்துனதுக்கும் நன்றி.

அடிக்கடி வரணும்.

எல் கே said...

//
ஆனாலும், ரெண்டு வருஷம்கிறது ஃபோர் மச் :-))./

enna panna start pannangarathe maranthu pora alavuku aluvalaga velai ithula vera kalyanam panni vahcitanga.. appuram enga elutharathu.. ippathan time kidahci iruku again

LK

கண்ணகி said...

ஏதோ கல்லூரி நாட்களில் கொஞ்சம் கிறுக்குவேன். கவிதைன்னு ஒன்னு எழுதினதுக்கு பொழைச்சுபோட்டும்ன்னு ஆறுதல் பரிசொண்ணு குடுத்தாங்க. அப்புறம் நான் க....வி....தை.... ன்னு கூட எழுதினதில்லை.

அம்மாடியோவ்....

முட்டி மோதி அங்க இங்க தேடிக்கண்டுபிடிச்சு, பட்டை மொதக்கொண்டு அடிச்சாச்சு. ஆனா புது இடுகையை இணைக்க முடியாம கஷ்டப்பட்டு, கடைசியில் தமிழ்மணத்துக்கே ஒரு விண்ணப்பம் வெச்சு .... சுபம்.

கலக்குங்க....கலக்குங்க....

imcoolbhashu said...

வாங்க கண்ணகி,

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails