Wednesday, 20 May 2026

ஹைக்கூ..


மலர்ந்து புன்னகைக்கின்றன
விதானத்தில் பூத்த மல்லிகையாய்
வானத்து நட்சத்திரங்கள்

***************
பருத்திக் காடெங்கும்
நிலா பூத்தது போல்
வெடித்திருக்கிறது பஞ்சு.

***************
நிலா பூத்திருக்கிறது
காடெங்கும் இதழ் உதிர்தலாய்
வெடித்த பஞ்சு.

***************
அழைப்புக்கு மறுமொழியில்லை
எட்டுக்கட்டையில் வீறிட்டுக் கத்துகிறது
மின்சாரக் குருவி

***************
அஸ்திவாரம் பலமில்லை
அடியோடு சரிந்து விழுகிறது
பலவீனமான மனக்கோட்டை

***************
இடிந்து கிடக்கிறது
நெடுகப் பிரித்த நீள்சுவர்
பாராமுகமாய் சகோதரர்கள்

***************
கேட்டது கிடைக்கவில்லையாம்
நிமிர்ந்துநின்று அடம் பிடிக்கிறது
வௌவாலின் குழந்தை

***************
பிரம்மாண்டமாய் பயமுறுத்துகிறது
ஊர்ந்து செல்லும் முதலை
பல்லியின் நிழல்

***************
தொட்டால் மட்டுமல்ல
பார்த்தாலும் தூக்கியடிக்கும் மின்சாரம்
கட்டண அறிக்கைவழி.

***************
வெய்யில் விகசிக்கிறது
அலைவுறும் நீரில் தவழ்கின்றன
மின்னும் நிலாத்துண்டங்கள்.

***************

2 comments:

  1. வவ்வாலின் குழந்தை புன்னகைக்க வைக்கிறது.  அனைத்துமே அருமை.

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம்,

    வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

இந்த வலைத்தளத்தில் படங்களுடன் பின்னூட்டமிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விவரம் இங்கே இருக்கு.
http://amaithicchaaral.blogspot.com/2010/11/blog-post_09.html